Monday, April 26, 2010

பருவமே 16



பதின்ம பருவ கொசுவத்தி (வயிற்றில் நெருப்பு) (அந்த காலத்து அம்மா மார்கள் பிள்ளை வெளியில் சென்று விட்டு விளக்கு வைப்பதற்குள்வீட்டுக்கு வரவில்லை என்றால், வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் என்பார்கள். ஆனால் இந்த காலத்து அம்மாமார்களே வயிற்றில் மட்டும் நெருப்பு இல்லை, கண்ணிலும் விளக்கெண்ணைய ஊற்றி கொண்டு விழித்திருங்கள்.)


தங்கை நாஸியா பதின்ம பருவ கொசுவத்திக்கு தொடர் பதிவுக்கு என்னை அழைத்து அவஙக் போட்ட பிரியாணி ஆறி போன மாதிரி இந்த விஷியமும் ஆறிவிட்டது, இத என்னால் இப்ப தான் எழுத நேரம் கிடைத்தது.
பொதுவாக ஆண், பெண் பதின்ம பருவம் பற்றி பார்க்கலாம்.



இங்க பாருங்க இத்துனூண்டு வாண்டுக்கு கூட கம்பியுட்டர் கேட்குது.


வாழ்க்கையில் ஓவ்வொருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்களின் குழந்தை பருவம் ஓவ்வொரு வருடமும் அருமையாக போகும். பள்ளியில் சேர்ப்பீர்கள்.பள்ளி பருவமும் நாட்கள் வெகு வேகமாக நகரும். இப்படி வருடம் போக போக 12 வயதை கடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டிய வயது. ஆனால் 13 லிருந்து 18 ற்குள் அவர்களை நல் வழி நடத்துவதான் பெற்றோர்களுக்கு பெரிய சிரமம் இந்த வயதை கடக்கும் போது தான் எல்லா பெற்றோர்களுக்கும் வயிற்றில் நெருப்பை கட்டியது போல் இருக்கும். நிறைய அம்மாமார்கள் கோபம் அதிகமாவதே , பிரஷர் ஆரம்ப்பமாவது எல்லாம் இப்பதான், பிள்ளைகள் செயல் எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கும்.இந்த வயதில் ஏற்படும் மாற்றங்களை கண்டிப்பாக எடுத்து சொல்லவேண்டும்




இந்த வயது தான் மனசு தடம் புரளும் வயது. ஆண் பிள்ளைகள் ஆட்டம் ஜாஸ்தியாக வே இருக்கும் எது சொன்னாலும் அதற்கு எதிர் வாதம் செய்வது. சில பிள்ளைகள் சிக்ரெட், திருடுவது , பொண்ணுங்க பிண்ணாடி சுத்துவது, ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என்று சொல்லி கொண்டே போகலாம்.

சில பிள்ளைகள், கார்டூன், கேம்ஸ் என்று அதிலேயே கிடப்பார்கள்.
இதை ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் போது மார்க் கம்மியானாலே கண்டி பிடித்து விடலாம்.


அப்பாமார்களுக்கு இதை கவனிக்க முடியாது, சில அப்பாமார்கள் வெளிநாடுகளில் பிழைப்பைத்தேடி சென்று விடுவதால் அவர்களால் இரண்டு வருட்த்துக்கு ஒரு முறை வந்து போகும் கொஞ்சம் நாளில் ஒன்றும் கண் காணிக்க முடியாது , அம்மாக்கள், கொஞ்சம் உஷாராக கவனம் எடுத்து அவர்களுக்கு தெரியாமல் கண்காணிப்ப்து நல்லது.எந்த வேலை செய்தாலும் அவர்கள் மேலும் ஒரு கண்ணாய் இருப்பது நல்லது.

அப்படியே டியுஷன் அனுப்பினாலும் இப்ப ஆண்,பெண் இருவரும் ஒன்றாக ஒரே டீச்சரிடம் போகிறார்கள். அங்கு சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.

பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் வைத்து கொள்வது, ஒரு பெண்ணுக்கோ , ஆணுக்கோ பாய் பிரண்டோ, கேர்ள் பிரண்டோ இல்லை என்றால் அவர்கள் ஒரு பெரிய தகுதிய இழந்த்து போல் சிலர் கிண்டல் பண்ணுவதும். ஒரு நாளைக்கு ஒரு கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட் என்று மாற்றி, சிலரை ஏளனப்படுத்துவதுமாக இருக்க்கிறார்கள்.






உங்கள் வீடு சிட்டியில் இருந்து ஊரை தாண்டி வெளியில் தனியாக வசிப்பவர்கள் அதுவும் பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள். பெண்களை தனியாக வீட்டில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அப்படி செல்லும் விட்டிலேயே டியுஷன் வைத்தால் நல்லது என்று வீட்டில், டியுஷனுக்கு வெளியில் வந்து சொல்லி கொடுப்ப்து ஆண்கள் தான், தனியாக பிள்ளைகள் இருக்கும் போது வர சொல்லாதீர்கள். இப்படி செய்வதால் திடுக்கிடும் பல நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.நீங்கள் யாராவது ஒருவர் வீட்டில் இருக்கும் போது பாடம் சொல்லி கொடுக்கும் வாத்திகளை வரவழைத்து கொள்ளுங்கள்.ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்

இப்ப பேஸ் புக்கில், மற்றும் சாட்டிங்கில் பெரியவர்களை விட சிறியவர்கள் தான் மிகுந்த ஆர்வர் காட்டி வருகிறார்கள். வரம்புக்கு மீறி பேசி கொள்வதும் போட்டோக்களை பகிர்ந்து கொள்வதும், ஆண்பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெண்பிள்ளைகளுக்கு இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சமீபத்தில் கேள்வி பட்ட ஒரு சம்பவம்.(அட கொடுமையே)

ஒரு ஆண் பெண் ரொம்ப் மாத காலமாக சாட்டிங்கில் ரொம்ப அந்தரஙக்மாய் பேசும் அளவிற்கு போய், ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும் போது,வெப் கேமிரா மூலம் போட்டுள்ள் துணி கிழிந்து இருப்பதை பற்றி கூட பேசி இருக்கிறார்கள். அப்படியே எழுந்து அந்த ஆண் சாப்பிட போனதும் உள்ளே பக்கத்து ரூமில் இருந்து அவன் தங்கை வந்துள்ளாள் அதே கிழிந்தை துணியுடன் சாட்டிங்கில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாளாம், ஏன் என்றால் அந்த கிழிந்த துணி போட்டுருந்த்தும் வெப்பில் இருந்த போட்டோவும் அவள் தான் , கடைசியில் அவமானத்தை வெளியேமுடியாமல் தவித்து போனாளாம், அதே அவ அண்ணனும் இத்தனை நாள் தன் தங்கையுடனா இப்ப்டி எல்லாம் பேசி இருக்கோம் என்று துடித்து போனானாம்,(அட கொடுமையே) ரொம்ப ஆடம்பரம் ஆளுக்கொரு தனி அறை தனி லாப்டாப் இப்படி வாங்கி கொடுத்து கடைசியில் இப்படி சீரழிந்து போகிறார்கள்.

(ஆனால் கல்யாணமானவர்களும் ரொம்ப சீரழிகின்றனர் அதை பிறகு வேறு பதிவில் பார்க்கலாம்)

பெற்றோர்களே இனி உஷாராக இருங்கள்.

ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான்
இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.



பாஸ்ஃபுட் உலகமாக இருக்கு, அதற்கு காசு தேவை, வெளியூரில் இருந்து அப்பா மார்கள் காசு அனுப்புவதும் அதை பிள்ளைகள் கரியாக்குவதுமாகவும் சில இடங்களில் உள்ளது. இதே காசு கிடைக்காத நடுத்தர வர்க்கத்தில் உள்ள பிள்ளைகள் எப்படியும் படம் பார்த்தே தீரனும், எப்படியும் நண்பர்களுடன் பிட்சா கார்னர் போயே ஆகனும் என்று கடைசியில் திருட ஆரம்பித்து விடுகிறார்கள். வீட்டிலும் வெளியில் கை வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் உங்களால் நினைத்தே பார்க்க முடியாத பிள்ளை இவனா திருடினான் நல்ல குடும்பத்தில் உள்ள பையனாச்சே என்றும் ஆச்சரிய படும் அளவிற்கு இருக்கும்.
மற்ற பிள்ளைகளை கம்பார் செய்து அவர்கள் முன் பேசாதீர்கள்.
தண்டம் எதுக்குமே லாயக்கில்லன்னு மற்றவர்கள் எதிரில் வைத்து சொல்லாதீர்கள்.
கம்மியான மார்க்குகள் எடுத்தாலும் அவர்களை எல்லார் முன்னாடியும் வைத்து அசிங்கப்படுத்ட்தாதீர்கள்.


இதனால் நீங்கள் அவர்களிட்த்தில் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும்
.

சில இடங்களில் பெற்றோர் என்று கூட பாராமல் பிள்ளைகள் அடி தடி சண்டை, கை கலப்பு என்று மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் வீட்டுக்குள்ளேயே அம்மாவின் காலடியில் அம்மா முந்தனைய பிடித்து கொண்டு இருக்கும் பிள்ளைகளும் உண்டு.

இப்படியே எல்லா பிள்ளைகளையும் இப்படிதான் என்று குறை கூற முடியாது.

பல நல்ல முத்தான தங்கமான பிள்ளைகளும் சுய சிந்தனையுடன் செயல் பட்டு, உள்ள பிள்ளைகளும் உண்டு.

இதற்கு தீர்வு தான் என்ன?இதற்கு தீர்வு தான் என்ன?

எனக்கு தெரிந்து பிள்ளைகளை ஒரு போதும் பிரியா விடக்கூடாது. அவர்களை பிஸி ஷெடுலில் வைப்பது நல்லது.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் படிப்பு தவிர நல்ல சரியான தெரிந்த செண்டர்களில் டியுஷனும், இறை வழிபாடுகள்,மார்க்க போதனைகள் (தொழுகை, ஓதல்)பாட்டு , அவர்களுக்கு பிடித்த விளையாட்டு , நீந்துதல், டான்ஸ், தையல், கை வேலைப்பாடு, விளையாட்டுகளில் ஈடுபடவைப்பது நல்லது.

பிள்ளைகளுக்கு நல்ல தட்டி கொடுத்து எதில் ஊக்கமாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு சப்போட் செய்து வழி நட்த்துவது நல்லது.

வீட்டிலும் சின்ன சின்ன வேலைகளை அவர்கள் பொருப்பில் விடலாம்.

பிள்ளைகளுக்கு 18 வய்து வரை நல்ல முறையில் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். அதற்கு பிறகு காலேஜ், ஹாஸ்டல் , வேலை, கல்யாணம் என்று பிரிவு ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப செல்லங்கொஞ்சி நொல்லி பாப்பாவாகவும் ஆக்கிடாதீர்கள், அதாவது கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து, தேவைக்கு அதிகமா அதிக விலையில் டிரெஸ் எடுத்து கொடுத்து கழ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்க்க்க்கூடாது.

கஷ்டம், தேல்விய பற்றி தெரியாம வளந்த பிள்ளைகளுக்கு , பெருசானா ஒரு சின்ன துயரம், சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ள மன பலம் இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் எடுக்கும் தீர்வு தற்கொலையாக கூட மாறலாம்.








அவர்களுக்கு முதலே நல்லது கெட்ட்து எடுத்து சொல்லி வழிநட்த்துவது நல்லது.

உதாரணத்துக்கு: மார்க் 80 மார்க் எடுத்து 75 மார்க் வாங்கினால் மேலே மேலே நீங்களும் போட்டு திட்டி தீர்க்க்காதீர்கள், ஏற்கனவே 75 ஆகி விட்ட்தே என்று அவர்கள் நொந்து தான் இருப்பார்கள், அடுத்தமுறை இன்னும் நல்ல கவனமாக படித்து முயற்சி செய் என்று சொல்லி தட்டு கொடுக்கலாம்.

அதே போல் பரிட்சை சமயத்தில் அவர்களுக்கு ஃப்ரி மைண்டுடன் படிக்க தோதுவான நிலையையும் ஏற்படுத்தி கொடுக்கனும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். ஜூஸ் வகைகள், பழங்கள்,லைட்டான உணவுகள் இப்படி கொடுப்பது நல்லது.
ஆகையால் ஓவ்வொரு ஸ்டேஜிலும் மிகவும் கண்ணும் கருத்துமாய், பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.



டிஸ்கி: இந்த பதிவு யுத்ஃபுல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வந்துள்ளது , ரொம்ப சந்தோஷம்.


35 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

உங்க பதின்மத்தை எழுத சொன்னா - பதின்மங்களில் எப்படி என்று ஒரு ஆய்வே செய்துட்டீங்க, நல்ல டிப்ஸ்

r.v.saravanan said...

ஓவ்வொரு ஸ்டேஜிலும் மிகவும் கண்ணும் கருத்துமாய், பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

good good

Kanchana Radhakrishnan said...

நல்லது கெட்ட்து எடுத்து சொல்லி வழிநட்த்துவது நல்லது.
ஓவ்வொரு ஸ்டேஜிலும் மிகவும் கண்ணும் கருத்துமாய், பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

Yes I agree with you jaleela.

நாஸியா said...

\\உங்க பதின்மத்தை எழுத சொன்னா - பதின்மங்களில் எப்படி என்று ஒரு ஆய்வே செய்துட்டீங்க\\

அதானே!!

இருந்தாலும் எப்பவும் போல உங்க ஸ்டைல்ல அழகா எழுதிருக்கீங்க அக்கா.. பிள்ளைகளுக்கு ஓவரா செல்லம் குடுத்து கெடுக்குற பெத்தவங்களை கண் முன்ன பாக்குறோம்..

\\பிள்ளைகளுக்கு 18 வய்து வரை நல்ல முறையில் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். அதற்கு பிறகு காலேஜ், ஹாஸ்டல் , வேலை, கல்யாணம் என்று பிரிவு ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப செல்லங்கொஞ்சி நொல்லி பாப்பாவாகவும் ஆக்கிடாதீர்கள், அதாவது கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து, தேவைக்கு அதிகமா அதிக விலையில் டிரெஸ் எடுத்து கொடுத்து கழ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்க்க்க்கூடாது.\\

100% சரி!!

ஜெய்லானி said...

உங்க கதைய கேட்டா மெதுவா நழுவிட்டீங்களே!!. என்ன இருந்தாலும் நீங்க சொன்ன எல்லாமே சரிதான் .

Jaleela Kamal said...

என் கதைய எழுத போனா 25 பகக்துக்கு மேல போகும் போல. சிம்பிலா சொன்னாலே 8 பக்கம் வருது அதான் இப்போதைக்கு பொதுவா போட்டா எல்ல்லோருக்கும் உதவுமே என்று இப்படி.

போடுறேன் மெதுவா அதையும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவு ஜலீலா.

GEETHA ACHAL said...

நல்ல பகிர்வு...ரொம்ப பொறுமையாக அனைவருக்கும் விளக்கும்படியாக தெளிவாக எழுதி இருக்கின்றிங்க ஜலிலா அக்கா....சூப்பர்ப்...வாழ்த்துகள்...

அன்புடன் மலிக்கா said...

அக்கா சூப்பர். விளக்கங்களும் மிக அருமை. தேவையான பதிவும்கூட..
உங்க பதின்மத்தை விரைவில் எதிர்நோக்கியபடி..எத்தனை பக்கமென்றாலும் நான்படிக்கத்தயார்..

Chitra said...

அக்கா, கை கொடுங்க. விரிவாக - விளக்கமாக, இந்த விஷயத்தை அலசி, அருமையாக எழுதி இருக்கீங்க. நன்றாக, பெற்றோர்கள் மனநிலை, குழந்தைகள் மனநிலை பற்றி புரிந்து கொண்டு எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

சீமான்கனி said...

அக்கா...இதற்காக பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்து இருக்கீங்க போல...அப்பா& அம்மா மார்கள் ஜாக்கிரதை...சிறப்ப்பான பகிர்வுக்கு நன்றி அக்கா...

மின்மினி RS said...

அருமையான விளக்கங்கள்.. ஆமா உங்க கதைய காணோம் எங்கே?,.. ஆவலுடன் மின்மினி..

சைவகொத்துப்பரோட்டா said...

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.

Asiya Omar said...

அட்டகாசமான பகிர்வு.எனக்கு இப்ப ரொம்ப தேவையானதும் கூட.எல்லாம் தெரிந்தாலும் மற்றவர் கொஞ்சம் உஷார் படுத்தும் பொழுது நம்மை நாமே திரும்பி பார்க்க முடிகிறது.நன்றி ஜலீலா.

Chitra said...

அக்கா, இது ஆறி போன பதிவுபஜ்ஜி அல்ல. காரமான கருத்துக்களோடும் சுவையான விஷயங்களோடும் உள்ள அருமையான பதிவு.

ஜெய்லானி said...

@@@ அன்புடன் மலிக்கா --//..எத்தனை பக்கமென்றாலும் நான்படிக்கத்தயார்..//

ஒரு புக்கா போட சொல்லுங்கக்கோவ். இலவச இனைப்பா கொழுக்கட்டையும் தந்தா ஹி...ஹி...

சசிகுமார் said...

உங்க பதின்மத்தை எழுத சொன்னா - பதின்மங்களில் எப்படி என்று ஒரு ஆய்வே செய்துட்டீங்க, எத எதையோ எழுதி தப்பிசீடீங்களே நல்ல சாமர்த்தியம்தான்

மங்குனி அமைச்சர் said...

//பதின்ம பருவ கொசுவத்திக்கு தொடர் பதிவுக்கு///


ஹலோ அவுக சொன்னது உங்க பதின்ம பருவ கொசுவத்திக்கு தொடர், இப்படி சொற்பொழிவு ஆற்ற சொல்லவில்லை , கொஞ்சம் மைக் கிடச்சா போதுமே அரசிய வாதி மாதிரி சொற்பொழிவு ஆற்றிகிட்டேடேடேடேடேடே...................... இருக்க வேண்டியது ,

(சும்மா தமாசு )

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

உங்க கதைய கேட்டா மெதுவா நழுவிட்டீங்களே!!. என்ன இருந்தாலும் நீங்க சொன்ன எல்லாமே சரிதான் .///


நீ எப்ப ஜெய்லானி இவ்வளவு நல்லவனா ஆனா ?

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//நீ எப்ப ஜெய்லானி இவ்வளவு நல்லவனா ஆனா ?//

ஒன்னேகால் நிமிஷ மாச்சு. ஏன் மியூசிக் ஸ்டாட் பண்ணலாமா ?

ஜெய்லானி said...

ஜெய்லானி டிவில அடுத்த பதிவு பதிவர் சந்திப்புன்னு போட்டுடலாம் ????? ( எத்தனை தல மாட்ட போகுதோ )

SUFFIX said...

பயனுள்ள தொகுப்பு!!

எல் கே said...

miga arumai. indraya kaalagatathil miga miga tevayana ondru. neengal sonna sambavam nanum kelvi pattirukiren :(.. indru pasanga?ponnunga vazhi tavara vaaipugal atigam. avargalai vazhi nadata vendiyathu pettror mattrum kudumbathinarin kadamai

Jaleela Kamal said...

சகோ.ஜமால்

ஆர்.வி.சரவனன்

காஞ்சனா

ஜெய்லானி

நாஸியா ( என் பதிவும் போட்டு வைத்துள்ளேன்) இது முக்கியம் ஆகையால் இதை முதலில் போட்டு விட்டேன்.

கீதா ஆச்சல்

ஸ்டார்ஜன்

மலிக்கா ( எத்தனை பக்கமானாலும் படிப்பீங்களா? அது பெரிய கதையாச்சே)

ஆமாம் சித்ரா இபமுள்ள அம்மா மார்களுக்காகவே யோசித்து போட்டேன்.
பிலாக்கில் நிறைய பெண்பதிவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் படிப்பதன் மூலம் பிளாக் எழுதாத தோழிகளுக்கும் சொல்லலாம் இல்லையா?

கை கொடுத்துட்டேன் ஐந்து நிமிடம் ஆகிவிட்டது விடுங்க சித்ரா ரொம்ப மெய் மறந்து போய் விட்டீங்களே

சீமான் கனி கல்யாணம் ஆகாதவர்களும் இதை படிக்கும் போது சிறிது சுதாரிச்சுக்கொள்ளலாம்/
எல்லோரும் உஷாராக இருந்தாலும், இப்படி ஒரு மேட்டர் படிக்கும் போது மேலும் உஷாராகிக்கொள்ளலாம்.

மின்மினி கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றி, என் கதையா போடலாம் மெதுவா/

சை.கொ.ப. பாராட்டுக்கு மிக்க நன்றி.


ஆசியா ஆமாம் பிள்ளை வளர வளர மிகவும் விழுப்புணர்வு தேவை.

ஜெய்லானி புக்கா எழுதிதான் போடனும் பெரிய கதை கூடவே, கொழுக்கட்டை கண்டிப்பாவரும்.


ஆமாம் சித்ரா இது ஆறி போன பதிவு கிடையாது சுட சுட பிரியாணி பதிவு தான்.

சசி குமார் பிளாக் எழுதுறேன் என்று கண்டதையும் எழுதுவதை விட இப்படி மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கனும் என்பதே என் எண்ணம்.

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.

அமைச்சரே மைக்க வச்சி தான் பேச ஆரம்பிச்சேன் என் வாய்ஸுக்கு மைக்கே தேவையில்லை.


ஜெய்லாணி டீவியில் கண்டிப்பாக பதிவர் சந்திப்ப்பு போடுஙக்ள் பார்க்க ஆவலாய் உள்ளோம்.


நன்றீ ஷபிக்ஸ்

எல்.கே .ஆமாம் இந்த மேட்டர் நிறைய பேர் தெரியாதவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும் என்று தான் போட்டேன். தொடர் வருகைக்கு மிக்க நன்றி

malar said...

நான் ஒங்க பதிமன் என்று தான் நினைத்தேன்....


நல்ல பதிவு...

பெண் பிள்ளைகளிடம் நாம் கொஞ்சம் அதிகமாக ஒட்டி உறவாடினால் அவங்களை நம் கையின் கீழ் கொண்டு வந்துவிடலாம் 12ஆம் வகுப்பு வரை.இந்த ஊரை பொறுத்தவரை கோயட்

இல்லை.காலேஜ் எப்படியோ


தெரியவில்லை.




யப்பா இந்த ஆண் பசங்க இருக்காங்களே...ரொம்ப கச்டம்...

கம்பியூடரும் மொபைலும் வந்த பிறகு எந்த புத்தில் என்ன பாம்பு இருக்கு எனறு கண்டுபிடிப்ப்து இன்னும் கச்டம்...


என் மக்களை நேர்வழி படுத்து எனறு இறைவனிடம் கேட்பதை தவிர வேரு ஒன்றும் தெரியவில்லை...

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு ஜலீலாக்கா.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு ஜலீலா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உரிய நேரத்தில், மிக்க பயன்
தரும் ஆய்வு!

R.Gopi said...

பதிவு ஆறிப்போனது எல்லாம் இல்லை..

சுடச்சுட அட்டகாசமான கருத்துகளோடும், அருமையான பல விஷயங்களையும் தாங்கி இருக்கிறது..

பெற்றோர்கள் பிள்ளைகளை மிகவும் கண்டிப்புடனோ அல்லது மிகவும் செல்லம் கொடுத்தோ வளர்ப்பது தவறு..

பிள்ளைகள் தவறு செய்யாமல் பார்த்து கொள்வது மிகவும் கடினம் என்றாலும், நமக்கு தெரிந்து விட்டால், உடனே அவர்களுக்கு பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்..

ஐந்தில் வளைய வைத்து விட்டால், பின் ஐம்பதில் கவலை இல்லை...

மற்றதொரு அக்கறையான கருத்துகளை தாங்கி வந்த உங்கள் எழுத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீலா மேடம்...

ஹுஸைனம்மா said...

நல்ல விளக்கமா எழுதியிருக்கீங்க அக்கா எப்பவும்போல.

இருந்தாலும் உங்க அனுபவங்களைத் தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன்!!ஏமாத்திட்டீங்க!!

Jaleela Kamal said...

ஆமாம் மலர், பெண்பிள்ளைகள், 80% சொல் பேச்சு கேட்பார்கள்.
ஆண்பிள்ளைகளும் கேட்பார்கள் ஆனால் வெளியில் சுற்று வதால், கொஞ்சம் அடம் ஜாஸ்தியாகிடும்.

Jaleela Kamal said...

ராமல்ஷ்மி, செ.சரவணன், நிஜாமுதீன்,

வருகை தந்ந்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி.

Jaleela Kamal said...

//ஐந்தில் வளைய வைத்து விட்டால், பின் ஐம்பதில் கவலை இல்லை//


கோபி மிகச்சரியாக சொன்னீங்க.

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா இது எல்லா பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.

என் பதிவும் மெதுவா போடலாம்.

apsara-illam said...

நல்ல விரிவான விழிப்புணர்வு கட்டுரையை கொடுத்திருக்கீங்க ஜலீலா அக்கா.... அதிலும் \\\அட கொடுமையே//ன்னு ஒரு சம்பவம் சொல்லியிருக்கீங்க பாருங்க...மனதிற்க்கு ரொம்ப கஷ்ட்டமாக இருக்கு.இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலித்தனமாக நடப்பதும் பேசுவதாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம் எழாமல் இல்லை.இந்த அறிவையெல்லாம்,நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றே...இறைவனிடம் துஆ கேட்கிறோம்.

அன்புடன்,
அப்சரா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா