காய் வேகவைக்க
அவரைக்காய் - 4
கோவைகாய் - 3
பாகற்காய் - 1
முருங்கக்காய் - 1
பீன்ஸ் - 6
கேரட் - 1
தக்காளி - பெரியது ஒன்று
சின்னவெங்காயம் (சாம்பார் ஆனியன்) - பத்து
பச்ச மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - முன்று டீஸ்பூன்
வெல்லம் - அரை தேக்கரண்டி
புளி சிறிய எலுமிச்சம் அளவு அரை டம்ளர் அளவு கரைத்து கொள்ளவும்.
வேகவைக்க
துவரம் பருப்பு - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தாளிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - முன்று பல்
கருவேப்பிலை - 20 இலைகள்
கொத்துமல்லி தழை சிறிது பொடியாக அரிந்தது ஒரு மேசைகரண்டி , கடைசியாக மேலே தூவ
பருப்பை வேகவைத்து மசித்து வைக்கவும்
காய்களை அரிந்து அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்க்கவும்.
தீயின் தனலை சிம்மில் வைக்க்வும் காய் வெந்ததும் , புளிசேர்த்து கொதிக்க்கவிடவும்.
அடுத்து வெல்லம், வெந்த பருப்பை மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு
இது போல் காய்களை சேர்த்து கொள்வதால் குழந்தைகள் காய் சாப்பிட வில்லை என்றாலும் காயின் ஜூஸ் சாம்பாரில் நல்ல இரங்கி இருக்கும்.
பாகற்காய் சாம்பாரில் சேர்ப்பதால் கசப்பு தன்மை சிறிதும் இருக்காது.
இது போல் சாம்பாரை எல்லா விதமாக காய்களிலும் செய்யலாம்.
சாம்பார் பொடி இல்லை என்றால் நாம் பிரெஷாக திரித்தும் செய்யலாம்.
அரைத்து விட்ட சாப்பாரும் செய்யலாம்.
வருத்து பொடித்திரித்து சேர்த்தும் செய்யலாம்.
சாம்பாரில் பல வகை உண்டு, கோவைக்காயும், பாகற்காயும் சேர்ப்பது. சர்க்கரை வியாதி காரர்களுக்கு மிகவும் நல்லது.
என் சின்ன பையனுக்கு பூரி ரொட்டி, வடை தோசை, இட்லி எல்லாத்துக்குமே சாம்பார் இருந்தால் போதும், ஹோட்டல் சாம்பாரும் பிடிக்காது, மற்றவர்கள் செய்ததும் பிடிக்காது, கரெக்டாக கண்டு பிடித்துவிடுவான். நீங்க செய்தது இல்லை என்று, எல்லோரும் செய்வது போல் தான் நானும் செய்கீறேன் அது எப்படி கண்டு பிடிக்கிறான் என்று எனக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
பருப்பு வகைகள் மசூர் தால், மும் தால் சேர்த்து செய்தால் ஹோட்டலில் செய்வது போல் இருக்கும். அதே போல் பூசனி, பப்பாளி காய் சேர்த்து செய்தாலும் அருமையாக இருக்கும். வாரத்தில் இரு முறை சாம்பார் தான்.
Tweet | ||||||
48 கருத்துகள்:
Superb Sambar..very healthy and delicious..akka, I've announced an event for June-July..Hope you have seen it..send entries..
Tasty!!!!
இது வழக்கமா நாங்க பண்றத விட வித்யாசமா இருக்கு
ஆ... ஜலீலாக்கா வடையை முதலில் தாங்கோ..
ஜலீலாக்கா... சாம்பார் அருமை. கோவைக்காய் இம்முறை நட்டிருக்கிறேன் பூத்துவிட்டார், காய் வந்ததும் படம் எடுத்துப் போடுறேன்..... வடைக்கு சாப்பாறு வேண்டாம் சட்னிதான் வேணும் ஓக்கை....
பி.கு:
ஜலீலாக்கா ஆராவது எனக்கு முன் கொமெண்ட் போட்டிருந்தால், டக்கென என்னுடையதை மாத்தி மேலே போட்டிடுங்கோ...பிளீஸ்ஸ்ஸ் வடை சாப்பிடுற பிசியில ஆரும் நேரகாலம் செக்பண்ணாயினம்:):). படிச்சதும் கிழிச்சிடுங்கோஓஓஓஓ
//இது போல் காய்களை சேர்த்து கொள்வதால் குழந்தைகள் காய் சாப்பிட வில்லை என்றாலும் காயின் ஜூஸ் சாம்பாரில் நல்ல இரங்கி இருக்கும்.//
இப்படிதான் அம்மாமார்கள் எல்லோரும் நல்லா ஏமாத்தி சாப்பிட வச்சுடுறீங்க...பாவம் நாங்க...
:P
சாம்பார் வித்யாசமா இருக்கு ஜலி அக்கா..
நான் தான் பஸ்ட்டு, எனக்கு தான் வடை! அப்படியில்லாகட்டி சாம்பார் வடை தந்தாகணும், சரியக்கா!!!
நாங்கலேல்லாம் பருப்பே போடாம சாம்பார் வைக்கிற ஆளுங்க....!!ஹி..ஹி... இத்தனை காய்கறி போட்டா சாப்பிடாமலா இருப்போம் ...
அப்படியே பத்து இட்லி (ஜெய்லானீஈஈஈ போதுமா ?? ) பார்சல்பிளீஸ் . பூஸு , மங்கு வரதுகுள்ள .....!!
///Jaleela Kamal said...
நீங்க ஒருத்தர் தான் எங்க வீட்டில். எல்லோரும் என்னை கூப்பிடுவது போல் கூப்பிடுகிறீர்கள். ///
நான் உங்க வீட்டு பிள்ளைதானே ஜலி கா...
டெம்ப்ளேட் டிஸைன் கலக்குறிய போங்க
------------------------------------
வீட்லையும் இப்ப இத பார்த்தாங்க - சீக்கிரம் செய்தாலும் செய்யலாம் ...
அசத்தலான கலர்ஃபுல் சாம்பார்.
எங்கள் வீட்டிலும் அம்மா இதனை செய்வாங்க...அதிலும் வைகுண்ட ஏகதேசி அன்றைக்கு பலவிதமான காய்கள் சேர்த்து செய்வாங்க...சூப்பர்ப்..
சகோதரி எங்க ஊர் பக்கம் சாம்பார் அதிகம் கிடையாது ,இட்லிக்கு தான் சாம்பார் , இது கொஞ்சம் வித்தியாசமா உள்ளது வாழ்த்துக்கள்.
சூப்பர்ர்ர் சாம்பார்!!
akka, super recipe!
@@@athira //ஜலீலாக்கா ஆராவது எனக்கு முன் கொமெண்ட் போட்டிருந்தால், டக்கென என்னுடையதை மாத்தி மேலே போட்டிடுங்கோ...பிளீஸ்ஸ்ஸ் வடை சாப்பிடுற பிசியில ஆரும் நேரகாலம் செக்பண்ணாயினம்:):). படிச்சதும் கிழிச்சிடுங்கோஓஓஓஓ //
ஆ...இது வேர நடக்குதா ?.... இதை படிச்சும் நான் இன்னும்...இதுக்கு பேசாம ஒரு லிட்டர் வினிகரை குடிச்சிட்டு ..........>>>
அதிரா அப்படி எல்லாம் மாற்றி போட முடியாது
வேண்டுமானால் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடியும்.
அடுத்த முறை பார்க்கலாம்
என்ன ந்னு தெரியல எல்லோருக்கும் பிளாக் நல்ல ஓப்பன் ஆகுதா. நேற்று பப்லிஷ் பண்ணதிலிருந்து லாகின் ஆகவே முடியல.
@@@Jaleela Kamal--//அதிரா அப்படி எல்லாம் மாற்றி போட முடியாது வேண்டுமானால் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடியும்.
அடுத்த முறை பார்க்கலாம் //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதிரா அதுவும் இல்லாம எனக்கு ஞாணயம் தான் ரொம்ப முக்கியம். ஹிஹி பைசாவ சொல்லல
நீத்து பாலா முதல் பின்னூட்டத்துக்க்கு மிக்க நன்றி
உங்க்ள் ரவுண்ட் அப் எண்ட்ரி பார்த்தேன் ஊருக்கு போகிறேன் அதற்குள் முடிந்தால் அனுப்புகிறேன்.
