///வெங்காயம் தக்காளி விக்கிர விலையில் வெங்காயம் இல்லாம என்ன குறிப்பு போடலாமுன்னு யோசித்தேன், வாழதண்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, மனோ அக்கா வாழ தண்டு ரசம் என்றதும் எனக்கு கூட்டு சாப்பிட ஆசை உடனே செய்தாச்சு சுவைத்து மகிழுங்கள்./
அரைத்து விட்ட வாழைதண்டு துவரம் பருப்பு கூட்டு
தேவையானவை
வாழை தண்டு – ஒரு ஜான் அளவு
துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்)
எண்ணையில் வறுத்து பொடிக்க
எண்ணை - ஒரு மேசை கரண்டி
காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி
முழுதனியா – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – 10 இதழ்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி
செய்முறை
1.வறுக்க கொடுக்க பட்டுள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. வாழை தண்டை வட்ட வட்ட வடிவமாக நறுக்கி இடை இடையே வரும் நாரை பிரித்து எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
3. பொடியாக அரிந்த வாழை தண்டில் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வேக்காடு வேக விடவும்.
4. துவரம் பருப்பில் ஒன்னறை டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
5. பருப்பு கொதித்து கொண்டு இருக்கும் போது பாதி வெந்த வாழைதண்டை சேர்ந்து , இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு பொடித்த பொடியையும் சேர்த்து முன்று விசில் விட்டு இரக்கவும்.
சுவையான வாழைதண்டு கூட்டு ரெடி , தாளிக்க தேவையில்லை, ( வேண்டும் என்பவர்கள் அரை தேக்கரண்டி எண்ணையை காயவைத்து சீரகம் சிறிது, கருவேப்பிலை போட்டு தாளித்து கலக்கவும்.
நான் இதில் தாளிக்கவில்லை வறுத்த எண்ணையே போதுமானது, சாப்பாத்தி பிளைன் ரைஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
டயட் செய்பவர்களுக்கு அருமையான கூட்டு.
காரம் விரும்புவர்கள் இன்னும் ஒரு மிளகாய் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
ஆக்கம்
ஜலீலா
Tweet | ||||||
53 கருத்துகள்:
அட ரொம்ப வித்தியாசமா இருக்குது.....
குறிஞ்சிகுடில்
வாழ்த்துக்கள்....
எனக்கு இங்கு வாழைத்தண்டு கிடைக்காது..நியபகம் செய்து விட்டிங்க...அருமை...
அக்கா, இந்த ரெசிபி ரொம்ப நல்லா இருக்குது.
உங்கள் பயனுள்ள குறிப்புகள், எப்போவுமே ஸ்பெஷல் தான், அக்கா....
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
i like this recipe .looks yummy.
vazhaithandu , manathakkali keerai ellam inge kidaikaadhu.adhanaal sedhu parcel pannunga.
Arumayana kootu,appadiye saapidalam.Engalukku inge kidaikkadhu.ungal kootu,ennai ekka peru moochi vida vaikkiradhu......
ஜலீலாக்கா பூஸாரை இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறீங்களோ? ப்ரசண்ட் சொல்லிப்போகவந்தேன்.
விருதுகளுக்கு நன்றி ஜலீலாக்கா. எப்படியும் “ஒரு நாள்” போட்டுவிடுவேன் என் பக்கத்தில்.
வாழைதண்டு கூட்டும் கூடவே அரோக்கிய குறிப்பும் அருமை..
//ஜலீலாக்கா பூஸாரை இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறீங்களோ? ப்ரசண்ட் சொல்லிப்போகவந்தேன்.//
வடை போச்சே..!!
பெரிய மால்-களில்தான் தேடனும் . :-)
வாழ்த்துக்கள் அக்கா
உங்களால் பயன் பெறுவோர் அதிகம்
அதனால் நீங்கள் வருத்தபடவேண்டம்
உங்கள் சேவை தொடரட்டும்
இன்னும் முன்னணி பதிவர்தான் நீங்கள்
விருதுக்கு நன்றி
வாழைத்தண்டு எளிமையான பகிர்வுக்கு நன்றி
வாழை தண்டு கூட்டு , பார்த்தாலே ரொம்ப ஆசையா இருக்கு. வெங்காய விலைக்கு இப்படி ஒரு தீர்வா:)
தொடர் பதிவுக்கு வாங்க. நன்றி.
A nice one.
வாழைத்தண்டு கூட்டு...? புதியதாக இருக்கிறது. தில்லியில் அதிகம் கிடைப்பதில்லை. கிடைக்கும்போது வாங்கி செய்ய சொல்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ.
நல்ல மருத்துவ பயன்கள் இதில் உள்ளது. வாழை தண்டு அடிக்கடி சமையலில் சேர்ப்பது நன்று.
அக்கா, இந்த ரெசிபி ரொம்ப நல்லா இருக்குது.
இங்கே வாழைல் இலையே கிடைக்கதுக்கா!
எதாவது ஒரு மரத்த நைட்டோட நைட்டா வெட்டி சாய்ச்சுட்டு சமைச்சுட்டு உங்களுக்கு தகவல் அனுப்புறேன்!!!
உங்கள் முதல் கமெண்டுக்கு மிக்க நன்றி
குறிஞ்சி
கீதா ஆச்சல். இதுபோல நல்ல காய்களை எல்லாம் வசிக்கும் இடத்தில் கிடைக்காதவர்கள் ஊருக்கு போய் தான் சாப்பிடனும் போல.
உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றீ
சித்ரா
ஏஞ்சலின் என்ன் செய்வது வெளிநாடுகளில் வாழும் தோழிகளுக்கு, நிறைய நம் நாட்டு பொருட்கள் கிடைப்பதில்லை. நான் வந்த புதிதில் இங்கும் எதுவும் கிடைக்காது, இப்ப எல்லாமே (அம்மா அப்பாவை தவிர) கிடைக்குது.
சவிதா ரமேஷ் வாங்க வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் அதிரா பூஸாரை தேடி கொண்டு தான் இருக்கேன், பூஸாருக்காக ஒரு பதிவும் ரெடி பண்ண போறேன்.
என்னவோ எப்படியோ வந்தீங்களே அதே ரொம்ப சந்தோஷம்.
வாங்க மஹா விஜய் ஆமாம் மிக அருமையான ஆரோக்கிய குறிப்பு
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
ஜெய்லானி , குறிப்ப பற்றீ ஒன்னும் சொல்லாமால் வடை போச்சான்னா என்ன் அர்த்தம்.
வாங்க தம்பி சிவா, வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி
ஆமாம் விக்கி வெங்காய்ம் இல்லாமல் நிறைய ரெசிபி இருக்கு.
( தொடர் பதிவு நிறைய சேர்ந்து போச்சி, ஏற்கனவே மகி, விஜி, அடுத்து நீங்க)
முடிந்த போது போட்டு விடுகிறேன்
வருகைக்கு மிக்க நன்றி, கக்கு மாணிக்கம்.
வெங்கட் நாகராஜ் கருத்து தெரிவித்தமைக்குமிக்க நன்றி
கிடைக்கும் போது செய்து பாருஙக்ள்.
ஆமாம் இளம் தூயவன், வயிற்றில் உள்ள அழுக்கு, கிட்னியில் கல் போன்றவைகளுக்கு அருமையான மருத்துவ குறிப்பு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
சே.குமார் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
ஆமினா,( மரத்த ராத்திரியோட ராத்திர்ய வெட்டி சாச்சி) முடிந்த செஞ்சி பாருங்க.
looks healthy and delicious !!!!
thx. for the award akka :)
உடம்புக்கு ரொம்ப நல்லது.
ஜெய்லானி said...
//ஜலீலாக்கா பூஸாரை இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறீங்களோ? ப்ரசண்ட் சொல்லிப்போகவந்தேன்.//
வடை போச்சே..!!/// ஹா..ஹா... ஹா... இனி வடை ஆருக்கும் கிடைக்காது:)
பெரிய மால்-களில்தான் தேடனும் . :-)/// குட்டிப்பூசை எப்பூடி பெரிய மால்ல தேடுறது?:)
Jaleela Kamal said...
ஜெய்லானி , குறிப்ப பற்றீ ஒன்னும் சொல்லாமால் வடை போச்சான்னா என்ன் அர்த்தம்.////
ஆஆஆஆஆஅ ஜெய் சூப்பர் மாட்டீஈஈஈஈஈ, மீயா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வாழ்த்துக்கள்,வழக்கம் போல் கூட்டு அருமையோ அருமை.
வாழ்த்துக்கள்,வழக்கம் போல் கூட்டு அருமையோ அருமை.
அரைத்து விட்ட கூட்டு வித்யாசமா இருக்குடா ஜலீலா..:))
hello jaleela,
Kootu romba arputhama iruku!!!! u have been tagged jaleela, pls visit my blog for the questionaire!!!!
அருமையான கூட்டு வாழ்த்துக்கள் சகோ..
// ஜெய்லானி, குறிப்ப பற்றீ ஒன்னும் சொல்லாமால் வடை போச்சான்னா என்ன் அர்த்தம்.////
அதானே! வடைக்கும் வாழைப் பூவுக்கும் என்ன சம்பந்தம் தல?? ஜலீலாக்கா தல சார்பா நான்சொல்லிடுறேன். குறிப்பு சூப்பரா இருக்கு!!!
அரைத்து விட்ட வாழைத்தண்டு கூட்டு.. இது சமையல் அட்டகாசத்தின் உச்சமாக இருக்கும்...
ஒரு முறையேனும் செய்து பார்த்து விட வேண்டும்...
அந்த ட்ராமா ஆடியோ ஃபைல் வந்ததா?
தமிழ்மணத்தில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துக்கள் akka.
ஜலீலா உங்களை தொடர் பதிவிற்கு அழைதுள்ளேன்.
http://asiyaomar.blogspot.com/2011/01/blog-post_08.html
வாழைத்தண்டு கூட்டு நல்லா இருக்கு நாளை செய்து விடுகிறேன்.
வாழைத்தண்டு நார்ப்பொருள் அதிகமுள்ள உணவு என்பதால் நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பல நோயாளிகளுக்கும் பயன்படும். நல்ல விடயம். வாழ்த்துக்கள்.
அருமை...ஜலீலாக்கா!!!
ஹை..வாழை இலை பிளேட்டில் அழகான வாழைத்தண்டு கூட்டு.
வாழைத் தண்டு கூட்டு செய்தேன் அருமையாக இருந்தது.
நன்றி ஜலீலா.
வருகைக்கு மிக்க நன்றி அருனா
நன்றி அமைதிச்சாரல்
நன்றி ஆசியா
நன்றி பிரியா, ஆம் வந்து பார்த்தேன்.
சீக்கிறமாவே போட்ட்டு விடுகீறேன்
நன்றி தேனக்கா
எம் அப்துல் காதர் அதேல்லாம் கிடையாது ஜெய்லானி தான் வந்து சொல்லனும்
வருகைக்கு மிக்க ந்ன்றி
//இது சமையல் அட்டகாசத்தின் உச்சமாக இருக்கும்...//
உங்க்ள் பாராட்டுக்கு மிக்க நன்றீ கோபி
//ஒரு முறையேனும் செய்து பார்த்து விட வேண்டும்...//
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லனும்
அந்த ட்ராமா ஆடியோ ஃபைல் வந்ததா?
பைல் வந்ததும் பார்த்துட்டு சொல்றேன்
January 9, 2011 8:38 AM
நன்றி நாட்டம
நன்றி என்றென்றும் 16
நன்றி ஆசியா தொடர் பதிவு கூடிய விரைவில் எழுது கிறேன்
கோமதி அக்கா வாங்க உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
செய்து பார்த்து வந்து சொன்னமைக்கு ரொம்ப சந்தோஷம் +நன்றிகள்
// Dr.எம்.கே.முருகானந்தன் said...
வாழைத்தண்டு நார்ப்பொருள் அதிகமுள்ள உணவு என்பதால் நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பல நோயாளிகளுக்கும் பயன்படும். நல்ல விடயம். வாழ்த்துக்கள்.
January 10, 2011 2:45 PM//
வாங்க டாக்டர் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க
அருமையான் டிப்ஸையும் சொல்லி இருக்கீங்க
நன்றி + சந்தோஷம்
கீதா 6 வாஙக் மிக்க ந்னறி
ஆமாம் ஸாதிகா அக்கா இந்த பிளேட் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது இப்ப என்ன் ரெசிபி செய்தாலும் இதில் தான்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா