Monday, February 22, 2010

காதில் ப‌ட்ஸ் ம‌ற்றும் கொண்டை ஊசி போடுவ‌தால் ஆப‌த்து

காதில் தண்ணீர் நின்றால், காதில் கிச்சு கிச்சு வந்தால் பட்ஸ் அல்லது கொண்டை ஊசி, ஹேர் கிளிப் போட்டு குடையாதீர்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும்.

காதில் த‌ண்ணீர் நிற்கிற‌து என்று எல்லோரும் காதில் ப‌ட்ஸை போட்டு கிளீன் செய்வ‌தால் உள்ள‌ சின்ன‌ செவிப்ப‌ரை கிழிந்து இறைச்ச‌ல் ஏற்ப‌டுகிற‌து.காது இறைச்ச‌ல் என்றால் அது காதினுள் க‌ட‌லின் ஓசை போல் ச‌த்த‌ம் வ‌ரும்.
இந்த‌ இறைச்ச‌ல் நாளைடைவில் அதிக‌மாகி காதின் பின்புற‌ம் உள்ள‌ ந‌ர‌ம்பு வ‌லிக்க‌ ஆர‌ம்பிக்கும்.


காதில் பட்ஸ் போட போட அப்படிமெய் மறந்து துக்கம் கூட வரும்.
சுகமா போட போட நல்ல இருப்பதால் எல்லோரும் இதை தான் பயன் படுத்துகிறார்கள்.

அதுவும் இரண்டு முன்று பிள்ளைகள் இருக்கும் இடத்தில் காதை குடைந்தால், கை தவறி அவர்கள் கையில் பட்டு விட்டால் உடனே பட்ஸ் அல்லது ஹேர்பின் காதின் உள்ளே போய் குத்தி இரத்தமும் வரும்.



பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு மெல்லிய‌ காட்ட‌ன் துணியை கையில் வைத்து சுருட்டி அத‌ன் மூல‌ம் துடைத்து எடுங்க‌ள்.அவ‌ர்க‌ள் வ‌ள‌ர்ந்த‌தும் அவ‌ர்க‌ள் சுண்டு விர‌லால் மெல்லிய‌ ட‌வ‌ல் அல்ல‌து ம‌ல் துணி மூல‌ம் துடைக்க‌ க‌ற்று கொடுத்து பழ‌குங்க‌ள்.
பெரிய‌ பிள்ளைக‌ளுக்கும் இதை ப‌ற்றி எடுத்து சொல்லி க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்ல‌னும்.



இத‌னால் கேட்கும் திறனையும் இழ‌க்க வேண்டி வ‌ரும்.உள்ளே சீழ் கோர்த்து த‌லை முழுவ‌தும் வ‌லி ஏற்ப‌ட்டு ஆப்ரேஷ‌ன் ப‌ண்ணும் நிலை ஏற்ப‌டும்.



இது போல் என‌க்கு தெரிந்த‌ ஒரு ப‌த்து பேருக்கு இருக்கு.அதில் முன்று பேர் ஆப்ரேஷ‌ன் செய்துள்ளார்க‌ள். காதில் சின்ன‌ ஜ‌வ் என்ப‌தால் க‌ண், மூளை, ந‌ர‌ம்புக‌ள் எல்லாம் பாதிக்க‌ ப‌டும்.





ஆப்ரேஷ‌ன் செய்து கொண்ட நபர் கோமா ஸ்டேஜில் போய் மீண்டு வ‌ந்தார், ம‌ற்றொருவ‌ர் நாள் முழுவ‌து ம‌ய‌க்க‌த்தில் இருந்து உயிர் பிழைத்தார். இல்லை இத‌ற்கு ப‌ய‌ந்து அப்ப‌டியே க‌வ‌னிக்காம‌ல் விட்டு விட்டால் அது கேன்ச‌ராக‌ கூட‌ மாறும்.
ஆகையால் ஷ‌வ‌ரில் குளிக்கும் போது க‌ட‌லில் குளிக்கும் போது ம‌ழையில் ந‌னையும் போது காதினுள் த‌ண்ணீர் சென்றால் அதை ப‌ட்ஸ் போட்டு குடையாதீர்க‌ள்.





காதிலுள் த‌ண்ணீரை துடைக்க‌ உங்க‌ள் சுண்டுவிரலை ஒரு மெல்லிய‌ காட்ட‌ன் துணி கொண்டு சுற்றி துடைத்து எடுங்க‌ள்.


அடிக்க‌டி இந்த‌ பிராப்ள‌ம் வ‌ருகிற‌வ‌ர்க‌ள்,இர‌ண்டு காதிலும் ப‌ஞ்சை அடைத்து வைத்து குளிக்க‌லாம்.இப்ப‌டி காதிலுள் த‌ண்ணீர் செல்வ‌தால் சைன‌ஸ் பிர‌ப்ளம் கூட‌ வ‌ரலாம்.





நான் சொன்ன‌ ப‌த்து பேரில் முன்று பேருக்கு தான் ஆப்ரேஷ‌ன் முடிந்துள்ள‌து, இன்னும் முன்று பேருக்கு காது ச‌ரி வ‌ர‌ கேட்க‌வில்லை, மீதி பேர் இதெல்லாம் கேள்வி ப‌ட்டு கொண்டு டாக்ட‌ரிட‌ம் செல்ல‌ ப‌ய‌ந்து கொண்டு இருக்கிறார்க‌ள்.

காதில் ஏதாவது பிராப்ளம் என்றால் உடனே மருத்துவரை அனுகி ஆவன செய்யுஙங்கள்.
மீதி தகவல்களை வேலன் சாரின் பதிவான பட்ஸ் எனும் பயங்கரவாதி யை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

20 கருத்துகள்:

SUFFIX said...

நான் பட்ஸ் உபயோகிப்பது உண்டு, இனி ஜாக்கிரதையாக இருந்தக்கணும்.

Jaleela Kamal said...

வாங்க ஷபிக்ஸ் நீங்கன்னு இல்ல எல்லோருமே பட்ஸ் தான் பயன் படுத்து கிறார்கள்,சுகமா போட போட நல்ல இருப்பதால். இனி ஜாக்கிரதையாக இருங்கள் , உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.

Unknown said...

குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவங்க முன்னாடி நாம் காதில் பட்ஸ் வைப்பதை தவிர்ப்பது நலம். குழந்தைகள் நம்மை போல் அவங்க கையில் எந்த ஒரு சிறிய பொருள் கிடைத்தாலும் காதில் விட்டு ஏதாவது பிரச்சனை வந்துவிடும். பெரியவங்களும் நீங்கள் சொல்வது போல் காதுகளில் ஆப்பதுக்கள் நிறைந்த கூர்மையான பொருட்களை காதுக்குள் விடுவதை நிறுத்துவது நலம். நல்ல தகவல் அக்கா..

Chitra said...

அக்கா, இது தேவையான தகவல். நன்றி.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
அண்ணாமலையான் said...

கரெக்ட்தான்

ஹுஸைனம்மா said...

கவனமாத்தான் இருக்கணும்.

Menaga Sathia said...

உபயோகமான தகவல்!!

அன்புத்தோழன் said...

ரொம்ப நாளைக்கு அப்பறம் ரெண்டு நாள் முன்னாடி தான் பத்து பட்ஸ் போட்டேன்.... இத படிச்சதும் மண்டைக்கு மேல பல்பு எரியுது... Thanks, ஆனா எனக்கொரு டவுட்.... அப்டி இருக்க ஏன் பட்ஸ் தயாரிக்கிறார்கள்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகப் பயனுள்ள கடைப்பிடிக்க வேண்டிய பதிவு.

அன்புத் தோழன் கேட்டுள்ளார்.
ஆனா!; எனக்கொரு டவுட்..அப்பிடி இருக்க ஏன்? பட்ஸ் தயாரிக்கிறார்கள்.
அருமையான கேள்வி!
மது கூடாதென்கிறார்கள்; புகைத்தல் கூடாதென்கிறார்கள்....தயாரிக்கிறார்களே! அப்படியே இதுவும்.
இந்த பட்ஸ் நான் பாவிப்பதே இல்லை. குளிக்கும் போது காதுக்குள் நீர் போனால் அக்காதில் பக்கம் தலையைச் சரித்து காதுத் துவாரத்துள் ஆட்காட்டி விரலை வைத்து காதை ஆட்டுவேன் நீர் வெளியேறிவிடும்.பல தசாப்தங்களாக இதே முறையே! இந்த பட்ஸ் நவீன மோடி...கம்போக்கர்;பிட்ஷா போல் வந்து புகுந்து விட்டது.
சிறுவர்களுக்கு முன் பட்ஸ்சால் காது குடைவதைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.குழந்தைகளுக்கும்
சிறுவர்களுக்கும் மாத்திரமல்ல; பெரியோர் கூட மெல்லிய துணியில் திரிபோல் உருட்டி; காதுள் விடுவதே
பாதுகாப்பானது
கடினமான; குச்சிகளில் உள்ள பஞ்சுப் பொதியும் ஆபத்தே!
மேலும் இயற்கையிலேயே காது; குடும்பியை,கழிவுகளை வெளியேற்றும் அமைப்புடையது அதனால்;குடைந்து இவற்றை வெளியே எடுப்பது அவசியமில்லை எனப் படித்துள்ளேன்.

அப்துல்மாலிக் said...

நல்ல அட்வைஸ்.. யாரு கேப்பா ?

எனக்கு இந்த பழக்கம் இருக்கு, மாற்ற முயற்ச்சீசீசீசீ பண்ணனும்

Asiya Omar said...

பட்ஸ் ஓகே,கொண்டை ஊசின்னு எல்லாம் பயமுறுத்தாதீர்கள்,ஜாக்கிரதையாக இருக்கணும்.

வேலன். said...

சகோதரிக்கு.
கட்டுரை அருமை. பட்ஸ் என்னும் பயங்கர வாதி என்கின்ற கட்டுரையை நான் இதற்கு முன் நானும் பதிவிட்டுள்ளேன்.நமது சக நண்பர்களுக்காக இங்கு அதன் லிங்க் கொடுத்துள்ளேன்.முகவரி:-http://velang.blogspot.com/2009/02/blog-post_04.html நன்றி... வாழ்க வளமுடன் வேலன்.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு!

athira said...

ஜலீலாக்கா... உபயோகமான தகவலை வெளியிட்டு... எல்லோரது காதுக்கண்களையும்:) திறந்துவிட்டீங்கள்.

சாமக்கோடங்கி said...

உங்களுடையதையும் படிச்சேன், வேலன் எழுதியதையும் படிச்சேன்.. ரொம்ப நன்றி இந்த தகவலுக்கு.. இருக்குற காத காப்பாத்திக்கணும்..

சீமான்கனி said...

இது தேவையான தகவல். நன்றி...அக்கா

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு.

எனக்கு இந்த பழக்கம் இல்லை.

ஜெய்லானி said...

(பழைய கமெண்ட் தெரியாமல் டெலிட் ஆகிவிட்ட்து.)

அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயம் இந்த பட்ஸ். நன்றி.

Kanchana Radhakrishnan said...

தேவையான தகவல்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா