Monday, October 25, 2010

சிக்கன் பிரியாணி - chicken biriyani



தேவையானவை

பாசுமதி அரிசி – அரை கிலோ

Ø சிக்கன் - அரை கிலோ
Ø வெங்காயம் – கால் கிலோ
Ø தக்காளி – கால் கிலோ
Ø தயிர் - கால் டம்ளர்
Ø இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி
Ø கொத்தமல்லி - கால் கட்டு
Ø புதினா - எட்டு இதழ்
Ø பச்சை மிளகாய் - நான்கு
Ø மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
Ø எலுமிச்சை - பாதி பழம்
Ø பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
Ø கிராம்பு - இரண்டு
Ø ஏலம் - ஒன்று
Ø எண்ணெய் - கால் டம்ளர்
Ø நெய் - ஒரு தேக்கரண்டி
Ø உப்பு - தேவைக்கு










செய்முறை

Ø முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

Ø எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Ø எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

Ø இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

Ø தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

Ø தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

Ø மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)Ø ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.




I sending this recipe to akila's event dish name Start with C



25 கருத்துகள்:

சுப்புரதினம் said...

சிக்கன் பிரியாணி படமே அசத்தல்....

ஜெய்லானி said...

ஆஹா..படத்தை போட்டு நினைவை அதிகப்படுத்திட்டீங்களே..!!
மனசே...பொறு நாளை மதியம் வரை..!!

சூப்பர் பிரியாணி..!! :-))

Krishnaveni said...

that looks so good, my fav, must be super delicious

எல் கே said...

present

Asiya Omar said...

அழகாக பரிமாறீருக்கீங்க.அருமையாக இருக்கு.

சசிகுமார் said...

என்னதான் ஸ்பெஷல் அயிட்டங்கள் இருந்தாலும் பிரியாணிக்கு நிகர் எதுவும் கிடையாது. அதுவும் நம்ம ஜலீலா அக்கா சொல்லிகொடுத்த சிக்கன் பிரியாணின்னா சொல்லவா வேணும்.

மங்குனி அமைச்சர் said...

என்னது சிக்கன் பிரியாணியா ? என்னக மேடம் 478 பதிவுக்கு அப்புறம் , மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிரின்களா ?


I sending this recipe to akila's event dish name Start with C ////

வாழ்த்துக்கள் மேடம்

நட்புடன் ஜமால் said...

நாங்க என்னத்த முயற்சித்தாலும் சிக்கன் வெள்ளையாத்தான் இருக்கு
மசாலா சரியாக சேர மாட்டேங்குதே ...

Unknown said...

super taeste

ஆமினா said...

சும்மா பிரியாணி செஞ்சதோட காட்ட வேண்டியது தானே! சிக்கன் ப்ரை, மிட்டா கானா, தயிர் சட்னின்னு சகலத்தையும் கண்முன்னாடி காமிச்சு வாய்ல எச்சி ஊற வச்சுட்டீங்க போங்க :(
சீக்கிரமே செஞ்சு பாத்துடுறேன் ஜலீலாக்கா!!

Akila said...

ayoo briyani looks superb.... antha full plateyum nane eduthukaren....

thanks for sending to my event...

Event: Dish Name Starts with C
Dish Name Starts with B - Roundup
Learning-to-cook

Unknown said...

தக்காளி சேர்த்தால், பிரியாணி தக்காளி சாதமாகிவிடும்!

Anonymous said...

akka,looks so delicious.ur biryani recipes are always yummy.........

R.Gopi said...

சும்மா வந்தேன்....

எட்டிப்பார்த்தேன் என்ன பதிவு போட்டு இருக்கீங்கன்னு...

நெக்ஸ்ட் மீட் பண்றேன்....

ஸாதிகா said...

இதிலே புளிக்கத்தரிக்காய் மட்டும் மிஸ்சிங்.படங்கள் சூப்பர்.

Chitra said...

Yummy and mouth-watering biriyani!!!

தி.பரமேசுவரி said...

அட, மதிய நேரத்துல உங்க வலைப்பூவுக்குள்ள தெரியாம நுழைஞ்சுட்டேன். படத்தைப் பார்த்த உடனே ரொம்பப் பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. படிக்க படிக்க நாக்குல தண்ணிதான். இதோ கிளம்பிட்டேன். வந்துகிட்டே இருக்கேன்.

தி.பரமேசுவரி said...

ரொம்ப நல்லா இருக்கு. கம கமன்னு வாசனை வருது. இதோ வந்துகிட்டே இருக்கேன். மதிய வேளை நல்ல பசி.

Jaleela Kamal said...

சுப்புரதினம் said...
சிக்கன் பிரியாணி படமே அசத்


்வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

//ஜெய்லானி said...
ஆஹா..படத்தை போட்டு நினைவை அதிகப்படுத்திட்டீங்களே..!!
மனசே...பொறு நாளை மதியம் வரை..!!

சூப்பர் பிரியாணி..!! :-))

October 26, 2010 1:03 AM
///
ஆஹா படத்த போட்டு ஆசை கிளறி விட்டுட்டேனா?
உடனே செய்து சாப்பிட்டு விடுங்கள், கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

Krishnaveni said...
that looks so good, my fav, must be super delicious

October 26, 2010 1:15 AM
Krishnaveni thanks for yr comment

Jaleela Kamal said...

LK said...
present


நீங்க சாப்பிடா த அயிட்டம் என்றாலும் தவறாமல் வருகைக்கு மிக்க நன்றி LK

Jaleela Kamal said...

asiya omar said...
அழகாக பரிமாறீருக்கீங்க.அருமையாக இருக்கு.

October 26, 2010 9:36 AM
உங்கள் அன்பான கமெண்டுக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

சசிகுமார் said...
என்னதான் ஸ்பெஷல் அயிட்டங்கள் இருந்தாலும் பிரியாணிக்கு நிகர் எதுவும் கிடையாது. அதுவும் நம்ம ஜலீலா அக்கா சொல்லிகொடுத்த சிக்கன் பிரியாணின்னா சொல்லவா வேணும்.

October 26, 2010 11:17
சசி ஆமா என்னதான் சமையலானாலும், பிரியாணிக்கு நிகர் எதுவும் கிடையாது. வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

மங்குனி அமைசர் said...
என்னது சிக்கன் பிரியாணியா ? என்னக மேடம் 478 பதிவுக்கு அப்புறம் , மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிரின்களா ?


I sending this recipe to akila's event dish name Start with C ////

வாழ்த்துக்கள் மேடம்

October 26, 2010 11:18 AM



ஆமா அமைச்சரே மறுபடி முதலே இருந்து , எங்குள பதிவுக்கோ இங்கு கமெண்ட்
நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா