Thursday, October 22, 2009

லெமென் ரைஸ் - Lemon Rice

பாசுமதி அரிசி = ஒன்னறை டம்ளர்
லெமென் = இரண்டு

ஊறவைக்க ( அரை மணி நேரம் ஊறவைக்கவும்)

வேர்கடலை = இரண்டு மேசை கரண்டி
கடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி

தாளிக்க‌

எண்ணை = ஐந்து தேக்கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி

உளுந்து பருப்பு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை ‍ = இரண்டு ஆர்க்
பூண்டு = இரண்டு
பெருங்காயபொடி = ஒரு பின்ச்
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு1. சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும், வடிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை விடவும், அப்போது தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

2 எலுமிச்சையை சாறு பிழிந்து கொட்டை இல்லாமல் வடிகட்டி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

3. வாயகன்ற சட்டியை காய வைத்து தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கருகாமல் தாளித்து ஊறவைத்த வேர்கடலை மற்றும் கடலை பருப்பை சேர்த்து தாளித்து அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை கலவையை ஊற்றவும்.

4. தாளித்த கலவையை சாதத்தில் கொட்டி உதிரியாக கிளறி விட்டு இரகக்வும்.

குறிப்பு


கடலை பருப்பு,வேர்கடலை ஊறவைத்து சேர்ப்பதால் வயதானவர்களும் எளிதாக கடித்து சாப்பிடலாம்.
இது பார்க்க கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம். இதே போல் வேக வைத்த கருப்பு கொண்டை கடலையையும் போட்டு லெமென் ரைஸ் செய்யலாம்
எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை ஏதாவது கட்டு சோறு தான்.
இதுக்கு அவித்த முட்டை (அ) பீன்ஸ் பருப்பு உசிலி நல்ல காம்பினேஷமன்மற்றபடி சிக்கன்,மட்டன், மீன் பிரையும் மசால் வடையும் செய்தால் கூட நல்ல இருக்கும்


19 கருத்துகள்:

நாஸியா said...

எப்படி ரெண்டு லெமன் ரைஸ் ஒரே நாளில்! கலக்குறிங்க!

பீர் | Peer said...

நீங்க சொல்லியிருக்கிற மாதிரிதான் செஞ்சேன்.. ஆனா, ப்ளேட்ல இருக்கிற மாதிரி கலரெல்லாம் வரலையே.. ஒரு வேளை ஏதாவது ஃபார்முலா தப்பாயிடுத்தோ.. :)

சூப்பர்.. என்னை மாதிரி 'பேச்சுலர்ஸூக்கு' உபயோகமா இருக்கும்.

suvaiyaana suvai said...

super!!!!!

ஸாதிகா said...

நாங்கள் வேர்க்கடலையை வறுத்து சேர்ப்போம்.கரகரப்பாக இருக்கும் நீங்கள் ஊற வைத்து சேர்க்கசொல்லி இருக்கின்றீர்கள்.இதுவும் நல்ல ஐடியாதான்.ஜலி சூப்பராக பிரஷனடேஷன் செய்து அழகாக படம் எடுத்து இருக்கின்றீர்கள்.பாராட்டுக்கள்.

Menaga Sathia said...

சூப்பராயிக்கு....

சாருஸ்ரீராஜ் said...

presentation super

Jaleela Kamal said...

நாஸியா ஒரே நாளில் இரண்டா ,இப்ப தான் பார்த்தேன், அன்று அவசரத்தில் சம்மிட் பண்ணி விட்டு போய் விட்டேன்.

நன்றி.

Jaleela Kamal said...

நன்றி தமிழினி.

Jaleela Kamal said...

பீர் என்ன செய்தே பார்த்து விட்டீர்களா , ரொம்ப சந்தோஷம், கலர் வரவில்லை என்றால் ,மஞ்சள் தூளில் நிறைய விதம் இருக்கும், நீங்க லைட் கலரில் உள்ள மஞ்சள் பயன் படுத்தி இருப்பீர்கள் அதான் கலர் வரல.

உங்களை போல் பேச்சுலருக்கு என் சமையல் உதவுவது ரொம்ப மகிழ்சி.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றீ சுவையான சுவை

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா வருத்தும் சேர்ப்பேன், இது எனக்கு தோன்றியபடி இரண்டு முன்று விதத்தில் செய்வேன் அதில் ஒரு முறை இது.

Jaleela Kamal said...

மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சாருஸ்ரீ

S.A. நவாஸுதீன் said...

இந்த வாரம் லெமென் ரைஸ் வாரமா!! கலக்குங்க சகோதரி

பீர் | Peer said...

ஜலீலாக்கா, ப்ளேட் ஸைடுல கலர் கலரா இருக்கே அந்த கலர் வரலைன்னு சொன்னேன்.. :)

மத்தபடி ரைஸ் நல்ல சுவையாகவும், கலராகவும் இருக்கிறது. நன்றி.

Jaleela Kamal said...

Peer ஓகோ அத சொல்றீங்கலா, குசும்பு தானே...

Jaleela Kamal said...

நன்றி நாவாஸ், ஆமாம், இன்னும் இரண்டு முறை இருக்கு லெமென் ரைஸில் போஸ்ட் பண்ணா லெமென் ரைஸ் மாதமாகிவிடும்

Asiya Omar said...

ப்ரசண்டேஷன் சூப்பர்.மீனோடு உள்ள தட்டு காலி.டேஸ்ட் அருமை.

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதற்கும் மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா