Wednesday, September 15, 2021

Thakkadi Tips/ தக்கடி பிரியாணி மாதிரி கிடையாது/Mutton Kozhukkattai


விண்டு போகாமல் கொழுக்கட்டை செய்வது எப்படி ?


சமையல் அட்டகாசங்கள் .#hakkadiTips/ தக்கடி பிரியாணி மாதிரி கிடையாது/தக்கடிக்குடிப்ஸ் by jaleelakamal தக்கடி திக்கடி தக்குடி #Thikadi #thakudi கொழுக்கட்டை மட்டன் கொழுக்கட்டை டிப்ஸ் மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை / கறி தக்குடி / மட்டன்/Samaiyal_attakaasam by Jaleelakamal https://youtu.be/hgXhwN-R_gI விண்டு போகாமல் கொழுக்கட்டை செய்வது எப்படி ? இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் இடம் பெறும பல உணவு வ்கைகளில் இந்த தக்கடி/தக்குடியும் ஒன்றும். பெரும்பாலும் இதை மட்டன் எலும்புடன் சேர்த்து செய்வார்கள். இறாலிலும் செய்யலாம். Instagram - Jaleela_k (jaleelakamal) Pinterest - Jaleelabanu Twitter - Jaleelabanu

please visit my channel and support me friends


Friday, July 23, 2021

#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal

முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் 
இது  உருது முஸ்லீம்கள் வீட்டில் விஷேஷமாக செய்யும் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட், சென்னையிலும் பரவலாக கல்யான வீடுகளில் செய்யும் பல இனிப்பு வகைகள் அதாவாது  மிட்டாகானா, பிரட் ஹல்வா ,கேசரி, பீர்னி போல இந்த முத்தஞ்சனும் ஒன்று இது ரொம்ப ரிச் ஸ்வீட் .

பால் ‍ அரை லிட்டர்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
நெய்
பாதம் பிஸ்தா முந்திரி ‍ அரைவை ‍ 100 கிராம்
பால் ஏடு
பால் கோவா
பாசுமதி அரிசி ‍ 100 கிராம்
முந்திரி  ‍ 100 கிராம்
இதில் சேரும் வகைகளோ பல விதம் பால், அரிசி, பால்கோவா , பால் ஏடு , எல்லாம் கலந்து அதாவது ராப்டி ப்லஸ் பீர்னி & மிட்டகானா எல்லாமே சேர்ந்த்து.


please click below link and watch subscribe and share
like commentThursday, July 15, 2021

கத்தி வெட்டு பட்டு பீறிட்டு வரும் இரத்ததை நிறுத்த‌ #Tips Tips Tips

 நம்ம அறியாமல் தீடீரென கையில்  காய்கறிகள் நறுக்க்கும் போது கை வெட்டி கொள்ளும் அப்போது கட்டுக்கு அடங்கமல் பீறிட்டு வரும் இரத்ததை உடனே கட்டு படுட்த இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடியோவை கிளிக் செய்து பார்த்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 


please click above link Please watch my video and like comment share


Saturday, June 19, 2021

ராஜ்மா மினி ஸ்லைடர்/ Rajma burger /என்னுடைய ரெசிபி அவள் கிச்சனில் 2020
அவள் கிச்சனில் 2020 பிப்ரவரியில் வெளியான என்னுடைய 10 ரஜ்மா குறிப்புகளில் ஒரு ரெசிபி ராஜ்மா மினி ஸ்லைடர் அதாவது உலகில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பர்கர் வெஜ் பர்கர் அதை ராஜ்மாவிலும் செய்யலாம்.
இந்த லாக்டவுன் நேரத்தில் இது போல உணவக ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

இரத்த விருத்திக்கு , கேன்சர் செல்களை சரி செய்ய இந்த ரெட் கிட்னி பீன் உதவுகிறது இதை சாலட் ஆகவும் சுண்டலாகவும் செய்து சாப்பிடலாம்.Veg recipes
#Aval kitchen


8. ராஜ்மா மினி ஸ்லைடர்
வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்
துருவி வேகவைத்த பீட்ரூட் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த மஞ்சள் பூசணி - 4 சதுர வடிவ துண்டுகள்
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெங்காயப் பொடி - ஒரு டீஸ்பூன்
பூண்டு பொடி - அரை டீஸ்பூன்
துளசி இலை - கால் டீஸ்பூன் 

பிரெட் ஸ்லைஸ் - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

மினி ஸ்லைடருக்கு:

ரெடி செய்து வைத்து இருக்கும்ராஜ்மா ஸ்லைடர்கள் 5
குட்டி பன் - 5
லெட்ஸ்யூஸ் இலை  அல்லது ஐஸ்பர்க் லெட்யூஸ்தேவைக்கேற்ப
வட்டவடிவமாக வெட்டிய வெங்காயம் மற்றும் தக்காளி -  தேவைக்கேற்ப
தக்காளி சாஸ் -  தேவைக்கேற்ப

சதுர வடிவ சீஸ் – 5 எண்ணிக்கை
செய்முறை:
மிக்ஸியில் பிரெட் ஸ்லைஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துப் பொடிக்கவும்.
ஒரு பவுலில் வேகவைத்த ராஜ்மா, பீட்ரூட், மஞ்சள் பூசணி சேர்த்துக் கலக்கி, .
அதை  வேறு பவுலுக்கு மாற்றி, அதில் வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி, துளசி இலை, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பொடித்த பிரெட் கலவை பாதியைச் சேர்க்கவும். இதை  மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து மீண்டும் பவுலில் மாற்றவும். அதில் கலவை பர்கர் பதத்துக்கு வர, கோதுமை மாவு மற்றும் பிரெட் கிரம்ப்ஸ், மீதி உள்ள பொடித்த பிரெட் சேர்த்து நன்கு கலக்கி  உள்ளங்கைக்கும் சிறியதாக, திக்காக வட்ட வடிவில் தட்டவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி இந்த மினி ஸ்லைடரை இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

ராஜ்மா மினி ஸ்லைட்  அரேஞ்ச் செய்ய:
மினி பன்னை பாதியாக வெட்டி இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி தவாவில் சூடுபடுத்தவும். ஒரு பாதி மினி பன்னின் மேலே, ஒரு  டீஸ்பூன் அளவு தக்காளி சாஸை தடவி, லெட்யூஸ் இலையை பன் அளவுக்கு கட்  செய்து வைத்து அதன் மேல் வட்டமாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம், அதற்கு மேல் பொரித்து வைத்த ராஜ்மா பர்கர்/ஸ்லைடரை வைத்து , மேலே சதுர வடிவ சீஸை வைத்து மறுபடி மேலே வட்ட வடிவ வெங்காயம், தக்காளியை வைத்து மேலே மற்றொரு பாதி மினி பன்னைக் கொண்டு மூடவும்.

குறிப்பு:
வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி இல்லை என்றால், பொடியாக வெங்காயம், பூண்டை கட் செய்து சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை மிளகுத்தூள் இல்லை என்றால் கறுப்பு மிளகுத்தூள் சேர்க்கலாம். சாஸ் மற்றும் வெஜ் மையானஸ் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம்.

வீடியோ பதிவாகவும் உள்ளது அன்பான தோழ தோழியர்களே  சப்ஸ்கிரைப் செய்து உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்கவும்.