Saturday, June 20, 2009

கொத்து மல்லி கருவேப்பிலை ரசம்






//உணவு உண்ட பின் செரிமானத்துக்கு ரசம் ஒரு அருமையான உணவு, இதில் ரசத்தில் தாளிக்கும் கருவேப்பிலை மற்றும் கடைசியாக மேலே தூவும் கொத்து மல்லி புதினா கொண்டு தயாரிக்கும் விதம்.
கொத்தும‌ல்லி கீரை ந‌ம‌து உட‌லில் ர‌த்த‌தை சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து, கர்பிணி பெண்களின் வாய்க்கு ருசி ப‌டும், க‌ருவேப்பிலையை (முடி வ‌ள‌ர , முடி கொட்டும்பிரச்சனைக்கு) தேங்காய் எண்ணை (அ) ந‌ல்லெண்ணையில் காய‌வைத்து பொடித்து த‌லைக்கு தேய்பார்க‌ள், அதை உண‌வாக‌ உட்கொள்வ‌த‌ன் கூடுதல் பலன் .கிடைக்கும்.
ஜுர‌ம் வ‌ந்து வாய் க‌ச‌ப்பாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செய்து கொடுத்தால் வாய்க்கு ருசி ப‌டும். க‌ல்யாண‌ விட்டில் பிரியாணி சாப்பிட்டு இரவு வெரும் ர‌ச‌ம் சாதம், மாசி தொட்டு கூட சாப்பிட‌லாம். //


தேவையான‌ பொருட்க‌ள்
****************************
புளி = ஒரு சிறிய‌ ஒன்ன‌றை எலுமிச்சை அளவு
உப்பு = ருசிக்கு
ரசப்பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

அரைத்து கொள்ள‌
***************** *
ந‌ன்கு ப‌ழுத்த‌ த‌க்காளி = ஒன்று
கொத்தும‌ல்லி = ஒரு கைப்பிடி
க‌ருவேப்பிலை = ஒரு கைப்பிடி
மிள‌கு = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
பூண்டு = நான்கு ப‌ல்
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்தயம் = 5 எண்ணிக்கை
பெருங்காய‌ம் = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = 5 இதழ்
கொத்து ம‌ல்லி சிறிது


செய்முறை


1.புளியை க‌ழுவி சுடுத‌ண்ணீரில் க‌ரைத்து முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வைக்க‌வும்.


2. கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலையை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.


3. இப்போது அரைக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை அரைத்து கொண்டு அத்துட‌ன் த‌க்காளி, பூண்டு, கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை சேர்த்து அரைத்து (அரைத்த‌து + மிக்சியில் இருந்து வ‌ழித்தெடுத்த‌து) இர‌ண்டு ட‌ம்ள‌ர் அள‌வு.


4. இப்போது க‌ரைத்து வைத்திருக்கும் புளி த‌ண்ணீருட‌ன் அரைத்த‌ க‌ல‌வை, ர‌ச‌ப்பொடி, உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.


5. இப்போது தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை க‌ரிகாம‌ல் தாளித்து கொதித்து வைத்திருக்கும் க‌ல‌வையில் ஊற்றி கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.


6. க‌ம‌ க‌ம‌ன்னு கொதிக்கும் போது உங்க‌ள் ர‌ச‌ம் வாசனை எட்டு வீட்டு மூக்கை துளைக்கும்.


குறிப்பு
ர‌சத்தை ப‌ல‌வ‌கையாக‌‌ வைக்க‌லாம். த‌க்காளி ர‌ச‌ம், அரைத்து விட்ட‌ ர‌ச‌ம்,தேங்காய் பால் ர‌ச‌ம், எலுமிச்சை ர‌ச‌ம், அன்னாச்சி ப‌ழ‌ ர‌சம்.
வாங்கும் ஊட்டி புளிப்பா போச்சா க‌வ‌லை வேண்டாம் அதிலும் ர‌ச‌ம் த‌யாரிக்க‌லாம்.இதில் ஒரு சிறிய‌ பிட்டு வெல்ல‌ம் போட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இது சுமார் ஆறு பேர் சாப்பிட‌லாம்

4 கருத்துகள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

நானும் try பண்ணலாம்னு இருக்கேன்,,,,,,

(எப்புடி ஐடியா???)

அப்படியே நம்ம எரியாவுக்குள்ளும் வந்துடுங்க.....

Jaleela said...

///நானும் try பண்ணலாம்னு இருக்கேன்,,,,,,

(எப்புடி ஐடியா???)///
சூப்பர் ஐடியா


சப்ராஸ் அபூபக்கர் டிரை பண்ணி பாருங்கள், இந்த வாசனைக்கே அடிக்கடி செய்ய் வேண்டி வரும்,

எங்க ஏரியா உள்ளே வந்துட்டீங்க நாங்களும் வாராமா போய்விடுவோமா வருவோமுள்ள்

S.A. நவாஸுதீன் said...

முயற்சி பண்ணி பார்த்துடுவோம்

Jaleela said...

நவாஸ் எப்படி இருந்தது என்று வந்து சொல்லனும்.
பதிலுக்கு நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா