சளி சேர்ந்தால் முதலில் இஞ்சி சாறு முன்று நாட்களுக்கு தொடர்ந்து மாலை 5 மணி வாக்குல எடுத்து கொடுக்கவும். இது இரண்டு வயதிலிருந்து உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகள் என்றில்லை எல்லோருக்கும் குடிக்கலாம்.
பெரியவர்களுக்கு ஒரு மேசைகரண்டி அளவு
இஞ்சி சாறில் தேன் கலந்து கொடுக்கனும் , தேன் இல்லை என்றால் சர்க்கரை கலந்து கொடுக்கவும்.சைட் எஃபக்ட் எதுவும் வராது, இந்த சாறு குடித்த்தும் ஒன்றுசளி வாமிட் மூலம் வெளியாகும், இல்லை மோஷன் மூலமாக வெளியாகும்.
இஞ்சி சாறு செய்யும் முறை
இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம்.
பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு. /
எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். அதிக காரம் நாக்கில் தட்டாமல் நீங்கள் குடித்து பார்த்து விட்டு கொடுக்கவும்.
இது முன்று நாள் தொடர்ந்து ஒரு முறை கொடுத்தால் போதும்.
இதை விட ஒரு சிறந்த மருந்து. அக்கரா (இதுக்கு ஆங்கில பெயர் தெரிந்தால் யாராவது சொல்லவும்) இது இஞ்சி சாறுக்கு அண்ணன் தொண்டையில் உள்ள சளியை அரவே அறுத்து எடுத்துடும், அக்கரா கிடைத்தால் அதில் நிறைய தேன் கலந்து ஒரு ஸ்பூன் முழுவது சாப்பிட கொடுக்கலாம்.
இது முன்று நாள் தொடர்ந்து ஒரு முறை கொடுத்தால் போதும்.
இதை விட ஒரு சிறந்த மருந்து. அக்கரா (இதுக்கு ஆங்கில பெயர் தெரிந்தால் யாராவது சொல்லவும்) இது இஞ்சி சாறுக்கு அண்ணன் தொண்டையில் உள்ள சளியை அரவே அறுத்து எடுத்துடும், அக்கரா கிடைத்தால் அதில் நிறைய தேன் கலந்து ஒரு ஸ்பூன் முழுவது சாப்பிட கொடுக்கலாம்.
இது என் கிரான்மாவின் அம்மா வைத்தியம், மொத்தமா திரித்து வைத்து கொள்வோம், எத்தனை வருடம் ஆனாலும் கெடாது.
( பச்ச குழந்தைக்ளுக்கு ஆறு மாத்த்திலிருந்து கொடுக்க கால் டீஸ்பூன் அக்கராவில் வெண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை வெள்ளை மல் துணியில் வடிக்கட்டி அதில் தேன் கலந்து கொடுக்கவும்.)
சளிதொல்லைக்க்கு என்ன என்ன சாப்பிடலாம்
1. சூப் சிக்கன் (அ) மட்டன் சூப் கொடுக்கவும் ( செய்முறை பின்பு போடுகீறேன்
2. இஞ்சி சாறு
3. உணவில் மிளகு சேர்த்து தயாரித்து கொடுத்தல்
4. ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் முன்று இதழ் சாப்ரான் ( குங்குமப்பூ) உரைத்து கொடுக்கலாம்.
5. இஞ்சி ரசம், வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.( இது நான் சொல்லி நிறைய் பேருக்கு கேட்டு இருக்கு) இது ஏற்கனவே குறிப்பில் இருக்கு மறுபடி ரீ போஸ்ட் செய்கிறேன்/
6. சூடாக வெண்ணிர் குடிக்கும் பக்குவத்தில் அடிக்கடி குடிக்க கொடுக்கவும்
7. அக்கரா தேன் கலந்து சாப்பிடலாம்.
8. மிளகு பால் காய்ச்சி சிட்டிக்கை மஞ்சள் பொடி போட்டு சர்க்கரை சேர்த்தும் இரவில் குடிக்கலாம்.
//பேன், ஏசிக்கு நேரா படுக்காதீர்கள் படுக்கும் போது தலைக்கு சிறிது உயரம் வைத்து சரிந்து படுக்கவும்.
தொண்டை, இரு காது மடலுக்கு பின், முதுகு நடு தண்டில் தைலம் தேய்க்கவும் அழுத்தி தேய்க்காமல் மென்மையாக தேய்க்கவும்/
ஆவி பிடிக்கவும். சூடான வெண்ணிரில் சுக்கு (அ) சிறிது தைலம் சேர்த்து ஆவி பிடிக்கவும்.
( பெரியவர்கள் துளசியும் சளிக்கு நல்லது துளசி டீ, சுக்கு, மிளகு டீ, வெரும் மிளகு டீ, சாப்ரான் டீ இது போல் குடிக்கலாம்)
மிளகு , அக்கரா, இஞ்சி சாறு ரொம்ப அதிகமாக கொள்ளவேண்டாம் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் லூஸ்மோசஷன் ஆகும்)
அன்னு (feedbackjaleela@gmail.com) இந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்.
ginger
மிளகு , அக்கரா, இஞ்சி சாறு ரொம்ப அதிகமாக கொள்ளவேண்டாம் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் லூஸ்மோசஷன் ஆகும்)
அன்னு (feedbackjaleela@gmail.com) இந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்.
ginger
Tweet | ||||||
40 கருத்துகள்:
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
முக்கியமான குறிப்புகள்..!!
இந்த இஞ்சி சாரை கண்டாலே நான் ஓடிவிடுவேன் ..இப்பல்லாம் குடிக்காமலேயே சிரிக்க வேண்டிவருது.ஹி..ஹி..
பயனுள்ள தகவல் படங்களுடன் அசத்தல் ..
நல்ல தகவலுக்கு நன்றி.
என்னை போன்ற இளம் தம்பதிகளுக்கு தேவையான பதிவு அக்கா நன்றி.
என்னை போன்ற இளம் தம்பதிகளுக்கு தேவையான பதிவு அக்கா நன்றி.
ஜலீலா! அருமையான குறிப்பு! மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்!! இஞ்சி சாறு பொதுவாக நான் உபயோகிப்பதுதான். ஆனால் ‘அக்கரா’ என்பது என்ன என்று தெரியவில்லை. அது எப்படி இருக்கும்? தமிழில் அதற்கு வேறு பெயர் இருக்கிறதா? நாட்டு மருந்துக் கடையில் கிடைக்குமா?
நல்ல தகவல்கள். துளசியோடு கர்பூரவல்லியும் சேர்த்துக் கொடுக்கலாம். சக்கரைக்கு பதில் பனஞ் சக்கரை சேர்த்துக் கொள்ளுவது இன்னும் நல்லது.
தேன் குறித்த ஒரு எச்சரிக்கை
(தேன் எல்லாம் தேனல்ல http://wp.me/p12Xc3-11O) படித்துப் பார்க்கவும்
நல்ல கைமருந்து.
மிக விரிவான விளக்கங்கள்;
இந்தக் குறிப்பிற்காக மிக்க
நன்றி!
இஞ்சி சாறு கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் மா!!!
ஜலீலா அக்கா.. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. எனக்கும் இந்த சளித்தொல்லை அதிகமாகவே இருக்கு.. இப்போது கூட சளிவருத்தம்தான்..
thanks for the tips Madam, please keep posting
சசிகுமாரே இளம் தம்பதிகள் என்றால்....நான் புதுமண தம்பதிகள் என்று சொல்லவேண்டியதுதான்....
பதிவு அருமை சகோதரி...
வாழக வளமுடன்.
வேலன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா,
மிக மிக மிக நன்றி. தனியாக ஒரு பதிவே போட்டதற்கு. இஞ்சி சாறு தந்து இரண்டு நாள்தான் தந்தேன். அதுவும் இப்படி நஞ்சை எடுத்துவிட வேண்டியது தெரியாமல். அல்ஹம்துலில்லாஹ், மீண்டும் இது போல தர முயற்சி செய்கிறேன். அதிகம் வாந்தி எடுக்கின்றான். அதனால் பயந்து போய் எதையுமே உட் கொள்ள மாட்டேன் என்கிறான். ஜாதிக்காயை சிறிது வறுத்து பொடித்து தேனுடன் கொடுக்க மாமியார் சொன்னார்கள். அதனால் லூஸ் மோஷன் ஆகிறது. மிகவும் வீக்காகியது போல தோன்றுகிறது. 'அக்கரா' என்னவென்று தெரியவில்லை. அம்மாவிடம் அப்படி ஒன்று கோவையில் கிடைத்தால் அனுப்ப சொல்லி சொல்ல வேண்டும். மற்றவை மெயிலில் எழுதுகின்றேன். மீண்டும் ஒரு தடவை பதிவுக்கும் பதிலுக்கும் இன்னும் உங்களின் நல் அமல்களுக்கும், ஜஸாகுமுல்லாஹு க்ஹைரான் ஃபித் துன்யா வல் ஆக்ஹிராஹ் அக்கா.
வ ஸலாம்,
அன்னு
புவனேஸ்வரி தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜெய்லாணி வாங்க எல்லா பிள்ளைகளும் இஞ்சி சாறு கண்டாலே ஓடும், அதை காலில் போட்டு அழுத்தி மூக்க பிடித்து போடுவார்கள், அதிலிருந்து அந்த குழ்ந்தை யார் இஞ்சி சாறு கொடுத்தார்களோ அவர்களை எப்ப பார்த்தாலும் வில்லனாவே பார்க்கும்.
புதிய மனிதா உங்கள் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
சை.கொ.ப.நன்றி
சசி த்ம்பி எல்லோருக்கும் பயன் பட்டால் சரி
மனோ அக்கா (அக்கரா) என்பது சுக்கு, அதிமதுரம், திப்பிலி போல் அதுவும் ஒரு மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
விலையும் கொஞ்சம் அதிகம்
நாங்க மொத்தமா வாங்கி திரித்து வைத்து கொள்வோம்.
எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது
விருட்சம் வருகைக்கு மிக்க நன்றி,
சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டும் காய்ச்சி கொடுப்பார்கள், தேனை பற்றி தகவலுக்கு நன்றி, நல்ல் சுத்ததேனா வாங்கி பயன் படுத்தனும்.
வருகைக்கு நன்றி இளங்கோ
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நிஜாமுதீன், உங்கள் பக்கம் வரவே முடியல முடிந்த போது வரேன்
சக்தி வருகைக்கு மிக்க நன்றி
ரியாஸ் இனி குளிர் சீசன் ஆரம்பிக்கும் எல்லோருக்கும் போட்டுவாட்டத்தான் செய்யும்
நன்றி கிருஷ்ன வேனி, கண்டிப்பா
வேலன் சார் எல்லோரும் மனத்ளவில் புதுமணத்தம்பதிகள் தான்.
லூஸ் மோஷன் ஆகுதுன்னா கரமான து எதுவும் கொடுக்காதீர்கள்
டேங்கில் சர்க்கரை உப்பு போட்டு கொடுங்கள்
அன்னு உங்கள் துவாவுக்கு மிக்க நன்றி
ஆங்கிலத்தில் அக்கார காரம் ( anacyclus pyrethrum - botanical)Spanish chamomile,mountain atlas daisy
ஜலி,எங்கள் வீட்டிலும் இப்படி செய்வோம்.நல்ல குறிப்பு.
பயனுள்ள குறிப்பு ஜலீலா...நானும் இதுமாதிரி குழந்தைகளுக்குக் கொடுப்பதுண்டு.
ஸாதிகா அக்கா, தோழி சுந்தரா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றீ
சளி,இருமல் பிடித்தால் அலோபதி மருந்து சாப்பிட்டால் 3 நாள் முதல் ஒரு வாரம் வரை சளி,இருமல் நிற்காது.
நானே பரிட்சித்துப் பார்த்த வெற்றிகரமான சளி ரெசிபி.
சிறிது நீரில் மிளகு பொடி செய்து அதனுடன் இஞ்சியும் தட்டிப் போட்டு கொதிக்க வைக்கவும்.அதனுடன் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் வடிகட்டிய பாலில் குங்கும பூ,தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
சளி,இருமல் போயே போயிந்தி.
சளிக்கு அண்ணாதுரை மருந்து ஒன்றும் உள்ளது.மூக்குப் பொடி.
தப்புத்தான்!ஆனால் விளையாட வரும் பக்கத்து வீட்டுக் குழந்தை திம் மீ!திம் மீ ன்னு வற்புறுத்தும் போது அது மூக்குலேயும் ஒரு தடவு தடவி தும்ம வச்சு சிரித்தது மகிழ்ச்சியா இருந்தது குழந்தைக்கும் எனக்கும்:)
நானும் இப்போ இஞ்சி சாறும் துளசியும்தான் கொடுத்துட்டு இருக்கிறேன். இஞ்சி சாறு பாத்தாலே குழந்தைங்க ஓடுதுங்க. எப்படியோ கட்டாயப்படுத்தி கொடுக்கிறேன். இஞ்சி சாறு எடுக்க நல்ல குறிப்பு! முயற்சி செய்து பார்க்கிறேன்.
super tips.
super tip.v r in living in dubai for the past two years.my 4 year old daughter always get cold after coming here.i tried this..its perfect.thanks alot.
Jaleela....iam totally speechless ! evvalavu azhagaaga kurippugalai ezhuthi irukkenga.....kandippaaga intha post'ai naan bookmark seigiren ! ...."Inju rasam" recipe ullathaa ? konjam anuppinaal nanraaga irukkum :) Thodarnthu Healthy Morsels'kaaga post panratharku mikka nanri :)
இதை என் பிள்ளைங்களுக்கு கொடுத்தேன்..ரொம்ப யூஸ் ஃபுல் தேங்ஸ் அக்கா :)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா