பிரியாணி என்றாலே இஸ்லாமியர்களின் கல்யாண பிரியாணி என்றால் அனைவருக்கும் விருப்பமே.
மற்ற சமையலை விட இது தான் செய்வது ரொம்ப சுலபம், ஈசியும் கூட.
பிரியாணிக்கு கூட்டு கிரேவி தயாரித்து விட்டு. கிரேவி தயாரிகும் போதே அரிசியை ஊற போட்டு விடவேண்டும்.20 நிமிடம் என்பது போதுமானது, அதற்கு அதிகமாக ஊறினாலும் பரவாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிரத்தில் எடுத்து விடலாம்.
வடித்து தம் போட்டால் தான் ருசியான பிரியாணி.
பிரியாணி செய்ய தாளிக்க உலை கொதிக்க என்று இரண்டு சமமான சட்டி தேவை., சின்ன சட்டியில் உலை கொதிக்க போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாமல் இருக்கும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசியை தட்டவேண்டும்.உடனே 7 லிருந்து பத்து நிமிடத்திற்குள் முக்கால் பாகம் வெந்து விடும், உடனே பெரிய கண் வடிகட்டியில் ஊற்றி கஞ்சியை தனியாக எடுத்து வைக்கனும்.
கனமான தோசைக்கல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்கலாம்.
அரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.
சாதம் ரொம்ப வெந்த பிறகு தம் போட்டால் குழைந்து பிரியாணி களி, கஞ்சியாகி விடும்.
கேஸ் அடுப்பில் தீயின் தனலை மிக மெல்லிய அளவில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவி (அ) கனமான தோசைகல்லை வைத்து அதற்கு மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த சுடு கஞ்சியை சட்டியில் மேல் வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
வெந்ததும் எடுத்து ரொம்ப போட்டு கிளறக்கூடாது. லேசாக பிரட்டி விடவேண்டும்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.
அரிசி கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.
வெஜ் பிரியாணி
சென்னையில் கல்யாணஙகளில் 10 படி தேக்ஷாவில் தான் செய்வார்கள்,அவர்கள் தம் போட நெருப்பு மூட்டி தான் பிரியாணி செய்வார்கள். அதில் கீழே நெருப்பு எல்லாம் எடுத்து தேக் ஷா மூடியின் மேல் போட்டு விடுவார்கள். மீதி நெருப்பை அடுப்பை சுற்றி போடுவார்கள், அந்த தனலிலேயே வெந்து விடும், நிறைய ஆக்கும் கல்யாண பிரியாணியின் ருசிக்கு ஈடு இனை எதுவுமே இல்லை.
Tweet | ||||||
28 கருத்துகள்:
பழைய கொட்டாங்குச்சி 5,6 சேர்த்து வைத்து அதனை உடைத்து எரித்து வரும் நெருப்பை ஒரு அலுமினிய தட்டினால்(இதற்கு என்றே உள்ள) பிரியாணி பாத்திரத்தினை மூடி அதன் மேல் இந்த நெருப்பினை(தனலினை) பரவலாக போட்டு விடுவேன். அருமையாக தம்மாகி விடும்.
அவசியமான டிப்ஸ்.எனக்குத்தெரியாத தகவல்கள்.நன்றி ஜலி.இன்னுமொரு சுலபமான தம் போடும் முறை.எலக்ட்ரிக் குக்கரில் பிரியாணி செய்து கரண்டியில் அடிப்பாகத்தால் நன்கு அழுத்திவிட்டு மூடி கீப் வார்மில் வைத்துவிட்டு ஹாயாக "தம்மரே தம்"பாடிக்கொண்டு இருக்கலாம்.அடிபிடித்துவிடும்,தீய்ந்துவிடும்,அடுப்பை அணைக்கவேண்டும்,சிம்மில் வைக்கவேண்டும் என்ற எந்த தொல்லையும் இல்லாமல்.
நல்ல டிப்ஸாகதான் இருக்கு. சமைக்கும் ஆசான்களே கவனிக்கவும்..
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
ஆமா எனக்கு பிரியாணி ப்ரீ தானே / காசு எல்லாம் தரமுடியாது . ஆமா சொல்லிட்டேன் .
அப்பாடா வருகிற வெள்ளிக்கிழமை லீவு எப்படி பொழுது போகப்போகுதஅய்யா நான்தான் பர்ஸ்ட் .
ஆமா எனக்கு பிரியாணி ப்ரீ தானே / காசு எல்லாம் தரமுடியாது . ஆமா சொல்லிட்டேன் .
அப்பாடா வருகிற வெள்ளிக்கிழமை லீவு எப்படி பொழுது போகப்போகுத்அய்யா நான்தான் பர்ஸ்ட் .
ஆமா எனக்கு பிரியாணி ப்ரீ தானே / காசு எல்லாம் தரமுடியாது . ஆமா சொல்லிட்டேன் .
அப்பாடா வருகிற வெள்ளிக்கிழமை லீவு எப்படி பொழுது போகப்போகுத்தோனு நினச்சேன் . இப்பத்தான் நிம்மதி . என்ன பாக்குறீங்க உங்க பிரியானிதான் . அருமையான பதிவு வாழ்த்துக்கள் .
//7 லிருந்து பத்து நிமிடத்திற்குள் முக்கால் பாகம் வெந்து விடும்//
இந்த பதம் பார்த்து வடிப்பதுதான் பெரிய சவால் எனக்கு. அதனால் ரிஸ்க் எடுக்காமல் ஒன்றேகால் தண்ணீர் வைத்து வேகவைத்து தம்மில் போட்டுவிடுவேன்.
தம் டிப்ஸ் அருமை.இன்னொரு முறையிலும் தம் போடலாம்,வடித்த சாதத்தை க்ரேவியில் தட்டி வீட்டு சேர்க்க வேண்டியவை எல்லாம் சேர்த்து அலுமினியம் ஃபாயில் அல்லது குழைத்த மைதா மாவு கொண்டு ஒட்டி மூடி போட்டு குக்கிங் ரேஞ்ச் உள்ளவர்கள் மேலே அல்ல்து கீழே சிம்மில் ஃப்லேமை வைத்து விட்டு சட்டியை ஹாயாக தம்மரே தம் தான்,இரண்டு கிலோ பாத்திரம் உள்ளே போகும்.கால் மணியில் அடுப்பை சுவிட்ச் ஆஃப்,எப்ப எடுத்தாலும் சூடாக இருக்கும்.
நமக்கேன் இவ்வளவு சிரமம், தட்டில் சுட சுட பிரியாணி இருந்தால் போது ஒரு கை பார்த்துடுவேன்
எப்படிசெய்வது, நல்ல விளக்கம், தேவையான நேரத்தில் பயன்படும்
ஜலிலா அக்கா மிகவும் பயனுள்ள டிப்ஸ். உங்களுக்கு பசும்பால் லேகியம் பற்றி தெரியுமா? எப்படி செய்ய வேண்டும். பிரியாணிக்கு கத்திரிக்காய் ஆனம் எப்படி செய்ய வேண்டும்? நன்றி
இவ்வளவு சீக்கிரம் நேரம் ஒதுக்கி எழுதியமைக்கு மிக்க நன்றி.
ரிஷி
ஆல் இன் ஆல் க்கு ஒரு குறை. டாக்டர் பட்டம் தரலாம்னு நினைகிரேன். இந்த அளவுக்கு யாரும் விரிவா பொருமையா படிப்படியா விளக்க முடியாது.
நல்ல தகவல் ஜலீலாக்கா. நான் இதுவரை தம் போட்டதில்லை. அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
அந்த ‘தம்’ இல்லை
ஹா ஹா ஹா
சமையல் டிப்ஸோட லொல்ஸும் அருமை. :)
அமுதா நீங்கள் செல்வதும் சரிதான் சில பேர் இதுக்கெல்லாம் ரொம்ப சோம்பேறி தனப்படுவார்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அமுதா
ஸாதிகா அக்கா உங்கள் முறையும் சூப்பர் தான் (தம்மரே தம்) ,ஜீனத்தம்மனை மறக்கமுடியுமா?
மலிக்கா மிக்க நன்றி
பனித்துளி சங்கர் வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
ஹுஸைன்னாம்மா ஆமாம் இதே தான் பதம் பார்த்து வடிப்பது.
ஆனால் நீங்கள் செய்யும் முறையும் நல்ல தான் இருக்கும் ,நல்ல பிரியாணி ரஸ் அதில் இரங்கி இருக்கும்.கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ஆசியா நீங்கள் சொல்வது குக்கிங் ரேஞ்சில் ஆகா அது பொல பொலன்னு நல்ல வருமே.
அப்ப நீஙக்ளும் தம்மரே தம் தனா?
எனக்கு எப்பவுமே பிரியாணி என்றால் தம்மரே தம் தான்.
நமக்கேன் இவ்வளவு சிரமம், தட்டில் சுட சுட பிரியாணி இருந்தால் போது ஒரு கை பார்த்துடுவேன்
//அபு அஃப்ஸர் பேச்சுலர்களுக்கு செய்வது சிரமம், ஆனால் துபாயில் சில பேச்சுலர்கள் மாலை வேலையில் இன்ரெஸ்ட் எடுத்து செய்து இன்று 30 , 40 பேருக்கு சமைக்கும் அளவிற்கு கை தேர்ந்து விட்டார்கள் //
எப்படிசெய்வது, நல்ல விளக்கம், தேவையான நேரத்தில் பயன்படும்
//எப்படி செய்வது என்று முன்று வகையான பிரியாணி கொடுத்து இருக்கேன் பாருங்கள்//
//ஆல் இன் ஆல் க்கு ஒரு குறை. டாக்டர் பட்டம் தரலாம்னு நினைகிரேன். இந்த அளவுக்கு யாரும் விரிவா பொருமையா படிப்படியா விளக்க முடியாது//
ஆமாம் ஜெய்லாணி பொறுமையாக விளக்குவது சிரமம் தான் ஆனால் தெரிந்த விஷியத்தை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது எனக்கு பெரிய சிரமம் ( சிறிய சிரமம் )தான்
உங்கள் பாரட்டுக்கு, கருத்து தெரிவித்தமைக்கு, தொடர் வருகைக்கு, பட்டம் கொடுத்தததற்கு. ரொம்ப நன்றி.
ஆமாம் ஒரு நல்ல டாக்டரே எனது மருத்து குறிப்பு பட்டம் கொடுத்துட்டாங்க.
அதே போல் ஒரு பெரிய கிரேட் குக்கரி டீச்சர் என் சமையலை செய்து ரொம்ப நல்ல இருக்கு அவர்கள் மாணவர்களுக்கு இதை கற்று கொடுக்க போவதாக சொன்னார்கள்.
ஆனால் நான் என் கண் அளவு கை அளவில் செய்யும் அடாவடி குறிப்புகள் தான் போடுகீறேன்.
அதிரா வாங்க எப்படி இருக்கீங்க வருகைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
என் முறைப்படி தம் போட்டு பாருங்கள். இரட்டையர்கள் நலமா? நேரமின்மையால் பேசமுடியல.
சகோ . ஜமால் (அந்த தம்மை பற்றியும் எழுதலாம் என்று ஆனால் நேரமில்லை)
இல்லை என்றால் லொல்ஸ் இன்னும் அதிகமக இருந்திருக்கும்.
நன்றி.
அக்கா, தம் போடுறதுல இவ்வளவு மேட்டர் இருக்கா?
நீங்க பிரியாணி செய்றதுல Ph.D. வாங்கி இருக்கீங்க. சூப்பர் டிப்ஸ்.
cook the rice in 1:1 ratio......i use to chuk the biryani pot inside a baking oven for 10 to 15 mins..
fantastic kalyana biryani ready :)
. ஆமாம் சித்ரா தம் போடுவதில் தான் பிரியாணியின் சுவையே இருக்கு
வாங்க பீட்டர் வருகைக்கு மிக்க நன்றி,
நீங்கள் சொல்வதும் சரிதான் 1:1 நல்ல நீட்டமா ஒன்னு ஒன்னா இருக்கும்.
ஆனால் கொஞ்சம் குழந்தைகள் ,பெரியவர்கள் சாப்பிட கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்,
இங்குள்ள எஜிப்ஷியன்கள் வெரும் வெள்ளை சாப்பாட்டையே ஒன்றுக்கு ஒன்று வைத்து தம் போட்டு தான் சாப்பிடுகிறார்கள்.
நான் இந்த தளத்திற்கு புதுசு.என்னையும் சேர்த்துக்கோங்கோ.
வேகாமல் போனால் என்ன செய்வது?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா