Tuesday, August 17, 2010

சிக்கன் நோன்பு கஞ்சி

தே.பொருட்கள்

தரமான பாசுமதி நொய் = அரை கப்
பச்ச பருப்பு = கால் கப்
சிக்கன் கீமா = 100 கிராம்
கேரட் = 50 கிராம்
கொத்து மல்லி புதினா ‍= சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசைகரண்டி
உப்பு = தேவைக்கு
தேங்காய் = இரண்டு மேசை கரண்டி துருவியது
மிளகாய் தூள் ‍ = அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி
வெங்காயம் = 75 கிராம்
தக்காளி = 50 கிராம்
எண்ணை + டால்டா = நான்கு தேக்கரண்டி
பச்ச மிளகாய் = இரண்டு

செய்முறை

1. அரிசி + பச்ச பருப்பை அரை மணி நேரம் முன் ஊறவைக்கவும்,சிக்கனை கழுவி கீமாவாக்கி கொள்ளவும்,கொத்துமல்லி புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும், கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும்.
2.ஒரு வாயகன்ற சட்டியை காய வைத்து எண்ணை + டால்டா ஊற்றி காயவைத்து வெங்கயம் + கேரட்டை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.

3.தக்காளி மடங்கியதும் சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 8 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விடவும்.

4. கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பச்ச பருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறீ விட்டு நன்கு வேக விடவும்.

5. அரிசி ப‌ருப்பு இர‌ண்டும் வெந்து க‌ஞ்சி ப‌த‌ம் வ‌ந்த‌தும் இர‌க்க‌வும்.

சுவையான‌ சிக்க‌ன் நோன்பு க‌ஞ்சி ரெடி.

இதை குக்க‌ரிலும் செய்ய‌லாம். அடுத்த குறிப்பில் போடுகிறேன். ஏற்கனவே போட்ட குறிப்பு தான் நோன்புக்காக மறுபடி போடுகிறேன்.

குறிப்பு:

குறிப்புமட்டன் கீமாவில் செய்வதை விட இப்படி சிக்கன் கீமாவில் செய்தால் வெயிட்டும் அதிகம் போடாது. ஹைய் பிரெஷர் உள்ளவர்கள், இப்படி செய்து சப்பிடலாம்,சுகர் பேஷண்ட்கள் கேரட்டை தவிர்த்து , இந்த முறையில் செய்து சாப்பிடலாம்

நொய் என்ப‌து அரிசியை மிக்சியில் ர‌வை ப‌த‌த்திற்கு பொடித்து கொள்வ‌து.


31 கருத்துகள்:

Prema said...

kanchi luks delicious...

Chitra said...

அக்கா, நோன்பு கஞ்சி ரெசிபிக்கு நன்றி. :-)

Praveenkumar said...
This comment has been removed by the author.
Praveenkumar said...
This comment has been removed by the author.
Praveenkumar said...

செய்முறை குறிப்புடன் தெளிவான பதிவு. கடைசியில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளும் அருமை....

எம் அப்துல் காதர் said...

நோன்பு கஞ்சி அருமையான ரெசிபி..

Jaleela Kamal said...

நன்றி பிரேமலதா

நன்றி சித்ரா உங்கள் பிலாக் பக்கம் எல்லாம் வர முடியல, கோபித்து கொள்ளவேண்டாம்

Jaleela Kamal said...

பிரேம் குமார் உங்கள் கமெண்ட் மெயிலில் பார்த்து விட்டேன்

உங்கள் டவுட்டுக்கு பதில்

பொதுவா நோன்பு கஞ்சி எலும்பில்லாதா மட்டன் , அல்லது மட்டனை கொத்தியதில் தான் போடுவோம்.

டயட் செய்பவர்கள்.,சுகர், பிரஷர் உள்ளவர்கள் மட்ட்டனுக்கு பதில் சிக்கன் கீமா பயன் படுத்தலாம்.

இது ஏற்கனவ்போட்ட ரெசிபி ட் இப்ப நோன்புக்காக ரேபோஸ்ட் பண்ணியுள்ளேன்

நேரமின்னமை க்காரனமக மட்டன் கீமாவில் செயத கஞ்சிக்கு படங்கள் அதிகம் இருப்பதால் பிறகு போடுவேன்.
்கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி எம் அப்துல் காதர்

Krishnaveni said...

looks great, i can have it anytime, delicious

ஜெய்லானி said...

ஆஹா நோன்பு நேரத்துல சரியா நோன்பு கஞ்சி.. ரீப்போஸ்டா இருந்தாலும் நமக்கு இது புது போஸ்ட்தான்..

Asiya Omar said...

கஞ்சி சூப்பர்.வித்தியாசமாக இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கஞ்சி ரொம்ப நல்லாருக்கு.. நான் இந்த நோன்பு சமயத்தில் தினமும் கஞ்சி செய்வேன்..

ஹாரீஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா.. ஹாரீஸ் ஹோட்டலில் சாப்பிட்டோம்.. அதேபோல ரூமில் செய்ய ஆசை. உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். ஹாரீஸ் என்றால் மட்டனை கூழ்போலாக்கி சிமெண்ட் கலர் நிறத்தில் இருக்கும் சாப்பிட நல்லாருந்தது.. எப்படி செய்யணுன்னு தெரியல..

சிநேகிதன் அக்பர் said...

நோன்பு கஞ்சி பார்க்கவே பிரமாதம்.

நம்ம ஏரியாவுக்கு ஸ்டார்ஜந்தான் மாஸ்டர்.

athira said...

ஜலீலாக்கா, இப்படிப் படத்தையும் குறிப்பையும் போட்டு ஆசையைத் தூண்டிவிடுறீங்களே... எப்போ செய்து தரப்போறீங்கள்? டுபாயில் ஒரு கெட்டுகெதர் வைப்போமா?:)).

GEETHA ACHAL said...

superb நோன்பு கஞ்சி...அக்கா எப்படி இருக்கின்றிங்க...எப்ப ஊரில் இருந்து வந்தீங்க...

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி

நன்றி ஜெய்லானி போன வருட நோன்பில் ஏகப்பட்ட நோன்பு ரெசிபி போட்டாச்சு ஆகையால் மீண்டு அதை தான் லின்க் கொடுக்கனும்.

நன்றி ஆசியா


ஸ்டார்ஜன் வாங்க நீங்களே பெரிய கஞ்சி மாஸ்டர் போல

நீங்கள் சொல்லும் ஹரீஸ், இப்போதைக்கு செய்ய நேரமில்லை
இதை ஓட்ஸில் செய்து இருக்கிறேன்.
ரொம்ப நேரம் கறி வேக போடனும்.
முடிந்த போது போடுகீறேன்.
இது என் பெரிய பைஅய்னுக்கு தான் ரொமப் பிடிக்கும் . இப்ப அவன் ஊரில் இருக்கிறான்.
முன்பு அவனுக்காக முயற்சி செய்தது.

Jaleela Kamal said...

சினேகிதன் அக்பர் வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அதிரா துபாய் எப்ப வரேன்னு சொல்லுங்கங்க வித் விதமா கஞ்சி செய்து தரேன்.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் நல்ல இருக்கிறேன்,
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

நேற்று எங்க தெரு சங்கத்தில் காய்ச்சி இருந்தாங்க - நல்லா இருந்திச்சி

Starjan (ஸ்டார்ஜன்) said...

//ஸ்டார்ஜன் வாங்க நீங்களே பெரிய கஞ்சி மாஸ்டர் போல//

ஐய்யோ நான் மாஸ்டரெல்லாம் கிடையாதுங்க.. சும்மா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு செய்வேன்.. :)

புலிகுட்டி said...

பார்க்கும் போதே சாப்பிட தோனுது செய்து பார்கிறோம்.

Priya Magesh said...

ஏங்க எங்க ஊர்ல நோன்பு காஞ்சி வெள்ளையா இருக்கும். நீங்க மஞ்சா கலர்ல போடு இருக்கீங்க?

Jaleela Kamal said...

சகோ ஜமால் சங்கத்தில் மொத்தமாக காய்ச்சி தரும் கஞ்சி ரொம்ப நல்ல இருக்குமே

Jaleela Kamal said...

லஷ்மி குமார் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

பிரியா வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி,
கஞ்சிய பல விதமாக தயாரிக்கலாம் அதில் இது ஒரு வகை, இங்கு நோன்புகால சமையல கிளிக் பண்ணுங்க வித விதமான கஞ்சிகள் கிடைக்கும்.


வெள்ளையாயும் செய்யலாம், மசாலா கஞ்சி, கறி கஞ்சி,சிக்கன் கஞ்சி, வெஜ் டெபுல் கஞ்சி என பல விதமா செய்யலாம்

Priya Magesh said...

ஓகே. என்ன தான் வீட்டுல செஞ்சாலும் உங்க பள்ளி வாசல்அ குடுக்கறது சுவையோ சுவை.

Priya Magesh said...

உங்க சமையல் குறிப்பு அனைத்தும் நல்லா இருக்கு. புட்டிங் எப்டி செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்களேன். (முட்டை + ரவா)

Jaleela Kamal said...

பிரியா பள்ளி வாசலில் நிறைய பேருக்கு செய்வதால் அதன் ருசி தனிதான்

ரவை தம் அடை கேட்கிரீங்க் நினைக்கிறேன்
முடிந்த போது செய்து போடுகிறேன்.

ரவை முட்டை சேர்த்து பணியாரம் தான் செய்தேன் ஆனால் போட்டோ எடுகக்ல

Priya Magesh said...

நான் கேட்டது ரவா+முட்டை யா நல்லா அரைத்து சுகர் போடு செய்றது. நீங்க சொல்றது தான்னு நினைக்கிறன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா