| Tweet | ||||||
Showing posts with label தொடர்பதிவுஅனுபவம். Show all posts
Showing posts with label தொடர்பதிவுஅனுபவம். Show all posts
Thursday, January 12, 2012
மழலை உலகம் மகத்தானது - 1
மழலை உலகம் மகத்தானது.
மழலை உலகம் மகத்தானது நம்ம லஷ்மி அக்காவும் ஏஞ்சலினும் போன வருடம் தொடர்பதிவு எழுத அழைத்தார்கள். . ஒவ்வொரு் முறை எழுத ஆரம்பிக்கும் போது ஏதாவது வேலை.. வந்து எழுத முடியாமலே போய் விட்ட்து
எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். தொடர் பதிவா இருந்தாலும் , மற்றவர்கள் பதிவுக்கு பின்னூட்டமா இருந்தாலும் நான் தான் கடைசி பெஞ்சு.
மழலை உலகம் பற்றி நிறைய எழுத வேண்டி இருக்கு.என் அனு்பவ பதிவே நிறைய இருக்கிறது.
என்ன தான் சோகமாக இருந்தாலும் குழந்தைகள் செய்யும் சேட்டையில் எல்லாமே பஞ்சாய் பறந்து விடும்.
அம்மா வீட்டிலும் சரி மாமியார் வீட்டிலும் சரி பெண் குழந்தைகள் தான் அதிகம். என் பெரிய பையன் பிறந்த்தும் இரண்டு வீட்டிலும் ஒரே சந்தோஷம். ஆனால் எல்லோரோடும் நல்ல விளையாடுவான், ஆனால் தூக்கி வைத்து கொள்வது நானோ அல்லது என் மாமனாரோ மட்டும் தான் வைத்து கொள்ளனும்.இப்ப உள்ள வசதிகள் அப்ப கிடையாது.குடும்ப்த்தில் எல்லா வேலைகளையும் முடிக்கனும் கொண்டு குழந்தையையும் பார்த்து கொள்ளனும். பெரியவன் ஊரில் எல்லோரோடும் வளர்ந்தான்.அவனுக்கு சாப்பாடு கொடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிடும்.
ஒரு சிறிய கூடை சேரில் உட்கார்ந்து டீவி என்றால் காலையில் 7 மணிக்கு மிருதங்கம் , தபேலா வாசிப்பாங்க அதை ரொம்ப ரசித்து பார்ப்பான், அவன் ரசித்து மெய்மறந்து பார்ப்பதை நாம ரசிக்க அழகாக இருக்கும்.
அவனுக்கு பூனை, ஆடு , காகம், மாடு இப்படி எல்லாத்தையும் காண்பித்து தான் சாப்பாடு ஊட்டனும் இல்லை என்றால் சாப்பிட மாட்டான்.
அதற்கு பிறகு துபாய் வந்துவிட்டேன். ஊரில் தூங்கும் நேரம் தவிர என்னேரமும் பிஸியாக வேலை பார்த்து விட்டு இங்கு சும்மா இருக்க முடியல ஒரே ஊர் ஞாபகம் இவரும் காலையில் போனால் இரவு தான் வருவார், அது வரை சமையல் விதவிதமாக செய்து பார்ப்பது. கத்துக்கட்ட ஹிந்திய எழுதி பார்ப்ப்து, சோளி தைப்பது, சேலைக்கு ஓரம் அடிப்பது , சேலைக்கு பால்ஸ் வைப்பது, இப்படி நேரத்த ஓட்டி கொண்டு இருந்தேன்.
பிறகு தான் பேபி கேர் பார்க்கலாம் என்று என் தோழி சொன்னாள் நானும் இன்னொருத்தவஙக்ளும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தோம்.
இந்த மழலை உலகத்தில் என் அனுபங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஓவ்வொரு பிள்ளைகளோடும் ரொம்ப சுவராசியமான அனுபவம்.
முதலில் குட்டன், ஷெரில் இரண்டு குழந்தைகள் குட்டனுக்கு 6 மாதம், ஷெரில் 1 வய்து.
குட்டன் சதா அழுகை தான் ஒரு நிமிஷம் கூட நாம் அவன் கண்ணில் இருந்து மறைய கூடாது. சாப்பிடவும் ரொம்ப அடம். கூடவே உட்கார்ந்து இருக்கனும், கூடவே தூங்கனும், சாப்பாடு ஊட்டினாலும் வாயி்லேயே வைதது இருப்பான்.
ஷெரில் சொன்னா கேட்டுப்பா. ரொம்ப அமைதி , ரொம்ப டீசண்ட் எப்படி அந்த ஒரு வயதில் அப்படி ஒரு பக்குவம் என தெரியல் சாப்பாடு ஊட்டி விட்டா ரொம்ப சமத்தா சாப்பிடுவா அடுத்து டிக்ஷா, என்னேரவும் கீர் கீர் கீ கீன்னு நமக்கு தலை வலி தீராத வரை கத்தி கொண்டே இருப்பாள், முதலில் எதற்கு கத்து கிறாள் என்பது புரியாமல் இருந்த்து, பிறகு போக போக தெரிந்து கொண்டோம். பாதி தூக்கத்தில் குட்டன் போட்ட சவுண்டில் எழுந்தால் கத்துவாள், பசி என்றால் , அடுத்து அவளிடம் இருந்து மற்றவர்கள் விளையாட்டு பொருட்களை பிடிங்கினால் அப்ப்டி ஒரு சத்தம் போட்டு ஜித்து பிடித்து வாங்கிடுவாள். ஆனால் ரொம்ப இன்ரஸ்டிங் கேரக்டர், தீடீர் தீடீர்ன்னு அழகா சிரிச்சி நம்மையும் நல்லாவே சிரிக்க வைப்பாள்.
அடுத்து சாதியா என் தோழி மகள் நாங்க தெரிந்தவர்கள் என்பதால் எங்களுடன் எங்க பிள்ளைகள் போலவே இருந்து கொள்வாள்
இட்து புறம் கடைசியாக இருப்பது என் பெரிய பையன் அப்துல் ஹகீம்.வலது புறம் இருப்பது அப்துல் ரஷீத். இவங்க இரண்டு பேரும் பேசும் மழை பேச்சு, அவர்கள் விளையாடுவது, வெளியில் போகும் போது ஒரே மாதிரி டிரஸ் போட்டு கொள்வது... எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியாக இருக்கும்
எந்த குழந்தைக்கும் எந்த பாகுபாடும்் கிடையாது என் பையனுக்கு கொடுத்த அதே தான் சலுகை எல்லாருக்கும் .அங்கு இருக்கும் பெண்குழந்தைகள் கூட ஹகீமும், ரஷீ்தும் சேர்ந்து உட்கார மாட்ட்டங்க , போட்டோவுக்காக 5 நிமிடம் உட்காரவைத்தேன்.
மொத்தம் ஏழு வருட பயணம், ரொம்ப இழுக்காம சுருக்கமா முடித்து விடுகிறேன் .........இதை படிப்பதன் மூலம் புதிதாக குழந்தை வளர்பவர்களுக்கு கண்டிப்பாக நிறைய் விசியங்கள் குழந்தைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)


