தே.பொருட்கள்
ஆய்ந்த கீரை = முன்று டம்ளர்
சின்ன வெங்காயம் = 200 கிராம்
தேங்காய் துருவல் = அரை முடி (முறி)
காஞ்ச மிளகாய்= ஐந்து
உளுந்து = ஒரு மேசை கரண்டி
பூண்டு = ஆறு பல்
சீரகம் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
எண்ணை = ஆறு தேக்கரண்டி
செய்முறை
முருங்கக்கீரையை ஆய்ந்து முன்று டம்ளர் அள்வு எடுத்து அலசி வடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியை காயவைத்து அதில் காஞ்ச மிளகாய்,உளுந்து, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்.
பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி கீரையை சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் வேகவிடவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரக்கவும்.
சுவையான முருங்கக்கீரை பொரியல் ரெடி.
குறிப்பு:
தினம் சாப்பிடும் உணவில் கீரையை அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.
முருங்கக்கீரை கர்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.
Tweet | ||||||
5 கருத்துகள்:
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொரியல், எங்க வீட்டிலோ கீரை சாரு தான் வைப்பாங்க..ஆனால் அய்யாவுக்கு மட்டும் ஃபேவரைட் பொரியல்!!
வாங்க ஷாபி,
//எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொரியல், எங்க வீட்டிலோ கீரை சாரு தான் வைப்பாங்க..ஆனால் அய்யாவுக்கு மட்டும் ஃபேவரைட் பொரியல்!!//
இந்த முருங்ககீரை பல விதமாக வைக்கலாம் அதில் ஒரு வகை இது,
சூப் கர்பிணி பெண்களுக்கு பிள்ளை பெரும் நேரம் கொடுப்பது.
மற்றும் வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்கள் தேங்காஅய் பால் கொண்டு சூப், சாரு போல வைத்து சாப்பிடலாம்.
நன்றி சகோ, பொரியலயும் சாப்பிட்டுவிட்டு, அப்புறம் ஒரு கப் கீரைச்சாரையும் அய்யா குடிச்சுருவாருல்ல..(ரொம்ப வெவெகரமான ஆளா இருப்பான்போல...சிரிக்காதிங்க)
(நன்றி சகோ, பொரியலயும் சாப்பிட்டுவிட்டு, அப்புறம் ஒரு கப் கீரைச்சாரையும் அய்யா குடிச்சுருவாருல்ல..(ரொம்ப வெவெகரமான ஆளா இருப்பான்போல...சிரிக்காதிங்க)
hi hi
எங்களுக்கு முருங்கைகீரையெல்லாம் கிடைக்கறதில்லங்க. எனக்கும் இது பிடிக்கும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா