Showing posts with label ராகி. Show all posts
Showing posts with label ராகி. Show all posts

Monday, December 28, 2015

ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்



Healthy Diet Ragi Beet Dosa & Mint Chutney.
ராகி பீட்ரூட் தோசை & புதினா துவையல்




தேவையான பொருட்கள்
  1. ராகி மாவு - 100 கிராம்
  2. அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி
  3. ரவை - ஒரு தேக்கரண்டி
  4. துருவிய பீட்ரூட் - முன்று மேசைகரண்டி
  5. பொடியாக நருக்கிய பச்சமிளகாய் - ஒன்று
  6. உப்பு - தேவைக்கு
  7. தண்ணீர் -தேவைக்கு
  8. வெங்காயம் - இரண்டு மேசைகரண்டி பொடியாக நருகியது
  9. கொத்தும்மல்லி தழை பொடியாக அரிந்தது சிறிது
  10. நல்லெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் - தோசை சுட தேவையான அளவு

செய்முறை
  1. ராகி மாவுடன் எண்ணை தவிர மற்ற அனைத்துபொருகளையும் தேவைக்கு தண்ணீர்சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கி 10 நிமிடம் ஊற்வைக்கவும்.
  2. பிறகு தோசை தவ்வாவில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணை சிறிது ஊற்று முடி போட்டு இரணடுபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
  3. இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
  4. காலை டிபன் அல்லது இரவு டிபனுக்கு ஏற்றது,






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, March 19, 2014

ராகி ரவை தோசை - Ragi dosai







ராகி தோசை

தேவையான பொருட்கள்
ராகி மாவு ( கேழ்வரகு மாவு) - அரை கப்
அரிசி மாவு - 1 மேசைகரண்டி
ரவை - 2 மேசைகரண்டி
கோதுமை மாவு - ஒரு மேசைகரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று
பச்சமிளகாய் - பொடியாக நறுக்கியது -1
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
எண்ணை - தோசை சுட தேவையான அளவு

செய்முறை

எண்ணையை தவிர மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தோசைமாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றிலும் எண்ணை ஊற்றி நன்கு மொருகலாக சுட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்

தோசையில் தடவி அப்படியே காலை டிபனுக்கு எடுத்து செல்லலாம். ஹெல்தியான டயட் ரெசிபி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, October 13, 2012

ராகி சேமியா புட்டு & அவித்த முட்டை ஃப்ரை




ராகி சேமியா புட்டு &  அவித்த முட்டை ஃப்ரை

தேவையானவை

ராகி சேமியா – 100 கிராம்
சர்க்கரை – 1 மேசைகரண்டி (சுவைக்கு ஏற்றார்போல கூட்டி கொள்ளலாம்)
தேங்காய் துருவியது – 2 மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ¼ சிட்டிக்கை
ஏலப்பொடி – ¼ சிட்டிக்கை

பாயில்ட் எக் ஃப்ரைக்கு

முட்டை  - 1
மிளகாய் தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – ¼ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் தேக்கரண்டிக்கும் குறைவாக

செய்முறை

ராகி சேமியாவை 4 டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து 2 நிமிடம்ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து இட்லி பானையில் 5 நிமிடம் அவித்துஎடுக்கவும்.
வெந்த ராகி சேமியாவில் சர்க்கரைதுருவிய தேங்காய்நெய்,ஏலப்பொடிசேர்த்து கலக்கவும்அருமையான ராகி சேமியா புட்டு ரெடி.

 காரத்துக்கு முட்டை பிரை.

முட்டையை முழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் அவித்துஎடுக்கவும்அவிந்த்தும் தோலை உரித்து விட்டு இரண்டாக அரிந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் உப்பை சிறிது தண்ணீரில் கலக்கிமுட்டையில் மேல் தடவிதவ்வாவில் சிறிது எண்ணை விட்டு பொரித்துஎடுக்கவும். குழந்தைகளுக்கு ஸ்வீட் நூடுல்ஸ் என்று சொல்லி கொடுக்கலாம்,. பெரியவர்களுக்கும் எல்லா வயதினர்களுக்கும் ஏற்ற சத்தான காலை உணவு.

காலை நேர சத்தான ராகி சேமியா புட்டு + அவித்த முட்டை பிரை ரெடி.

பரிமாறும் அளவு – 1 நபருக்கு.
ஆயத்த நேரம் – 5 நிமிடம்
சமைக்கும் நேரம் – 10 நிமிடம்







Tuesday, May 15, 2012

கேழ்வரகு இட்லி - Ragi Idli






கேழ்வரகு (ராகி)இட்லி
தேவையானவை
கேழ்வரகு மாவு -  100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
உப்பு – தேவைக்கு

செய்முறை
ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும்.
டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

குறிப்பு: வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் மிகச்சுலபமாக செய்து விடலாம். ராகி மாவு எல்லா  தமிழ்க்டைகள், ஆதில் சூப்பர் மார்கெட்களில்  கிடைக்கின்றன. உளுந்து வெந்தயம் ஊறவைப்பதற்கு பதிலாக மிக்சியில் பொடித்தும் மாவுடன் ஊறவைத்துகொள்ளலாம்.இட்லிமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து கொள்ளலாம். ரெடி மிக்ஸ் போல மிக்ஸ் செய்தே புளிக்கவைத்து செய்யலாம். ரொம்ப ஈசியான இட்லி, நல்ல் சாஃப்டாக வரும்.
.







Sunday, November 20, 2011

ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - Ragi Barley ,Nijella Seed thattai


மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.





தேவையானவை


ராகி பவுடர் – அரை டம்ளர்
பார்லி பொடித்த்து – அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது – ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது – ஒரு தேக்கரண்டி
ஓமம் (AJWAIN)– அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு – அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் (NAJILA SEED)– அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
பட்டர் – ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி





செய்முறை




கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி




20 தட்டைகள் வரும்.