Thursday, February 4, 2010

பாம்ஃப்ரெட் பிஷ் ஃப்ரை - White Pomfret Fish Fry







தேவையான பொருட்கள்


வெள்ளை (பாப்புலட்) வவ்வா = நான்கு துண்டு
காஷ்மீரி சில்லி = அரை தேக்கரண்டி
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
புளி தண்ணீர் = ஒரு தேக்கரண்டி
தக்காளி சாறு = ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍= கால் தேக்கரண்டி
கார்ன் பிலார், அரிசி மாவு = அரை தேக்கரண்டி














செய்முறை


1. மீனை சுத்தம் செய்து மேலே குறிப்புட்ட மசாலாக்களை போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

(தக்காளி ஜூஸ் மட்டும் பிழிந்தால் போதும்).

(மீன் குழ‌ம்பு வைக்கும் போது உள்ள‌ புளி த‌ண்ணீர் விட்டால் போதும்)
2. தவ்வாவில் எண்ணை ஊற்றி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.


3. எண்ணையை வடிய விட மீன் பொரிக்கும் தட்டில் வெரும் சாதத்தைப் பரப்பி அதன் மேல் வைக்கவும்.






சுவையான வெள்ளை வவ்வா மீன் பிரை ரெடி.







பிளெயின் சாதம், மீன் குழம்பு, பீன்ஸ் பொரியல், பாப்புலட் மீன் ஃபிரை.
ஒரு நாள் மதிய உணவு.

24 கருத்துகள்:

Chitra said...

அக்கா........... மீன் வாசனை மூக்கை துளைக்குது. ம்ம்ம்ம்ம்ம்.......!

டவுசர் பாண்டி said...

//1. மீனை சுத்தம் செய்து//

நானு இப்பவே அம்பேல் உட்டுக்கறேன் பா !! எனுக்கு ஆவாது ... மீனு ஆவாத் ........

tasteofsaras said...

Looks so mouth-watering and delicious..I just love these fish very much...

ஸாதிகா said...

பிஷ்பிரை பார்க்கவே அழகாக இருக்கு.அனைவராலும் விரும்பபடுகின்ற வாவல்மீனை அழகாக பொரித்து அசத்தி விட்டீர்கள் ஜலி.பிரைக்கு புளி சேர்ப்பதால் தவாவில் ஒட்டாதா?

சீமான்கனி said...

அக்கா உங்க பதிவை படிக்கும் பொது பசிக்குதா இல்லை பசிக்கும் பொது பதிவை படிக்குறேனா ஒன்னும் புரியலை...மீன் விருந்து அருமை நான் சாப்பிட்டு வாறேன்...

ஜெய்லானி said...

பொரிக்கும் வாசனை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.இப்பவே கண்னை கட்டுதே..
ம்ம் அடுத்த ஜென்மத்தில் ஜலீலா(அக்காவ்)வீட்டு பூனையாக பிறந்துதான் எல்லாத்தையும் ருசி பார்கனும்

வேலன். said...

டவுசர் அப்படிதான் சொல்லுவாரு...ஆனா புல் கட்டு கட்டுவாரு.....மீன் பதிவு சூப்பர்....வாழ்க வளமுடன். வேலன்.

Unknown said...

மீனில் இந்த வகை சூப்பர்.. கிடைக்கும் பொழுது செய்துவிடுகிறேன்...

asiya omar said...

ஜலீலா,புளித்தண்ணீர்,தக்காளி சாறு இப்படி ஒரு சேர சேர்த்து செய்து பார்த்ததில்லை,பார்க்க, ருசிக்க அருமையாக இருக்கு.

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

வவ்வால் மீனா - நம்ம ஃபேவரைட்டாச்சே

அன்புடன் மலிக்கா said...

/அடுத்த ஜென்மத்தில் ஜலீலா(அக்காவ்)வீட்டு பூனையாக பிறந்துதான் எல்லாத்தையும் ருசி பார்கனும்/

என்னா ஒரு ஆசையப்பாரு
ஜலீக்கா பாத்து அடுப்படியில பூனையிருக்கான்னு செக்பன்னுங்க இப்பவே..

நல்ல ரெசிபிக்கா நானும் இதபோல் செய்வேன்..

Jaleela Kamal said...

சித்ரா மீன் வாசம் மூக்கைத்துளைக்கிறதா உடனே செய்து சாப்பிடுங்கள்

Jaleela Kamal said...

அண்ணாத்தா மீன பிடிக்கதா ஆச்சரியாமா இருக்கு / ஒரு வேலை வேலன் சார் சொல்வது போல் புல்கட்டு கட்டுவீங்களா?

Jaleela Kamal said...

saraswathi, thank you for you feedback

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா எங்க அம்மா கொஞ்சம் புளி தண்ணீரும், தக்காளி சாறும் பிழிந்து விடுவார்கள், ஒட்டாது அதான் கொஞ்சம் கார்ன் பிலார்,அரிசி மாவு கலந்து இருக்கேன்

Jaleela Kamal said...

ஜெய்லானி இப்பவே வாங்கி பொரித்து சாப்பிட்டு விடுஙக்ள் ஏன்னா ஏற்கனவே நிறைய பூனை இருக்கு,,,

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வேலன் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, அப்ப டவுசர் அண்ணாத்த புல் கட்டு கட்டுனதுபார்த்த ஒரே ஆள் நீங்கள் தான்.

Jaleela Kamal said...

ஆமாம் பாயிஜா இந்த் வகை மீன் வறுவல் ரொம்ப நல்ல இருக்கும் முடிந்த போது செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

ஆசியா புளிதண்ணீ, தக்காளி சாறு சேர்பப்தும் ஒரு தனி ருசி தான்,

செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

ஆசியா புளிதண்ணீ, தக்காளி சாறு சேர்பப்தும் ஒரு தனி ருசி தான்,

செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

சகோ. ஜமால் உங்கள் பேவரிட்டா அப்ப கண்டிப்பா உங்க தங்கமணி கிட்ட சொல்லி செய்து சாப்ப்டுங்கள்.

Jaleela Kamal said...

மலிக்கா துபாயில் நிறைய பூனை இருக்கு இதில் எந்த பூனைய செக் பன்ணுவது.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

ஜெய்லானி said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்ம்.....சூப்பர் :-)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா