Tweet | ||||||
Wednesday, January 26, 2011
ஏன் இந்த கொடுமை?
ஏன் இந்த கொடுமை? ஜீரணிக்க முடியாத சம்பவம் இவனுகள எல்லாம் என்ன செய்யலாம்/
//துபாயில் ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தது சிறுமி வழக்கமாகச் செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவர். மூவருமே இந்தியர்கள், முறையே 26, 31, 44 வயதுள்ளவர்கள். இச்சிறுமிதான் கடைசியில் இறக்கி விடப்படுவதால், துணிந்து செய்துள்ளார்கள்///
இடுகையை கண்டிப்பாக எல்லோரும் படிக்கவும்.
பழங்கலத்தில் குழந்தை வளர்பு என்பது அது லேசான விஷியம் ஆனால் இந்த காலத்தில் பச்ச , பிஞ்சு குழந்தைகளையும் கயவர்களிடத்தில் இருந்து பாதுக்காக்கும் நிலை.
வயதுக்கு வந்த பெண்ணை தான் திருமணம் ஆகும் வரை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கும் நிலை போய் இப்போது ஒன்னாம் வகுப்பு படிக்கும் குழந்தையில் இருந்து மிகவும் அதிகவன்மாக அவர்களை உற்று நோக்கும் நிலையில் நாம் உள்ளோம்.
30 % கயர்வர்கள் நயவஞ்சகர்கள் செய்யும் இது போன்ற கொடுமையால் மீதி உள்ள 70 % நல்லவர்களையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலை,
பெண்கள் 10 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள் .ஓடி ஆடி விளையாடும் வயது என்ன தான் தெரியும் அவர்களுக்கு., பாலியல் பலத்காரத்திலிருந்து எப்படி விடுவிப்பது. பெற்றோர்கள் தான் விழிப்புணர்வோடு இருக்கனும்.
சொல்லி புரியும் வயதும் கிடையாது.
குழந்தைகளை கண்டிப்பாக தொடு உணர்வு ’குட் டச்’ ’பேட் டச்’ கண்டிப்பாக சொல்லிகொடுக்கனும்.
//முன்பு என் அம்மா , மற்ற வீடுகளிலும் கேள்வி பட்டு இருக்கேன்
பிள்ளைகளுக்கு எப்படி சொல்வது. ‘ஏய் யாராவது வந்து கூப்பிட்டா போககூடாது , ஏதாவது வாங்கிகொடுத்தா உடனே சாப்பிட கூடாது.
அதில் மயக்கம் மருந்து இருக்கும் கொடுத்து எங்காவது கூப்பிட்டு போய் விடுவார்கள்.
கண்ணை நோண்டிடுவாஙக்.. அப்பரம் மம்மி டாடி எல்லாம் எங்கு இருக்காங்கன்னு தெரியாது, சாப்பிடவும் ஒன்றும் கிடைக்கது.
ஸ்கூலுக்கு போகவே முடியாது. போட்டு கொள்ள துணி கூட இருக்க்காது. கையில் ஒரு தட்ட கொடுத்து பிச்ச எடுகக் வைத்துடுவாஙக், இல்லை என்றால் சூடு வைப்பாங்க என்றெல்லாம் சொல்லி வைப்பார்கள்//
இது இன்னுமே என் காதில் ஒளித்து கொண்டு இருக்கு.
வேலை இல்லா திண்டாட்டத்தினால் உலகில் கண்கானாத பல மூலைகளில் குழந்தைகளை கடத்துவது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமா?
ஐந்து வயதில் சொன்னால் கண்டிப்பாக பிள்ளைகளின் மனதில் ஆழமாக பதியும். பிள்ளைகளுக்கு நினைவூட்டி கொண்டே இருக்கனும். கண்டிப்பாக மனதில் பதியும்.
வீட்டில் எத்தனை பேர் அம்மா என்ன செய்கிறார்கள் வேலைக்கு போறாங்களா? அப்ப எங்கு வேலை பார்க்கிறார், எப்ப வருவார், இந்த விளக்கங்கள் யாரும் கேட்டால் சொல்ல கூடாது என்று சொல்லி வையுங்கள்.
டிரெயினில் , பஸ்ஸில் செல்லும் போது சில பசங்க ஓவரா பேசும் , பாப்பா உன் பெயர் என்னமா, என்று கேட்டா போதும், முழுவது அண்ணன் பெயர் அம்மா பெயர், அப்பா பெயர் வீடு எங்கு இருக்கு எல்லாம் சொல்லி மொத்த சரித்திரத்தையே அவர்களிடம் ஒப்பிப்பார்கள்
.
எவ்வளவு பிஸியா இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கண் பிள்ளைகள் மேலே இருந்து கொண்டே இருக்கனும்.
கடைக்கு சின்ன சின்ன சாமான்கள் வாங்க அனுப்பும் போது கூட ஜாக்கிரதையாக அனுப்புங்கள்.,
விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றாலும் குழந்தைகளை உஷாரக கண்காணிக்கனும்
.
அதே போல் டியுஷன் செண்டருக்கோ, அல்லது வீட்டுக்கு வந்து டியுஷன் சொல்லி கொடுப்பவர்களிடமும் மிகவும் கவனம் தேவை.
டியுசனக்கு வெளியில் வாத்தியார் களிடம் அனுப்புவர்களும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்..தொலை தூரத்தில் ஆட்டோ வைத்து அனுப்பி படிக்கவைப்பவர்களும் சரியான நேரத்துக்கு வந்து சேருகிறார்களா .எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும், வேலையா இருக்கேன், டீவி பார்க்கிறேன்னு குழந்தைகளை தொலைத்து விடாதீர்கள்.
பெண்குழந்தைகள் மட்டும் இல்லை ஆண் குழந்தைகளையும் நல்ல கவனிக்கனும் அவர்களுக்கும் பல வகையில் பிரச்சனை இருக்கதான் செய்யும்.பெண்குழந்தைகள் விஷியம் வெளியில் வருகிறது ஆனால் ஆண்குழந்தைகள் விஷியம் வெளியில் வருவதில்லை.
( நான் இதை பற்றி பேசும் போது ஒரு தோழி சென்னையில் ராம கிருஷ்னா ஹாஸ்பிட்டலில் இண்டன்ஷிப்புக்காக போகும் போது இது போல் பாதிக்க பட்ட மன நிலை பாதிக்கப்பட்ட நிறைய சிறுவர்களுடன் பேசும் போது தெரிய வந்தது என்றார்கள்.
ஸ்லுக்கு போய் விட்டார்கள் டீச்சர் பாத்துப்பாங்க நிம்மதி என்று இருக்காதீர்கள். வாரம் ஒரு முறையேனும் அவாகளை பாலோ ப்ண்ணுங்கள்.
ஊரில் பிரச்ச்சனை இல்லை ஆட்டோ அரென்ச் பண்ணி அனுப்புகிறார்கள்,அது கூட பயம் தான் கணவர் வெளிநாட்டில் மனைவி தனியாக இருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளுபவர்களும் வெளியில் போகும் போது கூடுதல் கவனத்தோடு இருக்கனும்.
வெளி நாடுகளில் எல்லாம் ஸ்கூல் பஸ் தான். பஸ்ஸிலும் ஸ்டாப் போய் அப்ப அப்ப தலைய காண்பித்தால் தான் கண்டெக்டருக்கும் ஒரு பயம் இருக்கும். பஸ்ஸிலும் அவசரமாக உள்ளே தள்ளி விடுவது.
பஸ்ஸை விட்டு இரங்கும் போது பிடிச்சி தள்ளி விடுவது இது போல் நடக்கதான் செய்யுது. குழந்தைகளிடம் மெதுவா விசாரித்தா சொல்லுவார்கள்.
.
அதே போல் பஸ்ஸிலும் சீட்டில் உட்கார்ந்தார்களா இல்லையான்னு பார்pபது கிடையாது அதற்குள் பஸ்ஸை எடுத்து காலில், மண்டையில் அடி படுவது. பின்னாடி பிள்ளைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் கூரிய ஆயுதஙக்ளால் தாக்கி கொள்வது. கொடுரமாக பெல்டை கழட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்து கொள்வது இது போல நடக்க்கிறது, அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை. பெற்றோர்கள் தான் பிள்ளைகளிடம் விசாரித்து என்ன நடக்குது என்று தெரிந்து கொண்டு பள்ளியில் பிரிண்ஸ்பாலிடம் சொல்லலாம் அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்ப ஒரு வாரமாக நடந்த பேப்பர் நியுஸின் படி எல்லா பஸ்களிலும்
லேடி கண்டெக்டர் போட்டாலும் அந்த லேடி கண்டெக்டருக்கு பாதுகாப்பும் கிடைக்கனுமே, இல்லை பஸ்ஸில் கேமரா வாவது வைக்கனும்.
என் இனிய தமிழ் மக்களே அன்னுவின் இந்த இடுகையையும் சென்று படிக்கவும்.
பெற்றோர்களின் கவனத்திற்கு அவர்கள் உண்மைகள் என்ற் பதிவையும் படியுங்கள் எல்லோரின் கவனத்துக்கும் இந்த விஷியம் செல்ல்வேண்டும்.
கௌசல்யாவானின் இடுகை வேதனையான அனுபவம் ஒன்று
எல்லா லிங்குகளை ப்கண்டிப்பாக படிங்கள் உங்கள் குழந்தைகளை காப்பாற்றி கொள்ளுங்கள்
டிஸ்கி: நாட்டாமையின் தீர்வின் படி 100 % யாரையும் நம்பாதீங்க.
Subscribe to:
Post Comments (Atom)
32 கருத்துகள்:
font work aakala,
ithu poona vaaramee pooddu vaiththiruntha pathivu
5 link kaL irukku, porumaiyaaka padingka.
அதெல்லாம் ஏற்க்கனவே படித்ததுதான். ரொம்ப பயமா இருக்கு :(
பஸ் டரைவர், வேன் டிரைவர், கண்டெக்டர், ஆட்டோக்காரன் என அனைவரிடமும் குழந்தைகள் பேசுவதை தவரிக்கச் செய்யவும். தமிழ்நாட்டில் பள்ளிப்பேருந்துகளில் அவசியம் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என சட்டம் வந்துள்ளது.
என்ன கொடுமைங்க இது! மனசுக்கு கஷ்டமாக இருக்குது.
தவறாக சொல்லி இருக்கின்றிகள் அக்காள்,முப்பது சதவிகித ஆண்கள் செய்யும் தப்பிற்கு எழுபது சதவிகித ஆண்களையும் சேர்த்து சந்தேகப் படவேண்டி இருக்கு.
என்னை கேட்டால் நான் இதை தவறு என்றுதான் சொல்லுவேன்,காரணம் பெண் விசயத்தில் எவனையும் நம்பக் கூடாது,பெற்றோரையும் உற்றோரையும் (அண்ணன்,தம்பி)தவிர.
காமம் என்பது முழைத்து வருவதில்லை அது ஏற்கனவே மரமாகித்தான் இருக்கின்றது தொண்ணூறு சதவிகித ஆண்களுக்கு,நீங்கள் சொன்ன மாதுரி முப்பது சதவிகித ஆண்கள் தவறு செய்கிறதுனாலே பாக்கி எழுபது சதவிகித ஆண்களையும் சந்தேகப் படும்படியா இருக்குனு எதன் அடிப்படையில் வைத்து சொல்லுகிறிகள்?
உங்களின் கூற்றின்படி அந்த பஸ்ஸில் மூன்று ஆண் நாயி இருந்துள்ளது அதில் ஒரு நாயாவது காப்பாத்தி இருக்கலாமே அந்த சிறுமியை ?
பெற்ற தகப்பனே மகளை சீரழிக்கின்ற விஷயம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது,பெண்ணாகப்பட்டவள் எவ்வளவு சுமைகளைத்தான் தாங்கிக் கொள்ளுவாள் ?அவளைப் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது.
பெண்கள் விசயத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தனும்.
சின்னஞ் சிறுமியை சீர்குழைத்த அந்த மூன்று பேர்களையும் சித்திரவதை செய்து கொல்வதை விட வேற வழியே இல்லை,இவர்களை கொல்லும்போது உலகத்தார் பார்க்கும் படியான வசதியும் செய்து தருவதற்கு அரசு முன் வரணும்.
நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள் அக்காள்.
naaddaamai niingka solvathu 100% sari thaan
yaaraiyum nampavee kuudaathu,
pathivu innum niiLam irukku
ithu poona vaaram type seythu vaithtiruhathu,
neeram illaathathaal ppooddaassu
இந்த கொடுமை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பயமா இருக்கு..
இவங்களுக்கு தண்டனை கடுமையா கொடுக்க வேண்டும்
சமுதாயம் எங்கே போயிட்டிருக்குன்னு தெரியல :-(
scare to read, but a must read post
ஜலீலாக்கா... உண்மைதான் எமக்குத் தெரிந்து சில, தெரியாமல் பல நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கு. முக்கியமாக பெண்குழந்தைகளை எங்கு போனாலும் தாய் தந்தை தம்முடனே வைத்திருப்பதுதான் நல்லது.
எமக்கு இதைப்பற்றிக் கதைப்பது சுலபம், ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தானே வேதனை.
இக்காலத்தில் குழந்தையென்றுமில்லை குமரி என்றுமில்லை, பெண் என்றால் எல்லாமே ஒன்றென நோக்குகிறார்கள். பெற்றோர்தான் விழிப்போடு இருக்கவேண்டும்.. வேறு என்ன செய்வது.
//உங்களின் கூற்றின்படி அந்த பஸ்ஸில் மூன்று ஆண் நாயி இருந்துள்ளது அதில் ஒரு நாயாவது காப்பாத்தி இருக்கலாமே அந்த சிறுமியை ?//
இதைப் படித்ததும்... சிரித்துவிட்டேன்... ஆனால் உண்மைதான் எவ்வளவு வேதனையான விஷயம்.
என்னத்தை சொல்ல? சினிமாக்களே காரணம் என்று நினைக்கிறேன். நல்ல பதிவு, அக்கா.
தோழி கௌசல்யா அவர்கள் இது பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி இருந்தார்....
இந்த அளவு கொடிய மனம் படைத்த மனவக்கிர அரக்கர்கள் பிடியிலிருந்து சின்னஞ்சிறுசுகளை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட....
எழுத்தறிவித்தலில் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு இதையும் சொல்லி கொடு்க்கலாம்...
பெற்றோர்கள் இந்த காலத்தில் விழிப்புணார்வுடன் இருக்க வேன்டும்.
பயமாக இருக்கிறது! வேறு ஒன்றும் சொல்லத் தோணவில்லை.
தோழி இந்த விஷயத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. நம் வீட்டிற்கு வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மற்ற விசயத்தில் கவனமின்றி இருப்பது போல் இதில் இருக்க கூடாது.
மிருகங்கள் மனித போர்வையில் இருப்பது தெரிய வாய்ப்பில்லை...பெற்றோர் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும்...தவிரவும் கல்வி நிலையங்களில் இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்...ஆசிரியர்கள் மூலமாக் சொல்லப்படும் போது இன்னும் சுலபமாக குழந்தைகளின் மனதில் பதிய வாய்ப்பிருக்கிறது...
மற்ற பதிவர்களும் தங்கள் தளத்தில் இதை பற்றிய பதிவை எழுதுவது ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.
As I have a daughter, I am really afraid. Thanks for the advice..
குழந்தைகளுக்கு நாம் நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும்
பெற்றோர்கள்.
கயவர்களுக்கு மரண தண்டனை என்றால் உடனே முடிந்து விடும். அப்படி இல்லாமல் கசையடி தினம் தினம் கொடுக்க வேண்டும் வீதியில். அப்போதுதான் தான் செய்த தப்பை அவனும் உணருவான், மற்றவர்களுக்கும் இந்த தப்பை செய்ய தோணாது.
Nice post and thanks for advice.
என்ன கொடுமையான விஷயங்களாம் நடக்குது???
பெற்றோர்களின் கவனம் தான் ரொம்ப ரொம்ப தேவை
thanks jaleela for this awareness post.
cctv alone is not enough ,the drivers conductors and people working with children(including teachers) need to have their CRB checked and cleared of any criminal anti social offends.its the system here in uk.
i was verymuch upset after reading husainammas post .inimel endha kuzhandhaikkum indha kodumai nadakkave kooodadhu.
விழிப்புணர்வை ஏறபடுத்தும் பதிவு..
ஆமாம்க்கா, அந்தக் காலத்துல நம்ம அம்மாக்கள் சொன்னதுபோல, அநாவசியமா யார்கிட்டட்யும் பேசக்கூடாது, மிட்டாய் வாங்கிக்கக் கூடாது, கூப்பிட்டா போகக்கூடாதுன்னு கண்டிப்பாச் சொல்லுவாங்க. ஆனா, ந்தக் காலத்துல “ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டா” இருக்கணும்னு சொல்லி, எல்லார்கிட்டயும் சகஜமா பழகணும்னு சொல்லித் தர்றோம். குழந்தைகளுக்குத் தெரியுமா யார் நல்லவன், கெட்டவன்னு?
ரொம்பப் பயமாத்தான் இருக்கு. பெண்குழந்தை, ஆண்குழந்தை, கிழவியைக் கூட விட்டு வக்கிறானுகளில்லை பாவிகள்.
மனதில் ஈரமில்லாத வக்கிர மனம் படைத்த சிலர் எந்தச் சமூகத்திலும் இருக்கவே செய்வார்கள். குழந்தைகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற உங்கள் கருத்துகள் பயனளிக்கும்.
Awareness is must for both parents and child...PUnishments must be made severe, as any criminal shouldn t dare for such a shameful activity..
Tasty appetite
நல்ல பதிவு.
அருமையான கருத்துக்கள் ஜலி.
ஸலாம் சகோ..இது குறித்து ஒரு பதிவே எழுதனும்...
விரைவில்.
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் தாங்கள் மனவேதனையுடன் எழுதி இருக்கும் இந்த பதிவு இன்ஷா அல்லாஹ் எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுக்கும்.
ஜலீலா அக்கா...,ரொம்ப நல்ல பதிவு போட்டிருக்கீங்க.... நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மையே...
ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.
நடக்கும் அக்கிரமங்கள் ஒவ்வொன்றும் கேட்க்கும் போது நெஞ்சம் பதபதைக்கின்றது.
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜலீலா அக்கா.
அன்புடன்,
அப்சரா.
இப்படி ஒரு கொடுமையான விஷயம் தெரிஞ்சி இனி மேல் இது போல நடக்காமல் இருக்க இப்போது யூ .ஏ ஈ இல இருக்கும் எல்லா ஸ்கூல் பஸ் உள்ளேயும் சி.சி.கேமரா வும் அது நேரடியாடியாக சாட்டிலைட் உடன் இனைந்து போலீஸ் ஹெட் குவாட்டர் உடன் இனைக்க சொல்லி புதிய சட்டம் ஒன்று ஷேக் கலிஃபா ஆர்டர் போட்டுள்ளார்.. இது வர வேற்க்க வேண்டிய விஷயம்தான்...
என்னதான் சட்டம் போட்டாலும்.. மனதில் வெறிப்பிடித்த மனித மிருகங்களிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கனும் .. இந்த உலகத்தில யாரை நம்புறதுன்னே தெரியல :-(
துபாய் குழந்தையின் நிலை நானும் அறிந்தேன். கொடுமைக்காரர்கள் இந்தியர் என்ற போது வேதனைப்பட்டேன். நல்ல பதிவு. குழந்தைகளை தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ரொம்பக் கொடுமைங்க. மனது வலிக்கிறது.பெண் குழந்தைகளை மட்டுமல்ல. ஆண்குழந்தைகளையும் இந்தக் காலத்தில் பத்திரமாகத் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றிக்கா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா