Tweet | ||||||
Friday, August 19, 2011
ஃப்ரவுன் அரிசி வாழைப்பழ குழிபணியாரம் - brown rice banana kuzipaniyaram
தேவையானவை
ஃப்ரவுன் அரிசி – அரை ஆழாக்கு
மைதா மாவு - அரை ஆழாக்கு
வெல்லம் – இரண்டு அச்சு
பெரிய கனிந்த வாழைப்பழம் ஒன்று
ஏலக்காய் – 3
தேங்காய் – இரண்டு பத்தை
இட்லி சோடா – ஒரு பின்ச்
எண்ணை – சுட தேவையான அளவு
பாதம் பொடித்த்து – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி – அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக்கை
செய்முறை
ஃப்ரவுன் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை கிரைண்டரில் அரைத்து அத்துடன் சிட்டிக்கை உப்பு,ஏலம்,மைதா சேர்த்து அரைத்து கடைசியாக வாழைபழத்தை நருக்கி சேர்த்து அரைக்கவும்.
வெல்லத்தை பொடித்து அத்துடன் சிறிதுதண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.
வெல்ல கரைசல் ஆறியதும் மாவில் வடிக்கட்டி சேர்க்கவும்
மாவை நன்கு கலக்கவும்..
குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணை ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து முடிபோடு 2 நிமிடம் வேக விடவும்
மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணைவிட்டு மூடி போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
சுவையான வாழை பழ குழிபணியாரம் ரெடி
குறிப்பு
இனிப்பு குழிபணியாரங்களை பல விதமாக செய்யலாம், மைதாவிற்கு பதில் கோதுமைமாவையும் சேர்க்கலாம். அரிசி பச்சரிசியிலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டை சேர்த்தால் இன்னும் நல்ல பொங்கி வரும்.
குழந்தைகளுக்கு நெய் ஊற்றியும் சுடலாம்.வெல்லகரைசல் கட்டியாக ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து ஊற்றினால் நல்ல இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
31 கருத்துகள்:
நல்ல ரெசிபி.பகிர்வுக்கு நன்றிங்க.
மிகவும் நல்ல குறிப்பு ஜலீலா! படங்களும் அருமை! பச்சரிசியில் நான் எப்போதும் செய்வதுண்டு. பிரவுன் அரிசி என்பது அமெரிக்கன் பிரவுன் அரிசியா அல்லது சிகப்பரிசியா?
healthy recipe,luks delicious...
கலக்குறீங்க அக்கா
wow such an healthy n tasty recipe..
அசத்தலான குழிப்பணியாரம்.நாங்கள் இதே முறையில் பச்சரிசி சேர்த்து தவாவில் பான் கேக் போல் செய்வோம்.
Wat a healthy and delicious paniyaram,feel like munching some.
அந்த வாழை பழத்திலையும் ஏதாவது புதுசா செஞ்சி இருப்பீங்களே :-))
பார்க்கும் போதே கேட்குது :-))
நல்ல ரெசிபி சகோதரி...்இப்போதெல்லாம் இதை எங்கே சாப்பிட முடிகின்றது.
வாழக் வளமுடன்.
வேலன்.
yummy looking paniyaram
நல்லதொரு படைப்பு.
யாரும் சுடாத அளவிற்கு வேலி போட்டு இருக்கே படத்தின் மீது.
வாழ்த்துக்கள்.
I love this banana dumpling. Makes me yearn for some rite now, ah!
Different. Good share :)
குறிப்பும் படங்களும் அருமை.
வாழைப்பழ குழி பணியாரம் செஞ்சி சாப்டாச்சு சுப்பர் ....வாழ்த்துக்கள்
சூப்பர் ரெசிபி. நிச்சயம் ட்ரை செய்து பார்க்கணும்.
நன்றி கோவை2தில்லி
வாங்க மனோ அக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
பச்சரியிலும் , இட்லி அரிசியிலும் செய்யலாம்
ப்ரவுன் அரிசி மால்களில் அரை கிலோ அளவு அளந்து வாங்கியது பெயர் பார்க்கல
இது பிலிப்பைனிகள் பயன் படுத்துவது,
சிகப்பரிசி கிடையாது.
நன்றி பிரேமா
நன்றி ஆமினா
நன்றிகல்பனா
ஸாதிகா அக்கா பேன் கேக்கும் செய்யலாம்
பணியர சட்டி வாங்கியதில் இருந்து எல்லாமே இப்படி பணியாரமாக தான் சுட்டு விடுவது
எங்க ஹஸ் ஆபிஸில் எல்லொரின் பேவரிட் ஆக ஆகிவிட்டது
பிரியா வாங்க உடனே செய்துடுங்க..
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ம்ம் ஜெய்லாணி ஆமாம் இது வாழை பழத்தில் செய்தது தான்
வாங்க வேலன் சார் ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம் கருத்துதெரிவித்தமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி க
வாங்க நாட்டாமை ஆமம்
இப்ப யாரும் வேலிய தாண்டி வரமுடியாதுல்லா
அதான்
வருகைக்கு மிக்க நன்றி
Thank you torveiw
thank you plateful
நன்றி அகமது இர்ஷாத்
தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சே.குமார்
//வாழைப்பழ குழி பணியாரம் செஞ்சி சாப்டாச்சு சுப்பர் ....வாழ்த்துக்கள்//
வாங்க மாய உலகம் செய்தும் சாப்பிட்டாச்சா ரொம்ப சந்தோஷம்.
செய்து பார்த்து சொல்லுங்க சித்ரா..
sari sari ellaththaiyum parcel pannunga. pasikkuthu
இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன். பகிர்வுக்கு ரொம்ப நன்றி ஜலீலாக்கா :-)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா