//உன் உயிரிலேயே
உறவானவள்//
அன்பே என் இதயமே
என்றும் சந்தோஷமாய்
ஒருவருக்கு ஒருவர்
அன்பை பரிமாறும் தருணம்
இது
இறைவன் நாடினால்
என் உயிர் உள்ள காலம்
வரை உனக்காக
நான் என்னால்
இயன்ற அளவு
கை கொடுப்பேன்.
உன் சந்தோஷம் உன்
மன நிம்மதி
இது தான் எனக்கு முக்கியம்
ஓவ்வொரு கனமும்
நீ என் மீதும்
நம் பிள்ளைகள்
மீதும் அக்கறை
காண்பிப்பதை நினைத்து
பிரமித்து
போயிருக்கிறேன்.!
உன்னுடைய பொறுமையை
கண்டு பூமி கூட
பிரமித்து போயிருக்கும்!!
நான் பெரும்
பாக்கியசாலி
இத்தனை அன்புள்ளம்
படைத்த உன்னை கணவனாக
அடைந்ததற்கு அனுதினமும்
வல்ல நாயனுக்கு நன்றி
செலுத்தி கொண்டு
இருக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்
ஆக்கம்
-ஜலீலாகமால்
Tweet | ||||||
1 கருத்துகள்:
ஜலீ :) நீங்க சமையலில் மட்டுமில்லை கவிதையிலும் க்வீன் தான் !!
வாழ்த்துக்கள் !
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா