--
AJWAIN NIJELLA SEED PURI
குஜராத்தி ஆட்டா - அரை கிலோ
தேவையானவை
கருஞ்சீரகம், ஓமம், - தலா ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
எண்ணை - 2 மேசை கரண்டி
தண்ணீர் - 200 மில்லி ( தேவைக்கு)
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
கருஞ்சீரகம், ஓமம், மிளகு லேசாக வறுத்து, மாவில் கலக்கவும்.
மேலும் உப்பு மஞ்சள் தூள்,சர்க்கரை, எண்ணை கலந்து தேவைக்கு தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு மாவை நன்கு பிசையவும்.பிசந்த மாவை 1 மணி நேரம் ஊறவிடவும்.
ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பூரிகளாக இட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான மருத்துவ குணமுள்ள பூரி ரெடி, தொட்டு கொள்ள வெஜிடேபுள் பாஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இருமல் சளி தொல்லைக்கு இது போல் அடிக்கடி சப்பாத்தி, ரொட்டி, பூரி செய்வதுண்டு
டிஸ்கி: இங்குள்ள மில்லில் வகை வகையான மாவு வகைகள் கிடைக்கின்றன,
ராகி,கம்பு, ஜோவர்(தினை)குஜராத்தி ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, டயட் ஆட்டா, கோதுமை மாவு, போன்ற பல வகை, மில் போய் வாங்கினா எல்லா வகை மாவும் மொத்தமா வாங்கி வந்துடுவேன், அதில் குஜராத்தி ஆட்டாவில் ஓமம் , கருஞ்சீரகம் சேர்த்து இந்த பூரியை செய்துள்ளேன்.
சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க