அவல் உப்புமா
பேச்சுலர்களுக்கும்
வேலைக்கு செல்பவர்களுக்கும் காலை டிபனுக்கு செய்ய ஈசியான ரெசிபி.
இங்கு துபாயில் வெள்ளி
விடுமுறை , சனிக்கிழமை தான் இங்குள்ள ப்ரைவேட் கம்பேனிகளுக்கு வாரத்தின் முதல்
நாள். லிவு முடிந்து மறுநாள் ஆபிஸ் செல்ல மனசே இருக்காது. காலையில் டிபன்
உப்புமாதான் என்று முடிவு பண்ணி விடுவது. இன்னும் ஈசியான டிபன் உப்புமாவை தவிர ,
புட்டு, இனிப்பு சேமியா, இனிப்பு கோடா,வறுத்தமாவு
கொழுக்கட்டை இது போல் ஏதாவது செய்து விடுவேன்.
இந்த முறை அவல் உப்புமா
இப்படின்னு கை நொடிக்கும் நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல் – 1 டம்ளர்
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு –
ஒரு தேக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் –
இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை – 5 இலை
பச்ச மிளகாய் – 2 கீறியது
மஞ்சள் பொடி – கொஞ்சம்
செய்முறை
அவலை இரண்டு முறை களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
தாளிப்பதற்குள் தண்ணீரில்
சிறிது ஊறிவிடும்.
தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை தாளித்து அவலை கொட்டி கிளறி மூடி போட்டு ஒரு நிமிடம் சிம்மில் வைத்து
இரக்கவும்.
சுவையான அவல் உப்புமா 5
நிமிட்த்துக்குள் ரெடியாகிவிடும்.
அதிக நேரம் ஊறவைத்தால்
குழைந்த்து போல் ஆகிவிடும்.புளிப்பு சுவை வேண்டும் என்றால் அரை தேக்கரண்டி லெமன் பிழிந்து கொள்ளலாம்,
Linking to Walk through Memory Lane hosted by Priya Ananda Kumar
Tweet | ||||||
24 கருத்துகள்:
அவலில் சூப்பராக உப்புமா செய்து காட்டி இருக்கீங்க ஜலி.அவசரத்திற்கு சட்டென செய்யும் அருமையானதொரு டிபன்.த.ம 2
அட... சூப்பர்...!
அவல் உப்புமா சுலபமாக செய்யும் விதமாக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜலீலா!
அவல் உப்புமா செய்முறை அருமை.
மிகச்சுலபமாகச் செய்யக்கூடியது.
என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.
ஆனால் இது சுடச்சுட சாப்பிடத்தான் நல்லா இருக்கும்.
’ஆறி அவலாகிப்போனது என்பார்களே’ அது இதற்குத்தான் பொருந்தும்.;)
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் ஃபேவரிட்... குறிப்புக்கு நன்றிக்கா...
எங்க வீட்டிலும் இது ஃபேவரிட் உப்புமா! நல்லா இருக்கு ஜலீலாக்கா!
ஒரு உருளைக்கிழங்கைப் பொடியா நறுக்கி அந்த வெங்காயத்தின் கூடவே சேர்த்துக் கொஞ்சநேரம் நல்லா வதக்கிட்டு அதன் பின் அவல் சேர்த்தால் இன்னும் நல்ல ருசி. ஃபில்லிங் ஆகவும் இருக்கும்.
ஆலூபொஹா:-)
அருமையான குறிப்பு ஜலீலா!
எனக்கும் ரொம்பவே பிடிக்கும். தேசிப்புளி குழைந்து போகாமல் தடுக்கும்! மஞ்சள் பொடி கலரும் வாசனையும் சுவையாகவும் இருக்கும்!
சகோதரி துளசி கோபால் சொன்னதுபோல உ.கிழங்கு குட்டி குட்டியா வெட்டி வதக்கிச் சேர்ப்பேன் கூட சிறிது மிளகு சீரகப் பொடியும் தூவி...:)
அருமை! நன்றியும் வாழ்த்துக்களும் ஜலீலா!
த ம.5
வாங்க ஸாதிகா அக்கா தொடர்ந்து வருவது எனக்கு மிகவும் சந்தோஷம்
தனபாலன் சார் வருகைக்கு மிக்க நன்றி
மனோ அக்க உங்கள் கமெண்ட்க்கு மிக்க நன்றி
வை கோபு சார் சூடாகதான் நல்ல இருக்குமா? ஆறியதும் நன்றாக தான் இருந்தது. வருகைக்கு மிக்க நன்றி
பானு வாங்க இது உங்கள் ஃபேவரிட்டா ரொம்ப சந்தோஷம்
வருகைக்கு மிக்க நன்றி மகி
வாங்க துளசி கோபால் அடுத்த முறை செய்யும் போது உருளை + வெங்காயம் சேர்த்த்து செய்து பார்க்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் இளமதி ரொம்ப கம கமன்னு அருமையாக் இருக்கும்,மிளகு சீரக பொடி போட்டு என்றால் இன்னும் சூப்பராக இருக்குமே.
வருகைக்க்கு மிக்க நன்றி .
அவல் உப்புமா எனக்கும் பிடிக்கும்,கொஞ்சம் உதிரியாய்..அருமை ஜலீலா.
செய்முறை மிகச்சுலபமாகவுள்ளது. ''அதிக நேரம் ஊறவைத்தால் குழைந்த்து போல் ஆகிவிடும்''.போன்ற டிப்ஸ்கள் பயனுள்ளவை. நன்றி
அவல் உப்புமா புதுமையா இருக்கே...
நானும் வந்துட்டேன் ஜலீலா! எங்கள் ஊரில் அவல் வைத்து இதுபோல நிறைய ஐட்டங்கள் செய்வார்கள்.
நானும் நீங்கள் சொன்னபடி செய்துபார்க்கிறேன்.
நேரம் இருப்பின் வேர்கடலை கூட வறுத்துப் போடலாம். (சும்மா ஒரு சின்ன குறிப்பு!)துளசி டீச்சரை பின் தொடர்ந்து!
வியாபதி முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அட டே ரஞ்சனி அக்கா நீங்களும் ஆஜரா ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
நான் வேர்கடலை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.உங்கள் டிப்ஸ்க்கும் மிக்க நன்றி அக்கா.
இது அவசரடி உப்புமா.
ஆஹா எனக்கும் இப்படி நேரத்தை மிச்சப்படுத்திற மாதிரி ஈஸியான் ரெசிப்பிதான் வேணும். உதிரியான அவல் உப்புமா செய்யவும் ஈஸி சுவையும் நல்லா இருக்கும்னு படிக்கும்போதே தெரியுது செய்து பார்த்துடறேன். நன்றி!
Super quick and lovely aval upma, very light and healthy break fast... super akka...
Thanks a lot for linking it the wtml event, waiting for more yummy and delicious entries from you akka...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா