Tweet | ||||||
Monday, February 27, 2012
பால் கோவா - Milk Peda
பால் கோவா
தேவையானவை
தண்ணீர் – 500 மில்லி
மில்க் பவுடர் – 10 தேக்கரண்டி
சர்க்கரை – 3 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
பாலாடை – 2 மேசை கரண்டி
அலங்கரிக்க
பிஸ்தா
காய்ந்த கருப்பு திராட்சை(ரெயிசின்ஸ்)
செய்முறை
500 மில்லி தண்ணீரில் பால் பவுடரை கரைத்து நன்கு கொதிக்க அடிபிடிக்காமல் அப்ப அப்ப கிளறி விட்டு தீயின் தனலை குறைத்து வைத்து வற்றவிடவும்.
பால் 50 மில்லியாக வற்றி கலர் மாறிவரும் போது சர்க்கரை, நெய், பாலாடை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
பால் கோவாவை விரும்பிய வடிவில் அலங்கரிக்கவும்.
குறிப்பு: பாலாடை ஒவ்வொரு முறை பால் காய்ச்சும் போது அதை எடுத்து ப்ரிஜரில் சேமித்து வைப்பேன்.ஏதாவது கிரேவிகளுக்கு, ஸ்வீட் ரெசிபிக்கு பயன்படும். இல்லை பேசியல் செய்யவும் பயன் படும். இது தீடீர் ஐடியா தான்.தினம் காய்ச்சும் பால் வற்றி விட்ட்து. மற்ற எந்த ஸ்வீட்டா இருந்தாலும் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.ஸாதிகா அக்கா கிட்ட வற்றிய பாலில் செய்ய உடனடி ஸ்வீட் ரெசிபி ஒன்று சொல்லுங்க என்றேன். பால்கோவா செய்துடுங்கன்னு சொன்னாங்க.. செய்தாச்சு.
பரிமாறும் அள்வு : 3 நபர்களுக்கு
முகம் பளபளக்க டிப்ஸ் டிப்ஸ்
பாலடையுடன் , சிறிது தேங்காய் எண்ணை ,நிவ்யா கிரீம் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தேய்த்து வெண்ணீரில் முகம் அலம்பினால் முகம் ஷாஃப்டாக பளபளப்பாகவும் இருக்கும்.
மாஸ்டர் செஃப் வின் பன்னதற்காக ஒரு ஸ்வீட் ரெசிபி.
Subscribe to:
Post Comments (Atom)
21 கருத்துகள்:
பால்கோவா சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்.
beautifully presented paal kova looks so yumm..
ட்ரீட் நல்லாவே இருக்கு ஜலீலாக்கா..
அன்புடன் பரிமாறிய பால்கோவா சூப்பர்.
ஆஹா....
சூப்பர் பால்கோவா....
எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று... உங்களை என்றாவது சந்தித்தால், இந்த பால்கோவா கொடுக்கச் சொல்லி கேட்கலாம் என்றிருக்கிறேன் ஜலீலா ஜி...
அருமையான பால்கோவாவை “அன்பு” கொண்டு பரிமாறிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி...
superaa sonning akkaa.naanum try panren
சூப்பர்ர் பால்கோவா!!
அடேயப்பா ருசியான பால்கோவா செய்வது இலகுவாக இருக்கே.
பால்கோவா நான் விரும்பி சாப்பிடுவேன்
ஆனால் பாலில் தான் பால்கோவா செய்வார்கள் என்று நினைத்திருந்தேன்
பால் பவுடரில் தான் செய்ய முடியுமா?
பகிர்வுக்கு நன்றி
சூப்பர் பால்கோவா.
ஆமாம் ஸாதிகா அக்கா திடீர் பால்கோவா
மிகச்சுலபம்
மிக்க நன்றி கல்பனா
சாந்தி ட்ரீட் சூப்பரா மிக்க நன்றி
மிக்க நன்றி ஆசியா
வாங்க கோபி வருகைக்கு மிக்க நன்றி
கண்டிப்பா செய்து தரேன்
கலை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் ஈசியாக வரும்
வாங்க அம்பலத்தார் வருகைக்கு மிக்க நன்றி
//பால்கோவா நான் விரும்பி சாப்பிடுவேன்
ஆனால் பாலில் தான் பால்கோவா செய்வார்கள் என்று நினைத்திருந்தேன்
பால் பவுடரில் தான் செய்ய முடியுமா?
பகிர்வுக்கு நன்றி.//
ஹைதர் அலி இதை பல விதமாக செய்யலாம்.
பால் பவுடரில் தான் செய்யனும் என்றில்லை, பாலை சுண்ட காய்ச்சியும் செய்யலாம்
கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்தும் செய்யலாம்
நான் இதை பால் பவுடரில் செய்து இருக்கிறேன்
வருகைக்கு மிக்க நன்றி காஞ்சனா
இதைத் தான் எதிர்ப் பார்த்தேன் ! நன்றி சகோதரி !
பால்கோவா அருமையான ருசி.
டிப்ஸ் அருமை.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா