Wednesday, October 14, 2009

மட்டன் கோலா உருண்டை குழம்பு - Meat Ball kuzampu












கோலா உருண்டைக்கு

மட்டன் (துண்டுகறி) = 200 கிராம்

பச்ச மிளகாய் = ஒன்று
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி
தேங்காய் = இரண்டு பத்தை
வெங்காயம் = ஒன்று
இஞ்சி = ஒரு அரை அங்குல துண்டு
பூண்டு = 4 பல்
சில்லி பிலேக்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி (அ) காஞ்ச‌ மிள‌காய் 2
உப்பு = அரை தேக்கரண்டி (அ) தேவைக்கு
கொத்து ம‌ல்லி = பொடியாக‌ ந‌ருக்கிய‌து கால் க‌ப்
சீர‌க‌ தூள் = அரை தேக்க‌ர‌ண்டி


அரைத்ததில் கலக்கி கொள்ள‌

பொட்டு கடலை = ஒரு மேசை கரண்டி
கார்ன்பிளார் மாவு = ஒரு மேசைகரண்டி



குழ‌ம்பிற்கு
(க‌றி குழ‌ம்பு)

ம‌ட்ட‌ன் எலும்புட‌ன் = 100 கிராம்
த‌க்காளி = இர‌ண்டு
வெங்காய‌ம் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
தனியாதூள் = ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = குழம்பிற்கு தேவையான அளவு
எண்ணை = முன்று தேக்கரண்டி
ப‌ட்டை = ஒரு துண்டு
தேங்ககாய் = முன்று ப‌த்தை













கோலா செய்முறை



1. கார்ன் பிளார் மாவு, பொட்டுகடலை தவிர குட்டி குட்டியா அரிந்த‌ ம‌ட்ட‌னில் சில்லி பிலேக்ஸ்,ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு,சீர‌க‌ தூள் க‌ர‌ம் ம‌ச‌லா தூள் சேர்த்து ந‌ன்கு பிர‌ட்டி இஞ்சி,பூண்டு, ப‌ச்ச‌மிள‌காய், கொத்தும‌ல்லித‌ழை,தேங்காய்ம் வெங்காய‌ம் எல்லாவ‌ற்றையும் பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.


2. முத‌லில் பொட்டுக‌ட‌லையை பொடித்து த‌னியாக‌ வைக்க‌வும். பிற‌கு பிச‌றி வைத்த‌தை த‌ண்ணீர் விடாம‌ல் மிக்சியில் அரைக்க‌வும். அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் பொட்டுக‌ட‌லைமாவு,கார்ன் பிளார் மாவு க‌ல‌க்கி த‌னியாக‌ வைக்க‌வும்.


குழ‌ம்பு செய்முறை

3. அடுத்து குழ‌ம்பிற்கு எண்ணையை காய‌வைத்து அதில் ப‌ட்டை,
வெங்காய‌ம், இஞ்சி பூண்டு, பாதி த‌க்காளி, கொத்தும‌ல்லி சேர்த்து தாளித்து ம‌ட்ட‌னையும் சேர்த்து தூள்வ‌கைக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

4. மீதி உள்ள் தக்காளியுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து சேர்த்து குக்கரில் என்றால் முன்று நான்கு விசில் விட்டு இரக்கவும். வெளியில் என்றால் சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.









5. மட்டன் குழம்பு கொதிப்பதற்குள்,அரைத்து வைத்துள்ள உருண்டைகளை ஒரு சிறிய லெமென் சைஸில் பொரித்தெடுத்து கொதித்து கொண்டிருக்கும் கடைசியாக குழம்பில் போட்டு மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான சத்தான கோலா உருண்டை குழம்பு ரெடி.

குறிப்பு:

வடையாக செய்வதாக இருந்தால் மட்டன் கிமா தயாரித்து சுருட்டி ஆற வைத்து அரைத்து சுடனும் அப்படி சுடும் போது பிஞ்சிபோகும், அதற்கு முட்டை சேர்த்து கொண்டால் பிஞ்சி போகாமல் இருக்கும்



18 கருத்துகள்:

Menaga Sathia said...

wowww looks delicious!!

GEETHA ACHAL said...

Superb...Looks so tempting...

Saraswathy Balakrishnan said...

delicious looking gravy ..simply love the texture of the curry

S.A. நவாஸுதீன் said...

பார்க்கவே ரொம்ப டாப்பா இருக்கே!!!. ஹ்ம்ம் இப்பதான் டிஃபன் சாப்பிட்டேன். மறுபடியும் பசிக்குது போங்க

Unknown said...

ஆஹா... மேடம் பார்க்கும் போதே நாக்கு ஊருது... உங்க வீட்டுல இருக்குரவங்க ரோம்ப கொடுத்து வச்சவங்க... நாளைக்கே Try பன்ன போறேன்... Keep writing....

Jaleela Kamal said...

1. மேனகா , கீதாஆச்சல், சரஸ்வதி உங்கள் அனைவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

2. உங்கள் பாரட்டிற்கு மிக்க நன்றி, நவாஸ் இது எல்லோருக்கும் விருப்பமான கறி உருண்டை குழம்பு,

3.meetnaseer வாங்க வாங்க வருகைக்கும் படித்து விட்டு அப்படியே போகமல் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

சிங்கக்குட்டி said...

என் அம்மா செய்யும் போது, எனக்கு ரொம்ப பிடித்த ஒரு உணவு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Jaleela Kamal said...

சிங்கக்குட்டி வாங்க வந்து கருத்து தெரிவித்தமைக்கு. ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

ராஜ் வாங்க என்ன ஒருமாதம் ஆகிறது நீங்க இந்த பக்கம் வந்து, குறிப்பை பற்றி ஒன்றும் சொல்லாமல் போய் விட்டீர்கள்.

Jaleela Kamal said...

நாவாஸ் இது எல்லோருக்கும் பிடித்த குழம்பு, தவறாமல் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எத்தன தடவங்க பாராட்டுரது...:)))))) எப்படி இருந்தாலும் நீங்க செய்யர எல்லா சமையலுமே சூப்பரா இருக்கும். அப்படி இருக்க உங்களுக்கு பாராட்டு தர்ரது சூரியனுக்கே டார்ச் அடிக்கர மாதிறி !!!! அதான் ஹி ஹி ஹி!!!( இதே கமெண்ட மேனகா, கீதா, அம்முக்கும் போடணும் !!!)

Priya Suresh said...

cola urundai paathathume yennaku pasikurathu..Delicious!!

Magia da Inês said...

Olá amiga!
Conheci seu cantinho... tudo de bom!...
Lindo, criativo, nutritivo e delicioso!...
Amei mesmo!!!
Parabéns pelo seu trabalho!
Espero você em:
magiadaines.blogspot.com
Um ótimo fim de semana!
Beijinhos carinhosos.
Itabira - Brasil

Jaleela Kamal said...

ஹா ஹா ராஜ் ஏற்கனவே ஐஸ் மழை இதில் நீங்க வேற ஒரேடியா இத்தனை கிலோவ தலையில ஏத்துறீகளே.

இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு.
ஹி ஹி :)))

Jaleela Kamal said...

பிரியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

welcome magia,

thank you for your feedback, i will check your blog soon, thank you for giving feedback in chicken wholelegs.

சீமான்கனி said...

நன்றி அக்கா....இப்போவே செஞ்சு சாப்டனும்போல இருக்கு படம் பார்த்தாலே...பசிக்க ஆரம்பிச்சுடுது...பக்கத்துல இருந்தா ஒரு பார்சல் பண்ண சொல்லிருப்பேன்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா