நோன்பு காலங்களில் கஞ்சிக்கு பகோடா, உளுந்து வடை, போண்டா, சமோசா இப்படி ஏதாவது கூட வைத்து சாப்பிட இது போல அயிட்டங்களில் ஏதாவது ஒன்றும் கூடவே சட்னியும் இருந்தால் தான் அது கஞ்சி சாப்பிட காம்பினேஷன் சரியாக இருக்கும், சட்னி அதிலும் 5 பேரிட்சையை புதினாவுடன்
சேர்த்து அரைத்தால் அதுவும் இன்னும் நல்ல ஹல்தியாக இருக்கும், நோன்பு காலங்க்ளில் யாரும் கீரை வகைகளை சாப்பிடுவதில்லை, அதை இப்படி போண்டாவில் சேர்த்து செய்து சாப்பிட்டால் நல்ல சத்தானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புதினா - இரண்டு கை பிடி
கொட்டை நீங்கிய பேரிச்சை - 5
காஞ்ச மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
புளி - ஒரு கொட்டை பாக்களவு
உப்பு - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
எண்ணை - அரை தேக்கரண்டி
செய்முறை
1.எண்ணையை சூடாக்கி அதில் காஞ்ச மிளகாய் ,உளுத்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து அதில் புதினா, புளி சேர்த்து வதக்கி ஆறியதும் பேரிச்சை உப்பு சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் சேர்க்காததால் 3 நாட்கள் வரை கெடாது.
குறிப்பு
//இதில் புதினாவுக்கு பதில் கொத்துமல்லி கீரையும் வைத்து அரைக்கலாம், இல்லை புதினா கொத்து மல்லி பாதி பாதி அளவும் வைக்கலாம். இரண்டு முறையுமே அருமையாக இருக்கும். இதே போல் பேரிட்சை அதிகம் வைத்தும் அரைக்கலாம். இதே சட்னியை நான்கு ஐந்து வகைகளில் செய்து பார்த்தாச்சு எல்லாமே அருமை, மற்றவகைகளை பிறகுபோடுகிறேன்.
இது பழைய போஸ்ட் தான் நோன்புக்காக ரீ போஸ்ட்..//
Tweet | ||||||
39 கருத்துகள்:
sappattu timela ippadi oru posta.. sari nan poi saptut varen
மாற்றி போண்டாவும் போட்டாச்சு, வாழ்த்துக்கள்
பேரிட்சை போட்டு துவையலா
யக்கோவ் தூள் கிளப்புறீங்க
super . thanks for sharing.
Very intersting thuvayal...Thanks for sharing...
அட வித்தியாசமா இருக்கே துவையல். கீரை போண்டாவா....!!!!!!!!!!!!!!!
சோனை முத்து : எசமான் ஏன் ஒரு மாதிரியா இருக்கியே,உடம்புக்கு ஏதாவது......
நாட்டாமை : ச்சே .ச்சே ..உடம்புலாம் நல்லாத்தான் இருக்கு,காலைலே எந்த ஊட்டுக் காரிக்கும் எனக்கும் சண்டையா போச்சுலே,நானும் கோவத்துலே மிதி மிதின்னு மிதிச்சுப்போட்டேன்,அதான் கவலையா இருக்கேன்.
சோனை முத்து : அய்யா நீங்க உண்மையாகவா சொல்றியே என்னாலே நம்பவே முடியலையே அப்புறம் எசமானி அம்மாள் கோவிச்சிக்குட்டு அவுக அம்மா வீட்டிற்கு போயிருப்பாகளே ?
நாட்டாமை : அவ எதுக்குலே போறாள்,நான் மிதுச்சேனு சொன்னது அம்மணியை இல்லைலே எந்திர சைக்கிளை சொன்னேன், அட நீ வேறே வயித்தெரிச்சலை கிளப்பிகோட்டு....
கீரைப் போண்டா போட்டு பேரிச்சம்பழம் சட்னி வைக்கச்சொன்னேன் அதுக்குத்தான்லே இவ்வளவு கூத்தும் நடந்து போச்சு,இனி சரி வராது இனிமேலே நாமளும் தனியா சமைக்க வேண்டியதுதான்.
சோனை முத்து : எசமான்... தீர்ப்பு சொன்ன உங்க நாக்கு, இப்போ உப்புப் பார்க்கப் போகுதே.....
நாட்டாமை : ஏலே சனியனே, உப்பு சொரணை ....நாக்குலே இருந்தாதான்லே தீர்ப்பு சர்ரு..சர்ரு ன்னு வரும் போயி வேலையைப் பாருலே.
ட்ரயல் போட்டு பாத்திர வேண்டியது தான்...
அக்கா ரெசிபி நல்லா இருக்குது. இந்த template நிறமும் டிசைன்ம் சூப்பர்!
வடை வாசனை மூக்கை துளைக்குது. வெற்றி பெற வாழ்த்துகள்.
akka, super.
கீரை போண்டா..... பேரீச்சம்பழ சட்னி...
அடடா..... இங்க வந்து பார்த்தாலே புது புது டிஷஸ் ரெசிப்பி போட்டு அசத்தறீயளே....
வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்....
கீரை போண்டா வித்தியாசமா தானிருக்கு!! வாழ்த்துக்கள்!
எல் கே ,ஆஹா பசிய கிளப்பிட்டேனா?
செஃப் பழனி மிக்க நன்றி
ஆமாம் சகோ ஜமால் பேரிட்சை புதினா துவையல் ரொம்ப அருமையாக இருக்கும்.
பாராட்டுக்கு நன்றி
மதுரை சரவணன் முதல் வருகைக்கு மிக்க நன்றீ
ஜெய்லானி ஆம் வித்தியாசமான ஒரு துவையல்
ஆஹா நாட்டாமை வந்துட்டாரே.
வெறும்பய, செய்து பார்த்து சொல்லுங்கள்
சித்ரா முதல் உள்ள ,டெம்ப்லேட் டிசைன் ரொம்ப கொச கொசன்னு இருந்தது அதான் மாற்றி விட்டேன்,
பாராட்டுக்கு மிக்க நன்றீ
நன்றி வானதி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அக்பர்
கோபி தெரிந்ததை செய்கீறேன் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோபி
எம் அப்துல் காதர் போண்டா+ புதினா துவையல் இரண்டுமே வித்தியாசம் தான் ,
வருகைக்கு மிக்க நன்றி
அருமை.பார்த்துவிட்டு உடனே செய்து படமும் எடுத்து வைத்திருக்கின்றேன் ஜலி.
ரொமப் சந்தோஷம் சாதிகா அக்கா
நன்றாக இருக்கிறது ஜலீலா.
துவையல் ரொமப் வித்தியாசமா இருக்கு..
பேரீட்சையுடன் புதினா. செய்திட வேண்டியதுதான்:)! நன்றி ஜலீலா.
போண்டா, சட்னி எல்லாம் ரொம்பப் பழசாப் போச்சு போலேருக்கே புதுசு எதுவும் இல்லையா..!!
ஆஹா,போட்டோவைப் பாத்தாலே சாப்பிடணும்போல இருக்கு ஜலீலாக்கா! :P :P
நன்றி மாதேவி
நன்றி மேனகா
நன்றி ராமலக்ஷ்மி செய்து பார்த்து சொல்லுங்கள்
வாங்க ஸ்ரீராம் சார் இது போனவருடம் தமிழ் குடும்பத்துக்கு அனுப்பிய குறீப்பு. அதான் இப்ப போட்டாச்சு.
ஸ்ரீராம் சார் ரொம்ப நாள் கழித்து வந்து வந்து இருக்கீஙக ரொம்ப சந்தோஷம்.
மகி உடனே செய்துடுங்கள்.
அட...
வித்தியாசமா இருக்கே துவையல்.
இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html
சகோ.விச்சு , மிக்க நன்றி தேடி பிடித்து அறிமுக படுத்தி இருக்கீங்க.
ரொம்ப சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா