Monday, August 30, 2010

கல்யாண பிரியாணியும், பிரியாணி வரலாறும்.



ஊருக்கு போனதும் வருசையா கல்யாணங்கள் தான், இது முதல் போனதும் வெட்டியாச்சு வாழை இலையில் உட்கார்ந்து பந்தியில் சொந்தங்களோடு உட்கார்ந்து சாப்பிடும் போது ஒரே ஆனந்தம் தான்.

இவ்வளவும் நான் சாப்பிடல சொந்தங்களை பார்த்ததே பாதி வயிறு நிறைந்து விட்டது. இது எதிரில் இருந்த இலை
மட்டன் பிரியாணி, தயிர் சட்னி, பிரெட் ஹல்வா, எண்ணை கத்திரிக்காய்.




(இது ஆசியா பிளாக்கில் இருந்து சுட்ட போட்டோ, முன்பே கல்யாணத்தில் களத்தில் எடுத்த போட்டோக்கள் எடுத்து பதிவு போட வைத்திருந்தேன், இப்ப எடுத்து எடிட் செய்ய நேரமில்லை.)


முன்பெல்லாம் களச்சாப்பாடு தான், பெரிய பெரிய தலாவில் ஐந்து நபர்கள் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
ரொம்ப நல்ல இருக்கும், யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று கணக்கே தெரியாது.
நான் சின்ன வயசில் வெளியூரில் இருந்ததால் , களச்சாப்ப்ட்டில் உட்கார்ந்தால் ரொம்ப சுத்தம் பார்ப்பேன்.
கரெக்டா என்க்கு வரை பாத்தி கட்டி நடுவில் உள்ளது மட்டும் சாப்பிடூவேன், தெரியாத்தனாமா நாலு பெருசுகள் மத்தியில் மாட்டி கொண்டேன்.
அவஙக் நாலு பேரும் போட்டி போட்டு கொண்டு ரவுண்டு கட்டினார்கள் என்ன இந்த பொண்ணு சாப்பிடாம வேடிக்க்கை பார்க்குது என்று கிண்டாலாகவும் சொன்னார்கள்.
என்ன இது எல்லோரும் ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாய் பார்த்தேன். கடைசியில் கல்யாணமாகி மாமியார் வீட்டில் , எல்லோரும் வந்தால் விசேஷங்களில் நாலு தாலா எடுத்து இரண்டு பந்தியும் சாப்பாடு களறி முடிந்துடும். அங்கு சாப்ப்பிட்டு பிறகு பழகி விட்டது. இப்ப வாழை இலையில் தான்




இங்குள்ள அரபிகளும் இப்படி தான் களச்சாப்பாடுதான். சாப்பிடுவார்கள். ஒருவீட்டுக்கு சாப்பாடு அனுப்புவதா இருந்தாலும் பெரிய தாலா(களத்தில்) தான் சாப்பாடு அனுப்புவார்கள்.

இப்படி தான் மஸ்கட் போயிருந்த போதுஅந்த வீட்டில் நான்கு பேமிலி பெரிய வில்லாவில் சேரிங் அதில் ஒரு சூடானி வீட்டில் நிறைய பேர், சமைத்து முடித்ததும் பிள்ளைகுட்டிகளோடு அவர்கள் ஒரே தாலாவில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

இது எல்லா நாடுகளிலும் தொன்று தொட்டு வருகிறது போல.

நாங்களும் எல்லா பிள்ளைகலுக்கும் ஊட்டி விடுவதா இருந்தால் பெரிய தட்டில் மொத்தமா போட்டு உருட்டி ஊட்டி விடுவோம், பிள்ளைகள்போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்.



இது அடுத்த கல்யாணம்

மட்டன் பிரியாணி, மிட்டா கானா, தயிர் சட்னி, எண்ணை கத்திரிக்காய், சிக்கன் பிரை, ஐஸ் கிரீம்.



முன்பெல்லாம் பெரிய 10 படி தேக் ஷாவில் செய்வார்கள் இப்ப சட்டியில் செய்கிறார்கள்.





இப்படி தான் சமையனாக்கள் முன்பெல்லாம் தெருவில்வைத்து நிறைய செய்வதா இருந்தால் செய்வார்கள் , ஆட்டோவில் போற வழியில் பார்த்ததும் பையன் தான் சொன்னான் உடனே போட்டோ எடுங்க மம்மி என்று உடனே ஒரு கிளிக்

இது நான் செய்த ஸ்பெஷல் மட்டன் பிரியாணி,கேபேஜ் கேரட் மையானஸ் சாலட்.

மீன் பிரியாணி





மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி







ஆம்பூர் மட்டன் பிரியாணி







வெஜ் பிரியாணி





மேலே உள்ள பிரியாணிகளை லேபிள் பகுதியில் பிரியாணியை கிளிக் செய்தால் வரும்
இன்னும் தொடரும் என் பிரியாணி குறிப்புகள் பல குறிப்புகள் செய்து (சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி) வைத்து நேரமின்மையால் போஸ்ட் செய்ய முடியாமல் இருக்கு.



இது இஸ்லாமிய இல்ல கல்யாணத்தில் வைக்கும் மிட்டாகானா குறிப்பு பிறகு பார்க்கலாம்.










ஆனால் எனக்கு சமீபத்தில் தெரிந்த செய்தி, மும்தாஜ் முதல் முதல் ஷாஜஹான் விருந்துக்கு வ்ந்த போது அரிசியையும் கறியையும் ஒன்றாக சேர்த்து புதுவிதமான ஒரு உணவு தயாரித்து கொடுத்தார்களாம், அது தான் பிரியாணி என்று பெயர் வந்து.



பிறகு தான் நாளடைவில் பிரியாணியா மாறி ஊர் ஊருக்கு பல ருசிகளில் பிரியாணி தயாரிக்கிறார்கள். தலப்பா கட்டுபிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி,எங்க ஊர் கல்யாணபிரியாணி என்று இன்னும் பல பிரியாணி வகைகள்.



பிரியாணி எப்படி வந்தது, போன பதிவுல பஜ்ஜிய பற்றி அய்யுப் மூலமா தெரிந்து கொண்டோம். பிரியாணிய பற்றி இங்கு போய் தெரிந்து கொள்ளுங்கள். பிரியாணியின் வரலாறு.
























Sunday, August 29, 2010

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பஜ்ஜி

இந்த குறிப்பு தமிழ் குடும்பத்துக்கு அனுப்பும் போட்டிக்கான இரண்டாவது குறிப்பு.

குறிப்பினை இங்கு சென்று பார்க்கவும்.


தக்காளி பஜ்ஜி


வெள்ளரி பஜ்ஜி,










எல்லா பஜ்ஜியையும் விட தக்காளி பஜ்ஜி சுவை வித்தியாசம் புளிப்பு சுவையுடன், சிறிது காரத்துடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்,




Saturday, August 28, 2010

தக்காளி ரசம் - tomato rasam







தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த பெரிய தக்காளி - 3
ரசப்பொடி - ஒன்னறை தேக்கரண்டி
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் -- கால் தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
கருவேப்பிலை, கொத்து மல்லி


தாளிக்க

எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்து மல்லி தழை - அரை கைப்பிடி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை




செய்முறை

தக்காளியை நன்கு கழுவி நான்காக நருக்கி முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மஞ்சள் , உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்த தக்காளியை நன்கு மசித்து சாறை வடிக்கவும், மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சக்கையை பிசைந்து சாறை எடுத்து வடிகட்டவும்.
புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து மேலும் அரை டம்ளர் ஊற்றவும்.

வடித்து வைத்துள்ள தக்காளி புளி கலவையில் சாம்பார் பொடி,ரசப்பொடிமிளகாய் தூள்,சிறிது கருவேப்பிலை,கொத்து மல்லி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.




கடைசியாக் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
கம கமக்கும் தக்காளி ரசம் ரெடி.

இது எட்டு நபர்கள் சாப்பிடலாம்.

நான் இதை அடிக்கடி செய்வது, ஊரிலும் போய் அம்மா வீட்டிலும் ,மாமியார் வீட்டிலும் செய்து எல்லோருக்கும் ரொம்ப பிடித்து டைரியிலும் நோட் பண்ணி கொண்டார்கள்.
ரசத்த குடிப்பவர்கள் சும்மா அப்ப்டியே குடிக்கலாம்.
தக்காளி ரசத்தில் தக்காளி பழத்தை பிசைந்து செய்வார்கள், என் பிள்ளைகளுக்கு அது பிடிக்காது ஜூஸ் போல் எடுத்து வாயில் எதுவும் தடுக்காமல் அப்படியே சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
ஒரு வயது குழந்தைக்களுக்கு கூட கொடுக்கலாம்.ரசித்து சாப்பிடுவார்கள், அவர்களுக்கு செய்து போது காரம் சிறிது குறைவாக போட்டு கொள்ளனும்.





Thursday, August 26, 2010

ஸ்பெஷல் அவார்டும், அவார்டுகளும்








மேலே உள்ள அவார்டு டேஸ்ட் ஆஃப் பேர்ல் சிட்டி உம்மு மைமூன் பிளாக்குக்கு இஃப்தார் ஈவாண்டுக்கு நான் அனுப்பிய ரெச்பிகளுக்ககாக கொடுத்ததது. மிக்க நன்றி உம்மு மைமூன்




எல்லோரும் ஈவண்ட் நடத்துகிறார்கள், ஆனால் நோன்பிற்காக அனைத்து தோழிகளின் குறிப்புகளையும் 30 நாட்களுக்கு தகுந்த மாதிரி தொகுத்து வழங்கி எல்லா தோழிகளுக்கும் அவரவர் பெயரில் அவார்டும் கொடுத்து அசத்திய உம்மு மைமூனுக்கு கொடுக்கிறேன்.






மற்ற எல்லா தோழிகளும் அவார்டை வாங்கியாச்சு.
*************************************************************************









கக்கு மாணிக்கம் அவர்கள் கொடுத்த சூப்பர் செஃப் அவார்டு - நன்றி கக்கு மாணிக்கம்.
*****************************************************************************













ஆசியாவும், ஸ்டார்ஜனும் கொடுத்தது - இருவருக்கும் மிக்க நன்றி


****************************************************************************










சகோ.ஜெய்லாணி கொடுத்த விருது - நன்றி ஜெய்லாணி





******************************************************************************





விருது (அவார்டு கொடுத்த அனைத்து தோழ தோழியருக்கு மிக்க நன்றி.

எல்லா வீட்டுக்கும் போய் பார்த்தாச்சு எல்லோரும் அவார்டை வாங்கியாச்சு. ஆகையால் இந்த அவார்டுகளை இப்போதைக்கு யாருக்கும் கொடுக்கல நோன்பு நேரம் ஆகையால் தேட முடியல.






Wednesday, August 25, 2010

பஜ்ஜி என்று ஏன் பெயர் வந்தது




பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து.
வாங்க எல்லோரும்( முஹம்மது அய்யுப்) நோன்பு திறக்க , போதுமா நான் கூப்பிட்டு விட்டேன்
வாங்க எல்லோரும். சாப்பிட மட்டுமே தெரிந்த அமைச்சருக்கு பஜ்ஜின்னு எப்படி பெயர் வந்த்து. என்று குறிப்பின் கீழ் கேட்டார், எனக்கு தெரியல எனக்கு தெரிந்த நாள் முதல் பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு சொஜ்ஜியும் பஜ்ஜியும் வைப்பார்கள் அவ்வளவே தான் தெரியும்.

யாவரது தெரிந்தால் பதில் சொல்லும் படி சொல்லி இருந்தேன்.

கீழே வந்த பதில்கள் இது அமைச்சருக்கும், பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து என்று தெரியாதவர்க்ளுக்கும் முஹம்மது அய்யுப் விளக்கியுள்ளார் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மங்குனி அமைசர் to me
show details 10:17 AM (22 hours ago)


மங்குனி அமைசர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

எப்படி இருக்கீங்க , ரொம்ப நாள் ஆச்சு , ஒண்ணுமில்ல ஆணி ஜாஸ்த்தி அதுதான் , அருமையான பஜ்ஜிகள் , ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???

எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

@@ ஜெய்லானி said...

//சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு. முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ்//

அடப்பாவி மக்கா,, முட்டை பஜ்ஜியிலே எட்டு பார்சலா?? ஏற்கனவே குண்டா இருக்கிறீர்ன்னு யாரோ எப்பவோ காத்து வாக்கில சொன்னதாக கேள்வி!! இப்ப இது வேறயா?? நடக்கட்டும் நடக்கட்டும் அவ்வ்வ்வவ்....

எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":


//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???//

//பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்//

நோ சமாலிபிஃகேசன் ஜலீலாக்கா!! கேள்வி என்னான்னு படிச்சீங்களா?? ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு?? ன்னு தான் அமைச்சர் கேட்டிருக்கார். அதுக்கென்ன பதில் சொல்லுங்க பார்ப்போம். ஹா.. ஹா.. (நாங்களும் தெரிஞ்சுக்குரோமே)


Jaleela Kamal has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":


அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்றி தெரியாது.

பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்,


Mohamed Ayoub K to me
show details 10:39 PM (10 hours ago)


Mohamed Ayoub K has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும் நல்லாவே வரவேர்க்குராங்க, ஆனால் யாருமே நோன்பு திறக்க கூப்பிடவில்லை.பரவா இல்லை, அந்த மலிக்கா அக்காவுக்கு கோவமா என்னனு தெரியலை வாசலுக்கு வந்தவனே "வானு" ஒரு வார்த்தைக் கூட கூப்பிடலை.

பஜ்ஜியைப் பற்றிய குறிப்பு நல்லாத்தான் இருக்கு.

அமைச்சரின் கேள்விக்கு நான் அளிக்கிறேன் பதில் ( மங்குனி)

அமைச்சரே ...பஜ்ஜி என்பது நமது முன்னோர்களால்,பொழுதுப் போக்கிற்காக படைக்க பட்ட பண்டம்.

அன்றைய ராஜ சபையில் புழவர் ஓணாண்டி அவர்கள், மாமன்னருக்கு விருந்தோம்பல் ஒன்றை தமது வீட்டில் படைத்தார்.

அப்போது வைக்கப் பட்டதுதான் பஜ்ஜி, மன்னருக்கு பஜ்ஜியைப் பற்றி தெரியாதுனாலே உணவருந்திவிட்டு பஜ்ஜியை எடுத்து மீசையைத் துடைத்தார்.

இதைக் கண்ட புழவர் ஓணாண்டி அவர்கள் ஒருக் கவிதையினை பாடினார்.

விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ.

இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?


மேலே அய்யுப் சொன்ன கேள்விக்கு மங்கு தான் பதில் சொல்லனும்.

அப்படி அமைச்சருக்கு பதில் தெரியவில்லை என்றால் , பதில் சொல்லுபவர்களுக்கு மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லாணி மூலமாக கொடுத்து அனுப்புவார்.

Monday, August 23, 2010

மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties











பொதுவான பஜ்ஜி கலவை



தேவையானவை

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ரெட் கலர் - சிறிது
இட்லி சோடா - ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைத்தேக்கரண்டி (அ) பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
சூடான எண்ணை - ஒரு ஸ்பூன்

வாழக்காய் (அ) ஏதாவது விருப்பமான காய்
எண்ணை பொரிக்க தேவையான அளவு



செய்முறை




மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கட்டியாக கரைத்து காயை மெல்லிய வடிவில் வெட்டி கலக்கிய மாவில் தோய்த்து எண்ணையை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.


பொட்டுகடலை துவையல் (அ) புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.




குறிப்பு


கீழே உள்ள லிங்குகளில் எல்லா பஜ்ஜி வகைகளும் இருக்கிறது.என் இழ்டத்துக்கு மசாலா வகைகளை சேர்த்து செய்த்தது.



அதே போல் சிறிது மைதா, கார்ன் மாவு சேர்த்து செய்தாலும் , நல்ல பொங்கி குண்டு குண்டாவரும்.



மசாலாக்களை அரைத்து ஊற்றியும் பஜ்ஜி மாவு கரைக்கலாம்.

காய் கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

(எல்லா வகையான காயிலும், ( கத்திரிகாய், வெள்ளரிக்காய்,வாழக்காய்,உருளை,அப்பளம், பேபி கார்ன்,தக்காளி வெங்காயம் போன்றவைகளீலும், கொட மிளகாய், முட்டை, சிக்கன் போன்றவையிலும் செய்யலாம்.)


பஜ்ஜிக்கு கடலை மாவு பயன் படுத்துவதால் மாவு கலக்கும் போது அதில் ( சோம்பு (அ) பெருங்காயப்பொடி (அ) இஞ்சி பூண்டு (அ) பூண்டு பொடி) கலந்து சுட்டால் நல்லது. ரொம்ப தண்ணி மாதிரி கலக்கி பொரித்தாலும் எண்ணை குடிக்கும். நல்ல கட்டியா தயிர் பதத்திற்கு கரைக்கவேண்டும்
















வாழக்காய் பஜ்ஜி,முட்டை பஜ்ஜி கார்ன் பஜ்ஜி












சிக்கன்பஜ்ஜி, எங்க வீட்டு பேவரிட்









வெங்காயம பஜ்ஜியை இங்கே சென்று பார்க்கவும்


















நோன்பு காலத்தில் ஈசியனா ஸ்னாக் கஞ்சிக்கு அவசரத்துக்கு பஜ்ஜி தான் பஜ்ஜி போட்டா எல்லா வகையிலும் போட்டாகனும்.








முந்திரி பருப்பு போண்டா



இந்த குறிப்பு தமிழ் குடுமப்த்தில் நடந்து கொண்டிருக்கும் நோன்பு ஸ்பெஷல் சமையல் போட்டிக்காக நான் அனுப்பும் முதல் குறிப்பு, குறிப்பை இங்கு சென்று பார்த்து உங்கள் அன்பான கருத்தை தெரிவிக்கவும்.





Saturday, August 21, 2010

திரெட் ஸ்டாண்ட் - thread stand








இந்த திரெட் ஸ்டாண்ட் என் பையன் ஹனீஃப் எனக்காக செய்து கொடுத்தது.


தினம் தையல் தைக்கும் டெயிலர்கள் ஊசி நூலை மொத்தமாக டப்பாவில் போடுவதுண்டு, அவசரத்துக்கு ஒரு நூலை எடுக்க போனா நூல் கரந்து ஊசியுடன் சேர்ந்து வரும் அல்லது சிக்கி கொள்ளும்.ரொம்ப நாளா சொல்லி கொண்டு இருந்தேன் ஒரு தெர்மாக்கோலில் மெல்லிய ஆணி லைனாக வைத்து நூல் மாட்ட ஒரு ஸ்டாண்ட் செய்யனும் என்று. அவசர தேவைக்கு கத்திரி கோல் எடுக்க போகும் போது அவன் கையில் நூல் சிக்கி அதை கையால் வெட்டும் போது கை வெட்டி கொண்டது.




ஊரில் உள்ள நூலில் தைத்தால் துணிகள் துணி இரண்டு தடவை போட்ட வுடன் தையல் விட்டு நூல் அறுந்து விடும். ஆனால் இங்கு துபாயில் இருக்கும் நூல் துணி வெளுத்து போய் கிழிந்தாலும் தையல் விட்டு போகாதாது அவ்வளவு ஸ்டாரங்


சரி இப்ப அந்த ஸ்டாண்ட் எப்படி செய்தான்னு பார்ப்போம்.
தீடிருன்னு இரண்டு நாள் முன் நோன்பு திறக்கும் ஒரு மணி நேரம் முன் பெயிண்டிங்க்கு கீழே பேப்பர் விரித்து தெர்மாகோலில் பெயிண்ட் செய்ய ஆரம்பித்தான். அத பார்க்கும் போதேல்லாம் ஆளாளாளுக்கு என்ன இப்ப உட்கார்ந்து பெயிண்ட் செய்ற வேர நேரம் காலம் கிடைக்கலையா என்ன செய்ற ஹாலிடே ஹோமர்க்கா என்று கேட்டோம் ஒன்றும் பதில் சொல்லல.



நோன்பு காலத்தில் கிச்சனில் நுழைந்தால் வெளி என்ன நடக்குதுன்னு கூட தெரியாது வேலை அவ்வளவு பிஸி.

கலரிங் செய்து முடிச்சாச்சு.

சீக்கிரம் உன் கடைய தூக்கு டைம் ஆகுது நோன்பு திரக்க நான் கத்த பேசாமல் எல்லாத்தையும் எடுத்துட்டு என் நூல் டப்பாவும், டூத் பிக் டப்பவும் எடுத்து வந்து எல்லாத்தையும் அடுக்கி விட்டு உங்களுக்கு தான் செய்தேன் என்றான்.

எல்லோரும் எதுக்கு இந்த ஐஸ், சிக்கன் பஜ்ஜிக்கா (அ) உங்கள் லேப்டாப்பில் கேம் விளையாடுவதற்கா என்றார்கள்.

கத்தி கொண்டே இருந்த எனக்கு சே இவ்வளவு நேரம் திட்டி கொண்டே இருந்தோமே என்ன செய்யன்னு புரியல உடனே முதலே சொல்லி இருந்தா எல்லாத்தையும் போட்டோ எடுத்து இருப்ப்பேனே.

அவனுக்காக வே அன்று அவன் கேட்டு கொண்டிருந்த சிகக்ன் பஜ்ஜியை பத்தே நிமிஷத்தில் தயார் செய்து கொடுத்தேன்.

மம்மி இத நான் செய்தேன் என்று என் பெயர் போட்டு தான் போடனும்.



தேவையான பொருட்கள்

சதுர வடிவ தெர்மாகோல் - 1
பெயிண்டிங் செய்ய தேவையான் பொருட்கள்
டூத் பிக் - தேவையான அளவு



1. சதுர வடிவ தெர்மாக்கோலில் வேண்டிய டிசைன்வரைந்து பெயிண்ட் செய்யவும்.







2. காய்ந்ததும் டூத் பிக் தேவையான அளவு இடைவெளி விட்டு வரிசையாக சொருகவும்.





3. நூல்களை அடுக்கி வைக்கவும்.




தையல் தைக்க ரெடியாக நூல்களை அடுக்கி வைக்க ஸ்டாண்ட் ரெடி.







Thursday, August 19, 2010

மட்டன் கொத்து கறி நோன்பு கஞ்சி - mutton keema kanjsi



இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.இதில் பாசிப்பருப்பு சேருவதால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. பள்ளி வாசல் கஞ்டி என்றா அதில் கடலை பருப்பு சேர்த்து அதிக காரம் இல்லாமல் வெள்ளையாக இருக்கும்., நேரம் இருந்தால் அடுத்த குறிப்பில் போடுகிறேன்.



தேவையான பொருட்கள்.
சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது





செய்முறை
1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.
குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.
அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.


தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.
குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.
ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.
சுவையான நோன்பு கஞ்சி தயார்.
இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.


குறிப்பு.
குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம்.

கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.

கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.

நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.
இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து ஒரு கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.


பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செய்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

தினம் பிரஷாக கஞ்சி செய்வதா இருந்தால், கொத்துக்கறி அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொண்டு, அதில் இருந்து தினம் 100 கிராம் அளவு தாளித்த மசாலா எடுத்து நொய் ஊறபோட்டு குக்கரில் தண்ணீர் அளந்து விட்டு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கொள்ளலாம்.
டயட்டில் இருப்பவர்கள் , சுகர் பிரஷர் உள்ளவர்கள் மட்டன் அவ்வளவா சாப்பிடமாட்டார்கள் அவர்கள் மட்டனுக்கு பதில் சிக்கனும், அரிசிக்கு பதில் ஓட்ஸ் மற்றும் பர்கல் சேர்த்து இந்த முறையில் கஞ்சி செய்து கொள்ளலாம்.
(இந்த வருடம் அவ்வளவா எந்த போட்டோவும் எடுக்க முடியல எடுக்கும் போது சேர்க்கிறேன்.)