இனிய மாலை பொழுதினிலே, அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள், பிளாக் தோழிகள் சந்திப்பு. ரொம்ப சந்தோஷம் 7.30 மணியிலிருந்து 11 மணி வரை நேரம் போனதும் தெரியல சந்தோஷத்துக்கும் அளவே இல்லை.
இது இரண்டாவ்து பதிவர் சந்திப்பு. முதலில் நானும் மலிக்காவும், இப்போது பல தோழிகள் சேர்ந்து அறட்டை அடித்தது, பள்ளி நாட்களை ஞாபகபடுத்தியது.
ஸாதிகா அக்கா இந்தியாவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து போன வாரம் ஷார்ஜா வந்திருந்தார்கள். எப்படி சந்திப்பது எங்கு சந்திப்பது. எல்லாம் ஓவ்வொரு மூலையில் உள்ளோம். நான்கு நாட்களாக தோழிகள் மெயில் மூலம் பேசி ஒரு வழியா துபாயிலேயே சந்திக்கலாம் என முடிவு செய்தோம்.
ஸாதிகா அக்கா(எல்லா புகழும் இறைவனுக்கே) முன்பு பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுபவர், அறுசுவையில் பல சுவையான குறிப்பு கொடுத்தவங்க, இப்ப பிளாக்கில் அறிய தகவல் களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டிரெங்கு பெட்டிய இந்த டிரெங்கு பெட்டிய திறந்தா பொக்கிஷம் வராது ஆனால் நிறைய பழங்கால அனுபவ மேட்டர் வரும். இப்ப தெரிந்து இருக்குமே யாருன்னு ஜீன்ஸ், இப்ப ஹீரோ பேனா வ பற்றி எழுதும் ஹுஸைனாம்மா தான் சரியாக எல்லோரையும் இனைக்க பெரும் பாடு பட்டு விட்டார்கள்.
மனோ அக்காவின்
முத்து சிதறல், இதில் பல பயனுள்ள முத்துக்கள் கிடைக்கும். 35 வருட அனுபவம் , என்ன ஒரு சாந்தம் பொருமை, அவர்கள் பொருமையின் சிகரம் என்பதற்கு மேலே அவர்கள் வரைந்துள்ள இந்த படமே ஒரு எடுத்து காட்டு. அவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கீறார்கள்.
ஆசியா
சமைத்து அசத்தலாம் செம்மையாக சுவையான நெல்லை கிச்சனை படைத்து வரும் ஆசியா அல் அயினில் இருந்து எப்படியும் தோழிகளை சந்தித்தே ஆகனும் , இத விட்டா நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது என்று அவங்களும் எப்படியே வந்து கலந்த்து கொண்டார்கள்.
அநன்யாவின் எண்ண அலைகள், அநன்யாவின் பிராமன ஆத்து பேச்சு நடையில் பதிவு ரொம்ப நல்ல இருக்கும். ஹா ஹா இவர்களின் பேச்சு கல்யாணத்துக்கு முன் உள்ள ஜலீலாவை பார்த்த மாதிரி இருந்தது.
பிரியாணி நாஸியா, ஹா ஹா எல்லோரும் அவரவர்களை அறிமுகப்படுத்திய போது நாஸியா பிரியாணி என்றார்கள். மனோ அக்கா விற்கும் அநன்யாவிற்கும் ஒன்றும் புரியல, அபப்ரம் ஹுஸைனாம்மா அவர்கள் பிளாக் பேரு பிரியாணி என்றார்கள்.
மலர் பதிவில் பழக்கம் நேரில் பார்த்ததும் ஒரு ஷாக் அடிக்கடி நிறைய இடத்தில் சந்தித்துள்ளோம்.பதிவு அவ்வளவா போட வில்லை என்றாலும் எல்லா பிளாக்குக்கும் தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிபார்கள்.
ஆனால் வந்ததும் சீக்கிரம் போய் விட்டாஙக், பிறகு மனசு கேட்காம ஹி ஹி திரும்ப வந்தாங்க.
அடுத்து
நீரோடை மலிக்கா இவர்களை தெரியாதவர்கள் வலை உலகில் யாரும் இல்லை. கவிதையரசி, பல புத்தகங்களில் இவங்க கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாம் சந்திக்கலாமுன்னு முடிவானது ஒரு குண்ட தூக்கி போட்டாங்க மக்ரூஃப் க்கு ரொம்ப ஜுரமா இருக்குன்னு. ஹாஸ்பிட்டல் போகிறேன் என்று. ஹாஸ்பிட்டல்போய் மருந்து சாப்பிட்டு மாலைக்குள் சரியாகி விட்டது.
மற்ற் படி வல்லியம்மா, சுந்தரா, ரேணு, அப்சாரா இவர்களால் சந்திக்க வரமுடியவில்லை.
அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்.
எல்லோரும் லூ லூவில் சேர்ந்து பிறகு வேறு இடத்துக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்து, 7.30 லிருந்து எட்டு என சொல்லி வைத்திருந்தோம் , மலிக்கா பெரிய சாப்பாடு மூட்டைய தூக்கி வந்ததால் மஹ்ரூஃப்க்கு உடம்பு சரியில்லை என்றதாலும் நேரகா பார்க்கிற்கு போய் விட்டு அங்கிருந்து போன் செய்தார்கள். நானும் 7.25 க்கு லூ லூவில் ஆஜர், யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.
முதலில் ஹுஸைன்னாம்மா வர அவர்களின் இரண்டு வாண்டுகளை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். அடுத்து மலர் வந்தாங்க அவர்கள் நுழைந்ததுமே அடிக்கடி பார்த்த முகம் நிறைய இடத்தில் யாருன்னு தெரியாமலே சந்தித்துள்ளோம், ஒகே அடுத்து ஆசியா அவஙக் மகள் ருமானா வை பார்த்ததும் ஆசியா வந்தாச்சு,, ஆசியா தேடி கொண்டே வந்தார்கள், கை அசைத்து கூப்பிட்டோம். அடுத்து ஸாதிகா அக்காவும் அவங்க தங்கையும் வந்தார்கள். ஒரே எல்லோருக்கும் கலகலப்பு தான் கிக்கி கிக்கி தான்,
மனோ அக்கா, பிரியாணி ,அநன்யா வர லேட்டாச்சு, . எவ்வள்வு நேரம் நிற்பது உடனே நானும் ஹுசைனாம்மாவும் வெயிட் செய்து கூப்பிட்டு வரோம் என்று மற்றவர்களை மலர் கூட் அனுப்பினோம்.
எனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் எல்லோருக்கும் இரவு வெளியில் பார்டி, ஆனால் தூரம் தொலைவில் இருந்து வருகிறவர்களுக்கு ஏதாவது கொண்டு போகனும் என்று, முர்தபா, வேக வைத்த வேர் கடலை, மசால் வடை, எடுத்து பேக் செய்து பையனை கொண்டு வர சொல்லிட்டு வந்துட்டேன்.
எல்லோரும் ஒன்று கூடினோம் சரியான கும்மி தான் ஹா ஹா அதிரா புகை விட படாது. இப்படி ஒரு சந்திப்பை எதிர் பார்க்கவே இல்லை.உடனே ஜெய்லானிக்கு காது கிர்ருன்னும், என்ன பேசிக்கிடிட்டாங்க..
ஸாதிகா அக்காவின் தங்கை ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.
எல்லோருடனும் நல்ல பேசி கொண்டார்கள்
ஆஹா அப்ப தான் மலிக்கா ஹொலோ எக்சுசுமி தள்ளுங்க சூப்பரா கோதுமை ஸடஃப்டு எக் நூடுல்ஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள், முதலில் அதை வெட்டியாச்சு, உடனே நான் முதலில் என் பையனை கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொன்னேன், சூப்பர் என்றான், பையன் சொல்லிட்டானான்னா அதுக்கு அப்பீலே இல்லை, (என் கணவர் அங்கிருந்து எல்லோரையும் ஹோல்டலுக்கு கூப்பிட்டு போய் விடு என்றார் ஆனால் அல் அயின், ஜார்ஜா, அபுதாபியில் இருந்து எல்லோரும் துபாய் வரும் போது நாமளே ஏதாவது செய்து கொண்டு போய் விடுவோம் என்று முடிந்ததை செய்து கொண்டு வந்துட்டேன்) நானும் கொண்டு வந்ததை எடுத்து வைத்தேன். முதலில் குழந்தைய சாப்பிட சொன்னோம், பிறகு எல்லொரும் சாப்பிட்டோம்.
மனோ அக்கா பல வேலைகளுக்கிடையில் வந்தது ரொம்ப சந்தோஷ்மாக இருந்தது. நான் சிம்பிளாக எழுதி விட்டேன், யாராவது தித்திப்பான சண்ட்திபபி போடுவார்கள் என்று பார்ர்த்தேன்.
மலிக்கா வந்து விபரமா போடுவார்கள்.மீதியை சந்தித்த மற்ற தோழிகளின் பதிவில் பார்க்கலாம்.
ஆசியா அல் , அநன்யா, மனோ அக்கா கிளம்பியாச்சு, அடுத்து பிரியாணியும் கிளம்பியாச்சு, நான், ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா மலிக்கா கடைசியாக சென்றோம்.
11 மணி வரை என் பையன் எனக்கு துணையாக இருந்து, என்ன மம்மி ஜாலியா இருண்ட்தீங்களா? என்றான், ஆமாம் ரொம்ப ரொம்ப ஜாலி ஹே ஹே என்றேன்.
ஏதோ ஹுஸைனாம்மாவை கொண்டு எல்லோரும் அன்று சந்தித்தோம். எழுத இன்னும் நிறைய இருக்கு 4 நாட்கள் ஆகியும் யாரும் போடததால் சிம்பிளா முடித்துட்டேன். அடுத்து வரும் தோழிகள் ம்ம்ம்ம்ம் (ஸ்டாட் மியுசிக்) உங்கள் சந்திப்பு சுவரசியத்தையும் போடுங்கள்.
69 கருத்துகள்:
:-) நான் பதிவு இன்னும் ரெடி பண்ணிண்டே இருக்கேன். எதை எடுப்பது எதை விடுப்பது மாதிரி நீண்டுண்டே போறது.. பார்க்கலாம்.. கொஞ்சம் பெருசா இருந்தாலும் ரெண்டு பகுதியா போட்டுடறேன்..
நல்ல கவரேஜ். 11 மணியா???? :O
எங்க வீட்டு ரங்கு தூக்கக்கலக்கத்துல காருக்குள்ள உக்காந்து இருந்தார். 9.45க்கே ஒரே பீலிங்கி.. 11 மணி.. காதுல புகை வர வெச்சுட்டீங்களே..
நெக்ஸ்டு மீட்டலாம்.. அப்போ வெச்சுக்கலாம்..
மீ த ஃபர்ஸ்ட்டா?
ஆமாக்கா, அந்த சந்திப்பு தந்த சந்தோஷத்துல இன்னும் துள்ளிகிட்டிருகேன்னா பாருங்க!!
வித்தியாசமான அனுபவம் எனக்கு!! என் பசங்க இவ்ளோ நேரமா என்ன பேசுனீங்கன்னு கேட்டு ஒரே சிரிப்பு.
தெரியாதா இன்னும் அந்த அதர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கடைசியில் ஜுரத்தில் வந்து நிக்கிறேன்.
சரியானம் பதிவ போட்டுவிடுகிறேன்.
யக்கா வேர்கடலையும் கொஞ்சூண்டு முர்தபாவும் தான் துண்ணேன்.
மசால்வடை துண்ணல. அதனால எனக்கு செய்து வையங்க ஒருதபா வந்து துண்ணுட்டுபோறேன்.
அக்கா அந்த புதுடிஸ் எப்புடின்னு சொல்லவேயில்லை.
பச்சபுள்ள மல்லி தனியா நின்னு மச்சான்கூடயில்லாமல் செய்தது தெரியுமா
வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. பதிவர் நண்பர்களின் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். உங்கள் சந்தோஷம் பதிவு முழுதும் இழையோடுகிறது.
//அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்.//
இது இன்னும் சூப்பர்.
இனிமையான சந்திப்பு தந்த தித்திப்பூ உங்கள் இடுகை வரிகளில் அழகாக தெரிகிறது...
பதிவிலேயே குதூகலம் தெரியுது.ஜலீலா.அருமையாக பதிவு போட்டு அசத்திட்டீங்க.நானும் ரெடி பண்ணிவிட்டேன்,முதலில் யாராவது போடட்டும் என்று காத்திருந்தேன்.வ்நத அனைவருக்கும் என் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.
நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்க போல..உங்க எழுத்தில் தெரிகிறது...வாழ்த்துக்கள்!!
//முர்தபா, வேக வைத்த வேர் கடலை, மசால் வடை, எடுத்து பேக் //
துபாய் பதிவர்கள் சந்திச்சா ஒரு வடயோட முடிஞ்சிடும், இப்பூடியா நல்ல யிருங்க மக்களே
வாவ்!! மிக்க மகிழ்ச்சி, பதிவர் சந்திப்பை அழகான முன்னுரையோடு கொடுத்தியிருக்கீங்க ஜலீக்கா. மகிழ்ச்சி உங்கள் எழுத்துக்களில் இழைந்தோடுகிறது.
வாழ்த்துக்கள் ஜலீலா.
//அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்//
இது போல பேரு வச்சு வலையுலகில் யாருமே இல்லையே அக்கா யாரது .
ஹா ஹா ஹா
என்னக்கா துபாய் இன்றீங்கோ கத்தார் இன்றீங்கோ ஒண்ணுமே புரியல, என்னவோ தூத்துக்குடிக்கு போயிட்டு வர மாதிரி சொல்றீங்கோ நானெல்லாம் நம்ம சென்னையையே தாண்டியது இல்லை.
உங்களின் சந்தோஷ தருணங்கள் எழுத்தில்
தெரிகிறது, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அக்கா, நானும் உங்கள் எல்லோரையும் எப்பொழுது சந்திப்பது என்ற ஆசையை தூண்டும் இடுகை. உங்கள் அனைவரின் குதூகல பேச்சும் சமையல் ஐட்டமும் கிடைக்குதுனா சும்மாவா?
ஆஹா நல்லதொரு மசால்வடையை மிஸ் செய்துட்டேனே.
ஜலீலா நல்லா விவரம் கொடுத்துப் பொறாமையக் கிளப்பிட்டீங்க:)
என்ன இருந்தாலும் பெண்கள் சந்தித்தால் சுகம்தான்.
சுதந்திரம் கூடுகிறதல்லவா.
வாங்க வாங்க வல்லி அக்கா, நீங்களும் வருவதா இருந்தது ரொம்ப எதிர் பார்த்தோம் கடைசியில் வரமுடியாமல் போனது ரொம்ப வருத்தம்.
உங்க்ள் முதல் வருகைக்கும் கமெண்ட்டும் நன்றி + சந்தோஷம்/
மலிக்கா உடம்பு தானே சரியில்லை பபதிவ நல்ல ஒன்றிற்கு முன் தபா படிக்கோனும்.
அநன்யா ஆமாம் ரொம்ப பெரிய பதிவு நான் தான் சுருக்கி போட்டு விட்டேன்.
அடுத்த மீட்டிங் தான் நான் சொன்னேனோ இல்லையோ/
அருமை:)!
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!
//வித்தியாசமான அனுபவம் எனக்கு!! என் பசங்க இவ்ளோ நேரமா என்ன பேசுனீங்கன்னு கேட்டு ஒரே சிரிப்பு/
அதுக்கு தான் பசங்கள் கூப்பிட்டு வாங்க நம் கண் முன்னே விளையாடட்டும் என்றேன், உங்க ரங்ஸ் ரொம்ப நல்ல வரு, பிள்ளைகள் உங்களை நச்சரிக்க்காம பார்த்து கொண்டார். ஹிஹி
//யக்கா வேர்கடலையும் கொஞ்சூண்டு முர்தபாவும் தான் துண்ணேன்.
மசால்வடை துண்ணல. அதனால எனக்கு செய்து வையங்க ஒருதபா வந்து துண்ணுட்டுபோறேன்/
ஆஹா நீங்க துண்ணாதத நான் கவனிக்கலையே.
அடுத்த முறை சேர்த்து மார்த்து கவனித்துடுவோம்
//வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. பதிவர் நண்பர்களின் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். உங்கள் சந்தோஷம் பதிவு முழுதும் இழையோடுகிறது//
செ.சரவணன் உங்கள் அருமையான கமெண்டுக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி
அஹமது இர்ஷாத் ஆமாம் தித்திப்பான சந்திப்பூ.\\\
ஆசியா நேரமின்மையால் உடனே போட முடியாமல் போய் விட்டது.
ரொம்ப நாள் முகம் தெரியா சகோதரியை நேரில் பார்த்தது எனக்கும் மிக்க மகிழ்சி. எங்களை பார்த்ததும் உங்கள் முகம் சந்தோஷ வெள்ளத்தில் தாண்டவமாடியது.
//துபாய் பதிவர்கள் சந்திச்சா ஒரு வடயோட முடிஞ்சிடும், இப்பூடியா நல்ல யிருங்க மக்களே//
அபு அஃப்ஸர் ம்ம் காதுல புகை..ஹிஹி
சசிகுமார், இது துபாயில் உள்ள எமிரெட்கள்,
என்னத்த சொல்ல , இறைவன் நாடினால் நீங்களும் தூத்துகுடி தாண்டி தூபாய் வரலாம்.
//த்துக்கள் ஜலீலாக்கா. பதிவர் நண்பர்களின் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். உங்கள் சந்தோஷம் பதிவு முழுதும் இழையோடுகிறது.//
உங்கள் தொடர்வருகை, தொடர் பின்னூட்டம் எல்லாவற்றிற்கும் மிகக் ன்றி
//உங்களின் சந்தோஷ தருணங்கள் எழுத்தில்
தெரிகிறது, அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சை.கொ.ப’
//வாவ்!! மிக்க மகிழ்ச்சி, பதிவர் சந்திப்பை அழகான முன்னுரையோடு கொடுத்தியிருக்கீங்க ஜலீக்கா. மகிழ்ச்சி உங்கள் எழுத்துக்களில் இழைந்தோடுகிறது.//
ஷபிக்ஸ் என்ன முன்னுரையோடா ஏதோ மனதில் வந்தது எழுதியுள்ளேன்
வருகைக்கு மிக்க நன்றி
சித்ரா சித்ரா, ம்ம் நான் வேணும்னா அங்க வரவா?
ஜலீலாக்கா உங்க முர்தபாவை மறக்க முடியுமா? முக்கியமான மேட்டரை விட்டுட்டீங்களே அந்த வடைய முதல்ல ஆட்டைய போட்டது நாந்தானே!!
பிரியாணியே ஒழுங்கா செய்யாம பிரியாணின்னு பேரு வாங்கிட்டோம்ல ;) ஹிஹி...
நாம அடிக்கடி சந்திக்கனும்னு மட்டும் ஆசையா இருக்கு!! :))
ரகளையா அதகளம் செய்து இருக்கீங்க, சமையல் ராணிகளும் ஒன்று சேர்ந்து நல்லா துண்ணுக்கீறிங்க
நல்ல வேலை ஹோட்டலுக்கு போகமா சொந்த சமையல், சகோதரி நாஸியா பிரியாணி எதுவும் எடுத்து வரலையா, போன வாரம் செய்தது அப்படியே ப்ரஷ்ஷா ஃபிரிஜ்ஜில் இருந்திருக்குமே :P
இம்பூட்டும் எழுதிப்புட்டு கடைசி வரில சொன்னீங்க பாருங்க
[[சிம்பிளா முடித்துட்டேன்.]]
சூப்பருங்கோவ் ...
ஜலீலா தி பர்ஸ்ட்...அனுபவத்தை முதலேயே பகிர்ந்து விட்டீர்கள்.அவ்வளவு நேரம் கண்களில் தூக்க கலக்கம் தெரிந்தாலும் பொறுமையாக ,உங்களுக்குதுணையாக கடைசிவரை இருந்த உங்கள் மகன் ஹனிஃஃபை நினைத்தால் சந்தோஷமாக இருந்தது.அது சரி அவித்த கடலை என் ரங்குவுக்கு மிகவும் பிடித்த ஐட்டம்.பொரித்த வடை அந்த ரங்குவின் தங்ஸுக்கு பிடித்த ஐட்டம்.முர்த்தபா இந்த தங்ஸ்விற்கும்,என் ரங்கு விற்கும் பிடித்த ஐட்டம்.கரக்ட்டா கண்டு பிடித்து கொண்டு வந்து விட்டீர்களே.
//இப்படி ஒரு சந்திப்பை எதிர் பார்க்கவே இல்லை.உடனே ஜெய்லானிக்கு காது கிர்ருன்னும், என்ன பேசிக்கிடிட்டாங்க.//
காதுல புகை இன்னும் அடங்கல கொஞ்சம் நேரம் பொறுத்து வரேன்.
ஜலீலாக்காஆஆஆஆஆஆஆஆஆஆ கேட்குதோ??? எப்பூடி இப்படி அடக்க ஒடுக்கமாக சந்திப்பு முடியும்வரை எல்லோரும் வாயில பஞ்சோடு இருந்தீங்க???? ஒரேயொரு மெயில் அனுப்பியிருந்தால்.... நாங்களும் வந்திருப்பமில்ல??? ஜலீலாக்கா புகை அடங்கி நெருப்பு வருது.....
இருப்பினும் மசால வடையெண்டதால ஓக்கை... மண்சாதம் செய்து கொண்டுபோயிருந்தீங்களெண்டால்ல்... கொசுமெயிலுக்குள்ளால என்றாலும் வந்து சேர்ந்திருப்பேன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
எல்லோரது போட்டோவும் மேலே போட்டிருக்கிறீங்க குறூப்பாக.... நல்லா இருக்கு? ஆமா பிளாஷ் போட்டு எடுத்தீங்களோ? போடாமல் எடுத்தீங்களோ????.
இன்னும் இப்படி கெட்டுகெதரெல்லாம் தொடர வாழ்த்துக்கள்...
அருமை அருமை.. வாழ்த்துகள்.
ஜலீலா இன்னும் அந்த இனிய நினைவலைகளில் இருந்து மீள இயலவில்லை.கவிதையை அழகுற வடித்து கலக்கி விட்டீர்கள்.நட்ந்தவைகளை மீண்டும் கண்முன் கொணர்ந்து நிறுத்திவிட்டீர்கள்
அந்த நினைவுகளுடன் வாழ்வின்...எல்லாநாளும் இனிமையாய் அமைய வாழ்த்துகள்...அக்கா...
பிரியமானவர்கள் சந்தித்து கொண்டால் கேட்கவா வேண்டும்...நடத்துங்க...ஹும்ம்ம்ம்....
ஆஹா சமையல் ராணிகள் எல்லாம் சந்திப்பா... அக்கா நானும் இங்கே இருந்து ஒரு டிக்கெட் போட்டு இருப்பேனே!!!!...உங்கபதிவை முழுசா படிக்க கூட முடியலை அவ்வளவு புகை வருது அக்கா :-)
சந்தோஷம் :-)
அமீரகத்துல....சந்திச்சிருக்கீங்க,.....பார்றா....பக்கத்துல இருந்தும் நமக்கு தெரியவே இல்ல......! அதுதான் துபாய்ல அன்னிக்கு டிராபிக் ஜாமா?......வாழ்த்துக்கள்....அருமையான பதிவு!
ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
சலாம் ஜலீலா
உங்கள் சந்திப்பும் நட்பும்கடைசி வரை தொடர வாழ்த்துக்கள்.
அடடா கொழுக்கட்டையவே நான் இன்னும் மறக்கல அதுக்குள்ள இதுல பேரு வைக்காத அயிட்டமாஆஆஆஆஆஆ.
இது மாதிரி சந்தோஷ சந்திப்புக்கள் தொடர வாழ்த்துக்கள் .
(ஜெய்லானிஈஈஈ...இப்படி ஐஸ் வச்சாதான் வடை கிடைக்கும் )
ஜெய்லானி உங்க்ளுக்கு வேனுமுன்னா கொருயர் பண்ணிடுவா?
லோகல் கொரியர், உடனே கிடைத்துடும்.
அடடா... குடுத்துவச்சவங்க நீங்கல்லாம்... ரொம்ப சந்தோஷம்... கடல் கடந்து வந்த இடத்துல காது குளிர தமிழ் கேக்குறதே ஆனந்தம் தான்... இதுல கும்பலா சேந்து அரட்டைனா....? ம்ம்ம்ம்..... :-)
சந்தோசங்கள் மென்மேலும் வளர்ந்து பரவ வாழ்த்துக்கள்...
unga blog romba nalla iruku....
Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips
அருமையான சந்திப்புகள். அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
எல்லாத்தையும் எழுதிட்டு சிம்பிளா சொல்லுறீங்களே.
சந்திப்புக்கு வாழ்த்துகள்.
அசத்தல் தான் போங்கோ. நினைத்து பார்க்கையில் நாங்கல்லாம் வந்து கலந்துக்க முடியலையே என்று ஏக்க மாவுமிருக்கு. பெண்களெல்லாம் ஒன்று கூடினாலே அங்கே அமர்க்களம் தான்!!!
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஜலி தங்கை மகன் பஹ்ரைனுக்கு போய் இருப்பதாக சொன்னீர்களே?பரி வென்றாச்சா?ரொம்ப சந்தோஷம்.என் வாழ்த்துக்களை அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்.
நாஸியா ஹி ஹி நானும் பிரியாணி சட்டி வரும் என்று எதிர் பார்த்தேன்.
//நல்ல வேலை ஹோட்டலுக்கு போகமா சொந்த சமையல், சகோதரி நாஸியா பிரியாணி எதுவும் எடுத்து வரலையா, போன வாரம் செய்தது அப்படியே ப்ரஷ்ஷா ஃபிரிஜ்ஜில் இருந்திருக்குமே :P//
ஹிஹி நானும் பிரியாணிய ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்,
சகோ.ஜமால்.
சிம்பிள் தான் , முக்கியமா ஸாதிகா அக்காவை பார்க்கனும் அதுக்கு தான் இந்த மீட்டிங், நெசமாவே அதகளம் தான்
ஸாதிகா அக்கா ஊருக்கு வந்திருந்தால் கூட் இவ்வள்வு பிஸ்ஃபுல்லா உட்கார்ந்து பேசி இருக்க முடியாது.
ஆமாம் ஹனீப் துணைக்கு இருந்ததால் ரொம்ப பலமாக இருந்தது.
பிள்ளைகள் போட்டோவை எடுத்துட்டேன்
ஜெய்லானி காதுல புகை அடஙக்லையா அபப் நீங்க தான் ஜெய்லானி டீவியில வெண்ணீர் போட கற்று கொடுத்தீஙக்லே அதை வேணுமுன்ன் கொஞ்சம் காதுல ஊற்றி பாருங்கள் அடங்குதான்னு ஹிஹி
//ஜலீலாக்காஆஆஆஆஆஆஆஆஆஆ கேட்குதோ??? எப்பூடி இப்படி அடக்க ஒடுக்கமாக சந்திப்பு முடியும்வரை எல்லோரும் வாயில பஞ்சோடு இருந்தீங்க???? ஒரேயொரு மெயில் அனுப்பியிருந்தால்.... நாங்களும் வந்திருப்பமில்ல??? ஜலீலாக்கா புகை அடங்கி நெருப்பு வருது.....
/
அதிரா நெருப்பு புகைந்தே விட்டதா?
நான் தான் அன்றைக்கே ஒரு குளு கொடுத்துட்டு தானே போனேன்.
நன்றி ஸ்டார்ஜன்,
நன்றி சீமான் கனி
ஹர்ஷினி அம்மா முழுவதும் படிங்க அப்ப அதிராவை போல் நெருப்ப்பும் சேர்ந்து வரும்.
நாங்களும் எதிர் பார்க்கல
//அமீரகத்துல....சந்திச்சிருக்கீங்க,.....பார்றா....பக்கத்துல இருந்தும் நமக்கு தெரியவே இல்ல......! அதுதான் துபாய்ல அன்னிக்கு டிராபிக் ஜாமா?......வாழ்த்துக்கள்....அருமையான பதிவு!//
வாங்க தேவா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாங்க எப்பூடி கரெக்டா கண்டு பிடிச்சீங்க, இது மாதிரி டிராபிக் ஜாம் இது வரை துபாயில் நான் பார்த்ததே இல்லை.
வால் பையன் வருகைக்கு மிக்க ந்னறி நேரம் கிடைக்கும் போது வருகிறேன்
//சலாம் ஜலீலா
உங்கள் சந்திப்பும் நட்பும்கடைசி வரை தொடர வாழ்த்துக்கள்//
சலாம் தாஜ் நல்ல இருக்கீஙளா?
சரியாக சொன்னீஙக துஆ செய்யுங்கள்.
ராமலக்ஷ்மி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
//அடடா... குடுத்துவச்சவங்க நீங்கல்லாம்... ரொம்ப சந்தோஷம்... கடல் கடந்து வந்த இடத்துல காது குளிர தமிழ் கேக்குறதே ஆனந்தம் தான்... இதுல கும்பலா சேந்து அரட்டைனா....? ம்ம்ம்ம்..... :-)
சந்தோசங்கள் மென்மேலும் வளர்ந்து பரவ வாழ்த்துக்கள்...//
அன்பு தோழன் ஆமாம் கும்பலா சேர்ந்தா குதுகலம் தான்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி
//unga blog romba nalla iruku....//
மிகக் நன்றி ஹென்றி.
//அருமையான சந்திப்புகள். அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.//
நன்றி மின்மினி
//எல்லாத்தையும் எழுதிட்டு சிம்பிளா சொல்லுறீங்களே.
சந்திப்புக்கு வாழ்த்துகள்//
வாங்க் அக்பர் வருகைக்கு மிக்க நன்றி,
எனகென்னவோ சிம்பிளா எழுதின மாதிரி தான் இருந்தது.
//அசத்தல் தான் போங்கோ. நினைத்து பார்க்கையில் நாங்கல்லாம் வந்து கலந்துக்க முடியலையே என்று ஏக்க மாவுமிருக்கு. பெண்களெல்லாம் ஒன்று கூடினாலே அங்கே அமர்க்களம் தான்//
வாங்க ஹரிகா வருகைக்கு மிக்க்க நன்றி
ஆமாம் அமர்களம் தான்
முர்தபா எப்படி செய்யணும்?..
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா மேடம்...நலமா...?
இன்றுதான் உங்க சந்திப்புக்கான பதிவை பர்க்கின்றேன்.நிஜமாவே நான் அங்கு இல்லையே என்ற ஏக்கமும் மனவ்ருத்தமும் தான் இருந்தது.இன்னும் ஒரு சந்த்ர்ப்பம் அமையாதா என்ன என்று எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன்.வேறு என்ன செய்ய ஹூ...ம்.
வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா....
அன்புடன்,அப்சரா.
அப்சாரா வா அலைக்கும் அஸ்ஸலாம்
அன்று கிளம்பும் போது நீஙகள் மெசேஜ் அனுப்பி இருந்தீங்க , கவலை வேண்டாம் அடுத்த முறை சந்திப்போம்,.
இப்படிக்கு ஜலீலா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா