Showing posts with label பேச்சுலர் சமையல். Show all posts
Showing posts with label பேச்சுலர் சமையல். Show all posts

Wednesday, October 29, 2014

வெண்டைக்காய் வறுவல்- Ladies Finger Stir Fry

வெண்டைக்காய் வறுவல்/பொரியல்/Ladies Finger Stir Fry



வெண்டைக்காய் மூளை வளர்சிக்கு ஏற்ற காய், வெரும் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் ரொம்ப சிம்பில் பேச்சிலர்களும் ஈசியாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்.

வெண்டைக்காய் – கால் கிலோ
சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி


தாளிக்க

எண்ணை –இரண்டு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
வெங்காயம் பொடியாக அரிந்தது – ஒரு மேசைகரண்டி
காஞ்ச மிளகாய் – 3  எண்ணிக்கை

செய்முறை


வெண்டைக்காயை கழுவி கொண்டையை யும் வாலையும் அரிந்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற காடாயில் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.



பிறகு வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி உப்பு தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 

வேக வைக்கும் போது தீயின் தனலை மிகக்குறைவாக வைக்கவும். 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள் வெந்துவிடும்.

பேச்சிலர்களுக்கும் ஈசியாக செய்யக்கூடிய வெண்டைக்காய் வறுவல் ரெடி.
வெறும் மோர், ரசம் தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

கவனிக்க : வெண்டைக்காயை அரிந்து விட்டு கழுவக்கூடாது , கழுவிட்டு தான் அரியனும், இல்லை என்றால் கொழ கொழப்பாகிவிடும்.


சாம்பார் பொடிக்கு பதில் மிளகாய் தூளும் போட்டு செய்யலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, September 18, 2014

பச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா?



பேச்சுலர்களுக்கு முதல் சமையல் என்றால் முன்பெலாம் உப்புமா தான், ஆனால் அது சில பேருக்கு உப்புமாவான்னு காத தூரம் ஓடுபவர்களும்
 உ ண்டு. 
அது செய்கிற விதத்தில் செய்தால் அது உங்கள் பேவரிட்டாகிடும். 


வாரவாரம் வெள்ளி விடுமுறை முடிந்து மறுநாள் சனிக்கிழமை சமைக்க கொஞ்சம் இல்ல ரொம்ப வே சோம்பலாகிடும்.
அப்ப சட்டுன்னு ஒரு டிபன் என்றால் வெள்ள உப்புமாதான் , 
உப்புமா எல்லா ஒரு டிபனா அப்படின்னு நினைக்காதீங்க. லைட் டிபன் , சுலமாக செய்ய கூடியது.

ஆயத்த நேரம் -  5 நிமிடம்
சமைக்கும் நேரம்  - 7 நிமிடம்
பரிமாறும் அளவு - 2 நபருக்கு



தேவையான பொருட்ள்

ரவை - அரை டம்ளர் (100கிராம்)

தாளிக்க

பொடியாக அரிந்த வெங்காயம் - 3 மேசைகரண்டி
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 2
எண்ணை - 5 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
நெய் - - ஒருதேக்கரண்டி
வெண்ணீர்  - ஒன்னேகால் டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
முந்திரி -  5 ( தேவைப்படால்)



செய்முறை

ரவையை லேசாக கருகாமல் அதே நேரம் சிவறாமல் வறுத்து ஒரு வாயகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். 2 நிமிடத்தில் வறுத்துடலாம், கொஞ்சம் தீய அதிகமாகமாக வச்சிட்டு அங்க இங்க பராக் பார்த்தீங்க அவ்வளவு தான் தீஞ்சே போய்விடும்.



பெரிய சட்டி அல்லது வாயகன்ற வானலி ( உப்புமா கிளற சின்ன பாத்திர எடுக்காதீங்க கொஞ்சம் பரவாலான சட்டியா இருக்கட்டும்.

எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சிவற கூடாது லேசாச வெள்ளை கலரில் வதங்கினால் போதும் தாளிக்கும் போதே பக்கது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
ஒன்னேகால் என்று சொன்னதால் சரியா ஒன்னேகால் தண்ணீர் வைக்க வேண்டாம். கொதிக்கும் போது தண்ணீர் கொஞ்சம் வற்றும். அதுவும் இல்லாமல் கிளறும் போது உப்புமா கட்டி பிடித்தால் மேலும் ஊற்றி கிளற கூடுதல் வெண்ணீர் தேவைப்படும்.




இப்ப கொதித்து கொண்டிருக்கும் வெண்ணீரில் அளவில் குறிப்பிட்ட படி ஒன்னேகால் டம்ளர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதி வெண்ணீர் ஊற்றியதால் சீக்கிரமே கொதி வந்துடும். இந்த ஸ்டேஜில் தீயின் தனலை குறைத்து விட்டு.  உப்பை தூவி விட்டு, தட்டில் வைத்திருக்கும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒருகையால் துவி கொண்டே மறுகையால் கிளறுங்கள். சிறிது நெய்யை ஊற்றி மீண்டும்
கிளறி கெட்டி ஆகி கொண்டே வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.
கொஞ்சம் அந்த சூட்டுட்டன் அடுப்பிலேயே இருக்கட்டும். 5 நிமிடம் தம் போல் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து கிளறி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தட்டில் தட்டினால் அழகான வடிவத்தில் வரும். கூட ஊறுகாய் , இல்லை வடை, வெங்காய முட்டை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை காலை டிபன் என்றில்லை இரவில் கூட ஈசியான டிபனாக செய்து சாப்பிடலாம்.

இதில் தாளிக்கும் போது காஞ்சமிளகாய் இஞ்சி சேர்த்து தான் செய்வேன்,

இதில் வெரும் பச்சமிளகாய் சேர்த்து செய்துள்ளேன். பச்ச மிளகாய் வாசத்துடனும்  டேஸ்ட் அருமையாக இருக்கும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, February 23, 2014

மிளகு முட்டை தோசை - Egg Dosa with Pepper - (பேச்சுலர்களுக்கு)


வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்கள் இதை சுலபமாக செய்து சாப்பிடலாம்.

காலை டிபன் அல்லது மாலை பசியாக இருந்தாலோ. இரவு டிபனுக்கோ இது போல் செய்து சாப்பிடலாம்.
ரொம்ப ஷாப்டாக இருக்கும் வயதானவர்களுக்கும் ஹெல்தியான டிபனாக இருக்கும்.


தேவையான பொருடகள்
முட்டை - 1
ஒன்றும் பாதியுமாக பொடித்த மிளகு - சிறிது
உப்பு - தேவைக்கு
தோசைமாவு.- 1 1/2 குழிகரண்டி
எண்ணை -  ஒரு தேக்கரண்டி


செய்முறை
தோசை தவ்வாவை காயவைத்து அதில் தோசைமாவை ஊற்றி தடிமனான பெரிய தோசையாக வார்த்து

அதில் முட்டையை கொஞ்சம் குலுக்கி முழுவதும் உடைக்காமல் மேலே சிறித ஓட்டை மற்றும் கொஞ்சமாக பிரித்து தோசையிம்ன் மேல் பரவலாக தெளித்து விடவும்.

உப்பு, மிளகு தூள் தூவி, சுற்றிலும் எண்ணையை ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து வேகவிடவும்.

சுவையான முட்டை தோசை ரெடி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 27, 2013

பிரட் ஊத்தாப்பம் - Bread Uththappam




Bread uththaappam

தேவையானவை

தோசை மாவு ஒரு கப்

ப்ரெட் ஸ்லைஸ்  ‍ 6
பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் ‍ 2
கருவேப்பிலை ‍ சிறிது
எணணை + நெய் (அ) பட்டர் சுட தேவையான அளவு


செய்முறை

தோசைமாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலையை கலக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து எண்ணை + பட்டர் ஊற்றிதோசை மாவில்  ப்ரட் ஸ்லைஸ்களை இருபுறமும்  தோய்த்து சுட்டெடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் ப்ரட் ஊத்தாப்பம் ரெடி

தோசை மாவில் தோய்க்க வரவில்லை என்றால் ப்ரட்டை தவ்வாவில் வைத்து கரண்டியால் ஒரு கரண்டி அளவிற்கு அள்ளி ஊற்றலாம்.



பிரட் ஊத்தாப்பத்துடன் சாம்பார் காம்பினேஷனில் சுவை சூப்பரோ சூப்ப்ராக இருக்கும்.

Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, September 24, 2013

வேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Peanut Stir Fry




 வேர்கடலை என்றதும் எங்க டாடி ஞாபகம் தான் வருகிறது.ஞாயிற்று கிழமைகளில் மாலை கண்டிப்பாக எங்க அம்மா சுண்டல் அல்லது வேர்கடலை செய்வார்கள். அப்ப டாடி சொல்வாங்க எம்மா மல்லாட்டை வெவிக்க போடுமா என்று , ம்ம் ஊரிலிருந்து மூட்டை மூட்டையாக அப்ப எங்க வீட்டுக்கு வரும். சொந்தங்களுக்கு கொடுத்த்து போக மீதி வீட்டில் விடுமுறை நாட்களில் வேகவைத்து நாங்க எல்லோரும் டாடியோடு ஒன்றாக உட்கார்ந்து  சாப்பிடுவோம். பெரிய பானையில் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து அதன் தோலை உரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

இப்போதெல்ல்லாம் தோல் எடுத்த வேர்கட்லையே இங்கு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் காலை டிபனுக்கு வேர்கடலை சாலட், வேர்கடலை அல்லது சுண்டல் வகைகள் மாதம் இருமுறை செய்வேன். புளி சாதம் , பிஸிபேளாபாத் செய்யும் போது கண்டிப்பாக வேக வைத்த வேர்கடலை யுடன் தான் செய்வது, சில நேரம் புளி சாதத்தில் வேக வைத்த கருப்பு கொண்டை கடலை சேர்த்தும் செய்வேன்.


வேர்கடலை வெண்டைக்காய் பொரியல்/Ladies Finger Peanut Stir Fry/Peanut & Okra & Boiled Peanut Stir Fry

தேவையானவை
வெண்டைக்காய் – கால் கிலோ
வேக வைத்த வேர்கடலை – முன்று மேசைகரண்டி
தாளிக்க
எண்ணை – இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பொடியாக அரிந்த வெங்காய்ம் – 1
பொடியாக அரிந்த தக்காளி – அரை பழம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தூள் – அரை தேக்கரண்டி




செய்முறை :

வெண்டைக்காயை கழுவி அரிந்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெண்டைக்காய், மற்றும் வேக வைத்த வேர்கடலை சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து முடி போட்டு (வெண்டைகாய் சீக்கிறம் வெந்து விடும்) 5 நிமிடம் வேகவைக்க்கவும்.சுவையான சத்தான வெண்டைக்காய் வேர்கடலை பொரியல்ரெடி.. பீட்ரூட் ,கேரட் போன்ற பொரியல்கள் செய்யும் போதும் சேர்த்து கொள்ளலாம். 
பொரியல் வகைகளில் சீக்கிறமாக செய்யக்கூடிய பொரியல் வெண்டைக்காய் தான். வெண்டைக்காயை அரிந்து விட்டு கழுவக்கூடாது கொழ கொழன்னு ஆகிவிடும். முதலில் கழுவி விட்டு கொண்டையை வாலையும் அரிந்து விட்டு பிறகு அரியனும்.
வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்பாகாது.
சோம்பு தயிர் வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் குர் குரே

வெண்டைக்காய் தால் பொரியல்

Linking to Tamizar samaiyal Tuesday Event FB Group & Gayatri's walk through memory lane hosted by Priya Anadhakumar
தமிழர் சமையல் நளினி சுரேஷின் ஈவண்ட் ,ஓவ்வொரு மாதமும் மாதத்தில் இரண்டாவது நான்காவது மாதம் போஸ்ட் செய்யனும் என்பது விதிமுறை. இங்கு நான் பகிர்வது ஏராளமாக நம்மூர் சமையல் தான் , போஸ்ட் போட்டு அதை லிங்க் பண்ணுவது பெரும் பாடாக இருக்கிறது . எப்ப்போது முடிகிறதோ அப்போது மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த வேர்கடலை வெண்டைக்காய் பொரியலை தமிழர் சமையலில் பகிர்கின்றேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, September 21, 2013

அவல் உப்புமா - Poha Upma




அவல் உப்புமா
பேச்சுலர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் காலை டிபனுக்கு செய்ய ஈசியான ரெசிபி.
இங்கு துபாயில் வெள்ளி விடுமுறை , சனிக்கிழமை தான் இங்குள்ள ப்ரைவேட் கம்பேனிகளுக்கு வாரத்தின் முதல் நாள். லிவு முடிந்து மறுநாள் ஆபிஸ் செல்ல மனசே இருக்காது. காலையில் டிபன் உப்புமாதான் என்று முடிவு பண்ணி விடுவது. இன்னும் ஈசியான டிபன் உப்புமாவை தவிர , புட்டு, இனிப்பு சேமியா, இனிப்பு  கோடா,வறுத்தமாவு கொழுக்கட்டை இது போல் ஏதாவது செய்து விடுவேன்.

இந்த முறை அவல் உப்புமா இப்படின்னு கை நொடிக்கும் நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல் – 1 டம்ளர்
தாளிக்க
எண்ணை  - இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் – இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை – 5 இலை
பச்ச மிளகாய் – 2 கீறியது

மஞ்சள் பொடி – கொஞ்சம்

செய்முறை
அவலை இரண்டு முறை  களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
தாளிப்பதற்குள் தண்ணீரில் சிறிது ஊறிவிடும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அவலை கொட்டி கிளறி மூடி போட்டு ஒரு நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவும்.
சுவையான அவல் உப்புமா 5 நிமிட்த்துக்குள் ரெடியாகிவிடும்.
அதிக நேரம் ஊறவைத்தால் குழைந்த்து போல் ஆகிவிடும்.புளிப்பு சுவை வேண்டும் என்றால் அரை தேக்கரண்டி லெமன் பிழிந்து கொள்ளலாம்,
 உதிரியாக வேண்டும் என்றால் தாளித்த உடன் அடுப்பை ஆஃப் செய்து விட்டு அவலை கழுவி வடிகட்டி உடனே சேர்த்து மீண்டும் அடுப்பை ஆன் செய்து முன்று நிமிடம் நன்கு கிளறி இரக்கவும்.
Linking to Walk through Memory Lane hosted by Priya Ananda Kumar


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Monday, March 25, 2013

புதினா சட்னி தோசை ரோல் - Mint Chutney & Dosa Roll




புத்துணர்வு தரும் புதினா சட்னி தோசை ரோல்

புதினா சட்னி  இட்லி,தோசை, பிரட் சாண்ட்விச், சேமியா, மக்ரூணி,அடை , மைதா தோசை, உப்புமா ,எல்லா வகை டிபனுக்கும் ,வடை பஜ்ஜி , உளுந்து வடை ,போண்டா,பகோடா  மாலை நேர சிற்றுண்டிக்கும், குஸ்கா கீ ரைஸ், பகறா கானா முதலிய சாதவகைகளுக்கும்  பொருந்தும்.





புதினா சட்னி - 2

தேவையானவை

ஃப்ரஷ் புதினா  - 1 கட்டு 
புளி - ஒரு சிறிய எலுமிச்சை சைஸ்
பச்ச மிளகாய் - 2
உப்பு - கால் தேக்கரண்டி  ( தேவைக்கு)
தேங்காய் பத்தை - 3 (2” சைஸ்)
வெங்காயம் - மீடியம் 1






கெட்டியாகவோ தண்ணியாகவோ அவரவர் விரும்பம் போல் அரைத்துகொள்ளலாம், தண்ணீராக அரைத்தால் அதை தாளித்து கொண்டால் நல்ல இருக்கும். தண்ணீயாக என்றால் ஒடு தண்ணீர் இல்லை சிறிது நீர்க்க அரைத்து கொள்ளலாம்.
செய்முறை 

புதினாவை ஆய்ந்து மண் போக நன்கு அலசி எடுக்கவும்.
முதலில் தேங்காய்,பச்சமிளகாய், புளியை அரைத்து கொண்டு அதனுடன் புதினா,உப்பு,வெங்காயம் சேர்த்து  மிக்சியில் அரைக்கவும்.




ஆபிஸ் க்கு எடுத்து செல்ல தோசையை வார்த்து கொண்டு அதில் ஜாம் போல் தடவி மேலே படத்தில் காட்டியுள்ளது போல் தடவி சுருட்டி எடுத்து செல்வேன். புதினா சட்னி தோசையில் ஊறி சாப்பிடவே ய்ம்மியாக இருக்கும்.

புதினா சட்னி/துவையல் மட்டும் வகைவகையாக அரைப்பேன்.இதில் சிலநேரம் இனிப்பு துவையல் போல் வால்நட், பேரிட்சை சேர்த்தும் அரைப்பேன். ஏற்கனவே ரெசிபி போட்டுள்ளேன்.




பச்ச பசேலுன்னு எங்க புதினா கொத்துமல்லி கருவேப்பிலை , கீரை வகை பார்த்தாலும் , பேய் மாதிரி அள்ளிக்குவேன்.


Dubai - Carrefour - Century Mall 
Green Leaves Section

பேச்சுலர் ஈவண்ட் ஆசியாவின் ரோல் ஈவண்டுக்காக செய்தது இணைப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது.




Linking to 
 Gayathri'sWalk through Memory Lane hostedby Hema's Adugemane

Sunday, January 27, 2013

புல்ஸ் ஐ ஆப்பம் - Bull's eye Appam


-- புல்ஸ் ஐ ஆப்பம்

டயட் செய்பவர்களுக்கு அல்லது எண்ணை அதிகமாக இல்லாத உணவு என்றால் கொழுக்கட்டை, இட்லி , புட்டு, ஆப்பம் இது போன்ற டிபன் வகைகளை செய்து  சாப்பிடலாம்.

எண்ணையில்லமல் முட்டையுடன் சத்தான டிபன்,
 குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.டயட் செய்பவர்களுக்கும் ஏற்ற டிபன். 


தேவையானவை
ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி  – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு 
முட்டை – 3
மிளகு தூள்  - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு


 செய்முறை 
முதலில் இருவகை அரிசி  அவல் ,உளுந்து,ஜவ்வரிசிவெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
 ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி  இரக்கவும்.




தேவைக்கு  இது போல் செய்து 3 செய்து  கொண்டு மீதி உள்ள மாவில் பிளெயின் ஆப்பம் ஊற்றி கொண்டு அதற்கு பக்க உணவாக தேங்காய் பால் , சப்ஜி,  சால்னா ,சட்னியுடன் ஏதாவது ஒன்று செய்து கொள்ளலாம்.

முழு பாசி பயிறு தால் தர்கா, பஞ்சி ஆப்பம், ஏலக்காய் தேங்காய் பால் சுட்டியை செடுகி பார்க்கவும்.

எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன்குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.



இப்ப இங்கு துபாயில் மாவு கூட அரைக்க தேவையில்லை , எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் ரெடி மேட் மாவு கிடைக்கிறது. இன்னும் வேலையும் மிச்சம் மாவு வாங்கி வந்தால் 10 நிமிடத்தில் புல்ஸ் ஐ ஆப்பர் ரெடி.

சமைக்கும் நேரம் : 30 நிமிடம் 
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : (ஊறவைக்கும் நேரம் + அரைக்கும் நேரம் + புளிக்க வைக்க)


Bull's Eye 


linking to saras 30 minutes dish rice recipe