Monday, February 1, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா? பாகம் 4




வாழைப்பழத்தோல்:”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

இதன் குருத்தைத் தீப்புண்ணில் வைத்து கட்டினால், புண் விரைவில் ஆறுவதோடுவாழைக் குருத்தை சாப்பிட்டால் கூந்தல் நரைக்காமல் முகம் பளபளப்பாக இருக்கும்.

வாழை இலை: சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வர நல்ல குணம் கிடைக்கும்.

காயங்கள் மற்றும் தோல் புண்களுக்கு, தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணியில் நனைத்து புண்கள்மேல் போட்டு, இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும். இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம் ஆகியவற்றுக்கு குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் அது சரியாகும்.

சின்னம்மை, படுக்கைப் புண், தீக்காயம் ஆகியவற்றுக்கு பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் அந்த நோய் பாதிப்பு குணமாகும்





வாழை வேர்:குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை ஆகியவற்றுக்கு வாழை வேரை தீயிலிட்டு சாம்பலாக்கி, அந்த சாம்பலில் கால் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர அந்த பாதிப்புகள் குணமாகும்

வாழைப்பிஞ்சு: இது அதிமூத்திரம், இரத்த மூலம் அடிவயிற்று ரணம் தீர்வ தோடு வாழைக்காய் சாப்பிடுவதால் இரத்தம் விருத்தியாகி, வறட்டு இருமல், பித்த வாந்தி, வாயில் நீர் ஊறுதல் போன்றவை நீங்கி பசியை அதிகரிக்கும்

அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்


வாழைக்காய் : பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது

வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது

அதனால், இதை சமையலில் குறிப்பிட்ட அளவு எடுத்து வரலாம். ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக்காய்க்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.

அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாய்வுத் தொல்லை உண்டாகும்

வாழைத்தண்டு : சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள் மற்றும் ரத்தக் குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு சிறந்தது

அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறு நீரகக் கற்கள் கரைவதோடு சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்

வாழைத்தண்டுசாறு : இது வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

உடம்புக்குள்ளே "கல்லு" வந்திச்சா?

ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர், இளநீர், குளுக்கோஸ் முதலிய பானங் களோடு வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம், கொள்ளுப் பயறு சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

வாழைப்பூ: இதை சமைத்து சாப்பிட்டால் பித்தம், ஆசனக்கடுப்பு, வெள்ளை படுதல், இவற்றை நீக்கும்.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைப் பட்டை: இயற்கை யான குளிர்சாதனமாக அமைத்து, அவற்றால் ஆன பெட்டிகளில் பல அபூர்வ மூலிகைகள் பாதுகாக்கப்படுவதோடு தீக்காயங்களுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த எல்லா புகழும் இறைவனுக்கே.
==================================================================

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!

உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

இப்ப நானே வாய பிளக்கிறேன், வாழை குடும்பத்தில் இவ்ளோ இருக்கா?


"இது என் சொந்த ஆக்கம் இல்லை,"




மெயிலில் வந்த்து, இந்த ஆக்கத்தை உருவாக்கியவர் என்றும் இறைவன் அருளால் நலமாக வாழ்த்துக்கள்.




இத்தனை தகவல் வியக்கவைக்கிறது.

படித்தவர்கள் அனைவரும் பயன் பெற்றுக்கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

அப்படியே எனக்கும் துஆ செய்யுங்கள்.

இருங்க‌ ஏன் வாழைப‌ழ‌ சோம்பேறின்னு சொல்றாங்க‌ தெரிந்த‌வ‌ங்க‌ யாராவ‌து சொல்லுங்க‌ள்.










20 கருத்துகள்:

Menaga Sathia said...

அருமை!!

ஸாதிகா said...

ஆஹா..வாழையா போட்டுத்தள்ளுறீங்க ஜலி.அருமையான தகவல்கள்.பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெய்லானி said...

எந்த பழமானாலும் அதன் தோலை உரிக்க கொஞ்ஜம் கஷ்டப்படனும்.ஆனால் வாழைப்பழம் (பழுத்த அல்லது கனிந்த )மட்டுமே தோலை உரிக்க கஷ்டப்பட வேண்டாம். அப்படியும் சில பேர் உரிக்காமல் (கணவன் or மனைவி )அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு வாயை மட்டும் ஆ....என்று திறந்தால் ஜலீலா மேடம் அந்த ஆளை நீங்க என்னனு சொல்லுவீங்க
அதிகாலையில் ரங்ஸ் காஃபி கேட்டால் நீங்க தூங்குவது போல ஆக்‌ஷன் பண்ணுவீங்களே!! அப்போ உங்களை அவர் என்ன சொல்லுவார்.(மறைக்காம உண்மையை சொல்லுங்க )

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு அக்கா. வாழை பற்றிய பதிவுகளில் பல நல்ல பயனுள்ள குறிப்புகளை அறிய முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Muruganandan M.K. said...

வாழை இலையில் இவ்வளவு விடயங்களா.ஆச்சரியமாக இருக்கிறதா?

Chitra said...

அக்கா, வாழை பற்றிய சங்கதிகள் நல்லா இருக்கு.
வாழை பழ சோம்பேறி: வாழை பழத்தோல், எளிதாக உரிக்க வரும். ஆனாலும், அதை உரிக்கக் கூட சோம்பேறித்தனப் பட்டு, வேறு யாராவது உரித்து தந்தால், சாப்பிடலாம் என்று இருப்பவனுக்கு உள்ள பட்ட பெயர்.

Jaleela Kamal said...

நன்றி மேனகா

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.

Jaleela Kamal said...

ஜெய்லாணி ஆ ந்னு வாய திறந்த அன்பா ஊட்டி விட வேண்டியது தான்.

அட எங்க ரங்ஸ் எனக்கு டீ போட்டு கொடுத்ததை கரெக்டா சொல்லிட்டீங்களே.

ரங்ஸ் ஒன்னும் சொல்ல மாட்டார் நான் தான் நல்ல இல்லைன்னா கூடா ம்ம் டீ பேகிலேயே டீ இவ்வளவு நல்ல போடுகிறீர்களே என்பேன்.//

Jaleela Kamal said...

சரவண குமார் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பு இது

Jaleela Kamal said...

டாக்டர் முருகானந்தம் ,வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி, சந்தோஷம்.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சித்ரா.

வாழைபழ சோம்பேறி பற்றி நாஸியா வந்து சொல்வாங்க‌

Unknown said...

மிகவும் அருமையாக இருக்கு அக்கா.. தெரியாத பல விஷயங்களை தெரிய செய்த உங்களுக்கும் இந்த தகவலை மெயில் மூலம் அனுப்பிய நண்பருக்கும் எனது வாழ்த்துக்கள் & நன்றிகள்

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி காஞ்சனா.

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா

asiya omar said...

ஜலீலா வாழைப்பழத்தின் மகிமையை அருமையாக பதிவு செய்தது மிகவும் பயனுள்ள தகவல்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

ஹுஸைனம்மா said...

இதுதான் ஜலீலாக்கா!! மெயில்ல வந்தத படிச்சுட்டு பேசாம அடுத்த வேலையப் பாக்காம அல்லது சிலருக்கு மட்டும் ஃபார்வர்ட் பண்ணாம, நிறைய பேருக்குத் தெரிஞ்சு பயன்பெறணும்னு, அத கொஞ்சம் சரிபண்ணி (இதுதான் கஷ்டமான வேலை), படிக்க வசதியா நாலு பாகமா பிரிச்சு, பிளாக்ல போட்டிருக்கீங்க பாருங்க!! நன்றி அக்கா.

//வாழைபழ சோம்பேறி பற்றி நாஸியா வந்து//

ஏன் நாஸியாவைச் சொல்றீங்க? எதும் உள்குத்து இருக்கா? ;-)

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நாஸியவை அவங் வாப்சா வாழைபழ சோம்பேறின்னு சொல்லுவாங்களாம், நானும் யோசித்தேன் பிரியாணி கடைக்கு ஒரு மாதம் லீவு விட்டு லீவு விட்டு திறக்குறாங்க.. அதான் , ஆனால் நாஸியா என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.


பாராட்டுக்கு மிக்க நன்றி, இதை படித்ததும் , உடனே எல்லோருக்கும் தெரிந்தால் பயன்டைந்து கொள்வார்களே என்று தான் பிரித்து போட்டேன், ஆனால் மொத்தமாக தான் முதலில் போட்டேன், நிறைய பேருக்கு பாதிக்கு மேல் படிக்க சோம்பேறி தனப்பட்டு போய் விடுவார்கள். ஆனா பிரித்து போடுவது ரொம்ப கழ்டமான வேலை தான், இதை பிரித்து போட்டதில் சரி செய்யும் போது தெரியம அக்கார வடிசல் குறிப்பே டெலிட் ஆகிவிட்ட்டது. இனி மறுபடி அதை போடனும்.

Vikis Kitchen said...

Super kurippu pa. Vazhai will be my favorite hereafter.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா