Sunday, September 26, 2010

கேசரி லட்டு - kesari laddu



தேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்


செய்முறை

1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.




ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

நொய் உருண்டை

I am sending these recipes to nithu's kitchen celebrate Sweet laddu event








இன்று என் அம்மாவின் பிறந்த நாள், துஆ செய்யுங்கள். அருமையான சுவையான என் சமையலை உலகமே சுவைத்து கொண்டிருக்கும் அட்டகாசமான சமையலை சொல்லி தந்த தாயிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உஙக்ள் எல்லோரின் வாழ்த்தும் என் அம்மாவுக்கே.
( யாராவது எங்க வீட்டுக்குவருவதாக இருந்தால் அங்கு சூப்பராக இஞ்சி சாயா கிடைக்கும் அங்கேயே போய் குடித்து கொள்ளலாம் என்று வருவார்கள்.

கூடையில் பழங்கள் கொண்டு வந்து விற்கும் பழக்காரர் , அந்த கூடைய இரக்கி வைத்ததும் அவர் முதலில் செம்பு நிறைய தண்ணீர கொடுத்துட்டுதான் பழமே வாங்குவார்கள்.
வீட்டு வேலக்காரி வந்தாலும் முதலில் அவளுக்கு டீ குடிக்க சொல்லிட்டு தான் வேலையே பார்க்க சொல்லுவாங்க./

அத ஏன் கேட்குறீங்க 20 வருடம் முன் மாப்பிள்ளைய ஏற்போட்டில் வரவேற்க வரும் போது கூட பிளாஸ் ஃபுல்லா இஞ்சி டீ தான் , ஹஸ் சந்தடி சாக்குல இந்த இஞ்சி டீ கொடுத்தே மயக்கிட்டாங்க என்பார். அம்மா ஹரீரா பால் நல்ல செய்வாங்க அதை தான் கொடுக்கலாம் என்று இருந்தேன் , போட்டோ எடுக்கல.

அதுபோல் யாரையும் பசியோடு அனுப்பவே மாட்டாங்க .அன்பு தொல்லை அதிகமாவே இருக்கும்.

தூஆ செய்யுங்கள்.






45 கருத்துகள்:

எல் கே said...

உங்கள் அன்னைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்படியே கேசரி லட்டை நான் எடுத்துகிட்டு ஓடிடறேன்

எல் கே said...

இதை எந்த திரட்டியிலும் சேர்க்க வில்லையா ??

நட்புடன் ஜமால் said...

தாயருக்கு நல் வாழ்த்துகள்

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு ...

ஸாதிகா said...

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஜலீ அடீக்கடி டெம்லேட் மாற்றி அசத்துறீங்க.கேசரி லட்டும் கலரும் சூப்பர்.

அன்புடன் மலிக்கா said...

அன்பு அன்னைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடு உடல் வலிமையோடு இருக்க எலாம வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்.

எனக்கே எனக்கா லட்டு எனக்கே எனக்கா

நாடோடி said...

உங்க‌ள் அம்மாவிற்கு இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்.. ப‌ட‌ங்க‌ள் சூப்ப‌ரா இருக்கு...

R.Gopi said...

அட....

கேசரி ஒரு ஸ்வீட்....

லட்டு ஒரு ஸ்வீட்....

இன்று உங்கள் கைவண்ணத்தில் இரண்டு இனிப்பும் இணைந்து, புதிதாக கேசரி லட்டு என்ற பெயருடன் புதிதாய் ஒரு ஸ்வீட் பிறந்திருக்கிறது...

பலே ஜோர் ஜலீலா...

உங்கள் அன்னைக்கு என் பணிவான வணக்கங்கள் உரித்தாகுக...

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.. குழந்தையின் பசியறிந்து உணவிட தாய்க்கு இணை யாருமில்லை.. அதை அப்படியே உங்களின் தாயாரும் செய்கிறார்... நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

அறுசுவை அரசி ஜலீலா வாழ்க என்று இந்த சமயத்தில் லைட்டா ஒரு சவுண்ட் விட்டுக்கறேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அம்மாவிடம் வாழ்த்து சொல்லிருப்பீங்கதானே? நானும் சொல்லிக்கிறேன் உங்ககிட்ட.

இநத லட்டை பாலில் செய்தால் இன்னும் சுவையா இருக்கும், இல்லையாக்கா?

Thenammai Lakshmanan said...

உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி.. அவங்க ஆசியை எங்களுக்கும் தரச் சொல்லுங்க..:))

kavisiva said...

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஜலீலாக்கா இப்படி ஃபோட்டோல்லாம் போட்டு ஜொள்ளு விட வைக்கறீங்களே :(. அப்படியே எனக்கு மட்டும் ஒரு பார்சலும் அனுப்பிட்டீங்கன்னா சந்தோஷமா சாப்பிடுவேன் :)

Menaga Sathia said...

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! லட்டு அருமை!! கவிக்கு பார்சல் அனுப்பும் போது எனக்கும் சேர்த்து அனுப்புங்கக்கா...

Unknown said...

HAPPY BIRTHDAY TO UR MOM SISTER.epdi irukeenga?insha allah kandipa dhuva saivom.

Chef.Palani Murugan, said...

அப்ப‌டியே என்னோட‌ வாழ்த்துக்க‌ளையும் சேர்த்துக்கோங்க‌.

Angel said...

Give my wishes and regards to your mom.and a special thanks to her for her cooking queen daughter jaleela.

kesari cake looks yummy.im gonna try this

Chitra said...

அக்கா, உங்கள் அம்மாவுக்கு எங்களது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

உங்கள் தாயாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜலீலா.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கு...

உங்க ப்ளாக் பக்கம் வந்தா virus வருகின்றது...tamil10 என்ற ஒரு சைட்டால் என்னுடைய computer உங்களுடைய ப்ளாக் பக்கம் வர அனுமதிக்கமட்டேனுக்கின்றது...சரி பாருங்க...நன்றி...

Krishnaveni said...

Happy Birthday to your dear Mom, kesari laddu romba super Madam

Priya Magesh said...

லட்டு நல்லா இருக்கு...
-----
அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Priya Magesh said...

அப்பிடியே நான் கேட்ட ரவா புட்டிங் ரெசிபி சொல்லுங்களேன்.

Jaleela Kamal said...

எல் கே
முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றீ
காலையில் எல்லாம் பிலாக் முழுவது எரர் ஆகிவிட்டது ஆகையால் மாற்றினேன், பிறகு தான் திரட்டிகளை சேர்த்தேன்.

Jaleela Kamal said...

சகோ.ஜமால் டெம்லேட் நல்ல இருக்கா நன்றி வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

ஸாதிகா அக்கா நன்றி

ஆசியா டெம்லேட்டா , ஏன் டெம்லேட் மாற்றினேனேன் ஒரு பெரிய பதிவே போடலாம்.

மலிக்க்கா உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி
கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரும் போது லட்டு உண்டு

ஸ்டீபன் ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்தும் , வாழ்த்தியமைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

கோபி

//தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.. குழந்தையின் பசியறிந்து உணவிட தாய்க்கு இணை யாருமில்லை.. அதை அப்படியே உங்களின் தாயாரும் செய்கிறார்... நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.//
கண்டிப்பாக நேற்றூ இரவு இது போல் நெட்டில் எல்லோரும் வாழ்த்தினார் கள் என்றேன்., சந்தோஷம் எல்லோருக்கும் என் ஆசிகள் என்றார்கள்

இது புது வகையாக தயாரிக்கல.

முன்பு பிள்ளைகளுக்கு பள்ளி கொடுத்தனுப்ப் மாதம் ஒரு முறை செய்து இப்படி வைப்பதுண்டு

உங்கள் அருமையான வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சை.கொ.ப மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஹுஸைன்னாம்மா உங்கள் பிளாக் பக்கம் வரமுடியல முடிந்த போது வரேன்.

பாலிலும் செய்யலாம். முன்பு பிள்ளைகள் எட்டு மாத குழந்தையாக் இருக்கும் போது அப்ப கலர் பொடி கலக்க்காமல் பாலில் இப்படி செய்து கொடுப்பேன்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தேனக்கா வாங்க் கண்டிப்பாக சொல்கிரேன்
நன்றி

Jaleela Kamal said...

நன்றீ கவி, ஜொள்ளு விடாதீங்க என்ன ப்பா 5 நிமிடம் வேலை உடனே செய்து சாப்பிடுங்க இல்லை இங்கு வாங்க நான் செய்து தரேன்

Jaleela Kamal said...

நன்றி மேனகா கவிக்கு பார்சல் அனுப்பினான்னு இல்லை உங்களுக்கும் தனியாக பார்சல் அனுப்புவேன்.

Jaleela Kamal said...

ஆமினா நல்ல இருக்கேன், வாங்க் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

Kanchana Radhakrishnan said...

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கேசரி லட்டு சூப்பர்.

Jaleela Kamal said...

செஃப் பழனி உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி

Jaleela Kamal said...

ஏஞ்சலின் உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

சித்ரா உஙக்ள் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

இமா உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் பிலாகே அபேஸ் ஆவது போல் ஆகி விட்டது.

இப்ப தான் சரியானது தமிழ் 10 எடுத்துட்டேன்

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி

Jaleela Kamal said...

பிரியா நன்றி பிரியா,
கண்டிபா போடுகீறேன்

Jaleela Kamal said...

உங்கல் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க் நன்றி காஞ்சனா.

Malini's Signature said...

அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கேசரி லட்டு சூப்பர்.. எத்தனை நாள் வரை இருக்கும் அக்கா?

Vikis Kitchen said...

Dear Jaleela mam, My hearty birthday wishes to mom. I started wondering on reading her love towards all. This is truly a blessing. Now I understand, why your cooking makes great food. Its your good heart that you got from your mom is reflecting in your food. Your writings reveal your best nature and makes me understand you are from a great family. I am so happy to know your mom's birthday. My prayers for mom and you all on this best occasion.

Kesari ladoo...super!

Vijiskitchencreations said...

ஜலீ ,அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!லட்டு அருமை.

மாதேவி said...

அம்மாவுக்கு என்னுடைய இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள் ஜலீலா.

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
கேசரி லட்டு கொடுத்து அம்மாவின் பிறந்தநாள் கொண்டாடியதற்கு நன்றி.
அன்பும் கருணையும் நிறைந்த அம்மாவுக்கு கடவுள் நல்ல பலத்தையும், நலத்தையும் தரப் பிராத்திக்கிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா