Wednesday, May 5, 2010

வாங்க வந்து அவார்டு வாங்கிக்கங்க, தோழிகளின் சமையல்




ஒரே அவார்டு தான் போங்க எங்க எத்தனை முறை அவார்டு வாங்கினாலும் சந்தோஷம் தான். இதெல்லாம் ஏற்கனவே பெற்று இருந்தாலும் மறுபடி பெற்று கொண்டேன்.


கிருஷ்ன வேனி கிச்சன் இவர்கள் சந்தவை செய்வதில் கை தேர்ந்தவங்க, அவர்கள் இதில் உள்ள அவார்டு எல்லாம் எனக்கே எனக்காம்.



ராஜா கிரீடத்தை கீழே உள்ள நபர்களுக்கு கொடுக்கிறேன்.
1. சிங்கக்குட்டி - பதிவுகள் அனைத்தும் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளது.
2. அதே கண்கள் - பாண்டி அண்ணாத்தே (பிளாக்கருக்கு பயனுள்ள பதிவ கொடுத்து கொண்டு இருந்தார், எல்லோரும் என்ன அக்கா அக்கா ந்னு சொல்றாங்க, பாண்டி அண்ணாத்த மட்டும் தான் தங்காச்சி ந்னு சொல்வார்,

3. சகோ.ஹைஷ். பயனுள்ள மருத்துவ பதிவ போட்டு கொண்டு இருக்கிறார்.

4. பருப்பு த கிரேட் பருப்பு - இவர் அமைச்சர மிஞ்சனுமுன்னு பார்க்கிறார்.

5.மேக்கி makice இப்ப தான் வலை உலகில் கலக்க ஆரம்பித்துள்ளார், இடுகைகளும் பயனுள்ள இடுகைகள்.

வேற யார் யாரெல்லாம் கிரீடம்பெறவில்லை என்று தெரியல மேலே உள்ள ஐந்து நபர்களுக்கு இப்போதைக்கு கொடுக்கிறேன். நிறைய பிளாக்கில் பின்னூட்டம் போடவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது சென்று படிப்பதுண்டு.
===============================================


ராணி கிரீடத்தை கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து ராணிகளுக்கும் கொடுக்கிறேன்.


1. சுஹைனா என் எழுத்து இகழேல் ,கவிதை மற்றும் ஹஜ் விளக்கம், பிளாக்கர் உதவி போன்ற பயனுள்ள் பதிவுகளுக்காக.


2. அநன்யா எண்ண அலைகள் மொக்கைபதிவு + ஐயர் ஆத்து தமிழ் ரொம்ப நல்ல இருக்கும்.

3. அனாமிகா துவாரகன் இரண்டு சதஙகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்கள். அவர்கள் பதிவுகள் எல்லாமே படிக்க படிகக் சுவாரசியம் அதிகம்.


4. கவிசிவாவின் கவி பக்கம், எல்லா இடுகைகளும் மொக்கை + பயனுள்ள தகவல். ஊருக்கு போய் இருக்காங்க வந்து கலக்குவாஙக/


5. வித்யாஸ் கிச்சனுக்கும் இந்த கிரீடத்தை கொடுக்கிறேன். வித்யா கிச்சன் மட்டும் இல்லை, பகோடா பேப்பர் மற்றும் குழ்ந்தைகளுக்கு ஹிந்தி கற்று கொடுக்கும் வண்ணம் ஹிந்தி பிளாக்கும் எழுதி வருகிறார்கள்.

6.பிரியாவின் என் மனதிலிருந்து.கவிதை ஓவியம், மற்ற பதிவுகளும் அருமையாக இருக்கும்.

7.காஞ்சனாவின் மீராஸ் கிச்சன் ,நல்ல வித விதமான சமையல்கள்

8.Geetha's womens Special பல பய்னுள்ள அறிய தகவல்களுடன் பிளக்கர் உதவியும்.இங்கு உண்டு

9. எழுத்தோசை தமிழரசி சுவையாய் கவிதை படைக்கும் கலையரசி என்று சொல்லலாம். முன்பு அடிக்கடி போய் நிறைய கவிதைகள் படித்து இருக்கேன், இப்ப இவர்கள் பிளாக் ஓப்பன் செய்தால் நிறைய எரர் வருவதால் படிக்க முடியல.

10.ஜெஸ்வந்தியின் மௌனராகங்கள். அருமையான பகிர்வுகள்.




இது என் பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வந்து பதில் தரும் கிருஷ்ன வேனி கொடுத்தது, இத்தனையும் எனக்கே எனக்காம். ஏற்கனவே இதே அவார்டை வாங்கி இருந்தாலும் அவர்கள் அன்பாக கொடுத்ததால் மறுபடி வாங்கி கொள்கிறேன்.
மிக்க நன்றி கிருஷ்ன வேனி.







எல்லா அவார்டுக்கும் மிக்க நன்றி கிருஷ்ன வேனி.
இது மனோ அக்காவின்


கேரட் பீனட் ரைய்தா (அசல் பாதம் பச்சடி போலவே இருந்தது) .மனோ அக்காவின் கேரட் பீனட் ரைய்த்தா போன வாரம் செய்த இறால்,மீன், வெஜ் (மிக்ஸ்ட்) பிரியாணிக்கு சூப்பரான பச்சடியாக இருந்தது. போன வாரம் (மீன்,இறால், வெஜ்) சேர்த்து ஒரு மிக்ஸட் பிரியாணி செய்தேன். அதற்கு தொட்டு கொள்ள மனோ அக்காவின் கேரட் பீனட் ரெய்தா செய்தேன்.ஹஸ் சாப்பிட்டு விட்டு பாதம் தயிர் சட்னியா? ஏதோ வித்தியாசமா இருக்கு என்றார்.



இது மேனகாவின் உருளைகிழங்கு ஜாமூன். குலோப் ஜாமுன் செய்ய் தெரிந்தாலும் உருளைகிழங்கு ஜாமூன் செய்ததில்லை. அதான் மேனகாவின் அளவை பார்த்தே செய்து விட்டேன்.

கீதா ஆச்சலின் பார்லி ஓட்ஸ் பால் கொழுக்கட்டை.இது என் தங்கை வீட்டில் ஆறு மாதம் முன்பு செய்தது. போட்டோ எடுக்கல.இது நாங்க செய்யும் சுத்திரியான் போல தான்.

மலிக்காவின் உளுந்து அடை இது என் குறிப்பிலேயே இருக்கு.
ஹர்ஷினியின் வேபில் பார்த்து வைத்துள்ளேன்.செய்ய நேரம் கிடைக்கல/

ஆசியாவின் பூண்டு மீன் குழம்பு, பொதுவாக மீன் குழம்பை துண்டுகள் சேர்க்காமா வால் பகுதி, தலைபகுதி மட்டும் தான் போட்டு செய்வேன், தலை போடுவதால் எல்லா மசாலாவையும் அரைத்தே சேர்த்து விட்டேன்.

டிஸ்கி: சமையல் குறிப்பை சிக்கிரமா நிமிஷத்தில் போட்டு விடலாம் ஆனால் இது போல் விருது வழங்க ஆட்களை தேர்ந்தெடுத்து பிளாக் விலாசத்தை இனைப்பது, அடுத்து ஓவ்வொரு வீட்டுக்கா போய் விருது கொடுத்துள்ளது பற்றி அறிப்பது தான் பெரும் வேலையாக இருக்கு. எப்படிதான் இந்த ஜெய்லாணி எல்லோருக்கும் வைர விருது கொடுக்கும் போது இனைத்தாரோ தெரியல. ரொம்ப உழைத்து இருப்பார் என நினைக்கிறேன்.


31 கருத்துகள்:

எல் கே said...

விருது பெற்றதற்கும் அதை மற்றவர்களுக்கு அளித்ததற்கும் வாழ்த்துக்கள்

Ananya Mahadevan said...

எனக்கு ராணி அவார்டா!!!! கடவுளே! அப்படியே உலக அழகி போட்டியில ஜெயிச்சப்போ சுஷ்மித்தா கன்னத்துல கை வெச்சுப்பாங்களே, அதே மாதிரி அப்படி ஒரு பூரிப்பு, ஆர்ப்பரிப்பு.. கலக்கிட்டீங்க.
சர்ப்ரைஸ் .. தாங்க்ஸ் அக்கா..
பரிசு வாங்கின எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.. சமயல் ப்ளாக்ஸ் பக்கம் போகணும்ன்னு நினைச்சுண்டு இருக்கேன்.இவ்வளவு ரெஃபரென்ஸஸ் கிடைச்சாச்சு. எடுலே வண்டியை...

Vidhoosh said...

நன்றி ஜலீலா (பிஜ்லி கி ராணி). சந்தோஷமாகத்தான் இருக்கு. :)

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்

1.விருது பெற்றவர்களுக்கும்
2.உங்கள் தங்கை குழந்தைகளுக்கும்
3.உங்கள் சமையல் குறிப்புகளுக்கும்

SUFFIX said...

Very Good!! விருது மழை பொழிகிறது, அனைவருக்கும் வாழ்த்துக்கள் -:)

சசிகுமார் said...

விருது பெற்றவர்களுக்கும் விருது கொடுத்த நல்ல உள்ளத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Krishnaveni said...

Today i have so many visiters for sandhavai form jaleela's blog. so i have come here to see what is going on... my name in jaleela madam's post...i feel really happy. congrats to all and your sister's kutties.

Asiya Omar said...

நல் வாழ்த்துக்கள் .பாட்மிண்டனில் வின் பண்ணிய தங்கை குழந்தைகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா கலக்கிட்டீங்க எங்கேயோ தொடங்கி எங்கேயோ எல்லாம் சுற்றி, மீண்டும் அதே இடத்துக்கே வந்து முடிச்சிருக்கிறீங்க.... வாழ்த்துக்கள்.

அவார்ட் வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்... தங்கையின் குட்டீஷ் சூப்பர் கண்படப்போகுது....

எனக்கு நேரம் போதவில்லை பின்னர் வந்து ஒயுங்கா எல்லாம் படிக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

பிள்ளைகளுக்கு என் அன்பான முத்தங்களுடன். வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கக்கா.

விருதுகள் வாங்கியமைக்கும் அதை வழங்கவர்களுக்கும் வாழ்த்துக்கலூம் பாராட்டுக்களும்..

Kanchana Radhakrishnan said...

விருது கொடுத்த Jaleela க்கு என் மனமார்ந்த நன்றி.

Jaleela Kamal said...

//நன்றி ஜலீலா (பிஜ்லி கி ராணி). சந்தோஷமாகத்தான் இருக்கு. :)//



// மே அப்கா பாத் சுன் கர் பஹூத் குஷ் ஹூ விதூஷ்//

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்
................................................
..............................................\

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும்,குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!!

என் உருளை காலா ஜாமூன் செய்து பார்த்ததற்க்கு மிக்க நன்றி,போட்டோவை பார்த்ததும் அப்படியே ஒரு ஜாமூன் எடுத்து சாப்பிட்டுட்டேன்...

Chitra said...

மீண்டும் மீண்டும் விருதுகள் வாங்கி குவிக்கும் விருது ராணி, ஜலீலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!
தொடர்ந்து அசத்துங்க......
உங்களிடம் இருந்து awards வாங்கும் ஆசிர் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பருப்பு (a) Phantom Mohan said...

நன்றி ஜலீலா அக்கா, என்னையும் மதிச்சி அவார்ட் குடுத்துரிக்கீங்க..எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல...அதுக்குள்ளே அவார்ட் ...

கலக்குடா மோகன் (இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)

சீமான்கனி said...

அக்காவுக்கும் மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...உருளைகிழங்கு ஜாமூன் வித்யாசமா இருக்கு அக்கா...

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் .கொடுத்தவர்க்கும் அதை பெற்றவர்களுக்கும்...

(( டிஸ்கி.. )). யக்கா!!! கல்யாண விருந்துக்கு வீட்டில போய் கூப்பிடுவதுதானே நம்ம வழக்கம். நா அதைதாங்க செஞ்சேன்..

ஜெய்லானி said...

@@@ மங்குனி அமைச்சர்--//ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,//

அமேசான் காட்டுக்கு எஸ்கேப் அனக்கொண்டா வேனுமாம் எங்க பாஸுக்கு கூட வரியா!! வரும் போது மூஞ்சூரு அதான்யா மூக்குநீட்டா இருக்குமே அந்த எலி நாலு பிடிச்சிட்டு வா!!

மனோ சாமிநாதன் said...

என் காரட் ரெய்தாவை செய்து பார்த்து புகைப்படத்துடன் அருமையான பின்னூட்டம் தந்ததற்கு என் அன்பு நன்றி ஜலீலா!

அன்று நடந்த நமது சந்திப்பு இனிமையானதாக இருந்தது. நேரம் போதவில்லை என்பதும் யாருடனும் விரிவாகப் பேச முடியவில்லை என்பதும் தான் குறை. யூத் விகடனில் அதைப்பற்றி விபரங்கள் வெளி வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி! சுவையான பலகாரங்கள் செய்து கொண்டு வந்து அசத்தி விட்டீர்கள்!! என் பாராட்டுக்கள்!!

பருப்பு (a) Phantom Mohan said...

Hi Jaleela Akka,

http://food.sify.com
http://tamil.webdunia.com/miscellaneous/cookery/

may be the above URL can useful for you.

Regards,
Mohan

மாதேவி said...

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா.

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் :-)

Jaleela Kamal said...

எல்.கே @நன்றி

அநன்யா, இந்த அவார்டு உலக அழகி ரேஞ்சுக்கு உங்களை கொண்டு போய் விட்டதா?


ஸ்டார்ஜன் @நன்றி
அகமது இர்ஷாத் @நன்றி

ஷபிக்ஸ் @ நன்றி
சசி குமார் @ நன்றி
yes krishnaveni i given your santhavai link
நன்றீ ஆசியா பிள்ளைகள் போட்டோ எடுத்துட்டேன்.

நன்றி சகோ.ஜமால்
நன்றி அதிரா
நன்றி மலிக்கா
நன்றி கஞ்சனா

நன்றி மேனகா

நன்றி சித்ரா
நன்றி சீமான் கனி
நன்றி மனோ அக்கா

நன்றி மாதேவி
ரொம்ப நாள் கழித்து பிளாக் பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி.

Jaleela Kamal said...

அமைச்சரே உங்கள் பாச்சா ஒன்னுய இங்க் பலிக்காது , நாங்க யாரும் சரனடையமாட்டோம்.

இனி அடிக்கடி அமீரகத்தில் சபைய கூட்டிடுவோமுல்ல

Jaleela Kamal said...

பருப்பு வெப் துனியாவில் போடுவது பற்றி ஒன்றும் இல்லை ஏற்கனவே என் குறீப்புகளை என் பெயர் இல்லாமல் போட்டு கொண்டார்கள்,

என் url லிங்க் என்றால் ஒகே.

Anonymous said...

//எனக்கு ராணி அவார்டா!!!! கடவுளே! அப்படியே உலக அழகி போட்டியில ஜெயிச்சப்போ சுஷ்மித்தா கன்னத்துல கை வெச்சுப்பாங்களே, அதே மாதிரி அப்படி ஒரு பூரிப்பு, ஆர்ப்பரிப்பு.. கலக்கிட்டீங்க.
சர்ப்ரைஸ் .. தாங்க்ஸ் அக்கா.. //

Repeattu!!!!!!!!!

Priya said...

ஆ.. எனக்கும் ராணி அவார்டு! ந‌ன்றி நன்றி நன்றி!

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

M.A.K said...

இது எனக்கு முதல் அவார்ட்.அவார்ட் தந்து ஊக்கமளித்தமைக்கு நன்றி சகோதரி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா