இந்த பூந்தி ரெய்தா நார்த் இந்த்யாவில்
தான் பிரபல்மானது இதில் சீரகம்
வறுத்து திரித்து சேர்த்து சிறிது மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்ப்பார்கள். இதில் நான் சிம்பிளாக எப்போதும் பிரியாணிக்கு செய்யும் ரெய்தாவில் காராபூந்தி சேர்த்துள்ளேன்.
காரா பூந்தி ரெய்தா
தேவையான பொருள்கள்
தயிர் – 150 மில்லி
பொடியாக அரிந்த வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய – பச்சமிளகாய் – 2
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
லெமன் ஜூஸ் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – அரை சிட்டிக்கை
உப்பு –தேவைக்கு
காராபூந்தி – தேவைக்கு.
செய்முறை
தயிரை நன்கு அடித்து
அதில் வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சமிளகாய் கொத்துமல்லி கீரை, சர்க்கரை , உப்பு , லெமன் ஜூஸ்
அனைத்தையும் கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
பரிமாறும் போது
காராபூந்தியை தூவி பரிமாறவும்.
இதை பிரியாணிக்கு
என்றில்லை சாலட் போல் சும்மாவும் சாப்பிடலாம், சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.
இந்த பூந்தி ரெய்தா நார்த்
இந்த்யாவில் தான் பிரபல்மானது இதில்
சீரகம் வறுத்து திரித்து சேர்த்து சிறிது மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா
சேர்ப்பார்கள்.
/மோர்குழம்பு ,தயிர்
சாதம், தயிர்வடை எது வைத்தாலும் காராபூந்தியுடன் சாப்பிடுவது என் பையனுக்கு
பிடிக்கும்.
நான் பிரியாணிக்கு பக்க உணவாக அடிக்கடி வெஜ் ரெய்தா, மிண்ட் குகும்பர் ரெய்தா, தேங்காய் தயிர்
பச்சடி ,பிட்ரூட் பீனட் ரெய்தா என்று செய்வேன்..
இதில் சிம்பிளாக வெங்காய தயிர்
பச்சடி(ரெய்தா) உடன் காராபூந்தி சேர்த்துள்ளேன்./
மோர் குழம்பு, கேரட் சாலட், காராபூந்திதயிர் சாதம், ஸ்பைசி பாயில்ட் எக் ஃப்ரை, காரா பூந்தி, நார்த்தங்காய் ஊறுகாய்
Tweet | ||||||
8 கருத்துகள்:
Very crunchy boondhis and super delicious and cooling raita. Thank you very much akka for linking it to the wtml event, waiting for more delicious entries....
அட... ! எல்லோருக்கும் பிடிக்கும்...!!
சூப்பர்
இங்கே காராபூந்தி ரைத்தா மிகவும் பிரபலம்.... சுவை மிகுதியாகவே இருக்கும்!
நானும் செய்வதுண்டு சிறிது மாறுபாட்டுடன்,இதுவும் நல்லாயிருக்கு ஜலீலா.
எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவாங்க....
அருமையான காரபூந்தி ரைத்தா ஜலீலா.
காராபூந்தி ரெய்தா பிடித்தமானது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா