Thursday, October 8, 2009

ஓட்ஸ் கோதுமை மாவு ஊத்தப்பம் - oats atta uththappam







ஓட்ஸ் = அரை க‌ப்
கோதுமை மாவு = அரை க‌ப்
அரிசி மாவு = ஒரு டேபுள் ஸ்பூன்ர‌வை = ஒரு டேபுள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் = தேசை வார்க்க‌ தேவையான‌ அள‌வு





வ‌த‌க்கி சேர்க்க‌


வெங்காய‌ம் = ஒன்று

ப‌ச்ச‌மிள‌காய் ஒன்று

மிள‌கு = ஐந்து

சிர‌க‌ம் கால் தேக்க‌ர‌ண்டி

ந‌ட்ஸ் (முந்த்ரி (அ) பாத‌ம் (அ) வால்ந‌ட் = பொடியாக‌ அரிந்த‌து ஒரு தேக்க‌ரண்டி

கேர‌ட் = ஒரு டேபுள் ஸ்பூன் துருவிய‌து





ஓட்ஸ்,கோதுமைமாவு, ர‌வை உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.வ‌த‌க்கி சேர்க்க‌ வேண்டிய‌வைக‌ளை வ‌த‌க்கி மாவில் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக‌க்வும்.







நான் ஸ்டிக் தவ்வாவில் ஆலிவ் ஆயில் லேசாக‌ ஊற்றி தோசைக‌ளை சுட்டெடுக்க‌வும்.


புதினா துவையல் = ட‌ய‌ட் துவைய‌ல்


புதினா = ஒரு கட்டு

வெள்ளரி (குகும்பர்) = ஒன்று



பச்ச மிளகாய் ‍= இரண்டு



எலுமிச்சை சாறு = ஒரு மேசைகரண்டி



வெங்காயம் = ஒன்று சிறியது



உப்பு = தேவைக்கு




புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.






வெள்ளரியை தோலெடுத்து பொடியாக நறுக்கவும்.




புதினா, வெள்ளரி, பச்சமிளகாய்,உப்பு சேர்த்து நன்கு முக்கால் பதத்திற்கு அரைத்து கடைசியாக வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்து அரைத்து வழித்தெடுக்கவும்.



காரம் தேவைபட்டால் கூட ஒரு பச்ச மிளகாய் சேர்த்து கொள்ளவும்.







புதினா துவைய‌லுட‌ன் சேர்த்து சாப்பிட‌ சுவை அபார‌மாக‌ இருக்கும்.



குறிப்பு




ட‌ய‌ட்டில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ காலை டிப‌ன், ட‌ய‌ட் இல்லாத‌வ‌ர்க‌ள் நெய் + எண்ணை சேர்த்து சுட்டு சாப்பிட‌லாம்.






12 கருத்துகள்:

my kitchen said...

ஓட்ஸ் தோசை அருமையாக‌ இருக்கு.

Menaga Sathia said...

healthy dosa super!!

Unknown said...

wow very nice idea

சாருஸ்ரீராஜ் said...

நீங்களும் , டயட் சலையலுக்கு மாறியாச்சா , சூப்பர் ...

Jaleela Kamal said...

My Kitchen


வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மேனகா ஆமாம் ரொம்ப ஹெல்தி + டேஸ்டியும் கூட , நன்றி

Jaleela Kamal said...

ரிஸ்வானா வாங்க வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் சாருஸ்ரீ ட‌ய‌ட்டுக்கு ஒரேய‌டியா மாற‌ல‌ அப்ப‌ அப்ப செய்து கொள்வேன்.

அடிக்க‌டி கோதுமை தோசை செய்வேன் ஆனால் ஓட்ஸ் சேர்த்து செய்த‌தில் எதிர்ப்பார்க்காத‌ அள‌விற்கு சுவை அபார‌மா இருந்த‌து , ம‌றுநாளும் திரும்ப‌ செய்து சாப்பிட்டேன் . அப்ப‌டின்னா பார்த்து கொள்ளுங்க‌ளேன்.

சிங்கக்குட்டி said...

அருமையாக‌ இருக்கு ஜலீலா.

Jaleela Kamal said...

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப டாப்பா இருக்கு. ஈசியாவும் இருக்கு. ட்ரை பண்ணி பார்த்துட வேண்டியதுதான்

Jaleela Kamal said...

நவாஸ் இத கண்டிப்பா செய்து பாருங்கள் செய்வது சுலபம், ஆனால் மொருக கொஞ்சம் நேரம் எடுக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா