Tuesday, June 8, 2010

ஆலு கோஷ் குருமா - mutton with potato kuruma






//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்சா, அப்பளம், இனிப்பு வகைகள், ஆனியன் எக்,ஊறுகாய்ம் இஞ்சி டீ (அ) ஹரீரா) //




















தேவையானவை




மட்டன்(கோஷ்) - அரை கிலோ



வெங்காயம் - 300 கிராம்



தக்காளி - 300 கிராம்



ஆலு (உருளை) - கால் கிலோ



எண்ணை - 50 மில்லி



டால்டா - ஒரு மேசை கரண்டி



இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி



கொத்து மல்லி தழை - கால் கட்டு



புதினா - கால் கட்டில் பாதி



பச்ச மிளகாய் - முன்று



தயிர் - 50 மில்லி



பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு இரண்டு



தேங்காய் பவுடர் - முன்று மேசை கரண்டி



முந்திரி , பாதம் - இரண்டு மேசை கரண்டி



மிளகாய் தூள் - இரண்டு தேகக்ரண்டி



மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி



தனியாத்தூள் - கால் தேக்கரண்டி



உப்பு தேவைக்கு.












செய்முறை





1.தேவையான பொருட்களை தயாராக வைக்கவேண்டும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்னீரை வடித்து வைக்கவேண்டும்.கொத்து மல்லி புதினாவை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவேண்டும்.




2.குக்கரை காயவைத்து எண்ணை+டால்டா ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போடு நன்கு வதக்கி தீயை சிம்மில் வைக்க வேண்டும்




.3.பிற்கு வெங்காம் நன்கு மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வைக்கவும், நன்கு பச்ச வாடை மாரியதும், கொத்து மல்லி, புதினாவை போட்டு வதக்கி இரான்டு நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.




4.அடுத்து தக்காளி,பச்ச மிளகாயை போட்டு நன்கு வதக்கி சுருள விட வேண்டும்.




5.தக்காளி வதங்கியதும் அதில் மிள்காய் தூள், உப்பு தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.






6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.







7.மசாலா நன்கு கிரிப்பானதும் தயிர் மற்றும் கறியை போட்டு கிளற வேண்டும்.




8..ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து எல்லா மசாலாவும் சேரும் வரை கொதிக்க விட வேண்டும்.











9..இப்போது ஆலுவை தோலெடுத்து கழுவி நன்காகவோ எட்டாகவோ அரிந்து போடவேண்டும்.



10.முன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும்.















6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.




11.குக்கரை மூடி போட்டு நாலு விசில் விட்டு கறி வெந்ததும் இரக்கவும்.




12.முந்திரி, பாதம், தேங்காய் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து அதில் கொஞ்சம் கொத்து மல்லி புதினா சேர்த்து வைக்கவும்.




13.குக்கர் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் முந்திரி கலவையை ஊற்ற வேண்டும்.






14.தேங்காய் வாடை அடங்கும் வரை தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இரக்க வேண்டும்.






15.சுவையான ஆலு கோஷ் குருமா ரெடி.








குறிப்பு




தேங்காய் பவுடருக்கு பதில் அரை முறி தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.



கச கசா இருந்தால் அதையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
இது கீரைஸ் பகாறா கானாவிற்கு ஏற்ற சூப்பரான இஸ்லாமிய இல்லத்தில் விஷேஷங்கலில் செய்யும் சால்னா( குழம்பு).



பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி ஆகியவற்றிற்கு ஏற்ற குருமாவாகும்.





டிஸ்கி: இதில் உள்ள் பரோட்டா குருமா ஜெய்லானிக்கு பார்சல்.

28 கருத்துகள்:

சீமான்கனி said...

மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

Malar Gandhi said...

Oh my, I just love this combo' alu aur gosh, yummm:)

சீமான்கனி said...

பார்க்க பார்க்க நக்கு ஊறுது ஜலி அக்கா...உங்க வீட்டில் வந்து பொறந்திருக்கணும்...ஹும்ம்ம்ம்...

எல் கே said...

//எதாவது சொல்லிட்டு போனா எனக்கு உற்சாகமா இருக்கும்!//

good mng have a nice day

Anisha Yunus said...

ஆஹா....ஜலீலாக்கா...அட்ரஸாவது அனுப்புங்களேன்...கொஞ்சம் சாப்பிட்டுட்டே போயிர்றேனே...வெறும் படங்களா பாத்து பாத்து நாக்கு வறண்டு போச்சு. சரி, எனக்கு ஒரு உதவி வேணும். கேரளாவிலே முட்டையும் அரிசி மாவும்னு நினைக்கறேன்..அதுல தோசை மாதிரி மெலிசா செஞ்சு, அதுக்குள்ள தேங்கா, திராட்சை, சக்கரை பூரணம் வச்சு ரோல் மாதிரி சுத்தி தருவாங்க. அது எப்படி செய்யறது, அது என்ன பேருன்னு சொல்லி ஒரு பதிவு போடுங்களேன்...கூடவே வாராவாரம் ஒரு கேள்வி பதில் பதிவும் போட்டுருங்களேன்...ப்ளீஸ்...எங்கள மாதிரி ஆட்கள அலைய வேணாம் பாருங்க!!

ஜெய்லானி said...

அப்படியே ரெண்டு பரோட்டா பார்ஸல்....

அன்புடன் மலிக்கா said...

காலையிலேயே குருமா மணமணக்குது. சூப்பரக்கா.

Asiya Omar said...

வழக்கம் போல நல்லாயிருக்கு ஜலீலா.

Anonymous said...

ஆ வாய் ஊறுதே! எனக்கு உருளைக்கிழங்க கறி ஆனம் ரொம்ப பிடிக்கும். அதுவும் பெருநாள் காலையில எத்தனை இட்லி உள்ள போகுதுன்னே தெரியாது!

மங்குனி அமைச்சர் said...

////கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில்////


ஆகா , அப்ப இதுக்காக நான் இன்னொரு கல்யாணம் பண்ணனுமா ?? மேடம் என்மேல எந்த தப்பும் இல்ல நீங்க தான் சொல்லிருக்கிங்க

Chitra said...

அக்கா, வாசிக்கும் போதே நாவில் நீர் ஊறுது.... படங்களும் அருமை.

நட்புடன் ஜமால் said...

present madam :)

ஸாதிகா said...

//பார்க்க பார்க்க நக்கு ஊறுது ஜலி அக்கா...உங்க வீட்டில் வந்து பொறந்திருக்கணும்...ஹும்ம்ம்ம்.// சீமான் கனி அழாதீங்க..

ஸாதிகா said...

தேங்காயுடன் முந்திரி,பாதாம் அரைத்துப்போட்டு செய்தாலே தனி சுவைதான்.அநேக வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டில் நெய் சோறும் இந்த குருமாவும்தான்.

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...படங்கள் அருமை...

Menaga Sathia said...

ஆஹா பார்க்கவே நல்லா கலர்புல்லா சூப்பராயிருக்கு...

Jaleela Kamal said...

அமைச்சரே லொள்ளு ஜாஸ்தி, அப்பரம் பதிவு எழுதும் போது உஙக்ள் மனைவி ஸ்ட்ராங் டீ போட்டு கொடுக்க வேணான்னு சொல்லிடுவேன்.

athira said...

ஜலீலாக்கா கலக்கிட்டீங்க. நான் குருமாவைச் சொன்னேன்.

//அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விடுங்கள்.// ஓட்டை போட்டுவிட்டேன் ஜலீலாக்கா முதல்தடவையாக இன்று ஓட்டை போட ஆரம்பித்திருக்கிறேன்.... இனி ஒழுங்காகப் போடுவேன்.. இதுவரை எங்கே போடுவதெனத் தெரியாமல் போச்சே.... நான் ஓட்டைச் சொன்னேன்..

//டிஸ்கி: இதில் உள்ள் பரோட்டா குருமா ஜெய்லானிக்கு// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹுஸைனம்மா said...

பொதுவாவே எந்த வகை மட்டன்/சிக்கன் குழம்பு செய்தாலும் கிழங்கு சேர்ப்பது வழக்கம், பிள்ளைகளுக்குப் பிடிக்கும் என்பதால். இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன், சரியான்னு தெரியல: கிழங்கு சேத்து சமைச்சா மட்டன்/சிக்கனில் உள்ள கொழுப்பை கிழங்கு எடுத்துக்கொள்ளும் என்று.

Jaleela Kamal said...

சீமான் கனி முதலாவது வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி

எங்க வீட்டில் வந்து பிறந்து இருக்கனுமா? நல்ல சமைத்து போடும் வாழ்க்கை துணை அமைய தூஆக்கள்.

Jaleela Kamal said...

Oh my, I just love this combo' alu aur gosh, yummm:)

malar gandhi thank you for your comment

Jaleela Kamal said...

நன்றீ எல்.கே ரொம்ப வே உற்சாகமாகிவிட்டது.

Jaleela Kamal said...

அன்னு அதான் குறிப்பு போட்டாச்சு இல்ல செய்து சாப்பிடுஙகளேன்.

நீஙக்ள் சொல்வது ரோல் கட்லெட், முடிந்த போது செட்ய்து போடுகிறேன்,

Jaleela Kamal said...

ஜெய்லானி நீஙக் கேட்டதும் உடனே பரோட்டா பார்சல் பண்ணியாச்சு

மலிக்கா குருமா மணக்குதா உடனே செய்யுங்கள்.

நன்றி ஆசியா

நாஸியா கறியானம் இட்லிக்கா ம்ம் சூப்பரா இருக்குமே.

அமைச்சரெ நீங்க போடும் கமெண்ட அப்படியே உஙக் தஙக்மணிக்கு அனுப்பிடுரேன்

Jaleela Kamal said...

நன்றி சித்ரா
சகோ.ஜமால் . ஒகே அட்டனஸ் எடுத்து கொண்டேன்.

ஆமாம் ஸாதிகா அக்கா நாம் இஸ்லாமிய இல்லங்கலில் செய்வது தானே, ரொம்ப அருமையாந்து இது ஒன்று இருந்தால் போல் ரொட்டி, இடியாப்பம், ஆப்பம் தோசை, இட்லி, பிளைன் சாதம்,நெய் சோறு , பகராகானா , மருந்து சோறு அனைத்திர்ற்கும் பொருந்தும்.

Jaleela Kamal said...

மேனகா கீதா ஆச்சல் தவறாமல் வந்து பின்னூட்டம் இடுவதறு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

//அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விடுங்கள்.// ஓட்டை போட்டுவிட்டேன் ஜலீலாக்கா முதல்தடவையாக இன்று ஓட்டை போட ஆரம்பித்திருக்கிறேன்.... இனி ஒழுங்காகப் போடுவேன்.. இதுவரை எங்கே போடுவதெனத் தெரியாமல் போச்சே.... நான் ஓட்டைச் சொன்னேன்.//


ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

பொதுவாவே எந்த வகை மட்டன்/சிக்கன் குழம்பு செய்தாலும் கிழங்கு சேர்ப்பது வழக்கம், பிள்ளைகளுக்குப் பிடிக்கும் என்பதால். இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன், சரியான்னு தெரியல: கிழங்கு சேத்து சமைச்சா மட்டன்/சிக்கனில் உள்ள கொழுப்பை கிழங்கு எடுத்துக்கொள்ளும் என்று.
//

ஹுசைனாம்மா நீஙக்ள்சொல்வது எனக்கு தெரியல ஆனால் உருளை சேர்ப்பதால். சால்னா கொஞ்சம கிரிப்பாக வரும்,

ஆனால் கறியில் எல்லா வகையான காயும் போட்டு சமைக்கலாம் நல்ல இருக்கும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா