Tweet | ||||||
Saturday, October 13, 2012
ராகி சேமியா புட்டு & அவித்த முட்டை ஃப்ரை
ராகி சேமியா புட்டு & அவித்த முட்டை ஃப்ரை
தேவையானவை
ராகி சேமியா – 100 கிராம்
சர்க்கரை – 1 மேசைகரண்டி (சுவைக்கு ஏற்றார்போல கூட்டி கொள்ளலாம்)
தேங்காய் துருவியது – 2 மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ¼ சிட்டிக்கை
ஏலப்பொடி – ¼ சிட்டிக்கை
பாயில்ட் எக் ஃப்ரைக்கு
முட்டை - 1
மிளகாய் தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – ¼ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் தேக்கரண்டிக்கும் குறைவாக
செய்முறை
ராகி சேமியாவை 4 டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து 2 நிமிடம்ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து இட்லி பானையில் 5 நிமிடம் அவித்துஎடுக்கவும்.
வெந்த ராகி சேமியாவில் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய்,ஏலப்பொடிசேர்த்து கலக்கவும். அருமையான ராகி சேமியா புட்டு ரெடி.
காரத்துக்கு முட்டை பிரை.
முட்டையை முழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் அவித்துஎடுக்கவும். அவிந்த்தும் தோலை உரித்து விட்டு இரண்டாக அரிந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் உப்பை சிறிது தண்ணீரில் கலக்கிமுட்டையில் மேல் தடவி, தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு பொரித்துஎடுக்கவும். குழந்தைகளுக்கு ஸ்வீட் நூடுல்ஸ் என்று சொல்லி கொடுக்கலாம்,. பெரியவர்களுக்கும் எல்லா வயதினர்களுக்கும் ஏற்ற சத்தான காலை உணவு.
காலை நேர சத்தான ராகி சேமியா புட்டு + அவித்த முட்டை பிரை ரெடி.
பரிமாறும் அளவு – 1 நபருக்கு.
ஆயத்த நேரம் – 5 நிமிடம்
சமைக்கும் நேரம் – 10 நிமிடம்
Subscribe to:
Post Comments (Atom)
22 கருத்துகள்:
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு...
நன்றி சகோதரி...
Wow! Nice combo. We always used to have only the semiya, next time I'm going to try your idea, sweet and spicy combination looks very tempting.
ஆஹா !! எனக்கு ரொம்பபிடிக்கும் ..அம்மா வெல்லம் சேர்த்து செய்வாங்க ..
எனக்கு நினைவிருக்கு சின்னதில் நாங்க ஊறவைத்த ராகியை மெஷினில் செமியாவாக அரைச்சு வருவோம் அதில் செய்வாங்க ..
ரெடிமேட் சேமியா ..இங்கே கிடைச்சா செய்றேன் .thanks for the recipe jaleelaa
வித்தியாசமாக இருக்கு.
சேமியா புட்டு அருமையாக இருக்கிறது ஜலீலா.
நாங்கள் ராகி மாவில் செய்வோம்.
Healthy version, pls pass the plate...
Super healthy foods together.
இனிப்பு+காரம் நல்ல காம்பினேஷன்...
ஜலீலா அருமையாக இருக்கு,இனிப்பு இதுவரை முயற்சி செய்யலை.கிடைக்கும் பொழுது செய்து பார்க்கிறேன்...
Wow.. romba nalla iruku akka
வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்
வாங்க ஆயிஷா கண்டிப்பாக செய்து பாருங்கள் உஙக்ள் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஏஞ்சலின் வாங்க எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்.
ஊரிலிருந்து ரெடி மேட் வாங்கி வந்தேன்.
ஏஞ்சலின் ரெடி மேட் ராகி சேமியா கிடைத்தால் செய்து பாருங்கள்
மாதேவி , ராகி மாவிலும் செய்வோம் , சேமியாவிலும் நாங்கள் செய்வோம் இரண்டும் பிரமாதமாக இருக்கும்
வருகைக்கு மிக்க் நன்றி
பிரேமா உங்களுக்கில்லாததா எடுத்துக்கங்க
ஆமாம் பிரியா ஹெல்தி காலை நேர உணவு
மேனகா எப்ப இனிப்பு டிபன் செய்தாலும் கூடவே காரமும் செய்வது என் பழக்கம். வருகைக்கு மிக்க் நன்றி
ஆசியா இனிப்பு சேமியா முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி பாயிஜா
woww yummy :)
இப்படி ஒரு காம்பினேஷன!!!1!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா