Showing posts with label சந்தோஷம். Show all posts
Showing posts with label சந்தோஷம். Show all posts

Monday, October 22, 2018

ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் - கிட்ஸ் ஸ்பெஷல் - அவள் விகடன் - 30 வகை அசத்தலான அகர் அகர்



ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் அவள் விகடன்
கிட்ஸ் ஸ்பெஷல் - அசத்தலான அகர் அகர் ரெசிபிகள்
ஆக்கம்
ஜலீலாகமால்..


அகர் அகர் என்னும் கடல் பாசி /சைனாகிராஸ் 
2018 அவகள் விகடனில் 16.10.18 , உணவே உன்னை ஆராதிக்கிறேன், என்ற புத்தக இனைப்புடன் என் 30 வகையான அகர் அகர் என்னும் சைனா கிராஸ் ரெசிபி வெளியாகி உள்ளது.
என் ரெசிபிகளை பிரசகரித்த விகடன் ஆசிரியர்களுக்கும், என்னை அறி முக படுத்திய வைதேகிக்கும் , மற்றும் வள்ளி தாசன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

Agar agar/China Grass/ Kadal paasi

I am glad to inform you that my 30 agar agar (cool) recipes for kids special has been published in The no-1 Ladies magazine (Tamil) Aval Vikatan on 16 th October 2018



கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .




30 நாள் 30 குறிப்பு என்கிற போது  பொரியல் காய், கிரேவி, பிரியாணி என்றால் பல விதம் செய்யலாம் 

ஒரு பொருளை வைத்து 30 வகை செய்யனும் அதையும் விதவிதமாக கலர்புஃல்லாக செய்யனும் என்றால் சிறிது கடினமே, அதில் அகர் அகர் என்றதும் மிக அதிகமாக யோசித்து யோசித்து ப்ளேவர் கண்டுபிடித்து செய்துள்ளேன்.

ஓவ்வொரு கலரையும் , பழ ப்ளேவரும் சேர்த்து அருமையாக வந்துள்ளது.

கண்டிப்பாக இது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய ஒரு டெஸட் வகை.

உணவே உன்னை ஆராதிக்கிறேன்.உலகமே உங்களை கொண்டாடும்.



பேலியோ டயட் செய்பவர்கள் கூட இதை சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்காமல் பேலியோவில் சொல்ல பட்ட காய்கள் மூலமும் இளநீர் , தேங்காய் சேர்த்தும் செய்து சாப்பிடலாம்.





2.ஏபிசி ஜெல்லி – ABC Jellyகேன்சர் கியுர் ஜெல்லி

4.இதய வடிவ டபுள் லேயர் ரூ ஆஃப்ஷா தர்பூசணி -  Heart Shape Double Layer Roo apsha Water Melon

6.பிஸ்தா ஃப்ளேவர் ஆப்பிள் கடல் பாசி – Pista Flaver Apple kadal paasi ( agar agar)

7.நட்ஸ் மாம்பழக் கடல் பாசி – Nuts Mango kadal paasi/China Grass




8.மூவண்ண அகர் அகர் – Three Colour Fruit China Grass/Agar Agar

9.ஜவ்வரிசி கடல் பாசி – Sogo Agar Agar/ Sabudhana Agar Agar
10.டூப்ளிகேட் ஆம்லேட் – Duplicate Omelet
12. மீன் வடிவ அகர் அகர் – Fish Shape Agar Agar

14.பைனாப்பிள் கஸ்டர் அகர் அகர் – Pineapple Custard Agar agar
15.குல்கந்து அகர் அகர் – Kulkand Agar Agar
16.ட்ரை கலர் இதய வடிவ அகர் அகர் – Tri Coloir Heart Shape China Grass
17.கான்கார்ட் கிரேப் ஜூஸ் ஜெல்லி – Concord Grape Juice with Brown Sugar Agar Agar
18.அகர் அகர் அல்வா – Agar Agar Halwa
19.வாழைப்பழ பேரிச்சை அகர் அகர் – Banana & Dates Agar Agar
20.ஆரஞ்சு சைனா கிராஸ் – Orange Juice China Grass
21.கருப்பட்டி தேங்காய்ப்பால் கடல் பாசி – Karuppatti (Palm Sugar Agar Agar)
22.டிராகன் ஃப்ரூட் ரோஸ்மில்க் அகர் அகர் – Dragon Fruit Rose Milk Jelly
23.ரூ ஆஃப்சா தேங்காய் பவுடர் ஜெல்லி – Roo Apsha Coconut Powder Jelly
24.த்ரி லேயர் புட்டிங் Three Layer Pudding
25.அடுக்கு கிளாஸ் அகர் அகர் – Double Colour Glass Agar Agar

ரொம்ப ரொம்ப சந்தோஷம். என் 30 ரெசிபியில் இந்த அடுக்கு கிளாஸ் அகர் அகர் படம் அட்டை படமாக வந்தது.


26.நீலவண்ண நட்சத்திர அகர் அகர் – Blue Star Agar Agar




27.சாக்கோ கோல்டு காபி அகர் அகர் ஜெல்லி – Chaco Cold Coffee Agar agar
28.ரூ ஆப்சா அகர் அகர் ஜெல்லி – Roo Apsha Agar Jelly
29.காபி சாக்லேட் ரூ ஆஃப்சா ஃபலூடா – Coffee Roo Apsha Falooda (Faloodha)
30.காபி அண்டு ரூ ஆஃப்சா லெமனேட் – Coffee and Roo Apsha Lemonade


இந்த அக்டோபர் மாதம் கேன்சர் விழிப்புணர்வு மாதம் . நானும் அனைத்து பெண்களுக்கும் வலியுருத்தி சொல்கிறேன்.
வேலை வேலை என்று பிஸியாக இருக்கிறீர்கள். கண்டிப்பாக உங்கள் உடல் நலனிலும் அக்கரை தேவை. கேன்சர் உருவாகமல் இருக்கும் அதற்கு உகந்த உணவு வகைகளையும் உங்கள் அன்றாட உணவு பழக்கங்களில் கொண்டு வாருங்கள்
கிட்னி பீன்ஸ், பீட்ரூட் , அப்ரஹஸ் , ராகி (கேழ்வரகு) அவித்த முட்டை, நாட்டு கோழி சூப் , முட்டை கோஸ் சூப், காய் கறி சூப், கீரை வகைகள் சூப்
ஏ பி சி ஜெல்லி ( கேரட், பீட்ரூட், ஆப்பிள் ) ஜெல்லி இப்படி பல சமையல்களை செய்யலாம்.
#myrecipes#avalvikatan#kidsspecial#agaragar#chinagrasa#coolreceipes#UAEfoodblogger#youtuber#colourfullrecipes#

30 வகை சமையல்களில் பொரியல் , சூப் , கறி வகைகள் , குழம்பு வகை என்றால் ஆப்ஷன் இருக்கு பல காய்கறிகள் வைத்து செய்யலாம்.
ஆனால் ஒரே ஒரு அகர் அகரை வைத்து 30 வகை செய்யுனும் என்றால் அது என்னை பொருத்த வரை ஒரு பெரிய படைப்பாக வே நான் கருதுகிறேன்.
இதன் பின்னால் உள்ள உழைப்பு மற்றும் ஐடியா எல்லாமே முழுக்க முழுக்க நான் யோசித்து செய்த en சொந்த படைப்பு.
ஓவ்வொரு ப்ளேவருக்கும் ரொம்ப வே யோசிக்க வேண்டியதாக இருந்தது
ரொம்ப சந்தோஷமாக இருக்கு இந்த முறை வெளியான என் அசத்தலான ‘ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்’ 30 வகை அகர் அகர் குறிப்புகள் - கிட்ஸ் ஸ்பெஷல்

விகடன் 2018 அக்டோபர்




1.  

30 வகை இல்லை நான் யோசித்து செய்து இருப்பது இப்ப 36 வகை ஆனால் இன்னும் செய்வேன்.
இனி இந்த ரெசிபிகள் சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலிலிலும் பதிவாகும் , அனைவரும் சப்போட் பண்ணுங்கள்.
30 வகையான அகர் அகர்
Agar Agar, அகர் அகர், அவள் விடகன், கடல்பாசி, சந்தோஷம், சைனா கிராஸ், நோன்பு கால ரெசிபி, பாரம்பரிய சமையல்,




 என் குறிப்புகள் வெளியாகியதும் உடனே ஜீ போஸ்ட் மூலம் சிலர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள், போஸ்ட் மூலம் வாழ்த்து தெரிவித்த  கவிதா மற்றும் வளர்மதிக்கு என் மனமார்ந்த நன்றி.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, August 14, 2018

Top 10 South Indian Recipe - Award


#Award#Top10southindianrecipes#bonusapp#
வாங்கோ வாங்கோ ஒரு சந்தோஷமான செய்தி.
I have been selected in "Top 10 South Indian Culinary Blogs – 2018" presented by Bonusapp.
You can see Below link
#Award#Top10southindianrecipes#bonusapp#






Jaleela Banu, Dubai

My Youtube Cookery Channel -  Please Subscribeand share with your Family and friends


https://www.bonusapp.com/blog/2018/08/top-10-south-indian-culinary-blogs-2018/?#CookBookJaleela


  Badge for {title} https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, November 15, 2016

அதிசய நிலா





நேற்று  14.11.16

அதிசிய நிலா
70 ஆண்டுக்கு ஒர் முறை
வானில் பூக்கும் முழு நிலா என்று எங்கு பார்த்தாலும் மெசேஜ்  நான் பார்க்க முடியுமா? ஆபிஸ் லிருந்து நேராக ஏதாவது பார்க்கில் போய் உட்கார்ந்து பார்க்கலாமா> இப்படி எல்லாம் நினைத்து கொண்டு கிளம்பும் போது   என்னால் எங்கும் போக முடியவில்லை.  
வீட்டுக்கே சென்று விட்டு சில வேலைகளை முடித்து விட்டு 

"பால்கனிய திறந்தால் கண் எதிரில் நிலா" ஒரு கனம் ஒன்றுமே புரியவில்லை இவ்ளோ கிட்ட பார்த்ததில்லை சுபுஹானல்லாஹ். 
மிக்க மகிழ்சி , உடனே இரண்டு கிளிக் கிளிக்கியாச்சு, சரி கொஞ்சம் நேரம் கழித்து இன்னும் சரியாக எடுக்கலாம் என்று போட்டோ எடுக்க போனால் அது அங்கிரு மறைந்து விட்டது . பிறகு தான் நினைத்துகொண்டேன் அது எனக்காகவே என் கண் முன் வந்து பிறகு மறைந்தது, அல்லாஹ் மிகக்கிருபையாளன். அல்லஹம்து லில்லாஹ்


இது என் டைரி போல தானே ஒரு நினைவு போல் என் சந்தோஷத்தை இங்கு  பதிந்து கொண்டேன்






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, March 8, 2016

பெண்மையை கொண்டாடுவோம்



அஸ்ஸலாமு அலைக்கும்


அல்ஹம்து லில்லாஹ் சென்னை ப்ளாசாவில் இருந்து கிளைகள் போல பல சகோதரிகள் ஹோல்சேலில் எங்களிடம் சரக்குகள் வாங்கி விற்று கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள்  சிறு தொழிலில் ஆர்வமாய் இருப்பது.

மிகவும் சந்தோஷம். 
அல்லாஹ் அனைவருக்கும் தொழில் பரக்கதை அளிப்பானாக.
எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.






உலகில் உள்ள அனைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்
இஸ்லாமிய சாதனை பெண்களின் மகளிர் தினம்
ஏன் நம்மில் பலர் பெண்களாய் பிறந்ததை நினைத்து சலித்து கொள்கிறார்கள்? 


Happy Women's Day

  • பெண்ணாய் பிறந்ததற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
  • பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களை பிசியாக வைத்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மன அழுத்தம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறலாம்
  • பெண்கள் கண்டிப்பாக தத்தம் சின்ன சின்ன செலவுகளுக்கு உரிய செலவுகளை நாமே பார்த்துகொள்ளும் அளவிற்கு சிறுதொழில் செய்து தொகை ஈட்டவேண்டும்
  • இப்படியான பெண்கள் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்களே. அவர்களுக்கெல்லாம் சலிப்பு வராது, மாறாக இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதில் தான் சிந்தனை ஓடும்.


  • பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
  • கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
  • எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள், எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
  • பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,



ஆக்கம்
ஜலீலா




மேலும் வேறு யாருக்கும் கடைகளுக்கோ அல்லது வீட்டில் வைத்து சேல் செய்யும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.



Assalamu alaikkum
2016 Latest Model Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece)
Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail
Please like and Share

http://cookbookjaleela.blogspot.com/…/2016-latest-model-sha…
தொடர்புகொள்ளவேண்டிய
வாட்ஸஅப் நம்பர்
00971 55 9608954
00971 55 9608961






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, February 8, 2016

உன் உயிரிலேயே உறவானவள்



//உன் உயிரிலேயே உறவானவள்//

அன்பே என் இதயமே
என்றும் சந்தோஷமாய்
ஒருவருக்கு ஒருவர்
அன்பை பரிமாறும் தருணம் இது

இறைவன் நாடினால்
என் உயிர் உள்ள காலம்
வரை உனக்காக
நான் என்னால்
இயன்ற அளவு
கை கொடுப்பேன்.

  உன் சந்தோஷம் உன் மன நிம்மதி
இது தான் எனக்கு முக்கியம்

ஓவ்வொரு கனமும்
நீ என் மீதும்
நம் பிள்ளைகள்
மீதும் அக்கறை
காண்பிப்பதை நினைத்து
பிரமித்து போயிருக்கிறேன்.!

உன்னுடைய பொறுமையை
கண்டு பூமி கூட பிரமித்து போயிருக்கும்!!

நான் பெரும் பாக்கியசாலி
இத்தனை அன்புள்ளம்
படைத்த உன்னை கணவனாக
அடைந்ததற்கு அனுதினமும்
வல்ல நாயனுக்கு நன்றி
செலுத்தி கொண்டு இருக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்

ஆக்கம்
-ஜலீலாகமால்


 07.02.16

என் டாடியை பற்றி எழுதிய கவிதை 2 பிரிவின் துயரால் - 19.07.2011

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 22, 2015

குங்குமம் தோழியால் இணைந்த பள்ளி தோழிகள்






பள்ளி தோழிகளை பல வருடங்கள் கழித்து இணைத்த குங்குமம் தோழி நன்றி!!!





குங்குமம் தோழிக்கு ஜலீலா எழுதுவது


என் ரெசிபி ரமலான் இனைப்பில் பிரசுகரமானதும் நான் துபாயில் இருப்பதால் எனக்கு புக் கிடைக்கவில்லை, ஜூன் மாதம் புக் வெளியானதும் உடனே என் பள்ளி தோழி கவிதா குங்குமம் ஆபிஸ்க்கு தொடர்ந்து போன் செய்து என்னை தொடர்பு கொண்டார் கவிதா//


ஆம் பள்ளி காலத்தில் எனக்கு நிறைய நட்புகள் என்று கிடையாது எல்லாரிடமும் சமமாக தான் பழகுவேன். அதில் 4 பேர் ரொம்ப குலோஸ் சித்ரா, கவிதா, ஹசீனா, வள்ளி .  5 பேர் சேர்ந்தால் அங்கு கலகலப்பு அதிகமாக இருக்கும். பள்ளி பீச் பக்கம் என்பதால் அங்கு மரத்தடியில் மதியம் லன்ச் சாப்பிடும் போது உணவுபரிமாற்றம். வள்ளி கொண்டு வரும் பருப்பு உருண்டை குழம்பு, சித்ரா கொண்டுவரும் டபுள் பீன்ஸ் பிரிஞ்சி சாதம், ஹசீனா கொண்டுவரும் (எங்க பெரிமாவின் ஸ்பெஷல் ரொட்டி தக்காளி சட்னி) என் அம்மாவின் ஸ்பெஷல் பூரி உருளை கிழங்கு எல்லாருக்கும் பிடிக்கும். கவிதாவின் கொண்டைலை புளி சாதம் எல்லாம் கலந்து சாப்பிட்டு விட்டு பீச் காற்றில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கு விற்கு தள்ளூ வண்டியில் இருக்கும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் இனி வருமா?
பீச் அருகிலேயே பள்ளி அருமை ஹிஹி நல்ல தூங்கலாம்..குளு குளுன்னு நல்ல காத்து வரும்.

அது ஒரு இனிய கானாக்காலாம்.



பள்ளிகாலம் முடிந்ததும் நட்புகளை மிகவும் மதிப்பவள். நாங்க பள்ளி காலம் முடியும் போதே ஒருவருக்கு ஒருவர் .. எப்படியாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்கனும் என்று பேசி வைத்துகொண்டோம் , முதலில் என் திருமணத்துக்கு எல்லா தோழிகளூம் வந்தார்கள் கவிதா சித்ரா எனக்கு மேக்கபும் போட்டு விட்டார்கள். அடுத்து ஹசீனா , சித்ரா திருமணம் வரை சந்தித்தோம்.நான் கல்யாணம் ஆனதும்  சென்னையில் இருந்தவரை வருடம் ஒரு முறையாவது போய் தோழிகளை சந்திப்பேன்.ஆனால் துபாய் வந்ததில் இருந்து முன்பெல்லாம் 2 வருடம் ஒரு முறை தான் ஊருக்கு போக முடிந்தது , போனால் கண்டிப்பாக எல்லாரையும் மீட் பண்ணுவேன், வள்ளி எங்க வீட்டு கிட்டேயே திருவல்லி கேனியில் பிரிட்டிங் ப்ரஸில் வேலை பார்த்தாள், அடிக்கடி போய் பார்ப்பேன்.

சித்ராவும் பக்கம் தான் , ஹசீனா என் பெரிமா பொண்ணு தான் கவிதா மட்டும் பட்டினபாக்கம் தாண்டி உள்ள எஸ்டேட் , அங்கும் தவறாமல் போய் அவளையும் அவர்கள்குடும்பதாரையும் சந்திப்பேன், பிறகு கடந்த 20 வருடமாக ஹசீனாவை தவிர  யாருடனும் தொடர்பு இல்லை, முக நூல் முன்பே ஆரம்பித்தாலும் இப்ப 3 வருடமாக தான் தான் போஸ்டிங் போடுவதிலும் என் வியாபரம் சம்பந்தமாக கஸ்டமர்களை அனுகவும் பயன்படுத்தி வருகிறேன், அங்கு யாரும் என் பள்ளி தோழிகள் யாரும் இருக்கிறார்களா என்று அடிக்கடி தேடி பார்ப்பேன், இது வரை யாரும் கிடைக்கவில்லை.

 குங்குமம் தோழியில் என் சமையல் குறிப்பு வெளியானதை பார்த்து அன்றே  ஜலீயை கண்டு பிடிச்சிட்டோம் என்று என் பள்ளி தோழி கவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, , உடனே  குங்குமம் ஆபிஸ்க்கு போன் செய்து எனக்கு அவளுடைய நம்பரை தோழி வைதேகி மூலமாக எனக்கு முக நூலில் கொடுத்தாள் நன்றி குங்குமம் தோழி.

இப்போது குங்குமம் தோழி என்னையும் கவிதாவையும் இணைத்துள்ளது, கவிதாவிடன் நானும் இங்கு இருந்து போனில் பேசினேன் அவளும் பேசினாள்.  கவிதாவுக்கு என் பெரிமா பொண்ணு ஹசீனா நம்பரை நான் கொடுக்க மிகவும் சந்தோஷமாக ஹசீ கிட்ட பேசிட்டேன்டி ஏய் ஜலீ ரொம்ப சந்தோசம் டி என்றாள் இப்போது வாட்ஸ்அப்பில் இணைந்துள்ளோம், மற்ற தோழிகள் சித்ரா மற்றும் வள்ளியையும் இந்த குங்குமம் இணைக்கும் என்று நினைக்கிறேன்.என் முக நூல் ஐடி - jaleelakamal

என் இன்னும் பல தோழிகள் என்னை தேடுபவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.


நன்றி

குங்குமம் தோழி














https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/