Showing posts with label cake. Show all posts
Showing posts with label cake. Show all posts

Thursday, January 25, 2018

மூவர்ண பிஸ்கட் & குக்கர் கேக் - Flag Biscuit

Flag Biscuits


மூவர்ண பிஸ்கட் & குக்கர் கேக்
 Flag Biscuit
Tri colour cooker cake
தேவையான பொருட்கள்

மைதா – ஒரு கப்
பட்டர் – 75 கிராம் 
சர்க்கரை – ¾ கப்
பேக்கிங் பவுடர் – 1 ¼ தேக்கரண்டி
முட்டை – 2
தண்ணீர் – அரை கப்
உப்பு – சிறிது 
வென்னிலா எசன்ஸ் – சிறிது
லெமன் ஜூஸ் – அரை மூடி 
துருவிய லெமன்  - ஒரு தேக்கரண்டி 
புட் கலர் – ரெட் மற்றும் பச்சை

நியுட்டெல்லா







செய்முறை 

பட்டரையும் சர்க்கரையையும் சேர்த்து ஒன்றாக நன்கு அடிக்கவும்
முட்டையை ப்ளபியாக  நன்கு நுரை பொங்க அடித்து சர்க்கரை  பட்டர் கலவையுடன் சேர்த்து கலக்கவும் 

மைதா,பேக்கிங் பவுடர் உப்பு மூன்றையும் சலித்து கொள்ளவும்
பிறகு சலித்த மைதாவை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்
கடைசியாக வென்னிலா எசன்ஸ் , லெமன் சாறு கலக்கவும்.



 கலந்த கலவையை நான்கு பாகமாக நான்கு பவுளில் பிரிக்கவும்.
ஒரு பவுளில் நியுட்டெல்லாவை ஒரு மேசைகரண்டி அளவு கலக்கவும்
மற்றொரு பவுளில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தைக்கலக்கவும்.
ஒரு பவுளில் வண்ணங்கள் எதுவும் கலக்க வேண்டாம்


இதை ஜஸ்ட் ஒரு ட்ரேவில் தேசிய கொடி போல ஸ்பூனால் எடுத்து ஊற்றி தட்டையாக வைக்கவும்..



200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.


மீதி உள்ள கலவையை ஒரு பெரிய டீ கப்பில் மார்பிள் போல பச்சை, வெள்ளை , சிவப்பு , ப்ரவுன் கலர் அடுக்காக ஊற்றவும் கலக்க தேவையில்லை வேகும் போது பரவலாகி அதுவே கலந்து விடும்.
 Pressure cooker cake, Tri colour cooker cake
குக்கரில் அடியில் உப்பை போட்டு ஓவன் போல 10 லிருந்து 15 நிமிடம் குக்கரை சூடு படுத்தவும்.


பிறகு டீ கப்பில் ஊற்றிய கேக் கலவையை குக்கரில் வைத்து மூடி ஓவனில் பேக் செய்வது போல பேக் செய்து எடுக்கவும் . இதில் முக்கியமான விஷியம் கவனிக்க வேண்டியது குக்கரில் வாசர் ( உள்ளே ரப்பர் ) போட கூடாது , வெயிட்டும் போட கூடாது)

குக்கரை அப்படியே வைக்கிறோமே என்ன ஆகுமோ என்று பயப்படவேண்டாம்










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, December 25, 2017

Paleo Bread with Coconut Flour - ஈசி பேலியோ தேங்காய் பூ ப்ரட்



தேங்காய் மாவு தயாரிக்க்கும் விதம் 

போன பதிவில் தேங்காய் பூ மாவு செய்யும் முறையை சொல்லி இருந்தேன் இப்போது அதை வைத்து அருமையாக பிரட், பேன் கேக் பிஸ்கட் போன்றவை தயாரிக்கலாம்



தேங்காய் மாவு - ஒரு கப்
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
பாதாம் பவுடர் - சிறிது தேவைபட்டால்
nigella seeds or fennel seed lhalf tspn - ( optional)






முட்டையை நன்கு நுறை பொங்க அடித்து அதில் தேங்காய் எண்ணை தேங்காய் பூ சக்கை, பேக்கிங் பவுடர், உப்பு , பட்டை பொடி. சேர்த்து ஓவனில் 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் பிரீஹீட் செய்து 25 லிருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.


பேலியோவில் இல்லை என்றால் சிறிது நட்ஸ்  பவுடர் சேர்க்கலாம்




முக நூல் மற்றும் பிலாக்கர் அறுசுவை தோழி ஹுசைனாம்மா பேலியோ ரெசிபிகள் பற்றி பேசும் போது இப்படி ஈசியாக செய்யலானு ரெசிபி லின்க் கொடுத்து அவர்களும் செய்து போட்டு இருந்தார்கள் , நானும் ச்ய்துசில பொருடகள் ஆட் செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல வந்ததும்

பேலியோ தேங்காய் பூ ப்ரட்
பேலியோ டிபன் வகைகள்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, January 19, 2017

நட்டி லெமன் சாக்லேட் கேக் Nutty Lemon Chocolate Cake


நட்டி லெமன் சாக்லேட் கேக்

மைதா – 11/2  கப்
சாக்லேட் பார் - சிறிது
பட்டர் – 150 கிராம்
சர்க்கரை – ஒன்னறை கப்  பொடித்தது
பேக்கிங் பவுடர் – இரண்டரை தேக்கரண்டி
முட்டை – 4
தண்ணீர் – ஒரு கப்
உப்பு – சிறிது
சாக்லேட் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
லெமன் ஜுஸ் – அரை மூடி
துருவிய லெமன்  - ஒரு தேக்கரண்டி
பேக்கான் & வால்நட் – 100 கிராம் பொடியாக அரிந்தது

செய்முறை

ஓவனை 20 நிமிடம் ப்ரீ  ஹீட் செய்யவும்.
பட்டரையும் சர்க்கரையையும் சேர்த்து ஒன்றாக ப்ளன்ட் செய்ய்வும்
மைத,பேக்கிங் பவுடர் , ,உப்பு நான்கையும் சலித்து கொள்ளவும்.
( சாக்லேடை உருக்கி வைக்கவும் இருந்தால் உருக்கி சேர்க்கவும்)
முட்டையை ப்ளபியாக அடித்து சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பிறகு சலித்த மைதாவை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்.
கடைசியாக வென்னிலா எசன்ஸ் , லெமன் சாறு கலந்து , துருவிய லெமன் சேர்த்து முன்றில் ஒரு பாகம் எடுத்து அதில் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்  கேக் பேக் செய்யும் ட்ரேவில்  பட்டர் தடவி கிழே முதலில் சாக்லெட் மிக்ஸ் செய்யாத கலவையை சேர்த்து , மேலே சாக்லேட் மிக்ஸ் செய்த கலவையை அங்கும் இங்குமாக ஊற்றி  மேலே நட்ஸை தூவி 20 நிமிடம் பேக் செய்யவும். 20 நிமிடம் கழித்து ஆறியதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, January 18, 2017

முந்திரி லெமன் கேக் - Cashew Lemon Cake


முந்திரி லெமன் கேக் - Diamond Shape Cake
மைதா – 2 கப்
பட்டர் – 150 கிராம்
சர்க்கரை – ஒன்னறை கப்  பொடித்தது
பேக்கிங் பவுடர் – இரண்டரை தேக்கரண்டி
முட்டை – 4
தண்ணீர் – ஒரு கப்
உப்பு – சிறிது
வென்னிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – அரை மூடி
துருவிய லெமன்  - ஒரு தேக்கரண்டி
முந்திரி – 50 கிராம் பொடியாக அரிந்தது

செய்முறை

ஓவனை 20நிமிடம் ப்ரீ  ஹீட் செய்யவும்.
பட்டரையும் சர்க்கரையையும் சேர்த்து ஒன்றாக ப்ளன்ட் செய்ய்வும்
மைத,பேக்கிங் பவுடர் உப்பு மூன்றையும் சலித்து கொள்ளவும்.
முட்டையை ப்ளபியாக அடித்து சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பிறகு சலித்த மைதாவை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்.
கடைசியாக வென்னிலா எசன்ஸ் , லெமன் சாறு கலந்து , முந்திரியை பொடியாக அரிந்து தூவி கேக் பேக் செய்யும் ட்ரேவில் கிழே பட்டர் தடவி கலவையை ஊற்றி 20 நிமிடம் பேக் செய்யவும். 20 நிமிடம் கழித்து ஆறியதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/