நன்றி சித்ரா
நன்றி எல் கே
நன்றி அதிரா (என்னை கோபிக்க கூடாது)
ஆமாம் சீமான் கனி காய் கள் சில குழந்தைகளுக்கு ஏன் என் பிள்ளைகளுக்கே பிடிக்காது அத சாப்பிட சொல்லி தொண்டையில் குத்துவதோடு, ஏதாவது ஒரு வகையில் உள்ளே தள்ளிடலாம்.
நன்றீ எங்க வீட்டு பிள்ளை .
இதில் ஒரு காய் டைப்பன்னும் போது விட்டு போச்சு யாரும் கவனிக்கலையா>
எம் அப்துல்லா கமெண்ட் பப்லிஷ் பண்ணமுடியாமல் போனதால் எல்லோரும் அவரவர் தான் பஸ்ட் என்று நினைத்து கொண்டார்கள். சரி பரவாயில்லை உங்க்ளுக்கு நிச்சயம் சாம்பார் வடை உண்டு
இளம் தூயவன்
இட்லிக்கு சாப்பிடும் சாம்பார்தான்,
ஆனால் இதை பல சுவையில் வித்தியாசமாக செய்யலாம்.
நாங்க பிளைன் சாதம், தோசை, இட்லி அடை, வடை, போண்டா, உப்புமா, பொங்கல் எல்லாத்துக்கும் செய்வோம்..
நன்றி மேனகா
நன்றி வானதி
நன்றி ஸாதிகா அக்கா
கீதா ஆச்சல் இந்த குறிப்பு உஙக்ள் அம்மா விஷேச நாளில் செய்வதை ஞாபக படுத்தி விட்டதா.
நான் எப்ப சாம்பார் வைத்தாலும் 5 காய் இல்லை 7 காய் இல்லாமல் செய்யமாட்டேன்.
ஆ...இது வேர நடக்குதா ?.... இதை படிச்சும் நான் இன்னும்...இதுக்கு பேசாம ஒரு லிட்டர் வினிகரை குடிச்சிட்டு //
ஜெய்லானி ,ம்ம்ம் வயிறு கிளீன் ஆகிடும்
சகோ.ஜமால். டெம்ப்லேட் நல்ல இருக்கா? ரொமப் சந்தோஷம்.
வீட்டுல உஙக் தங்கமணி பார்த்துட்டாங்களா? உடனே செய்ய சொல்லுங்கள் , ஹாஜருக்கு ரொம்ப பிடிக்கும்.
தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி
சாம்பார் பார்க்க மிக மிக அழகாயிருக்கிறது ஜலீலா! சுவையும் அதுபோலத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனக்கு!!
// Jaleela Kamal said...
அதிரா அதுவும் இல்லாம எனக்கு ஞாணயம் தான் ரொம்ப முக்கியம். ஹிஹி பைசாவ சொல்லல//ஐயே..
June 15, 2010 11:04 AM
நன்றி மனோ அக்கா
கலக்குறீங்க ஜலீக்கா, Keep it up!!
படத்தப் பாத்து நாக்கு ஊருது, நல்ல பசி வேற! நான் இப்பவே சாப்பிட போறேன்!
வணக்கம் உங்கள் blog-ய் நேற்று தான் பார்த்தேன். மிக மிக பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் பணி.
வாவ் சூப்பர் சாம்பார். என் வீட்டில் என் அம்மா பொங்கல் பண்டிக்கை மறுதினம் & திருவாதிரை அன்றும் இந்த சாம்பார் செய்வாங்க. நல்ல ஹெல்தி க்ரீன் வெஜ் சாம்பார்.
நன்றி ஷபிக்ஸ்
//படத்தப் பாத்து நாக்கு ஊருது, நல்ல பசி வேற! நான் இப்பவே சாப்பிட போறேன்!//
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றீ
முடிந்த போது தொடர்ந்து வாங்க , கருத்துக்களை தெரிவியுங்க
////வணக்கம் உங்கள் blog-ய் நேற்று தான் பார்த்தேன். மிக மிக பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் பணி//
வாங்க சங்கீதா, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
//வாவ் சூப்பர் சாம்பார். என் வீட்டில் என் அம்மா பொங்கல் பண்டிக்கை மறுதினம் & திருவாதிரை அன்றும் இந்த சாம்பார் செய்வாங்க. நல்ல ஹெல்தி க்ரீன் வெஜ் சாம்பார்//
விஜி இது சும்மா நான் என் இழ்டத்துக்கு செய்தது,
இது பண்டிகை காலங்களில் நீங்கள் செய்வதுமா>
எப்போதுமே காய் நிறைய சேர்த்து தான் சாம்பார் செய்வது.
வருகைக்கு மிக்க நன்றி தோழி விஜி
வழக்கம் போல் சாம்பாரும் அருமையாக இருக்கு.
ஜெய்லானி said...
அப்படியே பத்து இட்லி (ஜெய்லானீஈஈஈ போதுமா ?? ) பார்சல்பிளீஸ் . பூஸு , மங்கு வரதுகுள்ள .....!!//// ஜலீலாக்கா.. இட்லிக்குள் சீனவெடி:) ஒளிச்சுவச்சுச் சுட்டுக்கொடுங்கோ... கேட்டால், இது சீனாஇட்லி....
உள்ளே மட்டின் கறி இருக்கெனச் சொல்லுங்கோ....
ஜெய்லானி said...
ஆ...இது வேர நடக்குதா ?.... இதை படிச்சும் நான் இன்னும்...இதுக்கு பேசாம ஒரு லிட்டர் வினிகரை குடிச்சிட்டு ..........>>>/// பேச்சுப் பேச்சாக இருக்கோணும்.... இன்னும் வினிகர் குடிக்கவில்லையோ?:)... ஜலீலாக்கா என் 90 அ.கோ.முட்டைகளையும்(அப்பப்பா.. முழுப்பெயர் போடாட்டில் முட்டையில முடி பிடுங்கிப்போடுவினம்:)) கெதியாத் தரச்சொல்லுங்கோ..
ஜெய்லானி said...
@@@Jaleela Kamal--//அதிரா அப்படி எல்லாம் மாற்றி போட முடியாது வேண்டுமானால் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடியும்.
அடுத்த முறை பார்க்கலாம் //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/// ஜலீலாக்கா ஏன் இங்கே ஒரே புகைப்புகையா வருதூஊஊஊஉ? வினிகர் குடிச்சதாலயோ? கடவுளே மீ.. எஸ்ஸ்ஸ்ஸ்... ஜலீலாக்கா நாணயம்தான் முக்கியமோ? அப்போ பேப்பர் காசு முக்கியமில்லையோ? கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
அடுத்த பதிவில் என் பதிவு முதலிடத்தில் இல்லையெண்டால்.....
..................... என்னை முழுவதும் சொல்ல விடவேணும் உப்பூடி முறைக்கப்பூடாது..... நான் பெனாயிலைக்.... குடிக்கமாட்டேன்.. ஜெய்..லானியின் வினிகரில் கலந்திடுவேன்........ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Hello Sis. Jaleela,
This is an excellen blog and a great reference for all our traditioanl dishes made in Muslim households. I love this blog!
Can you please post the recipe for 'DhumRut' which is a famous dish (made using rava) in most of our functions.
whatever combination i try, it does not work out very well..
Thanks in advance.
Salam and Regards.
அதிரா நீங்கள் புலம்புவதை பார்த்தால் என்ன செய்வது ,
நீங்கள் நித்திரை கொள்ளும் போது நாங்கள் விழிக்கிறோம்,
நாங்கள் விழிக்கும் போது நீங்கள் நித்திரையில்.
கெதியா விழித்து இருங்கள் கண்டிபபா வடை உங்க்ளுக்கு தான்..
ஜெய்லாணி வினிகரில் பெனாயில கலந்து சாப்பிட்டா எந்த பிளாக்கும் பார்க்க முடியாம அரஸ்ட் ஆகிடுவார்
நசீமா உங்கள் முதல் வருகைக்கு மிகக் நன்றி
.
ஊருக்கு செல்ல இருப்பதால் புதுசா எதுவும் போட்டோ எடுகக்ல.
தம் அடை முடிந்த போது போஸ்ட் பண்ரேன்
சாம்பார் வெங்காயத்தை பருப்போடு சேர்த்து வேகவைத்தால் கரைந்து விடுமே என்று, காய்களோடு மட்டும்தான் போடுவேன்.
சூப்பர் சாம்பார்! போட்டோவைப் பார்க்கும்போதே அப்படியே எடுத்துக்கலாம் போல இருக்கே..ஜலீலாக்கா,சாம்பார் பவுலை எடுத்துக்கட்டுமா? :)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா