ஆரோக்கிய சமையல்.
இதய வடிவ கேழ்வரகு இட்லி & தக்காளி கேரட் சட்னி
தேவையான பொருட்கள்
ஆச்சி மசாலா கேழ்வரகு மாவு - 200 கிராம்
இட்லிமாவு - இரண்டு குழிகரண்டி அல்லது அரிசிமாவு - 3 மேசைகரண்டி
உளுந்து - 100 கிராம்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து மையாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த உளுந்துடன் ஆச்சி கேழ்வரகு மாவு, இட்லி மாவு, உப்பு சேர்த்து கலக்கி 8 மணி நேரம் பொங்க விடவேண்டும்.
பிறகு நன்குகலக்கி இட்லி தட்டில் எண்ணை அல்லது நெய் தடவி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
அவித்தது எடுத்ததும் பிஸ்கேட் கட்டரால் இதயவடிவில் அல்லது வேண்டிய வடிவில் கட் செய்து எடுக்கவும்
இதற்கு தொட்டுகொள்ள கொத்துமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும்.
தக்காளி கேரட் சட்னி
அரைக்க
பழுத்த தக்காளி - 3 பெரியது
காரட் - ஒன்று
முழு சிவப்பு மிளகாய் - 2
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறியதுண்டு (கால் இன்ச் சைஸ்)
வெல்லம் - சிறியது துண்டு ( கால் இன்ச் சைஸ்)
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்த்து எண்ணை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது வற்றியதும் இரக்கவும்.
ராகி இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
ஹெல்தி டயட் டிபன்.
டிப்ஸ்: சர்க்கரை வியாதி வந்தவுடன் தான் ராகி சம்பந்த பட்ட உணவுகள் சாப்பிடனும் என்றில்லை, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கேழ்வரகு சமையல் உணவுகளை செய்து கொடுத்து சாப்பிட பழக்கனும், பெரியவர்களும் அடிக்கடி இது போல் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்
Tweet | ||||||
2 கருத்துகள்:
Super idli akka ... romba azhaga irrukku ..
கேழ்வரகு இட்லி இதயவடிவில் அழகா இருக்கு....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா