அஸ்ஸலாமு அலைக்கும் , தோழ , தோழியர்களே அனைவரும் நலமா? ஊர் சென்று துபாய் வந்து சேர்ந்து விட்டோம். இன்னும் ஊர் ஞாபாகமாகவே இருக்கு. அடிக்கடி மழை ஆகையால் எங்கும் போக முடியவில்லை.
( என்னாடா இது போய் வந்து ஒரு மாதம் ஆகபோகிறது இப்ப போடுகிறேன் என்று நினைக்காதீர்கள் முதலே போட்டு வைத்தது. படங்கள் ஏதும் சேர்க்கவில்லை அதான் கொஞ்சம் லேட்.) ஊர் சென்று வந்த நினைவுகள் தான். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன், இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது.
பல வருடங்களுக்கு பிறகு எங்களுக்குன்னு கொடுக்கப்பட்டுள்ள புது வீட்டில் போய் இறங்கினோம். அல்ஹம்து லில்லாஹ்.
இந்த முறை நோன்பு பெருநாள் எங்கள் இருவீட்டாருடனும் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடியாச்சு. எப்போதும் துபாயில் பிள்ளைகளுக்கு ஜூலை ஆகஸ்ட் தான் லீவு வரும் ஆகையால் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது. இந்த முறை தான் நோன்பு + பெருநாள் ஜூலையில் வந்துள்ளது, அதற்கும் மேல் எனக்கு ஆபிஸில் லீவு கிடைச்சது ரொம்ப பெரிய விஷியம். அல்ஹம்து லில்லாஹ் போய் வந்ததில், எல்லோருடனும் கழிந்த ஓவ்வொரு தருணமும் பொன்ன்னானது. மனசும் மிக மென்மையானது.
இரண்டு பக்கமும் போட்டோ எடுத்தால் எந்தபக்கம் பார்பப்தாம்?
பெருநாள் அன்று அனைவரையும் போய் சந்தித்தோம்.( என் பையனுக்கு ஒரே ஜாலி)
காலையில் பெருநாள் தொழுகை , மதியம் விருந்து.
மாலை எல்லா சொந்த பந்தங்கள் வருகை, குழந்தைகளுக்கு எல்லாம் பெருநாள் காசு கொடுத்தோம், அதை வாங்கும் போது குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கனுமே..
இரண்டு திருமணங்களுக்கு சென்றோம்.10.08.14 காலை பாண்டிச்சேரியில் ஒரு திருமணம்,
அப்ப்டியே வர வழியில் மகாபலிபுரம் பீச் ஒரு விசிட் , வர வழியில் நல்ல மழை.
எனக்கு பிடிச்ச ஆள்வள்ளி(மரவள்ளி) கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிட்டாச்சு. அடுத்து கரும்பு ஜூஸ்.
இரவு ஒரு திருமணம், மிக அருமையான விருந்து.
மட்டன் பிரியாணி, எண்ணைகத்திரிக்காய், தயிர் பச்சடி, சிக்கன் 65
இடியாப்பம் , மட்டன் குருமா, பரோட்டா வெள்ளை குருமா, ப்ரட் ஹல்வா.
பிறகு கசாட்டா ஐஸ்கிரிம்.
அண்ணன் கூட போட்டோ எடுத்துக்குடாராம் சிரிப்பு தாங்க முடியல சின்னவருக்கு
கிளம்புவதற்கு, அடுத்த நாள் எங்க சாச்சி (சின்னடாடி, அவர்கள் இப்ப இல்லை) விட்டில் அவர்கள் மகன் Asif திருமணம், ஆனால் கலந்து கொள்ள முடியல,
அதற்கு முன்னாடி நாள் , இஸ்லாமிய இல்லங்களில் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் மாலைகளம் என்று ஒரு சாப்பாடு வைப்பார்கள். 15.8.14 அதில் கலந்து கொண்டோம்.
பகாரா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, டுட்டி ஃப்ரூட்டி துல்லி/ கேசரி/ மிக அருமை. ஜாங்கிரி சாச்சி ஏ ஜலி ஊருக்கு போகிறாள் கூட இரண்டு ஜாங்கிரி சேர்த்து கொடுஙக்ள் என்று சொன்னார்கள்.
மாமனார் வீட்டில் ஊருக்கு கிளம்பும் முன் வீட்டில் ஒரு சின்ன கெட்டுகெதர்.
இந்த முறை அன்னுவை தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸாதிகா அக்கா , மர்லி, நாங்க முன்று பேரும் சந்திக்க எண்ணினோம் ஆனால் சந்தர்ப்பம் அமைய வில்லை.
ஸாதிகா அக்கா, கதீஜா, மும்தாஜ், மர்லி, ஆஷிக்தம்பி , சிராஜ் தம்பி ஆகியோருடன் போனில் பேசி கொண்டேன்.
இங்குள்ள தோழிகள் எங்க Chennai Plaza சென்னை ப்ளாசாவில் ஆர்டர் செய்து புர்கா ஹிஜாப் , ஷேலா வாங்கியமைக்கு மிக்க நன்றி.
மேலும் உங்கள் தோழிகளுக்கு யாருக்கும் தேவை பட்டால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் இந்த முறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லா புகழும் ஏக வல்ல இறைவனுக்கே....
ஊரில் இருந்து திரும்பும் போது அன்புள்ளங்கள் வாங்கி கொடுத்தவை..
அம்மா அன்பாக வாங்கி கொடுத்த மாம்பழம்
பெரிய நாத்தானார் இறால் வாங்கி சுருட்டி கொடுத்தாங்கள்.
என் தங்கை அனிசா செய்து கொடுத்த கறி முட்டை கொத்து பரோட்டா.என் பையனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.
எங்குவந்து முட்டை ரொட்டி ( முர்தபா ) செய்ய இருந்தேன், என் பையன் அனிசா ஆன்டி செய்தது போல் செய்து கொடுங்கள் என்றான்.
இந்த முறை ஊர் போய் வரும் போது , எனக்கு பிடிச்ச மேலபாளையம் ஸ்பெஷல் பணியம் ப்ரெஷ்ஷாகஆர்டர் செய்து வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தேன். கூடவே ஆனந்த பவன் கார பூந்தி ஆளுக்கு ஒரு பாக்கெட்.
| Tweet | ||||||



























