தேவையானவை
கிரினி பழம் (ஸ்வீட் மெலன்) - சிறிய பழம் ஒன்று
பிஸ்தா ஐஸ்கிரீம் - முன்று பெரிய கரண்டி (அ) ஒரு கப்
சர்க்கரை - சிறிது
ஐஸ் கட்டிகள் - 10
உப்பு - அரை சிட்டிக்கை
செய்முறை
கிர்னி பழத்தை (ஸ்வீட் மெலன்) தோலை நீக்கி இரண்டாக அரியவும்.
உள்ளே உள்ள கொட்டைகளை சிறிது பழத்தோடு ஸ்பூன் கொண்டு வழித்தெடுக்கவும்.
கொட்டைய மட்டும் நீக்கி விட்டு அரிந்தால் சில பழங்கள் கசக்கும்.
பிறகு பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழம்,ஐஸ் கட்டிகள், பிஸ்தா ஐஸ் கிரீம் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
சுவையான பிஸ்தா மெலன் ஜூஸ் ரெடி.
குறிப்பு:
இதை பாலுடன் சேர்த்து தான் ஜூஸ் தயாரிப்பார்கள். ரொம்ப அருமையாக இருக்கும்.
மற்ற பழங்களுடன் சேர்த்து காக்டெயில் ஜூஸ் போலவும் தயாரிக்கலாம்.வெரும பழத்தை கட் செய்து சாப்பிட்டாலும் நல்ல இருக்கும்.
இது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் மதிய உணவிற்கு குழந்தை பெற்ற வர்களுக்கு மீல்ஸுடன் இந்த பழம் ஒரு துண்டும் வைப்பார்கள்.
கிர்னி பழம் வாங்கி வந்து வைத்தாலே அந்த இடம் முழுவதும் மணமாக இருக்கும். முன்று டம்ளர் அளவிற்கு வரும்.
ரொம்ப திக்காக இருந்தால் சிறிது தண்ணீய சேர்த்து அடித்து கொள்ளவும்.(அமைச்சரே எந்த தண்ணியன்னு கேட்ககூடாது)
கோடையின் வெப்பத்துக்கு அன்றாட உணவில் இது ஜூஸ்வகைகள் குடிப்பது நல்லது.
Tweet | ||||||
41 கருத்துகள்:
இரண்டு கப்புல ஒரு கப் என் கப் :)
வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி ஜலீலா,
கிர்னி பழம், முலாம் பழம் இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?
வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி ஜலீலா
//அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விட்டு போங்களே!// போட்ட ஜூஸ் எல்லாம் வெளிய போய்டுமே???
வாழ்க வளமுடன்
இப்ப அடிக்கிற சூட்டிற்கு இதை இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. எளிமையான குறிப்பு, வீட்டில் செய்து பார்த்துடுறோம்.
/போட்ட ஜூஸ் எல்லாம் வெளிய போய்டுமே???//
ஹிஹி
கோடை காலத்திற்கு ஏத்த ஒன்று
ஜலீலாக்கா தமிழ்குடும்பத்தில் இது உங்க வாரம்போல.. களைக்கட்டுது..
வாழ்த்துகள் ஜலீலாக்கா.
வெயிலுக்கு இந்த ஜூஸ்ஸை குடிச்சா புது தெம்பு வரும்.
ஜூஸ் நல்லாருக்கும்போல.., சவுதி வெயிலுக்கு ஏத்த ஜூஸ்தான்.
இனிமேல் தனியா ஒரு மிக்ஸி வெச்சுக்கணும் போல தெரியுதெ:)
Cool cold drinks. Thank you.
//அன்பு சகோதரி ஜலீலா,
கிர்னி பழம், முலாம் பழம் இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?//
அப்படியே இந்த இலைக்கும் கொஞ்சம்.
(
ஸ்வீட் மெலன் தான் எங்களுக்கு தெரிந்த சுத்த தமிழ்)
முதலில் வாழ்த்துக்கள்......தமிழ் குடும்ப வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆல் இன் ஆல்.......
http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post_24.html
அடிக்கிற வெயிலுக்கு ஆ...ரெண்டு கிளாஸ் பத்தாது....
மெலன் ஐஸ்கிரீம் ஜூஸ் ஜில்லுன்னு இப்பவே டேஸ்ட் பண்ணனும்னு தோணுது.
வித்யாசமான கலவை அக்கா... ரெம்ப நல்லா இருக்கும் போல...ஹும்ம்ம்ம்///////....
superb..nanum kirni vangi vachu iruken..
வெயிலுக்கேற்ற அருமையான ஜூஸ்.
super, super,super!!
வாவ் நைஸ். படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்களேன் அக்கா. நன்றி.
வாவ் நைஸ். படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்களேன் அக்கா. நன்றி.
ஞாபகப் படுத்திட்டீங்க; இன்னிக்கு ஸ்வீட் மெலன் வாங்கிடணும்!!
ஐஸ் கிரீமை போட்டு நமக்கு இன்னைக்கி செலவு வச்சிட்டிங்க........
ஆ.... ஜலீலாக்கா... இப்பத்தான் கண்டுபிடிச்சேன், நான் ஆளைக்காணவில்லையே.... என்னவோ ஏதோ என எண்ணிக்கொண்டிருந்தேன்... நீங்க அங்க பிசியாக இருக்கிறீங்களோ? நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள்.
// ஹைஷ்126 said...
இரண்டு கப்புல ஒரு கப் என் கப் :)// ஆண்டுக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வாறவைக்கெல்லாம் கப் கொடுக்க வாணாம் ஜலீலாக்கா, இரண்டுமே நேக்குத்தான்... இப்போ எங்களுக்கும் ரொம்ப சூடாகத்தான் இருக்கு(குளிரோடு சேர்ந்த சூடு). நான் வெதரைச் சொன்னேன்.
//ஜெய்லானி said...
முதலில் வாழ்த்துக்கள்......தமிழ் குடும்ப வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆல் இன் ஆல்.......
http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post_24.html
அடிக்கிற வெயிலுக்கு ஆ...ரெண்டு கிளாஸ் பத்தாது....///
என்னா ஜெய்லானி , இவ்வளோ நல்லவனா ஆகிட்ட
// athira said...
ஆ.... ஜலீலாக்கா... இப்பத்தான் கண்டுபிடிச்சேன், நான் ஆளைக்காணவில்லையே.... என்னவோ ஏதோ என எண்ணிக்கொண்டிருந்தேன்... நீங்க அங்க பிசியாக இருக்கிறீங்களோ? நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள்.
// ஹைஷ்126 said...
இரண்டு கப்புல ஒரு கப் என் கப் :)// ஆண்டுக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வாறவைக்கெல்லாம் கப் கொடுக்க வாணாம் ஜலீலாக்கா, இரண்டுமே நேக்குத்தான்... இப்போ எங்களுக்கும் ரொம்ப சூடாகத்தான் இருக்கு(குளிரோடு சேர்ந்த சூடு). நான் வெதரைச் சொன்னேன்.///
ரெண்டு கப்பும் உங்களுக்கு வேணும் , அவ்வளோ தானே , ரெண்டுநிமிசம் வைட் பண்ணுங்க ஜூச குடிச்சிட்டு கப்ப தர்றேன்
REFRESHING DRINK excellent for this hot summer
வாழ்த்துக்கள் சகோதரி...கிர்ணி பழம் - முலாம்பழம் வெவ்வேறு தானே...தங்கள் வலைப்பக்கம் ஒப்பன் ஆக வெகு நேரமாகின்றது சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
லேட்டா வந்ததுனால ஜூஸ் போச்சா.
நல்ல ரெஸிப்பி.
நேரமின்மையால் யாருக்கும் பதில் போட முடியல, யாரும் கோபிக்க வேண்டாம், மற்ற வர்கள் பதிவும் படிக்க முடியல.
இப்படிக்கு
ஜலீலா
சகோ.ஹைஷ் வாங்க ரொம்ப நாள் கழித்து வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்சி.
கிர்னி, முலாம் பழம் இரண்டும் ஒன்று தான். ஆனால் நாங்க கிர்னி என்று தான் சொல்வோம்
ஜூஸ் குடித்துட்டு ஓட்டு போடுங்கள் வெளியில் ஓடாது
எல்.கே வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
மின்மினி ஆமாம் நீஙக் சொன்ன பிறகு தான் பார்த்தேன், நன்றி. நீங்க தான் யாருன்னு தெரியல எனக்கு.
ஸ்டார்ஜன் சவுதி வெயில் மட்டும் இல்லை, இந்தியா, துபாய் வெயிலுக்கும் ஏற்றது, நன்றி
ஷபிக்ஸ் உடனே தங்கமனிக்கிட்ட சொல்லி செய்ய சொல்லிடுங்க.
தமிலிஷில் சம்மிட் செய்தமைக்கு மிக்க நன்றி
ராஜ நடராஜன் ஒரு மிக்ஸி வைத்து கொள்வது நல்லது தான் மோர், லஸ்ஸி, ஜூஸ் எல்லாம் நம் இஷ்டத்துக்கு செய்துசாப்பிடலாமே/.
வருகைக்கு மிக்க நன்றி
நன்றி சித்ரா
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானி
நன்றி ஆசியா.
சீமான் கனி தொடர்வருகைக்கு மிக்க நன்றி உங்கள் பக்கம் வர முடியல, தவறாக எண்ண வேண்டாம்.
நீத்து கிர்னி வாங்கியாச்சா, ம்ம் விரைவில் எதிர் பார்க்கிரேன்.
அனாமிகா படம் பெருசா போட்டால் ஓப்பன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும் அதான் சிறியதாக போட்ட்டேன். வருகைக்கு மிக்க நன்றி
//என்னா ஜெய்லானி , இவ்வளோ நல்லவனா ஆகிட்ட//
...ஆமப்பா ஆமாம்...ஒரு எடத்துல என்னை கலாய்ச்சு ஒரு பதிவே போட்டுட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.
//ரெண்டு கப்பும் உங்களுக்கு வேணும் , அவ்வளோ தானே , ரெண்டுநிமிசம் வைட் பண்ணுங்க ஜூச குடிச்சிட்டு கப்ப தர்றேன்//
ஏன்யா காலி கிளாஸுக்கு இப்பிடி அடிச்சிகிறிங்க. அதை நான் முன்னாலயே காலி பண்ணியாச்சு. உள்ள ஜீஸ் இல்ல . அது கிளாஸ் கலர் அப்படி...
...ஆமப்பா ஆமாம்...ஒரு எடத்துல என்னை கலாய்ச்சு ஒரு பதிவே போட்டுட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.????
ithu engkeennu sonnaa nalla irukkum
ஹுஸைனாம்மா, ஜூஸ் தான் சீக்கிரமே செய்துடலாம். உடனே வாங்குங்க சுவைத்து மகிழுங்கள்.
இளம் தூயவன் ஐஸ்கிரீம் தானே பரவாயில்லை சாப்பிட்டு விட்டு கூலாக இருங்கள்
அதிரா இரண்டு கப் தானே போட்டேன்.,அதுக்கா இப்படி அடிதடி.
ம்ம்ம்ம்
அமைச்சரே, ஜெய்லானி புதுசா ஜூஸ் போட சொல்லி கொடுத்து இருக்கார் அங்கு கிடைக்கும் அண்டா அண்டாவா.
நன்றி கிருஷ்னவேனி.
வேலம்சார் கிர்னி முலாம் பழம் இரண்டும் ஒன்று தான்.
பதிவுகள் நிரைய இருப்பதான் அபப்டி இருக்கு. சீக்கிறமே மாற்றனும்,
அடிக்கிற வெயிலுக்கு அருமையான ஜூஸ். நன்றி ஜலீலா.
அக்பர் லேட்டா வந்தாலும் சீக்கிரம் வந்தாலும் ஜூஸ் இங்கேயே தான் இருக்கும், எப்ப வேண்டுமானாலும் எடுத்து குடிக்கலாம்.
நன்றி அக்பர்.
சுந்தரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
முலாம் பழம் பற்றி ஏதோ ஒரு மெடிக்கல் புக்கில் படித்துவிட்டு நம் வீட்டு அம்மா முலாம் பழம் வாங்கி வாருங்கள் என்றார்கள். நான் போய் வாங்கி வந்ததை பார்த்துவிட்டு ஒரே சத்தம். அது கிர்னிப் பழம் என. அப்புறம் முலாம் பழம் & கிர்னிப் பழம் என கூகுளில் தேடினால் உங்கள் பக்கம் கிடைத்தது. சண்டை நின்றது. நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா