Showing posts with label மைக்ரோவேவ் ச‌மைய‌ல். Show all posts
Showing posts with label மைக்ரோவேவ் ச‌மைய‌ல். Show all posts

Sunday, February 24, 2013

நியுடெல்லா சாக்லேட் மக் கேக் - Nutella Chocolate Mug Cake






இந்த குறிப்பு வல்லமையில் வெளியாகி உள்ளது 


குழந்தைகள் டிபன் பாக்ஸ்க்கு இப்படி கொஞ்சமாக அவசரத்துக்கு செய்து கொடுத்தனுப்பலாம்.
Linking to  virunthu unna vaangka viji' & Getssamaiyal show  your Style to world, piriya's valentine's day recipe contest, Faiza's passion on plate , lemon curry ramya's Innovative recipes


Saturday, February 23, 2013

ஸ்ட்ராபெர்ரி பிஸ்தா கேக் - Strawberry Pista Cake




ஸ்ட்ராபெர்ரியை விரும்பாத குழந்தைகளே கிடையாது. பழங்களிலேயே எல்லா குழந்தைகளின் விருப்பமான பழ ஸ்ட்ராபெர்ரி பழம் தான். கொஞ்சமாக இப்படி செய்து குழந்தைகளுக்கு காலை உணவுக்கோ பள்ளிக்கோ கொடுத்தனுப்பலாம்.


தேவையானவை


மைதா – 3 மேசை கரண்டி
சர்க்கரை – 3 மேசை கரண்டி
பேக்கிங் பவுடர் – ½ தேக்க்ரண்டி
இட்லி சோடா – ¼ தேக்கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
பால் – 1 மேசை கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 துளி
பிஸ்தா ப்ளேக்ஸ் – 1 மேசைகரண்டி
நறுக்கிய ஸ்ட்ரா பெர்ரிபழம்  - 3 தேக்கரண்டி

செய்முறை

மைதா பேக்கிங் பவுடர், இட்லி சோடா வை சலித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையையும் பட்டரையும் சேர்த்து நன்கு கிரீம் போல அடித்து கலக்கவும்.
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து சர்க்கரை கலவையில் கலக்கவும்.
 மைதா கலவையை சிறிது சிறிதாக தூவி கலக்கி ரோஸ் எசன்ஸ் மற்றும் பாலை சேர்க்கவும்.
கடைசியாக பிஸ்தா பிலேக்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கலக்கி மைக்ரோவேவ் பவுளில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும.


ஆறியதும் துண்டுகளாக போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

Serves – 2 kids
Preparation Time: 7 min
Cooking time: 5 min


Linking to Faiza's Passion on plate , priya's valentine;s day recipe contest


Sunday, September 2, 2012

மைக்ரோ்வேவ் பால்கோவா - Microwave Palkova



மைக்ரோ்வேவ் பால்கோவா
பால்கோவா அனைவரும் விரும்பி சாப்பிடுவது, மைக்ரோவேவில் சுலபமாக் 3 நிமிடத்தில் செய்து விடலாம். தீடீர் விருந்திகளை அசத்தலாம். குழ்ந்தைகளுக்கும் எளிதாக செய்து கொடுக்கலாம்.
தேவையானவை
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 சிறிய டின்
தயிர் - 1 மேசைகரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு சிட்டிக்கை
செய்மு்றை
மைக்ரோவேவ் சேஃப் கண்டெயினரில் ஸ்வீட்ட்னட் கண்டென்ஸ்ட் மில்க், தயிர், ஏலப்பொடி, நெய், கால் சிட்டிக்கை உப்பு கலந்து முத்லில் 1 நிமிடம் ஹையில் வைக்கவும்.
கையில் க்ளவுஸ் போட்டு பவுளை வெளியில் எடுத்து கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
இதே போல் முன்றாவது முறையும் கிளறி எடுக்கும்.
சுவையான பால் கோவா ரெடி,


Milk peda- doodh peda - பால் கோவா

Monday, February 15, 2010

கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala chocolate nuts cake



மைதா = அரை ஆழாக்கு (100 கிராம்)
பொடித்த ச‌ர்க்க‌ரை = அரை ஆழாக்கு
முட்டை = இரண்டு
ப‌ட்ட‌ர் = 100 கிராம்
ந‌ட்ஸ் (முந்திரி,பாத‌ம்,பிஸ்தா) இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
இட்லி சோடா = அரை சிட்டிக்கை
உப்பு = அரை சிட்டிக்கை
சாக்லேட் எஸ‌ன்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி
கொக்கோ ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா = கால் தேக்க‌ர‌ண்டி ( ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு தூள்)




மைதா பேக்கிங் பவுடர்,உப்பு, இட்லி சோடாவை சலித்து கொள்ளவும்.பட்டர், சர்க்கரை சேர்த்து நன்கு பிளெண்டரால் அடிக்கவும்.

கலர் மாறியதும் முட்டையை நுரை பொங்க அடித்து சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.அடுத்து மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
அடுத்து கரம் மசாலா,கொக்கோ பவுடர், எஸன்ஸையும் சேர்த்து கிளறி மேலே நட்ஸ் வகைகளை தூவி மைக்ரோவேவ் ஓவனின் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

ரொம்ப மணமா இருந்தது உடனே தட்டு காலி.






//நேற்று ஹனீப் பிறந்த நாளுக்கு ஸ்கூல் போய் சாக்லேட் எல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் சோகமா வந்தார்.
என்னன்னு கேட்டா ஒரு பையன் பர்த்டே வா அப்ப கேக் வெட்ட மாட்டியா? இல்ல, பிரண்ஸ் கூட வெளியில் போக மாட்டீயா? இல்ல அப்ப யாரும் கிஃப்ட் கொண்டு வர மாட்டாங்களா? இல்ல.
இப்படின்னு சொல்லி ஒரு பையன் உசுப்போத்தி விட்டுட்டான், சரி கொஞ்சமா கேக்காவது செய்து கொடுப்போம் என்று மதியம் கிடைத்த ஒரு மணி நேர கேப்பில் எல்லாம் மிக்ஸிங் எல்லாம் செய்து விட்டு கேக் ஓவனில் வைக்க போனா, ஓவன் வொர்க் ஆகல ஆஹா இவ்வளவு ரிச்சா கலக்கி வைத்து விட்டோம் வொர்க் ஆகலையே என்று மைக்ரோவேவில் வைத்தேன்.அதுவும் சூப்பரா தான் வந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த சாக்லேட் வேறு
கேக் சாப்பிட்டதும் பையனுக்கு ரொம்ப சந்தோஷம்.
அடுத்து இரவு வந்து ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு இதுவரை எங்கும் போகல. அப்ராவில் தினம் நடக்கும் பையர் வொர்ஸ் கூப்பிட்டு போய் காண்பித்து வந்தாச்சு,
அப்பாடா வெளியில் கூப்பிட்டு போய் வந்ததும் ஹனீபுக்கு பிறந்த நாள் முழுமை அடைந்த மாதிரி ஆகிவிட்டது