Showing posts with label ஏர் ப்ரையர் ரெசிபி. Show all posts
Showing posts with label ஏர் ப்ரையர் ரெசிபி. Show all posts

Wednesday, July 26, 2017

ஏர் ப்ரையர் கிரில் பிஷ் - Air Fryer Grill Fish Fry


ஏர் ப்ரையர் கிரில் பிஷ்
Air Fryer Grill Fish Fry

சங்கரா மீன் – அரை கிலோ
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆச்சி மீன் ப்ரை மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்  - ஒரு தேக்கரண்டி
ஆனியன் பொடி – ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி – ஒரு தேக்கரண்டி

தேங்காய் எண்ணை – தேவையான அளவு



செய்முறை

 மீனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே குறுக்காக கீறி விடவும் ( மசாலா நன்கு மீனுக்கு செல்ல) 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஏர் ப்ரையரை ஆன் செய்து 16 நிமிடத்துக்கு செட் செய்து தேங்காய் எண்ணையை மீனின் மேலே முழுவதும் படுமாறு பரவலாக ஊற்றி விடவும்.
ஒரு பக்கம் 8 நிமிடம் கிரில் ஆனதும் , திருப்பி போட்டு மறுபக்கம் தேங்காய் எண்ணை தடவி 8 நிமிடம் கிரில் செய்யவும்.
இருபுறமும் மொருகலாக கிரில் ஆகி அருமையாக இருக்கும்.
ரொம்ப ஈசியான ஏர் ப்ரையர் கிரில் ஃபிஷ் ரெடி

 பேலியோ டயட் ரெசிபி, மீன் வறுவல், ஏர் ப்ரையர் ரெசிபி
How to make Air Friyer Fish Fry
Paleo Diet Dinner Recipe

 இந்த ஏர்ப்ரையரில் சிக்கன் மற்றும் காய்கறிகளுக்கு நடுவில் சுற்றுவது போல் ( கிரைண்டர் சுற்றுவது போல ) ரோலர் இருக்கும் , மீனுக்கு மட்டும் அதை எடுத்து வைத்து விட்டு தவ்வா போல அப்படியே இரண்டு பக்கமும் வைத்து டைம் செட் பண்ணால் போதும்/

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/