நேற்று காலையில் தீடீருன்னு பிளாக் ஓப்பன் செய்த்தும். ஒன்றுமே புரியல பேஜ் முழுவதும் சின்ன லேபில் கட்டம் போல .என்னடாது பதிவு 450 க்கு மேல் அவ்வளவு தான் யாரோ அபேஸ் பண்ணிட்டாங்களேன்னு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்.
கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மெசேஜ் ஜலீலாக்கா உங்கள் பிலாக் ஓவர்லாப் ஆகிவிட்ட்து எனக்கு மட்டும் தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா?
மறுபடி பகீர்.
எனக்கு கமென்ட் வரும் ஜீமெயில் என் சமையலறை கீதா ஆச்சல் உங்கள் பிளாக்கில் வைரஸ்.
ய்ம்மா
நீரோடை மலிக்கா யக்கா என்ன பண்ணீங்க உங்கள் பிலாக் ஒன்றுமே பார்க்க முடியல.
முதலில் டெம்லேட்ட மாத்துங்க.
முதலில் பதிவ சேவ் பண்ணனுமே. பிளாக்கரில் போய் எதோ ஒரு டெம்ப்லேட் மாற்றியாச்சு./
எல்லா பதிவும் எங்கும் போகல எதுவும் ஆகல / அப்பாடா பெரு மூச்சு விட்டாச்சு//
அப்படியே வந்து விட்ட்து.
(ஏன் இப்படி ஆச்சு இதில் உள்ளது எல்லாம் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் )
புதுசு புதுசா டெம்லேட் மாற்றுகிறீங்க சூப்பர் எல்லோரும் வந்து கீழே சொல்லும் போது ஏன் மாற்றினேன் என்று நான் பட்ட கஷ்டத்த எப்படின்னு சொல்லுவேன்.
எதுவுமே சரிபட்டு வராததால் தான் இப்படி மாற்றினேன்.
===================================================================
புதுசு புதுசா டெம்லேட் மாற்ற ஆசையா?ஐய்யோ என் பதிவெல்லாம் போச்சேன்னு கவலை வேண்டாம் முதலில் ஜெய்லானி இடுகையில் உள்ள் படி சேமித்து கொள்ளுங்கள்.
ஆனால் இவ்ளோ கஷ்ட பட்டு பதிவு போட்டு விட்டேன் ஏதாவது அழிந்து விட்டால். அதெல்லாம் ஒன்றும் ஆகாது வாங்க முதலில்
ஜெய்லானி சொல்லியுள்ள படி இது வரை போட்ட பதிவ சேமித்து விடுங்கள்.
பிறகு நீங்க உங்கள் இஷ்டத்துக்கு டிசைனா மாற்றலாம்.
1. நீங்க முதல்ல, வழக்கமா நம்ம போற dashboard குப் போங்க.
அதில கீழே, Tools and Resources லBogger in Draft ன்னு ஒண்ணு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.அதுக்கப்புறம் பார்த்தா,
உங்க dashboard ல பதிவோட பேருக்குக்கீழே design என்ற ஒரு வார்த்தை புதுசா சேர்ந்திருக்கும்.
அடுத்து அதை க்ளிக் பண்ணுங்க.அடுத்து ப்ளாகரோட எடிட் லே அவுட் வரும்.
அதில்Template Designer ன்னு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.உள்ளே போனா, உங்களுக்கே நிறைய டிசைன் கிடைக்கும்.
(இதை சொல்லி கொடுத்த சுந்தராவிற்கு நன்றி)
அதில் பிடித்ததை செலக்ட் செய்து அதை கிளிக் செய்து html code கோட் படத்தில் காட்டியுள்ள பகுதியில் சின்ன பாக்ஸ் ஸிற்குள் இருப்ப்பதை மாற்றினால் தான் புது டிசைன் கிடைக்கும்
dashbord - lay out - edit html - இங்குள்ள் பழிய கோடை எடுத்து விட்டு இந்த கோடை சேர்க்கனும்.
சேர்த்து சேவ் கொடுத்ததும்.ஆனால் என்ன மாற்றினாலும், எந்த கமெண்டும் , போஸ்டும் அழியாது. அதே போல் தமிலிழ் கோட் ஆட் பண்ணதும் பழைய பதிவுகளுக்கு உள்ள ஓட்டுகளும் அப்படியே வந்துடும்.
( நான் முன்பு மாற்ற பயந்தது கமெண்ட், போஸ்ட் , ஓட்டு போய் விடும் என்று பயந்து தான்.)கடைசியில் 400 பதிவும் போனால் போகட்டும் மறுபடி போட்டு கொள்ளலம் என்று தைரியமாக மாறியதில் கிடைத்த அனுபவம் தான் இதுநான் கற்றது கை மண் அளவு தான் , எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி கொடுத்து விட்டேன் அவ்வளவு தான்.. இப்ப ஜாலியா சந்தோஷமா தைரியமாக வித வித மான டிசைனை மாற்றி கொள்ளுங்கள்
( இதற்கு முன் மாற்ற பயந்து வேறு இரு நல்ல உள்ளங்களை மாற்ற சொன்னேன். அவர்களும் நான் கேட்ட டிசைனிலில் மாற்றி கொடுத்தார்கள், நான் எத்தனை டிசைன் மாற்றினாலும் முதல் போட்ட இரண்டு டிசைன் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.)
அது சரியாக ஓப்பன் பண்ண முடியாததால் முயற்சித்ததன் விளைவு தான் இந்த பதிவு.சில பேர் ஓப்பன் பண்ண முடியல ஒப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது என்கிறார்கள்.
அது என் பதிவில் மட்டும் இல்லை.பதிவுகள் அதிகமாக அதிகமாக எல்ல்லோரின் பதிவும் இப்படி தான் ஓப்ப்பன் ஆக லேட் ஆகுது.
50 பதிவுக்கு மேல் போட்டவர்கள் பதிவு எல்லாமே அப்படி தான் இருக்கு.
அதே போல் நிறைய படங்கள் போட்டு இருந்தாலும் ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்கும்.
இது எனக்காக சுஹைனா போட்டு கொடுத்த சமையல் டெம்லேட் இது எனக்கு ரொம்ப பிடித்தது, ஆனால் இதுவும் நாளடைவில் ஓப்பன் செய்ய முடியாம போச்சு.
பதிவுகள் ஏனோ தானான்னு எழுதுரவஙக் வித விதமா மாத்திக்குங்க. நிறைய பதிவு போட்டு அது அழிந்த்தும் மன நொந்து போகிறவர்கள் ரொம்ப கவனமாக இருக்கும் பதிவ டவுண்ட் லோடு செய்து சேவ் பண்ணி வைத்துவிட்டு மாற்றுங்கள்.
// தம்பி சசி, சூரியா கண்ணன் சார் ,வேலன் சார்,இன்னும் பிளாக்கர் டிப்ஸ் போடுபவர்கள் இதை படித்தால்/ இந்த பிளாக்கரில் உள்ள டிசைனும் நானும் எல்லோரின் பதிவையும் ஓப்பன் செய்யும் போது அதிக டைம் எடூக்குது. இப்ப என்னுடையதும் ஓப்பன் ஆக அதிக நேரம் ஆகுது, அதற்கு என்ன செய்யனும் என்று பதில் கீழே தரவும்///
49 கருத்துகள்:
neenga vera, last mnth en blog ithe maathiri aiaduchu. appuram enna prachanainu paartha, maila irunthu posting pannathula problem appuram atha stop panniten
எல் கே . நான் ஈமெயில் போஸ்டிங் எல்லாம் போடல,
பதிவுகள் எக்கச்சக்கமா இருக்கு.
ஆகையால் மொத்தமா போட்டு வைத்துள்ளேன். தேவையான போது பப்லிஷ் கொடுப்பது.
ஓப்பன் செய்ததும் பதிவே தெரியல முழுவதும் குட்டி குட்டி ஃபுளு கலர் லேபில் ஷாக் ஆனதில் என்ன மெசேஜ் அந்த லேபிலில் எழுதி இருந்த்துன்னு கூட படிக்கல.
ஜலீலாக்கா போன உயிர் திரும்ப வந்திடுச்சா?!
இப்போ எனக்கு புதுசா ஒரு பிராப்ளம். சப்ஸ்க்ரைப் பண்ணின ஃபாலோ அப் கமெண்ட்ஸ் என்னோட இன்பாக்ஸ் க்கு வரமாட்டேங்குது. மற்ற மெயில்கள் எல்லாமே பிரச்சினை இல்லாம வருது. என்ன பண்ரதுன்னு புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் :(. கூகுளில் தேடினாலும் விடை கண்டுபிடிக்க முடியலை :(. யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க
இருங்க கவி கீழே யாராவது பிளாக்கல் புலி கள் பதில் தராங்களான்னு பார்க்கலாம்.
ரொம்ப கஷ்டம் தான் முன்பு
இப்பவெல்லாம் ரொம்ப எளிதாயிருச்சி போல ...
அக்கா நீங்க கூறிய முறையில் template Designer சென்று மாற்றினால் சரியே
ஆனால் உங்கள் டெம்ப்ளேட் மாற்றும் போது background white ஆக இருக்கும் படி தேர்ந்தெடுத்து கொள்ளவும். பேக்ரவுண்டில் படம் சேர்த்தால் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும். இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன. விரைவில் பதிவாக வரும்
என்னய்யா இது பிரபல பதிவர் ஜலீலாக்காவுக்கு வந்த சோதனை...:) பிரபலமானாலே இப்படித்தாங்க...ஏதாச்சும் சோதனை வந்துட்டே இருக்கும்...:)
அப்புறம் தலைப்புல டெம்ப்லேட்னு இருக்கறதை படிக்கும்போது
உங்க பிளாக் படிககிற பழக்கத்துல ஆம்ப்லேட்னு வாசிச்சுட்டேன்....:))
கவிசிவாக்கு வந்த பிரச்சனை உசைனம்மாவுக்கு வந்துச்சுன்னு நினைக்கிறேன்...அவங்க சரிபண்ட்டாங்கன்னு நினைக்கிறேன்...அவங்ககிட்ட கேட்டா தெரியலாம்...
ஆமா அதென்னா "கழ்டம்"... தமிழ்ல புதுசா வார்த்தை கண்டுபிடிச்சிருக்காங்களா??? :))
அக்கா ஏற்கனவே என் பழைய ப்ளாக் காண போனவுடனே இப்படிதான் என்ன செய்யனு புரியாமல் தவிர்த்தேன்.. ஓசியாக கூகுல் மூலம் ப்ளாக் கிடைப்பதால் இந்தசிரமங்கள் நாம் பட வேண்டி இருக்குனு நினைக்கிறேன்.
முடிந்த வரை ப்ளாக் பதிவுகள் போடும் பொழுது மெயிலுக்கு வருதுபோல் வைத்துக்கொள்ளவும்..
இன்னைக்கி தொழில் நுட்பமா :))
சகோ.ஜமால்.. ஆமாம் இது போல் தான் முன்பு டெம்லேட் மாற்ற பயந்து இரண்டு நல்ல உள்ளங்கள் கிட்ட சொல்லி மாற்றி கொடுக்க சொன்னேன் அதுவும் , ரொம்ப ஜோராகவே இருந்தது, 3 மாதத்தில் அதுவும் ஹேங் ஆக ஆரம்பித்து விட்டது, கடைசியில் ஜெய்லானி சொல்லி உள்ளது போல் சேவ் செய்துட்டு,, என்னா ஆனாலும் ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்னு .
இஷ்டம் போல பிடிச்ச டிசைன் எல்லாம்.மாத்தினேன்.
நாஞ்சிலாரே நக்கலு, உங்களுக்கு தான் தப்பு தப்பா பதிவு தெரியும் போல
கஷ்டத்த மாத்திட்டேன், குத்த கண்டுபிச்சி சொன்னது ரொம்ப தாங்க்ஸ், அவசரத்து (டங்கு) டைப் பண்ணும் போது கை மாறி விட்டது ,
ஆமாம் ஓசியா கிடைகுதுன்னு வைத்தால் எல்லாம், கொஞ்சம் நாளைக்கு தான், நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்
நன்றீ பாயிஜா
சை.கொ.ப தொழில் நுட்பமா அட என் பாடு எனக்கு தான் தெரியும்
//அக்கா நீங்க கூறிய முறையில் template Designer சென்று மாற்றினால் சரியே
ஆனால் உங்கள் டெம்ப்ளேட் மாற்றும் போது background white ஆக இருக்கும் படி தேர்ந்தெடுத்து கொள்ளவும். பேக்ரவுண்டில் படம் சேர்த்தால் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும். இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன. விரைவில் பதிவாக வரும்//
சசி தம்பி நீங்கள் சொல்லிய வாறு கலரை மாற்று கிறேன்.
இதற்கான பதிவையும் விரைவில் எதிர் பார்க்கிறேன்.
எனக்கு நல்ல தகவல்
எல்லா பதிவும் எங்கும் போகல எதுவும் ஆகல / அப்பாடா பெரு மூச்சு விட்டாச்சு//
தப்பித்தீர்கள் ஜலீலா.
நானும் சில ஞாயிறுகளில் உங்கள் பதிவில் இருக்கும் சமையலை செய்துப்பார்ப்பேன்..குறிப்பெடுத்து வைக்க நினைப்பேன் சோம்பேறி தனம் அட ப்லாக் ஒப்பன் பண்ணி பார்க்க எவ்ளோ நேரம் ஆகப் போகுதுன்னு விட்டுவேன்..சோ,,இப்ப உங்களை விட நான் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிறேன்,,, நானும் என் பையனும் இங்க இருக்கும் ரெஸிபி எல்லாம் பார்த்தே பல நாள் ஆசை தீர்த்துகிட்டு இருக்கோம்,,,
இதனாலதான் நானும் டெம்ப்லேட் மாற்றாமல் இருக்கேன்..போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருக்கும்க்கா..அப்புறம் பேக்ரவுண்ட் கலர் மாற்றிடுங்க..படிக்கும் போது கஷ்டமா இருக்கு...
டெம்லேட்காக ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க என்பதை பதிவை படிக்கும் போதே தெரியுது மேடம். இந்த டெம்லேட்டும் நல்வாத்தான் இருக்கு ஆனால்... எழுத்து நிறத்திற்கும் பின்னணி வண்ணத்திற்கும் சரிபட்டு வரல...மேடம். அப்புறம் கருத்துகள் தெரிவித்தவர்கள் பட்டியல் 100லிருந்து 50ஆகவோ அதற்கு கீழோ குறைக்கலாம். (எனது எண்ணம் அவ்வளவே...) வலைப்பக்கம் நீண்டதாக இருப்பதைபோல் தோன்றுகிறது. மற்றபடி உங்கள் வலைப்பக்கம் அனைத்திலும் அருமை.
இதனாலத்தான் அந்த எண்ணம் இருந்தும் நான் அடிக்கடி மாற்றுவதில்லை.
கலர் கண்ணை உறுத்துது!மாற்றலாமே!
ஓ இதுல இப்படி ஒரு பிரச்சினை இருக்கா?
நாம் ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் ஒதுக்கி எடுத்துக் கொள்ளும் மெனக்கேடுகளும் சிரமங்களும் வீணாகினால், அதை ஈடுகட்டுவது சும்மாவா? நல்ல வேளை ஜலீலாக்கா, இறைவனுக்கே எல்லாப் புகழும்!
விவரங்களுக்கு நன்றி!
மிக்க நன்றி ஜலீக்கா என்னை கேட்டால் அடிக்கடி டெம்ளேட் மாற்றுவது பிரச்சனையே......
இது என்ன புடவையா?? தினம் ஒரு டிசைன் மாற்ற!! வீட்டுக்கு பெயிண்ட் வைத்தால் செலவு அதிகமென்று அஞ்சு பத்து வருஷம் வச்சு ஓட்டலையா? அது மாதிரி பிடிச்ச மாடலை வச்சு காலத்தை ஓட்டிக்க வேண்டியது தான் ஜலீலாக்கா!!)):-
நேற்று காலையில் தீடீருன்னு பிளாக் ஓப்பன் செய்த்தும். ஒன்றுமே புரியல பேஜ் முழுவதும் சின்ன லேபில் கட்டம் போல ////
இதி ஏதோ வெளிநாட்டு சதி நடந்துள்ளது , இதற்க்கு பொறுப்பேற்று ஒபாமா ராஜினாமா செய்ய வேண்டும் , அதுவரை நம்ம ஜெய்லானி தினமும் காலை 9:30 to 13:00 , மதியம் 14:00 to 17:30 , மாலை 18:00 to 20:30 ,அப்புறம் இரவு 21:00 to next day 8:30 தொடர் உண்ணாவிரதம் இருப்பார் என ஆக்ரோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
என்னங்க மேடம் இந்த பதிவுல தேவையான பொருட்கள் லிஸ்ட் போடலையே ?
( இதற்கு முன் மாற்ற பயந்து வேறு இரு நல்ல உள்ளங்களை மாற்ற சொன்னேன். அவர்களும் நான் கேட்ட டிசைனிலில் மாற்றி கொடுத்தார்கள், நான் எத்தனை டிசைன் மாற்றினாலும் முதல் போட்ட இரண்டு டிசைன் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.)///
எச்சூச்மே , போத்தீசுல இப்ப நிறைய புத்துப் புது டிசைன் வந்து இருக்காம் , அங்க போய் கொஞ்சம் டிரை பண்ணிப் பாருங்க
ரொம்ப சிரமபட்டு தான் மீண்டு வந்திருக்கீங்க ....!
நானும் தொடக்கத்தில் ஏதோ ஆர்வ கோளாரில் dark background வச்சிட்டேன்...இப்ப வேண்டாம் எடுத்திடலாம் என்று பார்த்தால் பதிவு கலர் எல்லாம் மாத்த வேண்டி இருக்கு....??! எப்படி ஒன்னு ஒன்னாக மாத்தனு புரியாம முழிச்சிட்டு இருக்கிறேன்...
ஆனா இதுதான் பதிவு எழுதுவதை விட கஷ்டமா இருக்கு....
வருகைக்கு நன்றி சௌந்தர்
எல்லா பதிவும் எங்கும் போகல எதுவும் ஆகல / அப்பாடா பெரு மூச்சு விட்டாச்சு//
தப்பித்தீர்கள் ஜலீலா
ஆமாம் மாதேவி.
தமிழரசி வாங்க நீங்களும் பெரு மூச்சு விட்டீங்கலா> நீங்கள் தினம் பார்ப்பது ரொம்ப சந்தொஷம், அப்படியே உங்கள் அன்பான கமெண்ட்டையும் தெரிவித்தால் இன்னும் சந்தோஷம்.
பிரவின் குமார் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, பட்ட்டியலையே நீக்கி விட்டேன்.
ஸாதிகா அக்கா இது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றல, ஓப்பன் ஆகலையே ஹேங் ஆகிவிட்டது ஆகையால் மாற்ற போனதில் இவ்வள்வு ,
நன்றி நிஜாம்
நன்றி சீமான் கனி
//இது என்ன புடவையா?? தினம் ஒரு டிசைன் மாற்ற!! வீட்டுக்கு பெயிண்ட் வைத்தால் செலவு அதிகமென்று அஞ்சு பத்து வருஷம் வச்சு ஓட்டலையா? அது மாதிரி பிடிச்ச மாடலை வச்சு காலத்தை ஓட்டிக்க வேண்டியது தான் ஜலீலாக்கா!!)):-/
மாற்றியது. வைரஸ் பிராப்ளத்தால்
அமைச்சரே உம்மால் முடிந்த பிட்ட போட்டுட்டு போய் விட்டீர்/
போத்திஸா என்ன தங்கமணி கூப்பிட்டு போக சொன்னாங்கலா?அதே நினைவுல இங்க பதில் போட்டு விட்டீரா
ஆமாம் கவுசல்யா, பதிவு 5 நிமிடத்தில் போட்டுடலாம்
ஆனால் இந்த செட்டப சேன்ஞ் செய்வது நாள் முழுவதும் எடுக்குது.
ஆமாம் அஸ்மா நேரம் ஒதுக்கி போட்டு எல்லாம் போச்சென்னு ஆகும் போது ஒரு வழி கிடைத்து மாற்றியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது,
ஸலாம்
எனக்கு இந்த ப்ளாக்கர் டிப்ஸ் கொடுங்களேன் ப்ளீஸ்!
1.அகர வரிசையில் லேபிளை எப்படி எழுதுவது?
2.இண்ட்லியில் ஓட்டு போடுவது எப்படி?
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி.
-- dashboard - design - add a gadget - basic , enpathil 19 vathu labels , click seyyavum
angkuLLa optionil ippadi vaiyungkaL
Title
Show All Labels Selected Labels
Sorting Alphabetically By Frequency
Display List Cloud
Show number of posts per label
ithil
All Labels
Alphabetically
List
enRu ullathai click pannungka
இண்ட்லியில் மற்றவர்களுக்கு ஓட்டு போடவா இல்லை உஙக்ள் பதிவை இனைககவா?
எதுவா இருந்தாலும், முதலில் இண்ட்லியில் உங்கள் ஐடி கொடுத்து லாகின் ஆகிகொள்ளுஙக்ள்
வாங்க ஜுமாராஸ் வருகைக்கு மிக்க நன்றி
எனக்கு தொழில் நுட்பம் அவ்வளவா தெரியாது, இது நான் பிலாக்கோடு பட்ட பாடு, என் அனுபவம் இந்த பதிவு போட வைத்தது.
ஸலாம்
இண்ட்லியில் மற்றவர்களுக்கு (கண்டிப்பாக உங்களுக்கு)ஓட்டு போடுவதற்குத் தான் விளக்கம் கேட்டேன்.ஏற்கனவே அதில் உறுப்பினர் ஆகிவிட்டேன்.தங்களை ஈ மெய்ல் மூலம் தொடர்பு கொள்ளலாமா?
ஸலாம்
feedbackjaleela@gmail.com
இந்த ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா