தேவையானவை
பாசுமதி அரிசி – 300 கிராம் (ஒன்னறை டம்ளர்)
எண்ணை – கால் டம்ளர்
வெங்காயம் – இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்ன்றை தேக்கரண்டி
கொத்துமல்லி , புதினா – சிறிது
தயிர் – ஒரு மேசை கரண்டி
தக்காளி – அரை பழம்
உப்பு – ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
பட்டை, லவங்கம்,ஏலம் – தலா ஒன்று ஒன்று
செய்முறை
1.அரிசியை களைந்து ஊறைவைக்கவும்.
2. ரைஸ்குக்கர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி பட்டை ஏலம்,கிராம்பு சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் கருக்கூடாது.
3.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலர் மாறும் வரை சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்
கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கி ,தயிர், பச்சமிளகாயையும்சேர்த்து கிளறவும்
தாளித்து தண்ணீர் ஒன்றிற்கு ஒன்னறை அளவு அளந்து ஊற்றி உப்பு சேர்க்கவும்.
4. அரிசியை தண்ணீரை வடித்து கொட்டி ரைஸ் குக்கரில் வைக்கவும்.
தேவைப்பட்டால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கலாம்.
நல்ல வெள்ளையாக சும்மாவே பிடித்து சாப்பிடுவது போல் இருக்கும்.
வெறும் புதினா துவையலே நல்ல இருக்கும்.
இது முன்று நபர்கள் சாப்பிடலாம். ஆனால் நம்ம ஜெய்லாணி, மங்குனி மாதிரி ஆட்கள் இரண்டு பேர் தான் சாப்பிட முடியும்.
இது இஸ்லாமிய இல்ல விஷேச சமையாலாம், இதற்கு தொட்டு கொள்ள கறி குழம்பு, தால்சா, சிக்கன் பிரை, மட்டன் பிரை, அப்பளம், வெங்காய முட்டை.
வெள்ளை வெலேருன்னு வெரும் சாதத்தையே புதினா துவையலுடன் பிடித்து சாப்பிடலாம்/ தாளிப்பு கரிந்தால் சாதம் நிறம் மாறிவிடும்
இஸ்லாமிய இல்ல கல்யாணம் மற்றும் விஷேச சமையல்.
பகாறா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, மட்டன் சுக்கா
நிறைய பேருக்கு செய்வதா இருந்தா இந்த லிங்கில் பத்துபேருக்கு உண்டான அள்வு கொடுத்து இருக்கேன் பார்த்துகொள்ளலாம்.
Tweet | ||||||
35 கருத்துகள்:
மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
அக்கா நியாபக படுத்தி விட்டுடீங்களே...எனக்கு அம்மா நியாபகம் வந்திருச்சு...கூடவே அம்மா வைக்கிற சிக்கென் கறி இருந்தா சாப்டுகிட்டே இருப்பேன்..ஹும்ம்ம்ம்...
//நம்ம ஜெய்லாணி, மங்குனி மாதிரி ஆட்கள் இரண்டு பேர் தான் சாப்பிட முடியும்.//
appa sariii .. nalla irukkunga
புதிதாய் ப்ளாக் துவங்குவது பற்றிய உங்கள் பதிவு யூத் விகடனில் வந்துள்ளது
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp
ரைட்டு செய்து சாப்பிட்டு விடுவோம்
மசாலா இல்லாமல் அழகா தெரியுது
நல்ல மணமாக அருமையாக இருக்கு.
சீமான் கனி இதுக்கு தொட்டு கொள்ள செய்யும் துணை கறிகள் லைனாக அடுத்து அடுத்து பதிவுகளில் வரும்.
என் பதிவு மூலம் உங்கள் அம்மாவை நினைக்க வைத்தது ரொமப் சந்தோஷம்.
இப்படி நினைக்கும் போது அவர்களுக்கு துஆ செய்து கொள்ளுஙக்ள்
எல் கே இதில் கொடுத்துள்ள அளவு இரண்டு பெரிய ஆள், ஒரு சின்ன பையன் சாப்பிடும் அளவு
அமைச்சர், ஜெய்லானிக்கு எல்லாம் இது முழுவதும் தேவை படும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் யுத் ஃபுல் விகடன் விகடனில் வந்தததை பார்த்தேன் ரொம்பநன்றி
சகோ. ஜமால் இது நெய் சோறு தான் சிறிது வித்தியாசம்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
looks easy and delicious :-)
அறுசுவையில் உங்களின் இந்த ரெஸிப்பி பார்த்து செய்து இப்பொழுது பகாறாகானாவுக்கு என் குடும்பத்தில் ஒரு ரசிகபட்டாளமே உள்ளது.
ரொம்ப ஈசியான குறிப்பு , ஒரு நாள் லஞ்ச் பாக்ஸ்க்கு செய்திட வேண்டியது தான்.
//நட்புடன் ஜமால் said...
ரைட்டு செய்து சாப்பிட்டு விடுவோம்
மசாலா இல்லாமல் அழகா தெரியுது //
ஜமாலுக்கு மசாலா அதிகமா சேர்த்தா பிடிக்காது போல இருக்கு. :)
நாங்களும் செய்றோம். இங்கு இதை பகாறா சாவல்ன்னு சொல்வாங்க.
//இது முன்று நபர்கள் சாப்பிடலாம். ஆனால் நம்ம ஜெய்லாணி, மங்குனி மாதிரி ஆட்கள் இரண்டு பேர் தான் சாப்பிட முடியும்.//
மங்குனியை கூட்டு சேர்த்ததை வண்மையாக கண்டிக்கிறேன்..பின்ன இவ்வளவு ருசியுள்ள சாப்பாடு + தால்ச்சா + தக்காளி பச்சடி இருக்கும் போது எனக்கே பத்தாது....
yes aruna very easy dish , thanks for your comment
ஸாதிகா அக்கா உங்கள் வீட்டில் மட்டும் இல்ல எல்ல்லா தோழிகளும் இபப்டி தான் சொல்கிறார்கள்.
இது காலை உணவிற்கு இத்துடன் புதினா துகையல் ஸ்ஸ் ரொம்ப அருமையாக இருக்கும்.
வந்தமைக்கு மிக்க நன்றி.
சாருஸ்ரீ வாங்க லஞ்ச் பாக்ஸ் சுக்கு தானே ம்ம் செய்யுங்க , இனி அடிக்கடி செய்ய்வேண்டி வரும்
பாக்கிஸ்தானியர் கள் பகாறா சாவலுன்னு சொல்லுவாஙக் அக்பர்.
வருகைக்கு மிகக் நன்றி
ஜெய்லானி முதலில் இரண்டு பேர் என்றேன் அப்பரம் இது ஜெய்லாணிக்கே பத்தாது என்று சொல்லி இருக்கேன் பார்க்கலையா?
வந்தமைக்கு மிக்க நன்றி
சாப்பிட தெரிந்த அளவுக்கு சமைக்க எல்லாம் தெரியாது. வீட்டிற்கு போய் உம்மாவிடம் சொல்லித்தான் சமைக்கனும் உங்கள் ஆதரவுடன்..
jaleela akka,
thakkali eppo serpathu
regards
jayanthivinay
ஆஹா! பகாறா கானா! இப்ப எங்க வீட்டில மட்டுமில்லை... என் பிரெண்ட்ஸ் வீட்டிலும் இப்போ ரொம்ப பேமஸ்... எல்லா கறிவகையும் பொருந்துவதால்..பிள்ஸ் குட்டீஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுறாங்க... முதல்ல 1 கப் எங்க ரெண்டு பேருக்கு.. அப்புறம் 2 கப்.. இப்ப 3 கப் தேவையா இருக்கு... அப்போ பாருங்க யாராவது வந்தா பாத்திரம் காலி ஆகறவரை விடறதில்லை.... எங்க போனாலும் இலா உங்க (நோட் த பாயிண்ட் யுவர் ஆனர்) பகாறா ரைஸ் வச்சிடலாம் ரொம்ப சிம்பிள்ன்னு சொல்வாங்க.. நானும் மறக்காம என்னோட அருசுவை பிரெண்ட் ஜலீலா அக்காவின் ரெசிபி என்று சொல்லுவேன்...
ஆஹா...புது டெம்பிளேட் மாற்றிகிட்டே இருக்கின்றிங்க...சூப்பர்ப்...வாழ்த்துகள்...youthful vikatanயில் வந்த பதிவிற்கு வாழ்த்துகள்...
akka, super recipe.
Same pinch, I made bagara rice for lunch today. Loved ur version too:)
நெய் சாதம் மாதிரி வித்தியாசமா இருக்குக்கா...
ரியாஸ் உங்கள் உம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிடுங்கள்
கருத்து தெரிவித்த்மைக்கு மிக்க நன்றி
ஜெயந்தி வாங்க வருகைக்கு மிகக் நன்றி
தக்காளியை தாளித்து முடித்து கடைசியாக அரிசி சேர்க்கும் முன் முழுசா (அ) நான்கு துண்டாக கட் செய்து போடனும் , இது வெள்ளை சாதத்தில் ரெட்டாக பார்க்க அழகாக இருக்கும்,பொடியா அரிய கூடாது. சாப்பாடு ரோஸ் கலராகிடும்.
இலா பகாறா கானா மூலம் தினம் என்னை நினைக்கிறீர்கள், கேட்கும் போது ரொமப் சந்தோஷமாக இருக்கு.
நீங்கள் வந்ததும் ரொம்ப ரொமப் சந்தோஷம்.
Assalamu alaikum,unga blog design romba alaga iruku.oru poonthotathula enter ana feeling.very nice.
வாழ்த்துக்கள் ஜலீலா! மிக நல்ல பதிவு.
கீதா ஆச்சல் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .
நன்றீ வானதி
நன்றி மேனகா ஆமாம் நெய் சாதம் போல கொஞ்சம் மாறுதல்
வா அலைக்கும் அஸ்ஸலாம், பூந்தோட்டதில் நுழைந்தது போல் இருக்கா?
ரொம்ப சந்தோஷம்.
செல்வி அக்கா உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க ந்ன்றி
ஜலீலா அக்கா
இன்னிக்கி இது தான் நம்ம வீட்டுல. கடாய் வெஜிட்டபிள் கூட செம்ம டேஸ்டு! சூப்பரா இருந்தது. நீங்க சொல்ற மாதிரி வெறுமனே பிடிச்சு சாப்பிடலாம்! அவ்ளோ டேஸ்டு!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா