உருளை கிழங்கு - ஒன்று பெரியது
கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
நெய் - முன்று தேக்கரண்டி
பாதம் - ஐந்து
பாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
பால் - கால் கப்
ஏலக்காய் - இரண்டு
சாப்ரான் - இரண்டு பின்ச்
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்
Method
1.உருளை கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
2.கடலை பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து சுண்டல் பததில் கிள்ளு பதமாக வேக வைக்கவும்.
3.பாதத்தை ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.
4.மிக்சியில் வெந்த கடலை பருப்பு,ஏலக்காய்,பாதம், பால் சாஃரான் சேர்த்து அரைக்கவும்.
5.ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மறும் அரைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
6.ஏற்கனவே வெந்து இருப்பதால் இரண்டு நிமிடம் கிளறி அதில் சர்க்கரை சேர்க்கவும்.
7.ரெட் கலர் பொடியும் சிறிது கரைத்து ஊற்றி கொள்ளவும்.8.கடைசியில் சிறிது பதம் எஸன்ஸும், மீதி நெய் சேர்த்து கிளறவும்.நன்கு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு
Tweet | ||||||
39 கருத்துகள்:
vithiyasamana halwa jaleela akka...athanudan somas mmmm....nalla idea..
சோமாஸ் நல்லா இருக்கு :))
சமையல் அட்டகாசம் என்பது இது தானோ
உருளையில் ஹல்வா ம்ம்ம்
நம்ம சாய்ஸ் ஒன்லி பீட்ரூட் ஹல்வா
யப்பா........
உருளை கிழங்குல ஹல்வாவா??
ஜமால் சொன்னது போல், இது தான் சமையல் அட்டகாசத்தின் உச்சம்...
”பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” வகையான ரெசிப்பி....
super halwa.kalakkunga.
Puthu vgakai Alvavaa... mm Kalakkunka...
இந்த ஹல்வா எங்க மச்சி செய்யும். எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சூப்பர்க்கா..
உருளைக் கிழங்கு ஹல்வாவும், சமோசாவும் நல்ல காம்பினேசன் ஜலீலாக்கா!
பெருநாள் அன்று உருளைக்கிழங்கு கஞ்சி(பாயாசம்)செய்வாங்களே soooopara இருக்கும். அதையும் ஒரு பதிவு போடுங்க!!
ஏம்மணி...உருளைக் கிழங்கு அல்வா திண்டா, குறுக்குலே பிடிச்சுகுடுமே .கம்பீரமா வந்து தீர்ப்பு சொல்ற நாட்டாமை, கம்பை ஊண்டிக் கொண்டுதான் வந்து தீர்ப்பு சொல்லணும்.
உருளைக் கிழங்கிற்க்குப் பதிலா சக்கர வள்ளிக் கிழங்கில் ஹல்வா போட்டால் நல்லா இருக்குமா?
அல்வாவுக்கு வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு் ஜலீலா.
உருளை கிழங்கு ஹல்வா வித்யாசமா இருக்கு ஜலீக்கா இனிப்பு சோமாஸ நாங்க பூரனம்னு சொல்லுவோம்...நல்லா இருக்கு வாழ்த்துகள் அக்கா...
நபர் 1:உருளைகிழங்குல அல்வா எப்படி சாத்தியம்
நபர் 2 : " சமையல் அட்டகாசங்கள்" இருந்தால் எல்லாமே சாத்தியம் தான்.
அருமை வாழுத்துக்கள் அக்கா
ஸ்ரீ வித்யா இது இஸ்லாமிய இல்லங்களில் முன்பு ஒரு விஷேஷத்துக்காக செய்யும் ரெசிபி, வருகைக்கு மிக்க நன்றி
சை.கொ.ப தொடர்வருகைக்கு மிக்க நன்றி,
சகோ.ஜமால் இது உங்கள் சாய்ஸ் இல்லே, குழந்தைகள் சாய்ஸுக்காக.
கோபி உங்கள் தொடர் பாராட்டுக்கு மிக்க நன்றி
நன்றி வெறும்பய
இது நம் இஸ்லாமிய இல்லங்களில் முன்பு பூரி பாத்திஹா விற்கு செய்வார்கள்.
அம் அப்துல் காதர் நாங்க பெருநாளைக்கு ஷீர் குருமா தான் . முடிந்த போது போடுகிறேன்
//ஏம்மணி...உருளைக் கிழங்கு அல்வா திண்டா, குறுக்குலே பிடிச்சுகுடுமே .கம்பீரமா வந்து தீர்ப்பு சொல்ற நாட்டாமை, கம்பை ஊண்டிக் கொண்டுதான் வந்து தீர்ப்பு சொல்லணும்.
உருளைக் கிழங்கிற்க்குப் பதிலா சக்கர வள்ளிக் கிழங்கில் ஹல்வா போட்டால் நல்லா இருக்குமா//
நாட்டமை அய்யா, இது வயதானவர்கள் அளவாக சாப்பிடம் சோறு அள்ளி சாப்பிடுவது போல் சாப்பிட்டா, குறுக்கு பிடித்து கொள்ளும்,
இது குழந்தைகளுக்கு நல்ல புஸ்டியாக இருக்கா சின்னவயதில் நிறைய உருளை சேர்த்து சமையல் கொடுக்கோனும் அதற்காக செய்தது.
நன்றி செஃப் பழனி
நன்றி ஆசியா
நன்றி சீமான் கனி நிறைய பேர் இதை பூரணஎன்று தான் சொல்வார்கள், நாங்க சோமாஸ் என்போம்
நன்றி சசி தம்பி .
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
உருளைக்கிழங்கு ஹல்வாவும் அதையே பூரணமாக வைத்து சோமாசா செய்வதும் புதுமை! அருமை!!
உருளைக்கிழங்கு அல்வா வித்யாசமானது.. ரொம்பநாள் கழித்து உங்களது ப்ளாக்கு எனது வருகை...மற்றும் முன்னதாகவே ஈத் தின வாழ்த்துக்கள்..
//ஹல்வா குழந்தைகளுக்கு வாயில் ஏதும் தட்டாமல் சப்பு கொட்டி கொண்டு உள்ளே போகும்.//
படத்தை பாத்துகிட்டு நானும் அதை தான் செஞ்சிகிட்டு இருக்கேன் .ஆனா கையிலதான் ஹல்வா இல்லை..அவ்வ்வ்
//உருளைக் கிழங்கிற்க்குப் பதிலா சக்கர வள்ளிக் கிழங்கில் ஹல்வா போட்டால் நல்லா இருக்குமா?//
நாட்டாமை ரெண்டுமே ஒன்னுதான் ..எனக்கு பேரை கேட்டாலே அதிருது..அவ்வ்வ்
உருளை ஹல்வா - நான் கேள்விபட்டதே இல்லை, அக்கா... ரொம்ப நல்லா இருக்கும் போல. செய்து பாக்கணும். நன்றி.
//உருளையில் ஹல்வா ம்ம்ம்
நம்ம சாய்ஸ் ஒன்லி பீட்ரூட் ஹல்வா //
அதுவும் போடுவாங்க ஜமால்.
நல்ல ரெஸிப்பி.
super.
சூப்பர் அல்வா
யாருக்கும் பதில் உடனே போட் முடியல பிறகு போடுகிரேன்.
மனோ அக்கா பாராட்ட்டுக்கு மிக்க நன்றி
அதிரை அபூ பக்கர், ரொம்ப நாள் கழித்து நினைவு வைத்து வருகை த்ந்தமைக்கு மிக்க் நன்றி
ஜெய்லானி சமைக்க தெரிந்தால் நீங்கலே சமைத்துடலாமே
சித்ரா சூப்பராக இருக்கும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
செய்து பாருங்கள்
அக்பர் பீட்ருட் ஹல்வா ஏற்கனவே போட்டாச்சு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா