அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி//
அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.
2.தூங்கி எழுந்தவுடன் ஓதும் தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாதனா வ இலைஹின் நுஷூர்.
நாம் (சிறிய மௌத்தாகிய தூக்கத்தில்) இறந்த பின்னர் நம்மை உயிர் பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
3.களா (இயற்கைத் தேவைக்காகப்) போகும் போது
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஃகுபுஃதி வல் ஃகபாஇஃதி
அல்லாஹ் ! நான் தீய ஆண்,பெண் ஷைத்தான்கலிடமிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
4.இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வரும் போது
அல்லாஹ்!நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்பம் தரக்கூடியதை நீக்கி, எனக்குச் சுகம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
5.உண்ணும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி வ அலா பர(க்)கத்தில்லாஹி
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும்,அவனது அபிவிருத்திகள் தரும் அருளைக் கொண்டும் உண்ணத் தொடங்குகிறேன்.
6.உணவு உண்ட பின் ஓதும் தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அத் அமனா வஸகானா வஜ அலனா மினல் முஸ்லிமீன்.
நமக்கு உண்ண உணவளித்து,பருகத் தண்ணீரும் தந்து, நம்மை முஸ்லீம்களில் ஆக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
7.புத்தாடை அணியும் போது
அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.
இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
8.கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!
9.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவதும், நன்மையைச் செய்யும் சக்தியும் மேலான, மகத்தான அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை
10 பிறையைக் கண்டதும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் யும்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் வத்தவ்ஃபீகி லிமா துஹிப்பபு வதர்ளா
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்பக் கூடியவற்றையும், பொருந்திக் கொள்ளக் கூடியவற்றையும் செய்வதற்கு வாய்ப்பையும் தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்
அல்லாஹ் தான்!
11. பள்ளிக்குள் நுழையும் போது
அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக்க
அல்லாஹ்! எனக்கு உனது அருளின் வாயில்களைத் திறந்து விடுவாயாக!
12.முஸாஃபாஹா செய்யும் போது ஓதும் தூஆ
யஃக்ஃபிருல்லாஹூ லனா வலகும்
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மன்னிப்பை அருள்வானாக!
13 .பள்ளியை விட்டு வெளியே வரும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக
அல்லாஹ்! நான் உன்னிடம் உனது கிருபையைக் கேட்கிறேன்.
14.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும்
அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.
அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.
15. தூங்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம பிஸ்மிக அமூ(த்)து வ அஹ்யா
அல்லாஹ்! நான் உன் பெயரைக் கொண்டே மரணிக்கவும், உயிர் பெறவும் செய்கிறேன்.
16 . ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா
அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!
Tweet | ||||||
5 கருத்துகள்:
அருமையான பதிவு. நான்காவது துவாவைக் காணோம். குஃப்ராநக்க .............. அதையும் போட்டு விடுங்கள்
சகோதரர் நவாஸ் ஒன்னு ஒன்னா பார்த்து டைப் பண்ணி, அது சிறிது ஒரு எழுத்து விட்டு இருக்கு அதான் வேறு புக்கை பார்த்து விட்டு சரியாக உள்ளதை எடுத்து போடனும்.
மிக பயனுள்ள பதிவு, நேரத்தை சரியான முறையில் தான் பயன்படுத்துகிறீர்கள், உங்கள் வலைப்பூவை வீட்டிலும் அறிமுகம் செய்தாச்சு, கமென்ட்ஸ் இடவில்லையென்றாலும் அவர்கள் ரெகுலராக விசிட் செய்வார்கள், தொடர்ந்து எழுதுங்கள். இறைவனின் அருள் உங்கள் மீது என்றென்றும் நிழவட்டுமாக.
ரொம்ப நன்றி சகோதரர் ஷஃபி, எல்லோரும் ஓதுவது ரொம்ப சந்தோஷம், எனக்கு ரொம்ப தெரியாது, பிட்டு பிட்டா சேகரித்த தூஆக்களை எடுத்து கோர்வையாக போட்டு வருகிறேன்.
மாஷா அல்லாஹ். அருமையான பதிவு
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா