இங்கு (துபாயில்) அதிகமாக கிடைப்பது பெரிய ராஜ இறால் தான். அந்த பெரிய் தலைய் தூக்கி போட மனசு வரல. ஆகையால் பஜ்ஜியா சுட்டுவிட்டேன்.
இறால தலைய குழம்பில் சேர்த்தாலும் , சூப் வைத்தாலும், மொரு மொருவென வறுத்தாலும் ருசியாக இருக்கும் , ஆனால் இறாலை சுத்தம் செய்வதே பெரிய வேலை அதை தலையையும் சுத்தம் செய்ய சோம்பல் பட்டு சில நேரம் சிறியதாக இருந்தால் ஒன்றிரண்டுமட்டும் ஆய்ந்து விட்டு தூக்கி போட்டு விடுவேன். ஆனால் தலையே நல்ல இரண்டு இன்ச் அளவுக்கு இருந்த்து.
இறாலை தோலுரித்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை அகற்றவும். தலையில் நீட்டாக உள்ள குச்சிகளை கத்திரியால் கட்பண்ணவும்,. அழுக்கு போக சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
கடலை மாவு – முன்று சூப் ஸ்பூன் அள்வு
மைதா மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
அரிசி மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
காஷ்மீரி சில்லி பொடி – முக்கால் டீஸ்பூன்
உப்பு – ருசிக்கு தேவையான அளவு (முக்கால் டீஸ்பூன்)
ரெட் கலர் பொடி – ஒரு சிட்டிக்கை
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஓரு டீஸ்பூன்
இறால் – 10 பெரியது
மிளகாய் தூள் – ஒரு ஒன்னறை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்க்ரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
1. இறால் மற்றும் இறால் தலையை சுத்தம் செய்து சேர்க்க வேண்டிய மசாலாக்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
2. பஜ்ஜி கலவைக்கு கொடுத்துள்ள பொருட்களை நன்கு கட்டியாக கரைத்து ஊறவைத்த இறால் தலை மற்றும் இறாலை டிப் செய்து டீப் பிரை செய்யவும்.
குறிப்பு:
பஜ்ஜி வகை குறிப்புகள் ஏற்கனவே நிறைய கொடுத்துள்ளேன், இறால் சிக்கன், முட்டை செய்யும் போது மைதா சேர்ப்பதால் நன்கு கோட் ஆகும், காய் கறி வகைகளுக்கு மைதா சேர்க்கனும் என்று அவசியம் இல்லை லேசாக பிரட்டி போட்டாலே போதும்.மைதா சேர்ப்பதால் நல்ல ஷாப்டாகவும் புஸுன்னும் இருக்கும்.
இந்த குறிப்பை உம்மு மைமூனின் சமையல் உலகில் அடி எடுத்து வைக்கும் இல்லத்த்ரசிக்கான வாரகுறிப்புக்காக அனுப்புகிறேன்.
தயிர் சாதம்
Tweet | ||||||
20 கருத்துகள்:
ithu nammaku vendam
ஆஹா..ஜலி..அருமையான ஐடியாவாக உள்ளதே!டிரை பண்ணிடுவோம்
ஆகா.. புதுசா இருக்கே... அம்மா கிட்ட சொல்லி செய்ய சொல்றேன்...
My tummy started rumbling by seeing this, yumm yumm. Thank you sis for linking this delicious snack with Any One Can Cook.
வித்யாசமா இருக்கு அக்கா கட்டிங் முறைதான் புரியல ஒரு படம் போடுங்க அக்கா....
இறால் தலையை ஃப்ரை செய்து சாப்பிடுவதுண்டு,காயவைத்து,வறுத்து இடித்து சம்பல் செய்வதுண்டு,பஜ்ஜி புதுசு.
new recipe, looks great
ராஜ இறால் என்றால் lobster மாதிரி இருக்குமா...
first time here.... iral thalai eppothume, nan use panna maaten... is it good to use it? is it lobster? i have not cooked with lobster thats y asking...
great
Thank you
new recipe
எல்.கே நன்றி
ஸாதிகா அக்கா ஆமாம் திடீர் யோசனை, செய்தேன்,பஜ்ஜி ருசியில் தலையில் செய்தது என்று யாரும் கண்டு பிடிக்கல
உம்மு மைமூன் கருத்துக்கு மிக்க நன்றி
வெறும்பய வருகைக்கு மிக்க நன்றி ஆமாம் புதுசு தான்
சீமான் கனி, தலையை தனியாக கிள்ளியது, தலையில் உள்ள ஓட்டை பிரித்து விட்டு, கண்ணுக்கு மேல் உள்ள் மீசையை வெட்டனும். பிறகு சுத்தமாக கழுவினால் போது,.
பெரிய இறால் வாங்கும் போது முடிந்தால் படத்துடன் போடுகிறேன்
ஆசியா, பிரியாணி, உப்புமா, சேமியாவில் போடுவோம் மணமாக இருக்கும், வறுத்து சாப்பிடுவோம்.
பஜ்ஜி நானா கண்டுபிடிச்சி போட்டது.
ஆனால் சம்பல் வைத்ததில்லை.
நன்றி கிருஷ்னவேனி
கீதா ஆமாம் இங்கு கிடைப்பதெலாம் 85 % பெரிய இறால் தான்.
akila thank you for your first visit and comment
வாங்க டாக்டர் ராம் மோகன் வருகைக்கும் கருத்து தெரிவித்த்மைக்கும் மிக்க நன்றி
இறால் தலை பஜ்ஜி!!!
புதிய சமையல் குறிப்பு!
வித்தியாசமான செய்முறை!!!
சுவையும் அபாரம் (என்று
எண்ணுகிறேன்.)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா