Saturday, October 17, 2009

டொமெட்டோ சூப் - tomato soup


குளிர் காலம் வந்துவிட்டது,
இது போல் சூப் செய்து குடிப்பது தொண்டை கர கரப்புக்கு , இதில் இஞ்சி சேர்ந்து இருபப்தால் சளிக்கு எல்லாம் மிகவும் நல்லது.

எளிய முறையில் தயாரித்து விடலாம்.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

குளிர்காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உங்கள் தொண்டை சொல்லுமே ஆஹா...












தேவையானவை



தக்காளி = நான்கு
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
சின்ன வெங்காயம் = 10

தாளிக்க

பட்டர் = ஒரு தேக்கரண்டி
மிளகு = தேவைக்கு
உப்பு = தேவைக்கு

கார்ன் பிளார் மாவு = இரண்டு தேக்கரண்டி



செய்முறை






தக்காளியில் பொடியாக அரிந்த இஞ்சி, வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்கு குக்கரில் வேகவிட்டு. முக்கால் பாகம் அரையுமாறு மிக்சியில் அரைத்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடிக்கவும்.

கடைசியாக பட்டர் தாளித்து தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விட்டு கார்ன் மாவை கரைத்து ஊற்றவும்.

கடைசியாக தேவைக்கு மிளகு தூள் , உப்பு தூள் தூவி குடிக்கவும்.




இது சிம்பிள் சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்,
வருகிற குளிர் காலத்துக்கு தொண்டைக்கு மிக இதமாக இருக்கும்.




8 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

சூடான சூப்பர் தக்காளி சூப் ரெடி!!.

Rekha raghavan said...

புதிய முறையில் தக்காளி சூப் செய்து பார்த்துட வேண்டியதுதான். நன்றிங்க மேடம்.

ரேகா ராகவன்.
http://rekharaghavan.blogspot.com/

SUFFIX said...

சூப் சூப்பர்ப்!!

Jaleela Kamal said...

ஆமாம் நவாஸ் சுட சுட இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

Jaleela Kamal said...

ரேகா செய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஷபி

Menaga Sathia said...

குளிர் காலத்திற்கேத்த அருமையான சூப் ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

ஆமாம் மேனகா தொடைக்கு ரொம்ப இதமாக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா