பர்கல் அப்படின்னா என்ன?burgal
அம்மு ஒரு ரெசிபி போட்டு இருந்தாங்க பல்கர் உப்புமா
இத படிக்கும் போது சில பேருக்கு நகைச்சுவையாகவும் இருந்த்து அங்கு கமெண்ட் படிக்கும் தெரிந்து கொண்டேன், ரொம்ப அருமையான சத்துணவு தான் பல்கர்.
இது நான் எப்ப பார்த்து இருக்கேன்னா 7 வகுப்பு படித்த போது, பள்ளியில் சாப்பிடும் ஏழை பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுவார்கள். அப்ப பின்வாசல் பக்கம் கிச்சன் இருக்கும் அங்கு இந்த பல்கரை கல்லு பார்த்து கொண்டு இருப்பார்கள்.
அப்படிக்கா போகும் போது ஒரு குத்து அள்ளி கொள்வேன். எனக்கு அதை சும்மா எடுத்து சாப்பிட ரொம்ப்பிடிக்கும். மொத்தமா விறகு மூட்டி பெரிய சட்டியில் போட்டு கிளறுவார்கள்.ஆனால் பிள்ளைகளுக்கு பிடிக்காது. களி மாதிரி கிளறி கொடுப்பார்கள்.
அதற்கு பிறகு அந்த பல்கரை பார்க்கல, வீட்டில் எல்லாம் அது வாங்க மாட்டார்கள். இங்கு துபாய் வந்த்தும் கேரி போரில் இருந்த்து உடனே ஒரு பாக்கெட் வாங்கி கொண்டேன்.
இதை அரிசி சமையல் போலவே எல்லா வகையான சமையலும் சமைக்கலாம்.
இது வரை நான் சமைத்த்து, நோன்பு கஞ்சி,இனிப்பு புட்டு, கொழுக்கட்டை, உப்புமா.
இது டயபட்டீஸ் கார்ர்களுக்கு ஒரு அருமையான உணவு, அவர்கள் வேண்டிய உணவை இதில் தயாரித்து சாப்பிடலாம்.
ஆனால் இந்த பர்கலில் பொங்கல், ரொட்டி , கீமா உப்புமா, சிக்கன் உப்புமா , பிரியாணி , பிஸிபேளா பாத், லோ பேட் தயிரில் தயிர் சாதம் போன்றைவையும் செய்யலாம். அரிசி சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு இது அவ்வளவா பிடிக்காது.இதை பாயாசம் போலும் செய்யலாம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை வாங்கி இஷ்டம் போல சமைத்து சாப்பிடுங்கள்.
டயட்டில் உள்ளவர்களும் செய்து சாப்பிடலாம்.
இது ஆசியாவின் பொங்கல்
இது அம்முவின் உப்மா
பல்கர் உப்மா - அம்முவின் உப்மா
கீதா ஆச்சல் உப்புமா
பொங்கல் ஆசியா
இப்படி நிறைய வித விதமான உணவுகள் இந்த பர்கலில் தயாரிக்கலாம்/Tweet | ||||||
21 கருத்துகள்:
தவறாமல் பின்னூட்டம் அளிக்கும் பதிவுலக தோழ தோழியர்களே, நேரமின்மையால் என்னால் உங்கள் பிளாக் வந்து படிக்க முடியல அப்படியே சிலது படித்தாலும் கமெண்ட் போட முடியல, முடிந்த போது கண்டிப்பாக வந்து பதில் அளிக்கிறேன்.
தவறாக எண்ண வேண்டாம்’
யாராவது முடிந்தால் தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் சம்மிட் பண்ணிடுங்க. நான் இது வரை தமிழ் மணத்தில் சம்மிட் செய்வதே இல்லை, யார் சம்மிட் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை , நன்றி
உபயாகமான பதிவுக்கு நன்றி ஜலி அக்கா...
Burghol = கோதுமை ரவை.
எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு.
நீங்க சொல்ற மாதிரி ஸ்கூல்ல சத்துணவுக்கு இது தான் சமைப்பாங்க. கம்முன்னு ஒரே வாசனையா இருக்கும். ஆனா சத்துணவு எல்லாம் சாப்பிட்டதில்லை!நம்ம வீட்டுல ஃபெமஸ் பர்கால் உப்புமா தா, வெங்காயம் போட்டும், போடாமலும் பண்ணலாம். இங்கே பிரவுன் பர்காலும் கிடைக்கிறதே.. அது இன்னும் விசேஷம். ரொம்ப ஃபைபரஸ் ஃபுட்! நல்ல சுவையும் கூட! தகவல்களுக்கு நன்றி!
பதிவு நல்லாயிருக்கு ஜலீலா.என்னோட கோதுமை ரவா பொங்கலை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.என்னாலும் இந்த தமிழ்10 ஒட்டு போடவோ சப்மிட் பண்ணவோ முடியலை.
கோதுமை ரவைதானே.
சமைக்கும் முன் அரைமணி ஊறவச்சு சமையுங்க. நன்றாக வேகும்.
புளித்த தயிரில் கூட ஊறவைக்கலாம். :)
நல்ல பகிர்வு ஜலீலா அக்கா.
அக்காக்களின் ஆசையை நிறைவேத்தியாச்சு .தமிழ் மணத்திலும், தமிழ் 10 லும் ஒட்டு போட்டாச்சு.
மேடம் உங்க ப்ளாக் படிக்கவே முடியல ? பேக்கிரவுண்டு கன்புஸ் பன்னுது , சரி பண்ணுங்க
Akka, It takes such a long time to load your blog site. Also, the background dominates the write-up and makes it unclear.
கொஞ்சம் பொறுக்கவும், பேக் கிரவுண்டை இரண்டு முன்று நாளில் மாற்றி விடுகீறேன்.
super post akka!!
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
உங்க தளம் வாசிகக் முடியாமல் ஒரே இம்சையாய் இருக்குங்க.
நல்ல பகிர்வு ஜலி.
/// ஸாதிகா said...
நல்ல பகிர்வு ஜலி.///
தோ.... பாருடா படிக்காமே காமத் போடுறது இதுதானே ? மாட்டிகிட்டிகளா? மாட்டிகிட்டிகளா? மாட்டிகிட்டிகளா? ப்ளாக் சரியா ஓபன் ஆக மாட்டேன்குதுன்னு கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம் இவுக மட்டும் அல்வா குடுக்குராக ....................(சும்மா தமாசு )
ஜலீலாக்கா,
ஆஹா சமைக்காமலே ஒரு பதிவு, சமையலை பத்தி, நடத்துங்க, நடத்துங்க. இன்னும் இந்த வியாதிகளுக்கு ஏற்ற மாதிரி உணவு வகைகளைப் போடுங்கக்கா, உலகத்தில மனுசங்களை விட வியாதிகள்தான் ஜாஸ்தியா இருக்கும் போல. அதற்காகவே. கூடவே, உங்க வலைப்பூவின் டெம்பிளேட்டையும் மாத்திடுங்க. ரெம்ப கஷ்டமா இருக்கு, இடுகைய படிக்க.
புதுசா பல்கரையும் தெரிஞ்சிக்கிட்டாச்சு, ஆரோக்கியமான தகவல்!!
சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
அநன்யா உங்களுக்கு பர்கல் உப்புமா ரொம்ப பிடிக்குமா?
நல்ல கம கம ந்னு இருக்குமே
நன்றி அநன்யா.
நன்றி ஆசியா. ஆசியா குறிப்பு 5 நிமிஷத்தில் கொடுத்துவிடலாம் ஆனால் சம்மிட் செய்வது தான் ரொம்ப கழ்டம்
நன்றி அக்பர்
மிக்க நன்றி ஜெய்லானி தமிலிஷ் தமிழ் 10 சம்மிட் செய்தமைக்கு மிக்க ந்ன்றீ.
அமைச்சரே இப்ப மாத்தியாச்சு இப்ப படிச்சி பாருங்கள்
படிக்க முடியாத போதும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
வித்யா நானும் கஞ்சி செய்யும் போது ஊறவைத்து தான் செய்வேன்
நன்றி சித்ரா இப்போதைக்கு சிம்பிள் மாற்றிஉள்ளேன். இப்ப எல்லோராலும் படிக்க முடியும்
நன்றி மேனகா
நன்றி தலைவா
நன்றீ ஸாதிகா அக்கா
நன்றி நிலாமதி.
ஆமாம் அன்னு நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. உலகில் வியாதிகள் தான் அதிகம்,,
இது சர்க்கரை வியாதிக்கு டிப்ஸ், அதான் சமையல் இப்போதைக்கு போட்டோ எடுத்தது எதுவும் இல்லை, உடனே தோழிகளின் சமையலில் இருந்து லிங்க் கொடுத்தேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
ஷபிக்ஸ் பல்கரை பற்றி தெரிந்து கொன்ண்டீர்களா , நன்றி ரொம்ப சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா