Showing posts with label கத்தரிக்காய். Show all posts
Showing posts with label கத்தரிக்காய். Show all posts

Wednesday, October 24, 2012

எண்ணை கத்தரிக்காய் கிரேவி - 1



எண்ணை கத்திரிக்காய் கிரேவி/தொக்கு/கூட்டு

தேவையானவை
சின்ன கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் இரண்டு
தக்காளி இரண்டு
தக்காளி பேஸ்ட் இரண்டு மேசைகரண்டி
மிளகாய் தூள் முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் ஒன்னறை தேக்கரண்டி
பச்ச மிளகாய் இரண்டு
வறுத்து பொடிக்க
எள் ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி ஒரு சிட்டிக்கை
புளி ஒரு லெமன் சைஸ்
தாளிக்க
எண்ணை நான்கு தேக்கரண்டி
கடுகு அரைதேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
பூண்டு முன்று பல்
கருவேப்பிலை அரை கைப்பிடி
கொத்துமல்லி தழை சிறிது



செய்முறை

 கத்திரிக்காயை முழுவதும் வெட்டாமல் நாலாக கீரிவைக்கவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடித்து வைக்கவும்.
.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிற்கு முழுசாக நாலாக வெட்டிய கத்திரிக்காயை சேர்த்து கிளறவும்.
சேர்க்கவேண்டிய தூள் வகைகள் (மிளகாய் தூள்,உப்பு தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் ) சேர்க்கவும்.
நன்கு கத்திரிக்காவில் படும் படி பிரட்டி 5 நிமிடம் சிம்மில் வைக்க்வும்.

தக்காளி பொடியாக அரிந்து சேர்த்து, பச்சமிளகாய், புளியை கட்டியாக கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும்.
பாதி வெந்த்தும் பொடித்த பொடியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி தீயின் தனலைசிம்மில் வைத்து நன்கு கத்திரிக்காய் கிரேவி பதம் வந்து எண்ணை மேலே வந்த்தும் இரக்கவும்.
கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.சுவையான எண்ணை கத்திரிக்காய் ரெடி

குறிப்பு:
பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ். மற்றும் பிளைன் சாதம், லெமன் சாதம், தயிர் சாத்துக்கும் ஏற்றது
எண்ணைக்கத்திரிக்காய் கிரேவி/தொக்கு/கூட்டு.
பெரும்பாலும் கறுப்பு எள் தான் சேர்ப்போம்.இதில் வெள்ளை எள் சேர்த்து இருக்கிறேன்
காரம் அதிகம் விரும்புவர்கள்  கால்தேக்கரண்டி மிளகாய் தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.



இந்த குறிப்பை ஆசியாவின் feast of sacricice ஈவண்டுக்கு  அனுப்புகிறேன்.