நிறைய பெண்களுக்கு பாதவெடிப்பு, பாதம் அழுகி போயிருப்பது , கால் விரலுக்கிடையில் புண்கள் ஏற்பட்டு ரொம்ப வேதனையாக இருக்கும்.
நடக்கும் போது குதிக்கால் வலி, ஆனால் எதையும் பொருட்படுத்துவதில்லை.
இதனால் உடுத்தி கொள்ளும் விலை உயர்ந்த சேலை,சுடிதார் , நைட்டியில் அடிபாகம் பாத்த்தில் பட்டு பட்டு கிழியும்.
உடலில் ஏற்படும் பல வியாதிகள் குணமாக முதலில் பாத்த்தை சுத்தப்படுத்தினால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
.இது போன்ற பொருட்களை வீட்டிலேயே வாங்கி வைத்து கொண்டால் அடிக்கடி நாமே கால்களை சுத்தப்படுத்தி கொள்ளலாம்.
இருக்கிர பிஸி வேலைகளில் பெண்கள் தங்கள் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
கண்டிப்பாக வாரம் ஒரு நாளாவது பெண்கள் பாதங்களுக்கு கேர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பட்த்தில் காட்டியுள்ள ஸ்க்ரபர் மூலம் நன்கு வெடிப்புகளை தேய்த்து சுத்தப்படுத்தவும். ஏற்கனவே டெட்டாலில் கால் ஊறி இருப்பதால் வெடிப்புகளை ஈசியாக ஸ்க்ரபர் மூலம் எடுத்து விடலாம்.
எல்லா வெடிப்புகளையும் கிளீன் செய்த்தும். நன்கு சுத்தமாக துடைத்துவிட்டு வேஸ்லின் (அ) ஃபுட் கிரீன் அப்ளை செய்து ஒரு பாலித்தின் கவரை போட்டு அதற்கு மேல் சாக்ஸ் அணியவும்.
ஒரு மணி நேரத்தில் எடுத்து விடலாம்.
அப்படி பாலித்தின் கவர் போடாமல் வெரும் சாக்ஸ் மட்டும் போட்டு கொண்டால் எல்லா மருந்தும் சாக்ஸில் போய் விடும்.
இப்ப்டி பிலாஸ்டிக் கவர் அணிந்து அதன் மேல் சாக்ஸ் அணிந்தால் சாக்ஸும் கிளீனாக இருக்கும்.
தினம் காலுக்கு கடுகு எண்ணை (அ) தேங்காய் எண்ணை தேய்த்து வந்தாலும் காலில் வெடிப்புகள் வருவதை தவிர்க்கலாம்.
காலில் பித்த வெடிப்பு இருந்தால் காலில் நிறைய அழுக்கு சேரும், அழுக்குகளை பழைய டூத் பிரஷ் கொண்டும் ஷாம்பு தொட்டு சுத்தப்படுத்தலாம்.
காலில் அழுக்கு சேராமல் இருக்க முதலில் மிதியடிய அடிக்கடி துவைத்தாலே போதும்.
அடுத்து வீட்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாப் செய்தாலே சுத்தமாக இருக்கும்.
வறண்ட சருமத்தினருக்கு கால் மிக்வும் டிரையாக இருக்கும்.. இதற்கும் தேங்காய் எண்ணை (அ) வாஸ்லினும் தடவலாம்.
சிலருக்கு என்ன தான் கால் பித்த வெடிப்ப கீலின் செய்தாலும் இரண்டு நாளில் வெடிப்பு மீண்டும் வரும். வாரம் இரண்டு நாள் தொடர்ந்து அன்றாட வேலைகளை செய்வது போல் காலையும் கவணித்தால் பல வியாதிகளிலி ருந்து விடுதலை பெறலாம்.
ஒரு செங்கலை அல்லது சொர சொரப்பான கல்லை பாத்ரூமில் வைத்து கொண்டால் கூட காலை கிளின் செய்ய நேரமில்லாதவர்கள் தினம் குளிக்கும் தினம் கல்லில் காலை இரண்டு நிமிடம் நன்கு தேய்த்தால் கூட சரியாகும்.
புதுசா வீடு கட்டுபவர்கள் முன்பெல்லாம் துணியை அடித்து துவைக்க கல் ஒன்று வைத்து இருப்பார்கள் அது போல் காலுக்கென்று தனியாக ஒரு கல்லையும் பதிக்க சொல்ல்லாம்.
காலை பித்தவெடிப்பில்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் விலை உயர்ந்த பட்டு,மைசூர் சில்க், மற்றும் வொர்க் வைத்த சேலைகளையும் பாழாகாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
சேலை பாழாகாமல் இருக்க சேலையின் அடியில் பால்ஸ் வைத்து தைத்து கொள்ளுங்கள்.
கடற்கரைக்கு செல்பவர்கள் காலை சிறிது நேரம் மண்ணில் புதைத்து அலைகள் வரும் போது சிறிது நின்றால் கூட பித்த வெடிப்பு சரியாகும்.
அடிக்கடி மருதாணி போட்டு கொண்டாலும் வெடிப்பு சரியாகும்.
Tweet | ||||||
28 கருத்துகள்:
அருமையான பதிவு
akka, super post!
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பயனுள்ள பதிவு..
அட அழகுகுறிப்பெல்லாம் போட ஆரம்பித்து விட்டீர்கள்?இதுக்குத்தான் ஆல் இன் ஆல் ..ஒகே..நடத்துங்க..
உங்கள் பயனுள்ள் தகவலுக்கு நன்றி
பெண்களுக்கு பயனுள்ள பதிவு..
பெண்களுக்கு பயனுள்ள பதிவு..வாழ்க வளமுடன்.
வேலன்.
பகிர்வுக்கு நன்றி.
குறித்துக்கொண்டேன் தங்கமணிக்கு பயன்படும் :-)
நேசமுடன் ஹாசிம் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
நன்றி வானதி
வெறும்பய சில ஆண்களுக்கு ப்யன் படும்/
வருகைக்கு மிக்க நன்றி
ஸாதிகா அக்கா ஏற்கனவே போட்டுள்ல குறிப்புகளை பார்க்கவில்லையா?
நிலாமதி முதல் வருகைக்கு மிகக் ந்ன்றி
நன்றி காஞ்சனா
வேலன் சார் கருத்திட்டமைக்கு மிகக் நன்றி + சந்தோஷ்ம்/
சிங்கக்குட்டி, டைரியில் நோட் பண்ணியாச்சா, நிச்சயமா உங்கள் தங்கமணிக்கு உதவும்
Ennaku useful tip kuduthurukkenga. thanks madam :)
arumaiyaana kuRippu
நல்ல குறிப்பு!!!
பெரும்பான்மை பெண்களுக்கு உள்ள பிரட்சனை மிகவும் பயனுள்ள பதிவு..
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
நன்றீ ஆசியா.
பாரத் பாரதி, வருகைக்கு மிக்க நன்றீ பதிவ பற்றீ ஒன்றும் சொல்லாமல் , வெரும் கவிதைய , எழுத சொல்லிட்டு போயிருக்கீங்க.....
சித்ரா உங்கலுக்கு பயன்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி
வாங்க மலிகா, கவிதை பிஸியிலும் வந்து டிப்ஸ் படுத்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கருத்திற்கு மிக்க நன்றி தெய்வ சுகந்தி
தமிழரசி ரொம்ப நன்றி பா பின்னூட்டம் போட்டத்துக்கு
டெனிம் வருகைக்கு மிக்க நன்றி
useful tips
உபயோகமான தகவல்..ம்ம்
நன்றி சாரு
நன்றி இர்ஷாத் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க
thank u .Its an useful tip.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா