சேமியா கேசரி
தேவையான பொருட்கள்
சேமியா = ஒரு கப்
சர்க்கரை = கால் கப்
முந்திரி, பிஸ்தா = இரண்டு மேசை கரண்டி
கேசரி கலர் பொடி = ஒரு சிட்டிக்கை
நெய் = இரண்டு மேசை கரண்டி
பட்டை, ஏலம் = தலா ஒன்று
உப்பு = அரை சிட்டிக்கை
செய்முறை
ஒரு மேசை கரண்டி நெயில் முந்திரி, பிஸ்தாவை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் சேமியாவை கருகாமல் வறுத்து அதையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
ஏற்கனவே வறுத்த பாத்திரத்தில் மீதி உள்ள நெயை ஊற்றி பட்டை, ஏலம் போட்டு ஒன்னறை கப் தண்ணீரில் ரெட் கலர் பொடி கரைத்து ஊற்றி உப்பை சேர்கக்வும்.
கொதிக்கும் போது சேமியாவை சேர்த்து கிளறி தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்து தண்ணீர் வற்றும் போது சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்ததும் மீண்டும் தண்ணீர் விடும் கொதித்து வரும் போது வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்த்து சிறிது தண்ணீர் நிற்கும் போதே அடுப்பை அனைக்கவும். 5 நிமிடத்தில் கெட்டியாகி விடும்.
இதில் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்தால் ரொம்ப நல்ல இருக்கும் நட்ஸ் வகைகள் விருப்பம் போல் சேர்க்கலாம், கிஸ்மிஸ் பழமும் சேர்த்து கொள்ளலாம். (தேஙகாய் துருவல், கிஸ்மிஸ் பழம் இதில் நான் சேர்க்க வில்லை)
கேசரிக்கு அடுத்து ஈசியாக நினைத்தவுடன் செய்யும் இனிப்பு வகை இது என் மாமியார் ஈதுக்கு செய்வார்கள், என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் இதையே இன்று செய்து விட்டேன்
இந்த இரண்டு அவார்டையும் விக்கிஸ் கிச்சன் எனக்கு கொடுத்து இருக்காங்க இதை இன்று என் திருமண நாளில் சேமியா கேசரியுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இந்த பியுட்டிஃபுல் பிலாக் அவார்டை மலிக்காவின் இனிய பாதைக்கு பாயிஜாவின் என்-இனிய இல்லத்துக்கும் கொடுக்கிறேன்
இந்த இரண்டு அவார்டையும் விக்கிஸ் கிச்சன் எனக்கு கொடுத்து இருக்காங்க இதை இன்று என் திருமண நாளில் சேமியா கேசரியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த இன்ட்ரெஸ்டிங் அவார்டு முன்பு பாயிஜாவும், ஷபிக்ஸும் எனக்கு கொடுத்தது இதை கீழே உள்ள பதிவர்களுக்கு கொடுக்கிறேன்.
நாஞ்சில் பிராதாப் எல்லா பதிவுகளும் நகைச்சுவையுன் ஒரு நல்ல சேதியுடனும் இருக்கும், பதிவுக்கு பின் வரும் பின்னூட்டம் அதுக்கு மேல சூப்பரா இருக்கும்.இவர் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து அப்ப அப்ப படித்தாலும். பின்னூட்டம் அவ்வளவா போட்டதில்லை
அண்ணாமலையான், நல்ல அனுபவமான பயனுள்ள தகவல்கள்.
அனுபவங்களை நகைச்சுவையுடன் போட்டு இருக்கிறார்கள் அதை எல்லோரும் படித்து பயனடைந்து கொள்ளுங்கள். பிலாக், கணணி சம்பந்தப்பட்ட விழியங்களை வேலன் சாரின் பிலாக் சென்று படித்து பயனடைந்து கொள்ளுங்கள்
Tweet | ||||||
65 கருத்துகள்:
ப்ரிய ஜலி,
என் அன்பான திருமண தின வாழ்த்துக்கள்.நேற்று நான் அனுப்பி வைத்த பொக்கே கிடைத்ததா?இந்தியன் பூக்கள்..!நல்ல வாசனையாக இருந்ததா?என்னாலும் வளமோட வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
ரசகுலாவும் ஜீராவும் போல்
பிரியாணியும் மசாலாவும் போல்
பாயசமும்,பாலும் போல்
அல்வாவும் நெய்யும் போல்
பர்பியும் தேங்காயும் போல்
சாம்பாரும் பருப்பும் போல்
ஊறுகாயும் உப்பும் போல்
ஊத்தப்பமும் வெங்காயமும் போல்
லட்டும் சர்க்கரையும் போல்
தக்காளியும் ரசமும் போல்
நீடூழி காலங்கள் அண்ணனும் நீங்களும் இணை பிரியாமல் சிறப்புடன் வாழ வாழ்த்தி மகிழ்கின்றேன்.ஜலி,ஞாபகம் இருக்கின்றதா?போன தடவை இதே நாளில் சமையல் அரசியை சமையலை வைத்தே வாழ்த்தினேனே!இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு வெவ்வேறு பதார்த்தங்களுடன் வருகின்றேன்.
நீங்கள் சிரித்து ரசிக்க நேற்றிரவு புது இடுகை [தொ(ல்)லை காட்சி மனிதர்கள்]என்ற பதிவு போட்டேன்.எத்தனை முறை சிரித்தீர்கள் என்று அவசியம் சொல்லுங்கள்.
அக்கா, என்னை அப்படியே உங்க அன்புமழையில குளிப்பாட்டீங்க. இது எனக்கு எத்தனையாவது விருது நீங்க தர்றது? நன்றி சொல்லி அலுத்துப் போச்சு!!
மணநாள் வாழ்த்துக்கள் அக்கா.
புது வீடும் (டெம்ப்ளேட்) ரொம்ப அழகா இருக்கு.
வாழ்த்துகள்! + வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வு இன்னும் இனிப்பாய் இருக்க எங்கள் துவாக்கள்.
இனிய திருமண தின வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.
ஹஹஹ திருமணநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...
விருதுக்கு நன்றி... அப்புறம் சகோதரி ஸாதிகா சொன்ன வாழ்த்துக்களை அப்படியே ரிப்பீட்டடிக்கிறேன்...:)
என் பதிவுல சேதி இருக்குமா??? அப்படியா? எனக்கே இப்பத்தான் தெரியும்.. :)
அக்கா, உங்கள் திருமண நாள் தின பரிசாக (treat) எங்களுக்கு விருது வழங்கி இருக்கிறீர்கள். ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றி, அக்கா.
இனிய திருமண நாள் தின வாழ்த்துக்கள்!
திருமணநாள் வாழ்த்துக்கள்....template நல்லா இருக்கு அக்கா
அன்பு ஜலீலாக்கா
திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
வாழும் வாழ்க்கையில்
வல்ல இறைவனின்
அன்பையும்
அருளையும்
பெற்று
அன்புக்கணவரின்
பேரன்புக்குறியவாகி
நீடூழி வாழ்க
நீண்ட ஆயுளுடன்
வாழ்க..
விருதுக்கு
விழுந்து
விழுந்து
நன்றி சொல்லிகிறேக்கா..
திருமண நாள் வாழ்த்துக்கள், இல்லறம் என்றும் இனிதே அமைந்திட எமது பிராத்த்ணைகளும். இறைவன் உதவியால் தொடருட்டும் தங்களது மகிழ்வான வாழ்வு.
இனிமையான நாளில் இனிப்பான கேசரி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த திருமண நாளில் கொண்ட சந்தோஷம் , வாழ்நாள் முழுவதும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள் சகோதரி !! வாழ்க நலமுடன் - அன்புடன் டவுசர் பாண்டி.
Iniya Thirumana Nal Vazhthukal :-)
விருது பெற்றமைக்கும்,இனிய திருமணநாளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்!!
ஸாதிகாக்கா கவிதை நல்லாயிருக்கு...
மனமொத்த தம்பதிகளாய் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
கல்யாண நாளில் கேசரியா அதுவும் சேமியா கேசரியா??.ஒரு வட்டலாப்பம்(முட்டையில் செய்வது எங்கூரில் பேமஸ்)செய்யக்கூடாதா?.மச்சான் பாவம்!!.
((திருமண வாழ்த்து போட்டது முந்தய பதிவில் விழுந்து விட்டது ஆகவே மீண்டும்))
இந்த நாள் சந்தோஷம் என்றும் நீடிக்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.ஆமின்.
முதலில் உங்களுக்கு என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா..
பல ஆண்டு காலம் நீங்களும் உங்கள் கணவரும் குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாகவும் ஆமீன். எங்களுக்காகவும் தூவா செய்யவும்.
அருமையான அவார்டு கொடுத்த உங்களுக்கு எனது நன்றிகள்..
விருந்து வாங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
கேசரி ரொம்ப நல்லாயிருக்கு அக்கா
சொல்ல மறந்துட்டேன். சேமியா கேசரி - எனக்கு சொதப்பி கொண்டு இருந்தது. தண்ணி அளவில் தப்பு இருந்துருக்கு.
நீங்க, அளவு எல்லாம் சரியா சொல்லி, கொடுத்த ரெசிபி உக்கு நன்றி. இப்போ, சூப்பர் ஆ வருது.
ஜலிலாக்கா ஏற்கனவே வாழ்த்தி கமெண்ட் போட்டேனே அதை காணாமே..
மறுபடியும் சொல்லிக்கிறேன்.இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!!
திருமண நாள் வாழ்த்துக்கள், MANY MANY HAPPY RETURNS OF THE DAY
ஜலீநிங்களும் கணவரும்.பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடியின்றி சீறும் சிறப்போடும் பல நூற்றாண்டு மணநாள் கொண்டாட இறைவனை வேண்டிகொள்கிறேன்.
என்ன ஸ்பெஷம் மெனு, என்னன்ன அயிட்டம்ஸ், என்ன பரிசு எல்லாம் வந்து ஒவ்வொன்றா சொல்லுங்க. என்ன வெறும் சேமியா கேசரியோட முடிச்சிடிங்க. நோ நோ எல்லாம் வந்து சொல்லுங்க. ம்..
அக்கா பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.
நான் வந்து ஜாயின் பன்னிட்டேன். அதில் எங்க RKu எனக்கு தெர்iயலை.
வாங்கிய விருதுகளுக்கு வாழ்த்துக்கள்...
விருதுக்கே விருதா!!?? அவ்வ்வ்வ்..
அதை பகிர்ந்தளித்த விதம் அருமை..
ஜலீலாவிடமிருந்து விருது பெற்ற தோழமைகளுக்கு என் வாழ்த்துக்கள்..
உங்களுக்கு என் திருமண வாழ்த்து தோழி ஜலீலா அவர்களே...
விருது பற்றிய ஸ்வீட் நியூஸ் மற்றொரு ஸ்வீட் “சேமியா கேசரி”யுடன் வந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...
சொல்ல மறந்து விட்டேன் ஜலீலா...
இந்த புதிய டெம்ப்ளேட் படு சூப்பர்...
ஸாதிகா அக்கா ஒரு நாள் முன்பே உங்கள் அருமையான பொக்கே எல்லாம் கிடைத்தது.
ரொம்ப சந்தோஷம், இந்தியாவில் உள்ள பூக்களின் வாசனை மிக அருமை.
//ரசகுலாவும் ஜீராவும் போல்
பிரியாணியும் மசாலாவும் போல்
பாயசமும்,பாலும் போல்
அல்வாவும் நெய்யும் போல்
பர்பியும் தேங்காயும் போல்
சாம்பாரும் பருப்பும் போல்
ஊறுகாயும் உப்பும் போல்
ஊத்தப்பமும் வெங்காயமும் போல்
லட்டும் சர்க்கரையும் போல்
தக்காளியும் ரசமும் போல்//
ஸாதிகா இப்படி எல்லாத்தையும் சேர்த்து வாழத்தி இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.
உங்கள இடுகையை படித்து விட்டேன், இன்று தான் பதில் போட்டேன்.
ஹுஸைன்னாம்மா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
இரண்டு முறை வாழ்த்தி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் . நன்றி.
மாதேவி உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ஒருவனின் அடிமை,முதல் வருகை,முதல் வாழ்த்திற்கு மிக்க நன்றி
நாஞ்சிலார் வருகைக்கும் , வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி
வாங்க சித்ரா, உங்கள் சந்தோஷமான வாழ்த்துக்கு மிக்க நன்றி
போனி பேஸ் டெம்ப்லேட் நல்ல இருக்கா ரொம்ப சந்தோஷம்.
வாழ்த்திற்க்ம் மிக்க நன்றி.
மலிக்கா ஏம்பா விழுந்து நன்றி சொல்றீங்களா?
இதெல்லாம் கொஞ்சம் ,ம்ம்ம்ம்ம்,
ஆஹா கவிதையுடன் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
ஷபிக்ஸ் உங்கள் பிராத்தனைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி
சகோ .நவாஸ் உங்கள் இனிப்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி
டவுசர் அண்ணாத்தை சூப்பர் வாழ்த்து. ரொம்ப நன்றி
அருனா மாணிக்கம் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.
மேனகா உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி
//மனமொத்த தம்பதிகளாய் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்//
ஆஹா ஆசியா அருமையான வாழ்த்து, மிக்க நன்றி
மேனகா இரண்டு வாழ்த்தும் கிடைத்தது. நன்றி
சங்கர் புனிதம் வாங்க வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி
பல்லாண்டு பல்லாண்டு //நோய் நொடியின்றி// (விஜிஇது சொன்னீங்களே இதான் வேணும்) சீறும் சிறப்போடும் பல நூற்றாண்டு மணநாள் கொண்டாட இறைவனை வேண்டிகொள்கிறேன்.
சூப்பர் வாழ்த்து வெரும் சேமியா கேசரியுன் தான் முடித்து கொண்டேன்
ஜெய்லாணி இரண்டு முறை வாழ்த்தியது காதில் விழுந்தது.ஆமாம் அது இட்யாபப்த்துக்கு வைக்கும் முட்டை வட்லாப்பம், இன்று இது தான் செய்ய முடிந்தது. அடுத்த முறை செய்துட்டா போச்சு//
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
//பல ஆண்டு காலம் நீங்களும் உங்கள் கணவரும் குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாகவும் .//
உங்களுக்கும் துணை புரிவானகவும்.
உங்கள் வாழ்த்துக்கும் துஆவிற்கும் மிக்க நன்றி, ஆண்டவன்
சித்ரா அதற்குள் செய்து பார்த்தாச்சா? ம்ம் ரொம்ப சந்தோஷம்.
பிரபா வாங்க வாங்க, ரொம்ப சந்தோஷம், வருகைக்கும் மிக்க நன்றி
கோபி வந்தாலே விபரமான வாழ்த்து தான் ,
டெம்லேட் நல்ல இருக்கா? உங்கள் அன்பான வாழ்த்திற்கும் , அருமையான தொடர் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.
திருமண வாழ்த்துக்கள் அக்கா!!
என் அன்பான வாழ்த்துக்கள்... மற்றும் நன்றி
எனது மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் எல்லா வள்மும் பெற்று சேர்ந்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் இன்றுதான் உங்க ப்ளாக் பார்த்தேன் அக்கா sorry for late by shirin
ஜலீலாக்கா, இப்போதான் பார்க்கிறேன், இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் சந்தோசமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன். உங்களுக்கு கிடைத்த அவார்ட்டுக்கும் வாழ்த்துக்கள்.
சேமியா சூப்பராக இருக்கு. பார்த்ததும் சாப்பிடச் சொல்லுது.
சகோதரிக்கு,
முதலில் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.உங்களுக்கும் இதே நாளில் திருமணம்நாள் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சியுற்றேன்.ஸ்வீட் கொடுத்து அசத்திவிட்டீர்கள். தவிர அவார்ட்டும் கொடுத்து இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துவிட்டீர்கள். தங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்பு சகோதரன்
வேலன்.
விருது பெற்றமைக்கும்,இனிய திருமணநாளுக்கும் வாழ்த்துக்கள்!!
அன்பு சகோதரி ஜலீலா,
அல்லாஹ்வின் கருணையால் நீங்கள் இருவரும், குடும்பத்துடன்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று பல்லாண்டு இன்பமாய் வாழ்ந்திட தூவா செய்கிறேன்.
புதிய டெம்ளெட் நன்றாக இருக்கு ஆனால் லோடிங் டைம் கொஞ்சம் அதிகம்.
பி.கு: அன்பு சகோதரர் வேலன் உங்களுக்கும் அதே நாளில்தான் திருமண தினமா? உங்களுக்கும் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
சுவையான சுவை மிக்க நன்றி
அண்ணாமலையார், மிக்க நன்றி
ஷீரின் உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி. பரவாயில்லை வாழ்த்தை எப்ப தெரிவித்தால் என்ன, உங்கள் கார்டு கிடைத்தது மிக்க நன்றி + சந்தோஷம்
அதிரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும், வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
வேலன் சார் உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
காஞ்சனா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
சகோதரர் ஹைஷ், அருமையான வாழ்த்து, மிக்க நன்றி,
புதிய டெம்லேட் நல்ல இருக்கா ரொம்ப சந்தோஷம்.
ஆமாம் நிறைய பதிவுகள் இருப்பதால் லோட் ஆக ரொம்ப டைம் எடுக்குது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா